51. இப்பொழுது, வேத வசனங்களிலிருந்து உங்களுக்கு பதிலளிக்க நான் விரும்புகின்ற. ஒரு வேத பூர்வமான கேள்வி இங்கே இருக்கின்றது, ஏனெனில் அவர்கள், “இது வேத வசனங்களில் இருக்கின்றதா?” என்று கேட்டுள்ளனர்.
52. இதைக் கேட்க விரும்பினவர்களே, நீங்கள் இந்த கேள்வியைக் கேட்டிருந்தாலோ அல்லது இல்லையோ, நீங்கள் என்னுடன் 1 பேதுரு 3:18 மற்றும் 20ற்கு திருப்ப வேண்டுமென்று நான் விரும்புகிறேன், அதினாலே நீங்கள் வேறு யாராவது ஒருவருடைய வார்த்தையை ஏற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் இருக்காது. நீங்கள் இதை வாசித்துப் பார்த்து இது உண்மையா அல்லது அப்படி இல்லையா என்று கண்டறிந்து கொள்ளுங்கள். வேதம் என்ன கூறுகின்றதோ மற்றும் சத்தியத்தோடு மாத்திரமே எப்பொழுதும் நிற்க நாங்கள் விரும்புகிறோம். மேலும் இந்த அருமையான நபர் யாராயிருந்தாலும் இது அப்படித்தானா அல்லது இல்லையா என்று வேதாகமத்திலிருந்து ஒரு மேற்கோளை அறிந்து கொள்ள வேண்டுமென்று கேட்டிருக்கின்றார்.
53. இப்பொழுது நாம் இங்கே இதை கண்டுபிடிப்போம்... நான் அதை கண்டுபிடித்தால்... நான் அநேக வருடங்களாக வைத்திருக்கின்ற இந்த பழைய வேதாகமம் ஏறக்குறைய கிழிந்து போகும் நிலையில் உள்ளது. இதில் அதை நான் கண்டுபிடிப்பேனென்றால், நான் நினைக்கின்றேன், ஒருக்கால்... சகோதரனே, ஒரு வினாடி பொறுத்துக் கொள்ளுங்கள், அது தான் என்று உறுதியாக நான் கண்டால் அது தீமோத்தேயு, தீத்து, மற்றும் எபிரெயருக்கு அடுத்ததாக வருகிறதா என்று பார்ப்போம். இதோ எடுத்து விட்டேன், ஆம், நான் எடுத்துவிட்டேன். உமக்கு நன்றி. 1 பேதுரு 3, 1பேதுருவின் 3ம் அதிகாரம். 3வது அதிகாரம், 18ம் வசனத்திலிருந்து நாம் துவங்குவோம். ஏனெனில் கிறிஸ்துவும் நம்மை தேவனிடத்தில் சேர்க்கும்படி அநீதியுள்ளவர்களுக்குப் பதிலாக நீதியுள்ளவராய்ப் பாவங்களினிமித்தம் ஒருதரம் பாடுபட்டார்; அவர் மாம்சத்திலே கொலையுண்டு ஆவியிலே உயிர்ப்பிக்கப்பட்டார். (ஆவியிலே உயிர்ப்பிக்கப்பட்டார்)
அந்த ஆவியிலே அவர் போய்க் காவலிலுள்ள ஆவிகளுக்குப் பிரசங்கித்தார்
அந்த ஆவிகள், பூர்வத்திலே நோவா பேழையை ஆயத்தம் பண்ணும் நாட்களிலே, தேவன் நீடிய பொறுமையோடே காத்திருந்த போது, கீழ்ப்படியாமற் போனவைகள்; அந்தப் பேழையிலே சிலராகிய எட்டுப் பேர் மாத்திரம் பிரவேசித்து ஜலத்தினாலே காக்கப்பட்டார்கள்.
54. இப்பொழுது அப்போஸ்தலர் 2ற்கு திருப்புங்கள், அப்போஸ்தலர் 2, நாம் 30வது வசனத்தை எடுப்போம். அப்போஸ்தலர் 2ல், அப்போஸ்தலனாகிய பேதுரு தான் இதைப் பேசுகிறான். அப்போஸ்தலர் 2வது அதிகாரம் வசனம் 30, அதை இங்கே எழுதியுள்ளேன்.
அவன் தீர்க்கதரிசியாயிருந்து: உன் சிங்காசனத்தில் வீற்றிருக்க மாம்சத்தின்படி உன் சந்ததியிலே கிறிஸ்துவை எழும்பப் பண்ணுவேன் என்று தேவன் தனக்குச் சத்தியம் பண்ணினதை அறிந்தபடியால், அவன் கிறிஸ்துவினுடைய ஆத்துமா பாதாளத்திலே விடப்படுவதில்லையென்றும், அவருடைய மாம்சம் அழிவைக் காண்பதில்லையென்றும் முன்னறிந்து அவர் உயிர்த்தெழுதலைக் குறித்து இப்படிச் சொன்னான். (கிறிஸ்துவின் சரீரம்)
55. அவருடைய ஆத்துமா பாதாளத்திற்குள் இறங்கினது, நோவாவின் நாட்களிலே நீடிய துன்பத்தில் மனந்திரும்பாத அந்த ஆவிகளுக்கு அந்த ஆத்துமாக்களுக்குப் பிரசங்கித்தார். அவருடைய ஆத்துமா பாதாளத்திற்குள்ளாக இறங்கிச் சென்றது, அவர் அங்கே ஆவிகளுக்கு பிரசங்கம் செய்து பிறகு மூன்றாம் நாளில் உயிரோடெழுந்தார். அது வேதப் பூர்வமானதாகும், சத்தியமாகும்.