49. நல்லது, “பிதா, குமாரன், பரிசுத்த ஆவி” என்ற நாமமென்பது கிடையாது. அதுதான் காரணம். எந்த ஒரு நபருக்கும் “பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தில் வேதாகமத்தில் ஞானஸ்நானம் கொடுக்கப்படவேயில்லை. வேதாகமத்தில் எல்லா நபரும் அல்லது வேதத்திற்கு பிறகு முந்நூறு ஆண்டுகளாக ஒவ்வொரு நபருக்கும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் தான் ஞானஸ்நானம் கொடுக்கப்பட்டது. கடைசி அப்போஸ்தலன் மரித்து முந்நூற்று ஆறு வருடங்கள் கழிந்து நிசாயா ஆலோசனை சங்கத்தில் கத்தோலிக்க சபை ஸ்தாபிக்கப்படும் வரைக்கும், எந்த ஒரு அப்போஸ்தலனுக்கோ, எந்த ஒரு கிறிஸ்தவனுக்கோ, அல்லது எப்பொழுதாவது ஒரு முறை கூட “பிதா குமாரன் பரிசுத்த ஆவி” என்பது ஞானஸ்நானத்திற்காக உபயோகப்படவேயில்லை.
50. “பிதா குமாரன் பரிசுத்த ஆவி” என்கின்ற ஒரு நாமம் இல்லவேயில்லை. பிதா என்பது ஒரு நாமம் அல்ல, குமாரன் என்பது ஒரு நாமம் அல்ல, பரிசுத்த ஆவி என்பது ஒரு நாமம் அல்ல. அது மூன்று பட்டப்பெயர்கள், ஒரு நாமத்திற்கான மூன்று அலுவலை குறிக்கும் பட்டப்பெயர்கள்: ஒரு நாமத்திற்கு. இயேசுகிறிஸ்து. ஆகவே “பிதா, குமாரன், பரிசுத்த ஆவி” என்கின்ற ஒரு நாமமானது கிடையவே கிடையாது. மேலும்... அதற்கு ஒரு நாமமும் கிடையாது, ஆகவே பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமமாயிருக்கின்ற இயேசு கிறிஸ்துவின் நாமத்தில்தான் நான் ஞானஸ்நானம் கொடுக்கின்றேன். தெளிவாக புரிகின்றதா?