46. நல்லது, என் கிறிஸ்தவ சகோதரன் அல்லது சகோதரி, யாராயிருந்தாலும் பரவாயில்லை, இப்பொழுது, இணங்காத, ஆவிகளைக் கொண்டிருக்கின்ற மக்களை நீங்கள் காண்பீர்களானால், வழக்கமாக ஒரு சிக்கலான மன நிலை தான் அதைப் பிறப்பிக்கின்றது, அல்லது அதை அவர்கள் தங்கள் தாய், தந்தை, தாய் மற்றும் தகப்பனுக்கு சகோதரனோ, சகோதரியோ, அல்லது பாட்டி, பாட்டனார், ஆகியோரிடமிருந்து மரபு வழியாக இவர்களை வந்தடைந்துவிடுகின்றது. மேலும் உங்கள் வாழ்க்கையில் பாதைகளை பின் நோக்கி பார்ப்பீர்களானால், நீங்கள் கண்டுபிடிப்பீர்கள். இப்பொழுது நான் இதை அனுபவத்தின் மூலமாக பகுத்தறிதலோடு, எடுத்துக் கொண்டேன், ஏனெனில் அந்த ஆவியைக் கொண்டுள்ள ஆயிரக்கணக்கானோரை மேடையின் மீது நான் சந்தித்திருக்கிறேன். மேலும் முதலாவதாக என்ன தெரியுமா, இருதயத்தை பகுத்தறிதலின் மூலமாக அந்த ஆவியை நான் கண்டு பிடிப்பேன், பாட்டியிடமிருந்து அல்லது அவர்களுக்கு முன்பு இருந்த யாரோ ஒருவரிடமிருந்து வந்திருக்கும், நீங்கள் அதை மரபு வழியாக சுபாவமாக பெற்றுக்கொள்வீர்கள்.
47. இணங்காமல் பிடிவாதமாயிருப்பது தேவனால் உண்டானதல்ல. இப்பொழுது, அதிலிருந்து வெளியே வருவதற்கு ஒரே வழி நீங்கள் ஒரு கிறிஸ்தவராக கடந்து வருவதற்குரிய விசுவாசம் உடையவர்களாக இருப்பது. ஏனெனில், நீங்கள் தேவனுடைய குமாரனாக அல்லது குமாரத்தியாக இருக்கின்றீர்கள், நீங்கள் யாராயிருந்தாலும் சரி, உங்களால் அதை கடிந்துகொள்ள, கடிந்து கொள்ள முடியவே முடியாது. அது அலைக்கழிக்கின்ற, வாலில்லாத கடகடவென்ற ஒலியெழுப்பும் அமெரிக்க நச்சுப்பாம்பைப் போன்ற ஒன்றாகும், அவன் உங்களை கடிப்பதற்காக தயாராக அங்கே படுத்துக்கிடக்கின்றான். நீங்கள் மாத்திரம் அவனை பொருட்படுத்தாமல் அவனை விட்டுக் கடந்து செல்வீர்களானால், அவனால் உங்களுக்கு தீங்கிழைக்க முடியாது. பாருங்கள்?
48. ஆகவே நீங்கள் அந்த பிடிவாத இணங்காத ஆவியை கொண்டிருப்பதாக உணர்ந்தால், அதை பீடத்தின் மீது வைத்து, அந்த காரியமானது செத்துவிட்டது என்று தேவனில் விசுவாசியுங்கள். அதன் பிறகு இனியும் அதை நீங்கள் கொண்டிருக்கவே மாட்டீர்கள். நீங்கள் தொடர்ந்து செல்லுங்கள், அதற்கு எந்தவித கவனத்தையும் செலுத்தாதீர்கள். அந்த ஆவியானது உங்களை விட்டு ஓடிப்போகும், பிசாசை எதிர்த்து நில்லுங்கள் அவன் உங்களை விட்டு ஓடிப்போவான் அது என்னவென்றால், “சீக்கிரமாக அகன்று சென்றுவிடு” என்பதே. ஆகவே அதை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்பதற்கான என்னுடைய ஆலோசனை இவ்விதமாகத்தான் இருக்கும். நாம் பிசாசை விசுவாசத்தில் மேற்கொள்ளுகிறோம். எல்லா தீமையையும் நாம் மேற்கொள்வது எதில்லென்றால் விசுவாசத்திலேதான்.