56. “ஐந்து கன்னிகைகள்” அந்த ஐந்து புத்தியுள்ள மற்றும் ஐந்து புத்தியில்லாத கன்னிகைகளைக் குறித்த கேள்வியை அவர்கள் கேட்கிறார்களென்று நான் யூகிக்கின்றேன். வெளிப்படுத்தின விசேஷத்தைக் குறித்த எங்களுடைய போதனைகளின் போது எங்களுடன் நீங்கள் பங்கெடுத்து கேட்டிருப்பீர்களென்றால், அந்த கன்னிகைகள்- அந்த புத்தியில்லாத கன்னிகைகள் இழக்கப்பட்டுப் போகவில்லை என்றும், ஆனால் கலியாண விருந்திற்கு செல்ல அவர்கள் அனுமதிக்கப்படவில்லை என்றும், அவர்கள் உபத்திரவத்தில் உபாதிக்கப்பட்டு இரத்த சாட்சிகளாகக் கொல்லப்பட்டு, கடைசி நாளிலே பொதுவான உயிர்த்தெழுதலிலே மறுபடியுமாக உயிரோடு எழுப்பப்படுவார்கள் என்பதை நீங்கள் கண்டு கொண்டிருப்பீர்கள். வெள்ளாடுகளிலிருந்து செம்மறியாடுகளாக அவரால் பிரிக்கப்பட்ட மக்கள் இவர்களே, பாருங்கள், இவர்கள் நியாயத்தீர்ப்பில் நிற்கின்றனர்.
57. நீங்கள், “சரி, சகோதரன் பிரன்ஹாமே, சபையாகிய நாமும் கூட நியாயத்தீர்ப்பில் நிற்போமல்லவா” எனலாம். இல்லை, ஐயா! நாம் நியாயத்தீர்ப்பில் நிற்கமாட்டோம்.
58. நாம் இப்பொழுது நியாயத்தீர்ப்பில் நின்று கொண்டிருக்கிறோம், நம்முடைய பாவங்களை தேவன் கிறிஸ்துவின் மேல் போட்டுள்ளார், மேலும் நாம்... “என் வசனத்தைக் கேட்டு” பரி. யோவான் 5: 24 'என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு; அவன் நியாயத்தீர்ப்புக்குட்படாமல் மரணத்தைவிட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான்”. சபைக்கு இனிமேலும் நியாயத்தீர்ப்பு கிடையாது. அது எடுத்துக்கொள்ளப்படுதலில் மேலே எடுக்கப்பட்டு, பரிசுத்த ஆவியைப் பெற்றிராத மக்களை நியாயத்தீர்க்கத்தக்கதாக திரும்பவுமாக வருகின்றது. ஒரு ஒரு வழக்கை நீதிமன்றத்திற்கு, ஒரு அநீதக்காரனான நீதிபதியிடம் நம்மில் யாராகிலும் கொண்டு போகத் துணிகிறதென்ன, “பரிசுத்தவான்கள் உலகத்தை நியாயந்தீர்பார்களென்று அறிவீர்களா?” என்று பவுல் கேட்கவில்லையா. நாம் கிறிஸ்துவுடனே அமர்ந்து, ராஜாக்களையும், ஆசாரியர்களையும் நியாயந்தீர்ப்போம். நாம் பிரசங்கித்து, பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைக் குறித்து அவர்களிடம் கூறின போது, அதைப் பெற்றுக் கொள்ள மறுத்த அந்த மக்களை நியாயந்தீர்ப்போம். அதைக் குறித்து சிந்தித்துப் பாருங்கள்!
59. இல்லை, அவர்கள் இழந்து போகப்படவில்லை, ஆனால் அவர்கள் மணவாட்டியாக இருக்கமாட்டார்கள். அவர்கள் இரண்டாம் உயிர்த்தெழுதலில் வருவார்கள், ஆனால் மணவாட்டியாக இருக்க மாட்டார்கள், அவர்கள் பெற்றுக் கொண்ட சுவிசேஷ ஒளியை அவர்கள் கையாண்ட விதத்தின்படியாக நியாயந்தீர்க்கப்படுவார்கள். இப்பொழுது, இந்தப் படலமானது கிறிஸ்து என்ன செய்கின்றாரோ அதைப் பொறுத்துதான். இருப்பினும், அவர்கள் இழந்து போகப்படவில்லை.