239.எனது அருமை சகோதரன் அல்லது சகோதரி, நீங்கள் யாராயிருந்தாலும் சரி... இது ஒரு மனிதனின் கையெழுத்து போல் உள்ளது. ஆனால், எப்படியாயினும், யாராயிருந்தாலும் சரி, நீங்கள் முற்றிலும் சரியாக கேட்டிருக்கிறீர்கள்! மண்வெட்டிகள்.... அல்லது பட்டயங்களை மண்வெட்டிகளாக அடிப்பார்கள். அது ஆயிர வருட அரசாட்சியை கொண்டுவரும். இந்த நவீன மதக்கோட்பாட்டுக் குழுக்கள் எங்கும் சென்று மக்களுக்கு அறிவை போதித்து தேவனுடைய இராஜ்ஜியத்தில் சேர்க்க முயல்கின்றனர்.... அது தேவன் தாமே இயற்கைக்கு மேம்பட்டவராய், இயற்கைக்கு மேம்பட்ட வல்லமையுடன், இயற்கைக்கு மேம்பட்டவைகளை விசுவாசித்து, இயற்கைக்கு மேம்பட்ட வல்லமையை பெற்றுக்கொள்ளும் மக்களிடம் வருவதாகும், அது தேவனுடைய பிள்ளைகளை உருவாக்கும். அல்லேலூயா! அது, இனிமேல் படித்தல், எழுதுதல், கணிதம் போன்றவையாய் இருக்காது, அது இயேசு கிறிஸ்துவினுடைய உயிர்த்தெழுந்த வல்லமையால்தான் இருக்கும். உலகமானது இனி யுத்தத்தைக் கற்பதில்லை.
240. இன்றுள்ள ஒவ்வொரு நாடும், எந்தவொரு அதிகாரமும், ஒவ்வொரு இராஜ்ஜியமும் பிசாசின் கட்டுக்குள் இருக்கின்றது. வேதம் அவ்வாறு கூறுகின்றது. ஆகவே ஒரு நாளில் இவ்வுலகத்தின் இராஜ்ஜியங்கள் நம்முடைய கர்த்தருடைய, கிறிஸ்துவினுடைய இராஜ்ஜியங்களாக ஆகிவிடும், அவர் இப்பூமியில் ஆயிரம் வருடம் அரசாளுவார்; சபையை எடுத்துக்கொள்வார். வேதத்தை வாசிக்கும் என் அருமையானவனே, அது முற்றிலும் சரி,
241. அந்த இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேர் ஊழியக்காரர் ஆவர். மனிதன் எண்ணக்கூடாத திரளான கூட்டம்... ''ஒருவனும் எண்ணக்கூடாததுமான திரளான கூட்டமாக ஜனங்கள்'', அவர்கள் புறஜாதிகள். ஆவர்.
242. இன்னும் ஒரு நிமிடம், ஒரே ஒரு சிறு காரியம் இருக்கிறது. என்னால் முடியவில்லை. இன்னும் சில நிமிடங்களில் சபை ஜெபத்தை நான் வைப்பேன். இங்கே கவனியுங்கள், இப்பொழுது இது மிக முக்கியமான ஒன்று என்று நான் நினைக்கிறேன். நான் வியாதியஸ்தருக்காக ஜெபிக்க வேண்டும், நாம் துரிதப்படுவோம். நான் பகுத்தறிதலை வைப்பதற்கு பதிலாக, நேராக சென்றுவிடுவோம். நான் உங்களை ஒன்று கேட்கவிரும்புகிறேன். வேறென்று இருக்கின்றதா? நான் இதை மாத்திரம் எடுத்துக்கொண்டு அடுத்த ஞாயிறன்று பார்க்கலாம் என்று நான் யூகிக்கிறேன்.
243. நண்பர்களே! இதன் பேரில் கவனம் செலுத்துங்கள், இது எவ்வளவு அழகாயுள்ளது! கவனியுங்கள்! (இந்த கேள்வியைக் கேட்ட நபர் யாராயினும்) இதை நீங்கள் கூர்ந்து கவனிக்க நான் விரும்புகிறேன், அந்த இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேர், பணி செய்கின்ற ஊழியக்காரர் ஆவர். நீங்கள் சரியாக நிலைப்படுத்தி பார்த்திருப்பீர்களானால், பழைய வேத வசனத்தில். . .
244. நிழற்பட நேர்படிவத்தை (positive - பாஸிடிவ்) நீங்கள் பார்க்க வேண்டுமென்றால் அதன் நிழலை (Shadow) எப்போதும் கவனியுங்கள். அது சரி. அதைக் கூர்ந்து கவனித்து, அது என்னவென்பதைப் பாருங்கள். இப்பொழுது, சிலுவை முதற்கொண்டு அது எதிர்மாறாக இருக்கின்றது, நீங்கள் நிழல் (Shadow) என்றால் என்ன என்பதை காணவேண்டுமென்றால் நிழற்பட நேர்படிவத்தை, பாஸிடிவ்வை நீங்கள் காணவேண்டும். அங்கே சிலுவை எதிர்நோக்கி சார்ந்திருக்க வேண்டியிருந்தது. சிலுவை எவ்வித மிருக்கும் என்பதைக் காண நாம் திரும்பிப் பார்த்து நிழலைக் காண வேண்டியிருந்தது; இப்பொழுது அந்த நிழல் என்ன என்பதைக் காண நாம் சிலுவையிலிருந்து பார்க்கவேண்டியதாய் உள்ளது. பாருங்கள்? கிறிஸ்து அந்த நாளிலே பூமியில் இருந்தபோது என்னவாயிருந்தார் என்றும், இப்பொழுது அவர் என்னவாயிருக்கிறார் என்பதையும் நீங்கள் கவனிக்க வேண்டும். இதுதான் அவருடைய நிழல். நான் என்ன கூற முயல்கிறேன் என்பதை புரிந்துகொள்கிறீர்களா? துவக்கத்தில் அது எப்படிப்பட்டதாயிருந்தது என்பதை நான் விவரித்ததை நீங்கள் அறிவீர்கள். இப்பொழுது, நான் அங்கேயிருந்து பார்ப்பேனானால், இது எப்படிப்பட்டதாயிருக்கும், சிலுவை என்பது என்ன என்பதை அறிந்துகொள்ள தான் அந்த நிழல் என்ன என்பதை பார்க்கவேண்டும்.
245. இப்பொழுது ஒரு நாளிலே இஸ்ரவேலிலே பாவம் இருந்தது, அங்கே ஒரு மனிதன் இருந்தான்... அது லேவி என்னும் பேரையுடைய கோத்திரம். அவர்கள் தங்கள் பட்டயங்களை உருவி மோசேயுடன் பாளையத்திற்கு சென்று பாவமாய் இருந்த எல்லாவற்றையும் அழித்து போட்டார்கள். அது சரிதானே? தேவன் பார்த்து, ''நீங்கள் எனக்காக நின்று இதைச் செய்தபடியால் உங்களுடைய... எல்லாரும் உங்களுக்கு பணிவிடை செய்வார்கள். நீங்கள் நேராக சென்று ஆலயத்தில் ஆசாரியர்களாய் இருங்கள். நீங்கள் ஆலயத்திலேயே இருங்கள், மற்றவர் வேலை செய்து பத்தில் ஒரு பங்கை கொண்டு வந்து உங்களைப் பராமரித்து பார்த்துக்கொள்வார்கள்" என்று கூறினார். அது சரியல்லவா?
246. ஓ, அல்லேலூயா! அந்த ஆலயம் என்னவென்பதை நீங்கள் காண்பீர்களானால், அந்த லேவியர் மணவாட்டி, யாவர். இப்பொழுது, பாவமானது ஒவ்வொரு தருணத்திலும் எழும்புகையில் லேவியர் தங்கள் பட்டயங்களை உருவுகிறார்கள். பரிசுத்த ஆவியினால் பிறந்த மணவாட்டி அங்கே நின்றுகொண்டு, " 'பாஸிடிவ்விலுள்ள' (positive) இயேசு கிறிஸ்துதான், 'நெகடிவ்விலும் இருக்கின்றார். அதே அவ்வாறு தான். பாவம் இன்னுமாக பாவம் தான், அந்த காரியங்களைச் செய்வது தவறு!'' என்று கூறுகிறார். அது சரி, அவர்கள் பட்டயத்துடன் நின்று கொண்டிருக்கின்றனர்.
247. தேவன் "என் பிதாவினால் ஆசிர்வதிக்கப்பட்டவர்களே, உள்ளே வாருங்கள்'' என்று கூறுகிறார். அதுதான் மணவாட்டி.
248. அங்கே ஊழியக்காரர் உள்ளனர், அந்த ஊழியக்காரர் எங்கே பாளயமிறங்கியிருக்கிறார்கள் என்று பாருங்கள். இந்த பக்கம் பன்னிரண்டு…..இல்லை, இந்த பக்கமாக நான்கு, அந்த பக்கமாக நான்கு, அந்த பக்கம் நான்கு, அந்த பக்கம் நான்கு; பன்னிரண்டு கோத்திரங்கள். பன்னிரண்டு கோத்திரங்கள் தான் அந்த இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேர். வெளிப்படுத்தின விசேஷத்தில் பாருங்கள். அந்த நகரத்திற்கு பன்னிரண்டு அஸ்திபாரங்கள் இருப்பதை அவன் காண்கிறான். ஒவ்வொரு வாசலின் மேலும் ஒரு அப்போஸ்தலனுடைய பெயர் எழுதப்பட்டுள்ளது, பன்னிரண்டு வாசல்கள், அதைச் சுற்றி பன்னிரண்டு கோத்திரங்கள் (அல்லேலூயா!) உட்கார்ந்து கொண்டிருக்கின்றன.
249. அதன் உள்ளே மீட்கப்பட்டவர்கள் இருந்தனர். அல்லேலூயா! கறுப்பு, வெள்ளை, மஞ்கள், பழுப்பு, மற்றும் அவருடைய ரத்தத்தால் கழுவப்பட்ட எல்லாரும் அவருடைய ஊழியக்காரர்களாய் இருப்பர், அவர்கள் அவரோடு இருப்பார்கள் என்று அவர் கூறியிருக்கிறார். அவர்கள். . . சூரியன் அவர்கள் மீது இனி விழுவதுல்லை, அவர்கள் இனி பசியோ, தாகமோ அடைவதில்லை, முடிவேயில்லாத யுகத்தில் கிறிஸ்துவுடனே கூட அவர்கள் என்றென்றுமாக அரசாளுவார்கள்: இராஜாவும், ராணியாகிய அவர்களும் என்றென்றுமாக அரசாளுவார்கள்!