60. இப்பொழுது, நீங்கள்... இது மிகக் கடுமையான ஒரு கேள்வியாகும், ஆகவே எனக்கு நன்கு தெரிந்த விதமாகத்தான் நான் பதிலளிக்க வேண்டியவனாக உள்ளேன், புரிகின்றதா. இப்பொழுது, என்னால் நியாயந்தீர்க்க முடியாது, ஏனெனில் நியாயந்தீர்க்க நான் அனுப்பப்படவில்லை. ஆனால் அநேக முறை நான் நினைப்பதுண்டு. சரியாக இதனுடன் பொருந்துகின்ற ஒரு கேள்வியை நான் வைத்துள்ளேன். அந்நிய பாஷையில் பேசுகின்ற ஒரு மனிதன், அவர்கள் தேவனால் அபிஷேகம் பண்ணப்பட்டவர்கள். பாருங்கள்? அவர்கள் ஒருக்கால் ஒழுங்கிற்குப் புறம்பாக இருக்கலாம், அவர்கள் ஒருக்கால் சரியானதாக இல்லாதிருக்கின்ற ஒன்றை செய்கிறவர்களாக இருக்கலாம், ஆனால் அது பரிசுத்த ஆவி அல்ல என்று கூற நான் விரும்பவில்லை, ஏனெனில் எனக்குத் தெரியாமலும் இருக்கலாம். பாருங்கள்?
61. மேலும் அநேக சமயங்களில்... மக்கள் ஒருவரையொருவர் தவறாய்மதிப்பிட்டு தவறாய்த்தீர்மானிக்கிறார்கள். அவ்வாறு செய்வது தவறான, கெட்ட காரியமாகும். நீங்கள், “உம், அவள் கத்தரிக்கப் பட்ட குட்டை மயிரை கொண்டவளாக இருக்கிறாள், அவள் மிகவும் சிறியதாக, குட்டையாக உள்ள ஒரு ஆடையை அணிந்திருக்கிறாள், ஆகவே அவள் மீது இருப்பது பரிசுத்த ஆவி அல்ல” எனலாம். அவ்வாறு தவறான மதிப்பீட்டைச் செய்யாதீர்கள்! அவ்வாறு தவறான மதிப்பீட்டைச் செய்யாதீர்கள், அது சரியல்ல. அந்தப் பெண்ணின் இருதயத்தில் என்ன இருக்கிறதென்று உங்களுக்குத் தெரியாதே. அதைக் குறித்து ஒன்றுமே உங்களுக்குத் தெரியாது. பரிசுத்த ஆவியானவர் அவளுடைய நடத்தையை சிறிது சீர்படுத்துவார் என்பதை நீங்கள் அறிவீர்களா, இப்பொழுது, அது உண்மையான ஒன்றாக இருக்கலாம். ஆனால் நான் உங்களுக்கு கூறுகிறேன், நானும் நீங்களுமாக, அதை நியாயந்தீர்க்கும் காரியத்தை தேவனிடம் விட்டு விடுவோமாக, தேவன் அந்த நபருக்கு ஒளியைக் காண்பிக்கத்தக்கதாக நீங்களும் நானுமாக அந்த நபருக்காக ஜெபத்தை ஏறெடுப்போம்.
62. ஒரு சமயம் இங்கே ஒரு மனிதன் என்னை வெளியில் தனியே சந்தித்தார். இங்கே ஒரு பியானோ கருவி வாசிக்கும் ஒரு பெண் இருந்தாள். அவள் ஒரு சிறிய குட்டை பாவாடையை அணிந்திருந்தாள், அது சரியான விதத்தில் இல்லாதிருந்ததை நான் அறிந்திருந்தேன். மேலும் அந்த பெண் குட்டை தலை மயிரைக் கொண்டவளாக இருந்தாள், இந்த வழியில் அவள் சற்று குழந்தையாக இருந்தாள், இங்கு மேலும் அவள் பியானோ கருவியை வாசித்துக் கொண்டிருந்தாள். என்னை அங்கே வெளியில் சந்தித்த இந்த மனிதன் என்னை கடுமையான சீற்றத்துடன் திட்டிக் கொண்டிருந்தார். “அதோ பார் கத்தரிக்கப்பட்ட குட்டை மயிர்! அந்த பெண்னை அங்கே மேலே உட்கார வைத்திருக்கிறீரே, நீங்கள் ஒரு பெந்தெகொஸ்தே பிரசங்கியா!” என்று அதிவேகமாக இன்னமாக திட்டிக் கொண்டிருந்தார்.
63. நான், “சரி, அந்த பெண் தனக்குள்ளாக ஒரு நல்ல ஆவியைக் கொண்டிருக்கிறாள் என்று எண்ணுகிறேன். அந்த பாவாடையின் இந்த பாகம், இரண்டு துண்டுகள், அந்த விதமான ஆடை அணிவதை நான் ஏற்றுக் கொள்வதில்லை என்பது உங்களுக்குத் தெரியும்” என்றேன்.
64. அவைகளில் ஒன்று இங்கே கீழே காணப்படுகிறது, மற்றொன்று இங்கே மேலே காணப்படுகின்றது, அது மிகவும் மெல்லியதான ஒன்று, உள்ளே அணிந்திருக்கின்ற உள்ளாடை வெளியே தெரியும். அவ்விதமான ஆடை அணியவே கூடாது என்பதே என் கருத்து. அது எனக்குப் பிடிக்காது, உண்மையாகவே அது எனக்குப் பிடிக்காது. மற்றவரைப் போலவே இவர்களும் ஆவியால் நிரப்பப்பட்டவர்களாக இருக்கலாம், என்று என்னால் கூற முடியவில்லை, எனக்குத் தெரியாது; தேவன் அதை அறிவார். ஆனால் கண்ணால் கண்ட உடனே, நீ நரகத்திற்கு போய்க் கொண்டிருக்கிறாய் என்று கூறி அந்த பெண்னை நான் கடிந்து கொள்ளமாட்டேன்.
65. இந்த மனிதனோ தன்னுடைய சபையில் ஒரு பெண்ணைக் கொண்டிருந்தார், அவள் நீண்ட ஆடைகளையும் நீண்ட தலை மயிரையும் கொண்டவளாக இருந்தாள், ஆனால் எப்பொழுதுமே முணு முணுத்துக் கொண்டிருக்கும் ஒரு மனிதனிடம் சண்டையிடுகின்ற அளவிற்கு பெரிய கோபக்காரியாக இருந்தாள், அவள் கூடுமான வரையில் மிகவும் கீழ்த்தரமானவளாகக் காணப்பட்டாள். இப்பொழுது, நீண்ட தலை மயிர் மற்றும் நீண்ட பாவாடைகள் உங்களை பரலோகத்திற்கு கொண்டுச் செல்லாது. இல்லை, ஐயா! உங்களுக்குள் இருக்கின்ற ஆவியே உங்களை பரலோகத்திற்கு கொண்டுச் செல்லும். ஆனால் நீங்கள் ஒரு கிறிஸ்தவனாக...
66. ஆகவே நீங்கள் நினைவில் கொள்ள வேண்டியது என்ன வென்றால் அநேக முறை போதகர் இந்த காரியங்களைக் குறித்துப் பேசாமல் இருந்து விடுகின்றனர். ஆதலால் மக்கள் தானாகவே எல்லாமே சரிதான் என்று அப்படியே இருந்து விடுகின்றனர். ஆனால் உண்மையாக ஒரு போதகன் அதைக் கடிந்து கிழித்தெரிய வேண்டும். பிறகு - மேலும்- சபையிலுள்ள சகோதரிகள்- குணாதிசயத்தில் நிலைத்திருக்கின்ற, தங்கள் ஆடைகளை சரியாக அணிந்துள்ள அந்த சகோதரிகள், அவர்கள் இனிமையான சுபாவத்திற்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும், அவர்கள் தாய்மார்களைப் போல, சகோதரிகளைப் போல இருக்க வேண்டும்.
67. தேவ பக்தியுள்ள, தாய்மையுள்ள, சகோதரிக்குரிய பண்புள்ள எந்த ஒரு பெண்ணும் இப்படிப்பட்ட ஒரு நபரிடம் ஆவியின் இனிமையுடனே சென்று அவளோடு உட்கார்ந்து இதைக் குறித்து அவளுடன் பேச கடமைப்பட்டவளாக இருக்கிறாள். ஆகவே அந்த பெண் தேவனுடையவளாக இருந்தால், பரிசுத்த ஆவியானவர் அவள் புரிந்து கொள்ளும்படிக்குச் செய்வார், அவளும் தன்னைத் திருத்திக் கொள்வாள். ஆனால் நீங்கள் உடனடியாக அவளைக் கடிந்து கொண்டு அவளை பலவந்தமாக கட்டாயப்படுத்துவீர்களானால், நீங்கள் அந்த சத்தியத்தில் வந்து இளைய, குழந்தையாக பிறந்திருக்கின்ற அவளுக்கு தீங்கிழைத்து புண்படுத்திவிடுவீர்கள். புரிகின்றதா? ஆதலால் தான் நான் அந்த நபரைக் கடிந்து கொள்வதில்லை.
68. இப்பொழுது, அந்நிய பாஷையில் பேசுகின்ற நபர்.
69. இப்பொழுது, ஒரு வினோதமான காரியத்தை இங்கே நான் நான் கூற வேண்டியவனாக இருக்கிறேன், நீங்கள் என்னுடன் உடன்படாதிருந்தால், அதனால் பரவாயில்லை. நீங்கள் பாருங்கள், அநேக முறை இக்காரியங்களை நாம் தவறாக நிர்ணயிக்கின்றோம். சரியான ஒன்றை செய்ய முயற்சிக்கும் ஒருவரை, நாம் எப்பொழுதுமே மிகச் சிறந்த விதத்தில் அந்த நபரைக் குறித்து சரியான விதத்தில் நாம் சிந்திக்க முயற்சி செய்ய வேண்டும். நாம் நம்முடைய நல்லெண்ணத்தை அவர்களுக்கு வெளிப்படுத்த வேண்டும். ஓ, அவர்கள் முயற்சி செய்கின்றனர். உங்களிடம் பகுத்தறியுதல் இருந்தாலொழிய, அவர்களுடைய இருதயத்தை அறிந்து கொள்ள இயலாது. அவர்கள் தவறாயிருந்தால், அப்பொழுது நீங்கள்... வேதாகமம் கூறுகிறது, - “ஒரு சகோதரன் யாதொரு குற்றத்தில் அகப்பட்டால், ஆவிக்குரியவர்களாக இருக்கிறவர்கள் சாந்தமுள்ள ஆவியோடே அந்த சகோதரனிடம் செல்லுங்கள்; நீங்களும் சோதிக்கப்படாதபடிக்கு உங்களைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள், நீங்கள் அந்த நபரை திரும்பவுமாக தேவனிடத்தில் ஒப்புரவாக்க முடியவில்லையெனில், “ அவர்களிடம் சரியான ஆவி இல்லை என்று நீங்கள் கூறாதீர்கள், எனெனில்...
70. கவனியுங்கள், உண்மையாகவே உங்களை குத்தப் போகின்ற ஒரு காரியத்தை ஒரு நிமிடம் நான் கூறப்போகிறேன், ஆகவே ஒரு கணநேரத்திற்கு அமைதியாக அப்படியே தரித்திருங்கள். ஒரு மாய்மாலக்காரனின் மூலமாகவும் பரிசுத்த ஆவியானவரால் பேச முடியும். சரியாக! அவ்வாறு நிகழ்ந்திருப்பதை நான் கண்டிருக்கிறேன், அது சரியே என்று வேத வசனங்களைக் கொண்டு என்னால் நிருபிக்க முடியும். பிசாசின் சக்திகள் அந்த ஆவிகளை எடுத்து அவர்களை உபயோகப்படுத்தும் என்று வேத வசனங்களைக் கொண்டு என்னால் உங்களுக்கு அதை நிருபிக்க முடியும்; நிச்சயமாக அவைகள் அந்த வரங்களை எடுத்து உபயோகப்படுத்துகின்றனர். மாய்மாலக்காரர்கள் உண்மையான பரிசுத்த ஆவியை எடுத்து அதைக் கொண்டு பேசுவதை நான் கண்டிருக்கிறேன். அதன் காரணமாகத்தான், பரிசுத்த ஆவியைப் பெற்றிருப்பதின் ஒரே அடையாளம் அந்நியபாஷையில் பேசுவது மாத்திரமே என்று உங்களால் கூற முடியாது.
71. இப்பொழுது, சில காலத்திற்கு முன்னர் நான் பெந்தெகொஸ்தேயினுள் முதல் முறையாக கொண்டு வரப்பட்டபோது, நான் சகோதரன் ரோவ் அவர்களின் கூடாரம் இருக்கின்ற மிஷாவா காவிற்குச் சென்றேன். அங்கே அவர்கள் ஒரு கன்வென்ஷன் கூட்டத்தை நடத்திக் கொண்டிருந்தனர், அவர்கள் இயேசு நாமம் ஜனங்களாவர். இப்பொழுது, நான் இயேசு நாமம் ஜனங்களின் கருத்தோடு நான் உடன்படவில்லை, அப்படி இல்லை, அப்படி இல்லை ஏனென்றால்... அவர்கள் என் சகோதரர், ஆனால் காரணம் என்னவென்றால்...
72. “மறுஜென்மத்திற்காக இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் கொடுக்கின்றனர். “ நான் அதை விசுவாசிப்பதில்லை. தண்ணீர் உங்களை பாவத்திலிருந்து இரட்சிக்கும் என்று நான் விசுவாசிப்பதில்லை. இயேசு கிறிஸ்துவின் இரத்தம் தான் மறுஜென்மம் என்று நான் விசுவாசிக்கிறேன். ஆனால் ஒருத்துவ மக்களோ மறுஜென்மத்திற்கென்று ஞானஸ்நானம் கொடுக்கின்றனர். இயேசுவின் நாமம், அது “இயேசுவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள். அப்பொழுது நீங்கள் இரட்சிக்கப்பட்டிருப்பீர்கள், ஏனெனில் அவர், 'நீங்கள் மனந்திரும்பி உங்கள் பாவங்களின் மன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள்' என்று கூறியுள்ளார்.”
73. ஆனால் முதலாவதாக வருவதென்ன? மனந்திரும்புதல், உங்கள் பாவங்களுக்காக மன வருந்துதல், பிறகு பாவத்திலிருந்து திரும்புதல். பிறகு இயேசுவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுதல், அது சரியே. இதை எல்லாம் நீங்கள் பாவமன்னிப்பிற்காகத் தான் செய்தீர்கள்.
74. இப்பொழுது, அங்கே கூட்டத்தில் அநேக ஆயிரம் மக்கள் கூடியிருந்தனர். அந்நாட்களில் இங்கே வடக்கு மாகாணத்தில் அல்லது தெற்கில் நிறப்பிரிவினையை கைக்கொண்டிருந்தனர், ஆகவே இங்கே அவர்கள் கூட்டத்தை வைக்க வேண்டியதாயிற்று. ஏனெனில் அநேக கறுப்பு நிற சகோதரர் இக்கூட்டங்களுக்கு வர இருந்தனர். அது வெளிப்படுவதற்கு முன்னர் P.A. of W, மற்றும் P.A of G... I.C. ஆக இருந்தது. ஆகவே அவர்கள் எல்லாரும் மிஷாவா காவில் கூடியிருந்தனர், வெள்ளையர் மற்றும் கறுப்பு நிறத்தவர் சேர்ந்து ஒன்று கூடியிருந்தனர், அந்த சமயத்தில் தெற்கு பகுதியில் அவர்களால் கூட்டத்தை வைக்க முடியாமல் இருந்தது. அப்பொழுது வெள்ளை நிற மனிதர் இருவர் அங்கே இருக்கையில் அமர்ந்திருந்ததைக் கண்டேன். அங்கே கொடுக்கப்பட்ட செய்திகளை அதற்கு முன்னர் என் வாழ்க்கையில் நான் கேட்டதே கிடையாது. அங்கே இருந்த மனிதர் எழுந்திருப்பார்கள், ஒருவர் அந்நிய பாஷையில் பேசுவார், மற்றொருவர் அதற்கு வியாக்கியானத்தை அளித்து, கூட்டத்தில் இருக்கின்ற மக்களை நோக்கி அவர்களிடம் என்ன தவறு உள்ளது, அவர்கள் என்ன செய்தனர் என்று கூறுவார். பிறகு இந்த மனிதர் அந்நிய பாஷையில் பேசுவார், அவர் அதற்கு வியாக்கியானம் அளிப்பார். அப்பொழுது நான், “என்னே, நான் இங்கே தூதர்களின் மத்தியில் இருக்கின்றேனா,” என்று எண்ணினேன். இப்படிப்பட்ட ஒரு காரியத்தை நான் கேட்டதேயில்லை!
75. நான் சோள வயலில் இரவு முழுவதுமாக ஜெபித்தேன். நான் சிறுபிராய முதற்கொண்டே, வரங்களும் அழைப்புகளும் மனந்திரும்புதல் இல்லாமலே கிடைக்கும் என விசுவாசித்தேன், என்னால் தரிசனங்கள் காண முடிந்தது. அடுத்த நாள் காலை பேசும் படி என்னைக் கேட்டுக் கொண்டார்கள். நானும் பேசினேன். வெளியே அங்கே அநேக மக்கள் நின்றிருந்தனர், அவர்கள் என்னிடம் வந்து தங்கள் கூட்டங்களுக்கு வர எனக்கு அழைப்பு விடுத்தனர், இன்னுமாக நான் ஒரு மிஷனரி பாப்டிஸ்டாக இருந்தேன். ஆகவே நான் - நான் அதை அப்படியே விட்டு விட்டேன். சிறிது நேரம் கழித்து அங்கே தூதர் போல் இருந்த அந்த இரண்டு மனிதரை சந்திக்க வேண்டுமென்று நான் ஆவல் கொண்டேன். இப்படிப்பட்ட ஒன்றை நான் கேட்டதே...
76. அவர்களுக்கு வாயைச் சுற்றிலும் வெள்ளையாகிவிடும், ஒருவர் எழுந்து நிற்பார், அந்நியபாஷை பேசுவார். அந்த இன்னொருவர் எழுந்து நின்று, “கர்த்தர் உரைக்கிறதாவது இங்கே உள்ள ஜோன்ஸ், அவர்கள் முந்தைய நாளில் ஒரு குறிப்பிட்ட காரியத்தை செய்தார். நீங்கள் அந்த வீட்டை சுற்றி நடந்த போது அந்த பாக்கெட் புத்தகத்தை எடுத்தீர்கள், அது இந்த மனிதனின் புத்தகமாகும், இந்த மனிதன்தான் அதை அங்கே தொலைத்து விட்டார், கர்த்தர் உரைக்கிறதாவது, அதை திரும்பவுமாக எடுத்துக் கொள்!” என்று உரைப்பார்.
77. “தேவன் என் மீது இரக்கம் வைப்பாராக, இதோ அது”
78. பாருங்கள், உண்மை, அதை அப்படியே உரைப்பார்கள், மக்களிடம் சரியாக அதைக் கூறுவர். அப்பொழுது நான், “ஓ, என்னே, இது மிகவும் அற்புதமானதல்லவா!” என்று நினைத்தேன். அப்பொழுதே நான், “இது தேவன் தான்” என்று நினைத்தேன்.
79. சரி அப்பொழுது நான் அந்த இரண்டு மனிதரில் ஒருவரை சென்று சந்தித்தேன், நான் அவரோடு பேசிக்கொண்டிருந்த போதே, “தேவனே, அது என்னவாயிருந்தாலும், அதை நான் காண்பேனாக” என்று நான் ஜெபித்துக்கொண்டிருந்தேன். தரிசனங்கள், அதை எப்படி அழைப்பது என்றே எனக்கு தெரியாது, அதை என்ன என்று கூறவேண்டும் என்பதே எனக்குத் தெரியாதிருந்தது. ஆகவே அப்பொழுது அந்த காரியமானது என் முன்பாக வந்த போது, நான் அவருடைய கவனத்தை ஈர்த்தேன், அவருடைய ஆவியை நான் கண்டு பிடிக்கும் வரைக்கும் நான் அவருடன் பேசிக் கொண்டேயிருந்தேன், அங்கே அந்த ஸ்திரீ செய்தது. கிணற்றண்டையிலிருந்த அந்த ஸ்திரீக்கு இயேசு செய்தது போல, அவருடைய ஆவியைப்பகுத்தறியும் வரை நான் பேசிக்கொண்டேயிருந்தேன். அவர் ஒரு கிறிஸ்தவனாக, ஒரு உண்மையான, நேர்மையான தேவனுடைய பரிசுத்தவானாக இருந்தார். “கர்த்தருடைய நாமம் ஸ்தோத்தரிக்கப்படுவதாக”' என்று நான் எண்ணினேன்.
80. அரை மணி நேரம் கழித்து, அடுத்த மனிதனை அந்த மூலையில் சந்தித்தேன், அவருடன் நான் பேசினேன். நான் ஒரு மாய்மாலக்காரனிடம் பேசியிருப்பேனானால், அவர்களில் இவரும் ஒருவராய் இருப்பார். அவருடைய மனைவிக்கு கறுத்த தலைமயிர் இருந்தது, இவரோ பொன் நிற தலைமயிர் (blond) கொண்டிருந்த ஒரு பெண்ணோடு வாழ்ந்து அவள் மூலமாக இரண்டு பிள்ளைகளை பெற்றிருந்தார்; ஆனால் இன்னுமாக, எந்த ஆவியைக் கொண்டு அந்த மனிதன் பேசிக்கொண்டிருந்தாரோ, அதே ஆவியைக் கொண்டு இந்த மனிதனும் அதே வியாக்கியானத்தை முற்றிலும் சரியாக அளித்துக்கொண்டிருந்தார். அப்பொழுது நான் அறிந்து கொண்டேன்.
81. என்னுடைய மனந்திரும்புதலுக்கு முன்பாக, அந்த இந்தியர்களுடன் ஒரு மந்திர கூடாரத்திற்குள் சென்ற ஒரு அனுபவம் நான் பெற்றிருந்தேன். அவர்கள் பேயைக் கொண்டு நடனமாடுபவர்கள். அவர்கள் ஒரு பாம்பை எடுத்து தங்கள் மேல் சுற்றிக் கொண்டு, சோள ஆட்டம் ஆடி, அந்நிய பாஷையில் பேசி அதற்கு வியாக்கியானம் அளிப்பார்கள், அங்கு அமர்ந்திருந்த மக்களுடைய மனதில் என்ன இருக்கின்றது என்பதை சரியாக பிழையில்லாமல் கூறுவார்கள். பிறகு ஒரு மந்திரவாதி ஒரு பென்சிலை எடுத்து தரையில் கிடத்தினான். மேலும் பாருங்கள்? அந்த பென்சில் எழுந்து அந்நிய பாஷையில் எழுதி அதற்கு வியாக்கியானத்தையும் எழுதி சரியாக அங்கே என்ன சம்பவித்துக் கொண்டிருக்கிறது என்பதை மக்களிடம் சரியாக எடுத்துக் கூறுவதையும் நான் கண்டிருக்கிறேன். மரித்த ஆவிகளுடன் தொடர்பு கொள்ளும் ஒரு கூட்டத்தில்!
82. ஆகவே நான், “நான் பிசாசுகளின் மத்தியில் வந்திருக்கிறேன்” என்று கூறிக்கொண்டேன், பிறகு எல்லாவற்றையும் அப்படியே கடந்து போகச் செய்தேன்.
83. ஒரு நாள் நான் கிரீன் மில்லில் என்னுடைய குகையில் ஜெபித்துக் கொண்டிருந்தேன், அந்த காரியத்திற்காக நான் ஜெபித்துக் கொண்டிருக்கவில்லை, நான் வெளியே வந்து என் வேதாகமத்தை கீழே வைத்தேன். நான்... திரும்பவுமாக நான் குகைக்குள் செல்ல வேண்டியிருந்தது, சிறிது சூரிய வெளிச்சம் எனக்கு தேவைப்பட்டது, அது மதிய வேளையாயிருந்தது, நான் வெளியே வந்து என் வேதாகமத்தை கீழே வைத்தேன். அங்கே மலையின் கீழே இருக்கின்ற அந்த மரக்கட்டையின் மீது உட்கார்ந்து சிறிது நேரம் வேதாகமத்தை வாசிக்கலாம் என்று எண்ணினேன். நான் வேதாகமத்தை கீழே வைத்து விட்டு வாசிக்க ஆரம்பித்தேன். காற்று அடிக்க ஆரம்பித்தது, காற்றானது வேதாகமத்தின் மீது அடித்து எபிரெயர் 6வது அதிகாரத்திற்கு திருப்பினது “ஒரு வேளை, அதை நான் படிக்க வேண்டுமென்று கர்த்தர் விரும்புகிறாரோ” என்று எண்ணினேன். நான் அதை படித்தேன்.
84. “ஒரு தரம் பிரகாசிப்பிக்கப்பட்டும் பரிசுத்த ஆவியைப் பெற்றும், மறுதலித்துப் போனவர்கள். அவர்களை மறுபடியும் புதுப்பிக்கிறது கூடாதகாரியம். எப்படியெனில் தன்மேல் அடிக்கடி பெய்கிற மழையைக் குடித்து, முள்செடிகளையும், முட்பூண்டுகளையும் முளைப்பிக்கிற நிலமானது தகாததாயும், புறக்கணிக்கப்படுகிறதற் கேற்றதாயுமிருக்கிறது; சுட்டெரிக்கப் படுவதே அதின் முடிவு.” அது அவ்விதமாக இருந்தது.
85. நான் வாசித்து “நல்லது, கர்த்தருக்கு ஸ்தோத்திரம்” என்றெண்ணினேன். வேறொரு பக்கத்திற்கு திருப்பினேன். “நல்லது, இங்கே இருக்கிறதை நான் வாசிக்கட்டும், மற்றதை வாசிக்கட்டும்” என்று நினைத்தேன். வேதாகமத்தை கீழே வைத்துவிட்டு, என் கண்களை துடைத்து சுத்தம் செய்தேன், அந்த காற்றானது மறுபடியுமாக அடித்து எபிரெயர் 6ற்கு மறுபடியுமாக திருப்பினது. அவ்விதமாக மூன்று அல்லது நான்கு முறை நடந்தது, மூன்று முறைக்கு மேலாக. அதில் எந்த தவறையும் நான் காணவில்லை. “அப்படியானால் அதில் இருப்பது என்ன?” என்று நினைத்தேன்.
86. நான், உங்களால்... எபிரெயர் 6ஐ அநேக முறைகள் நீங்கள் வாசித்திருப்பீர்கள், “முள்செடிகளும், முட்பூண்டுகளும், பூமியின் மீது தண்ணீர் பாய்ச்ச அடிக்கடி பெய்கிற மழையானது, அதை முளைப்பிக்க, அதன் கனியை கொண்டு வர, பெய்கின்றது. ஆனால் முள்செடிகளும், முட்பூண்டுகளும், புறக்கணிக்கப்படுகிறதற் கேற்றதாயுமிருக்கிறது, சுட்டெரிக்கப்படுவதே அதின் முடிவு, ஒன்று சேர்க்கப்பட்டு சுட்டெரிக்கப்படுகிறது”.
87. அதிலிருந்து ஒன்றையுமே என்னால் கிரகித்துக் கொள்ள முடியாமலிருந்தது. “உம், முள்செடிகளும் முட்பூண்டுகளும் சுட்டெரிக்கப்படுகின்றது, தேவன் தம்முடைய கோதுமையை களஞ்சியத்திற்கு கொண்டு செல்லுகின்றார், அவ்வளவுதான், இது தான் அர்த்தமென்று புரிகின்றது” என்று நினைத்துக் கொண்டேன். “அதைக் குறித்து வேறொன்றையும் என்னால் காணமுடிய வில்லை” என்றேன்.
88. நான் அங்கே உட்கார்ந்து கொண்டிருந்தேன், அதைப் போன்று நான் வெளியே பார்த்துக் கொண்டிருந்தேன், அப்பொழுது எனக்கு முன்பாக ஒரு தரிசனம் வந்தது. அதிலே நான் உலகமானது இதைப் போன்று திரும்பிக் கொண்டிருந்தது, அது நேராக இருந்து பயிரிடப்பட தயாராக இருந்தது. வெள்ளை அங்கி தரித்திருந்த ஒரு மனிதன் ஒரு உணவு சாக்குப்பையை, அல்லது ஒரு விதை நிறைந்த சாக்குப்பையில் தலை குனிந்த வண்ணம் இருக்க சற்றே சென்று கொண்டிருந்தான். பழைய விதை விதைக்கும் முறையை எத்தனைப் பேர் நினைவில் கொண்டுள்ளீர்கள் என்று எனக்குத் தெரியவில்லை, எப்படி நீங்கள்... என் தந்தை செய்வதை நான் கண்டிருக்கிறேன். கையினால் அவ்விதமாக வீசியெறிவது, அந்த விதைகள் நிலத்தின் மீது விழுந்து விடும். இந்த மனிதன் விதைகளை இவ்விதமாக விதைத்துக் கொண்டிருந்தான். அவன் விதைத்து கடந்து சென்ற உடனே, அவன் பின்பாக கோதுமையானது மேலே வந்தது.
89. நல்லது, அந்த மனிதனானவன் பூமியின் வளைவை சுற்றி சென்ற உடன், ஒரு கறுப்பு நிறத்தில் ஒன்று வருவதை நான் கண்டேன், ஒரு கறுப்பு நிலவைப் போன்று இருந்தது. நான் உற்றுப் பார்த்தேன், அது அருகில் வந்தது, அது ஒரு - ஒரு மனிதனாக இருந்தது, அடர்ந்த கறுப்பு, கறுப்பு நிற உடையை அணிந்திருந்தான். அவன் இவ்விதமாக கள்ளத்தனமாக பதுங்கி வந்தான். அவனும் ஒரு விதை சாக்குப்பையை வைத்திருந்தான், ஆனால் அதற்குள்ளாக களைகளை மாத்திரம் வைத்திருந்தான். இவன் இந்த கோதுமையின் நடுவில் இந்த விதமாக விதைத்துக் கொண்டிருந்தான், அதை தூவிக்கொண்டிருந்தான். இவனுக்கு பின்பாக களைகள், முட்பூண்டுகள், முட்செடிகள், முட்புதர்கள் மற்ற எல்லாமும் வளர்ந்தன.
90. அப்பொழுது நான், “இவ்விதமான ஒரு காரியத்தை அந்த மனிதன் செய்வது வெட்ககேடான ஒரு செயலாயிற்றே” என்று நினைத்தேன். அது ஒரு தரிசனமாயிருந்ததால், அது வேதபூர்வமானது என்று நான் யோசிக்கவில்லை, பாருங்கள். ஆகவே நான் “அந்த மனிதனுடைய கோதுமை நிலத்தில் இந்த மனிதன் களைகளை விதைக்கிறானே” என்றேன்.
91. அதன் பிறகு மிகவும் வெப்பமாயிற்று. அந்த சிறிய கோதுமை தலையை உயர்த்தி “உஹ், உஹ், உஹ்” என்று சுவாசிக்கத் திணறியது. அந்த சிறிய களையும் கூட தன் தலையை உயர்த்தி “உஹ், உஹ்-உஹ்” என்றது, அதுவும் கூட தண்ணீருக்காக கடுமையாக துடித்துக் கொண்டிருந்தது. எல்லாம் மழைக்காக ஜெபித்தன.
92. சிறிது நேரம் கழித்து... ஒரு மின்னலையும் இடியையும் உண்டாக்கும் ஒரு பெரிய மேகம் வந்தது, மழை பெய்ய ஆரம்பித்தது, அது பூமியை வந்தடைந்தது. அந்த சிறிய கோதுமை மேலும் கீழும் குதித்து “அல்லேலூயா! கர்த்தருக்கு ஸ்தோத்திரம்! அல்லேலூயா! கர்த்தருக்கு ஸ்தோத்திரம்” என்று கூச்சலிட ஆரம்பித்தது. அந்த சிறிய களைகளும், “கர்த்தருக்கு ஸ்தோத்திரம் “ எனக் கூச்சலிட்டது, நேராக நின்றது, கோதுமைக்கு உயிர் வந்தது போலவே களைக்கும் உயிர் வந்தது.
93. அப்பொழுது, “நீதியுள்ளவர்கள் மேலும் அநீதியுள்ளவர்கள் மேலும் மழையானது பெய்கின்றது” என்று வேத வசனம் வந்தது. அப்பொழுது தான் காரியத்தை அறிந்து கொண்டேன். பாருங்கள்?
94. இது, ஒரு நபர் சபைக்கூட்டத்தில் அமர்ந்திருக்கையில் ஆவியானது அந்த நபரின் மேல் விழுகின்றது, ஆனாலும் அவர்கள் தவறாயிருப்பார்கள், அவர்கள் சரியான ஜீவியத்தை ஜீவிக்க மாட்டார்கள் என்பதை நீங்கள் அறிந்திருந்தாலும் அந்த ஆவியைக் குறித்து நீங்கள் என்ன பேச வேண்டும் என்பதில் கவனமாயிருங்கள், அது பரிசுத்த ஆவியாகவும் இருக்கக்கூடும். ஆவியை நபரைக் கொண்டு ஆவியை நியாயந்தீர்க்காதீர்கள். அந்த நபர் தவறாக இருக்கக்கூடும். ஆனால் “நீதியுள்ளவர்கள் மேலும் அநீதியுள்ளவர்கள் மேலும் மழையானது பெய்கின்றது” என்று வேதாகமம் கூறவில்லையா? வயலில் நடப்பட்டபோது, “இரண்டையும் வளர விடுங்கள், களைகளையும் கோதுமையும் ஒன்றாக வளர விடுங்கள். களைகளை பிடுங்க முயற்சிக்காதீர்கள். அவைகளை நியாயந்தீர்க்க முயற்சிக்காதீர்கள், இரண்டையும் ஒன்றாக வளர விடுங்கள். அந்த நாளிலே தூதர்கள் அனுப்பப்படுவார்கள், அவர்கள் களைகளை எல்லாம் எடுத்து சுட்டெரிப்பார்கள், கோதுமையோ களஞ்சியத்தில் சேர்க்கப்படும்” என்று இயேசு கூறவில்லையா? ஆனால் அவர்களுடைய கனிகளினாலே அவர்களை நாம் அறிந்து கொள்வோம். நீங்கள் உங்கள் இருதயத்தில் அறிந்து கொள்ளலாம். அந்த நபரோடு உறவு கொள்ள முயற்சித்துக் கொண்டிருங்கள்.
95. இந்த பெண் தவறான விதத்தில் உடையுடுத்தியிருந்தால், இந்த பெண்... என்று கூறாதீர்கள் அல்லது, இது எவ்விதமாக உள்ளது? “பரிசுத்த ஆவியானவர் காண்பார் என்று கூறுவோம்.” நாம் பார்ப்போம். இல்லை, நான் தவறான ஒன்றை எடுத்து விட்டேன், எப்படியாயினும் ஓ, இதோ இருக்கிறது, ஆம்.
பெண்கள் அந்நிய பாஷையில் பேசுவது, இப்பொழுது, கத்தரிக்கப்பட்ட குட்டை மயிரை கொண்ட ஒரு ஸ்திரீ சபையில் அந்நிய பாஷையில் பேசினால், அது... நாம் பார்க்கலாம். அவள் மூலமாக பேசுவது பரிசுத்த ஆவியா அல்லது அது ஒரு கள்ள ஆவியா?
96. நீங்கள் பாருங்கள், நான் எதுவும் கூறமாட்டேன். அந்த ஸ்திரீ குட்டை மயிரை வைத்திருப்பதனால் அவள் சரியாக இல்லை என்று நீங்கள் நினைத்திருந்தால்... (அது தான் நாம் எடுத்துக் கொண்ட விஷயம் என்று நான் நம்புகிறேன்). ஆமாம், “குட்டை தலைமயிர்”, சகோதரனே, நீர் திருமணமான மனிதராயிருந்தால், அவளும் திருமணமானவளாக இருந்தால் நீங்கள் உங்கள் மனைவியுடன் சென்றோ அல்லது உங்கள் மனைவி, இந்த ஸ்திரீயுடன் இனிமையாக காரியத்தை எடுத்து பேச செய்யலாமே? அவள் பரிசுத்த ஆவியைக் கொண்டிருக்கிறாள் என்று நாம் விசுவாசிப்போம். அவள் இந்த சபையில் இருந்தால், அவளுக்கு பரிசுத்த ஆவி இருக்கிறது என்று நான் விசுவாசிக்கப்போகிறேன். அப்பொழுது இவ்விதமாகக் கூறுவோம், ஒருக்கால் அவள் ஒரு...
97. உங்களுக்கு தெரியுமா, சில நேரத்தில், நம்மை ஆராய்ந்து பார்த்தால் நாமும் கூட சிறிது தவறை உடையவர்களாயிருக்க வகையுண்டு. நீங்கள் அதை அறிவீர்கள், அது தான் காரியம். ஆகவே யாராவது நம்மிடம் சிலவற்றை கூறவேண்டியிருக்கும். அநேக சமயங்களில் ஜனங்கள் என்னிடம் அநேக காரியங்களை நான் தவறாக செய்கிறேன் என்றும், நான் தவறு செய்தேன் என்றும் என்னிடம் கூறுவார்கள், நான் அதை பாராட்டுகிறேன்.
98. ஆனால் இப்பொழுது நாம் கூறட்டும்... என்னவாயிருந்தாலும், நாம் விசுவாசிப்போம். இதை நாம் விசுவாசிப்போம், அந்த ஸ்திரீ முற்றிலுமாக ஒரு கிறிஸ்தவளாக இல்லாமலிருந்து அவ்விதமாக அவள் உடுத்தியிருப்பாளானால், அதற்காக தேவன் அவளை நியாயந்தீர்ப்பார். அது சரி. ஆனால்... அவள் கீழ்த்தரமாக உடை அணிந்து, அவள் செய்யும் காரியங்கள் சரியானதாக இல்லாதிருந்தால், தேவன் அதைப் பார்த்துக் கொள்வார். ஆனால் அந்த ஸ்திரீயின் மீது இருக்கும் ஆவியானது பரிசுத்த ஆவியே என்று நாம் விசுவாசிப்போம். பாருங்கள், ஏனென்றால் நாம் அதை அறியவில்லை
99. இப்பொழுது, அந்த பரிசுத்த ஆவியின் வியாக்கியானமானது ஏதோ ஒன்றை கூறுமானால், கிறிஸ்துவுக்கு சபிப்பை... “ஆவியினாலே பேசுகிற எவனும் கிறிஸ்துவை சபிக்கப்பட்டவனென்று சொல்லமாட்டானென்றும்” அந்த ஸ்திரீயானவள் அந்நிய பாஷையில் பேசி பிறகு “கிறிஸ்து சபிக்கப்பட்டவர்ரென்று” வியாக்கியானம் வருமென்றால், அந்த ஸ்திரீயின் மேல் இருப்பது தீய ஆவியென்று அப்பொழுது நீங்கள் அறிந்து கொள்ளலாம். ஆனால் அது கிறிஸ்துவை ஸ்தோத்தரித்து பக்திவிருத்தி உண்டாக்கும்படிக்கு இருக்கின்ற வரையில், அது ஆவியானவர் என்று விசுவாசியுங்கள். பாருங்கள்? ஆமென். இது குழப்பமாயிராது என்று நான் நம்புகிறேன். எப்படியாயினும் அதைக் குறித்து கொஞ்சம் நாம் தெரிந்து கொண்டோம் என்று நான் நம்புகிறேன்.