43. இப்பொழுது, வேதப்பூர்வமாக என்னால் பதில் கூற முடியாதது இது ஒன்றிற்குதான்.
44. இப்பொழுது, இந்த, “பிதா, குமாரன் பரிசுத்த ஆவி', அந்த ஊழியக்காரன் உத்தமமானவராக இருக்கிறாரென்றால், பாருங்கள், எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள், நாங்கள் மகிழ்ச்சியுடன்... சகோதரன் நெவில் மற்றும் நானும், அல்லது சகோதரன் பீலர் அல்லது சகோதரன் காலின்ஸ் அல்லது இந்த ஊழியத்திற்கென்று நியமிக்கப்பட்டிருக்கின்ற இங்கேயுள்ள ஊழியக்காரர்களில் சிலர், இன்னும் மற்றவர் அவரை சந்திக்கலாம்.
இப்பொழுது, ஆனால் இப்பொழுது:
தசமபாகம் செலுத்தாமல் இருப்பதால் ஒரு கிறிஸ்தவனால் பரலோகம் செல்ல இயலாதா? என்னால் அதற்கு “ஆம்” என்றோ அல்லது “இல்லை” என்றோ கூற முடியவில்லை. ஆனால் நான் விசுவாசிப்பது என்னவென்றால் ஒவ்வொரு கிறிஸ்தவனும் தசமபாகம் செலுத்தக் கடமைப்பட்டுள்ளான் ஏனெனில் அது தேவனுடைய கட்டளையாகும், கற்பனையாகும், “ஜீவ விருட்சத்தின் மேல், ஜீவனுக்கு அதிகாரமுள்ளவர்களாவதற்கும் அவருடைய கற்பனைகளின்படியெல்லாம் செய்கிறவன் ஆசீர்வதிக்கப்படுவான்”. இப்பொழுது தசமபாகம் செலுத்துதல் என்பது ஒரு கிறிஸ்தவ அனுபவத்திற்கு மிகவும் அவசியமான ஒன்று என நான் விசுவாசிக்கிறேன். இன்னும் சில நிமிடங்களில் வேறொரு கேள்வியின் போது நான் இதை அணுகுவேன், இதைக் குறித்து மாதிரியான வேறொரு கேள்வி உள்ளதென்று நானறிவேன்.