100. சரி. விபச்சாரமானது வேதாகம காலத்திலே ஒரு பயங்கரமான காரியமாக இருந்தது, ஒரு மனிதன் தன்னுடைய மனைவியாக அல்லாதிருக்கிற ஒரு பெண் மூலமாக ஒரு குழந்தையை பெறுவானானால், அந்த பிள்ளை, அந்த பிள்ளையினுடைய பிள்ளைகளிடத்திலும்,அதனுடைய பிள்ளைகளிடத்திலும், நாலு தலைமுறைகளுக்கு, நானூறு மற்றும் அதற்கும் பிறகான வருடங்களுக்கு கர்த்தருடைய சபைக்குள்ளாக வரவே முடியாது, ஏனெனில் காளை மற்றும் வெள்ளாட்டு கடாக்களின் இரத்தமானது பாவத்தை எடுத்துப் போட போதுமானதாக இருக்கவில்லை. அதனால் பாவத்தை புறம்பாக வைக்க அல்லது மூடத்தான் முடியும். அதனால் பாவத்தை வெளியே எடுத்துவிட முடியாது. பாருங்கள்? அதனால் பாவத்தை வெளியே எடுத்து விட முடியவில்லை, அதனால் பாவத்தை மூடத்தான் முடிந்தது. விபச்சாரமானது பயங்கரமான ஒரு காரியமாகும்!
101. ஒரு பெண், விலையேறபெற்ற ரத்தினமாவாள், அவள் ஒரு தாயாக இருக்கும்படியாக தேவன் அவளை உண்டாக்கினார், தாய்மைத்துவத்தை அவளிடம் ஒப்படைத்தார். ஆனால் அவளோ தன் புருஷனல்லாத மற்றொரு மனிதனுக்கு ஒரு பிள்ளையைப் பெறுவாளானால், அப்பொழுது அந்த பிள்ளையின் மீதும், அதனுடைய பிள்ளைகள் மற்றும் அதனுடைய பிள்ளைகள், மற்றும் அதனுடைய பிள்ளைகளிடத்தில் மூன்று மற்றும் நான்கு தலைமுறைகளுக்கு சாபமானது இருக்கும். அநேக சமயங்களில் பால்வினை கிரந்தி நோய்கள் மற்றும் - மற்றும் குருட்டாட்டங்கள், மக்கள் மேல் வந்தது. ஆம் ஒரு பெண், பரிசுத்த விவாகத்திற்கு அப்பாற்பட்டு ஒரு குழந்தையை பெற்றெடுப்பாளானால் அது ஒரு பயங்கரமான, பயங்கரமான காரியமாகும். கவனியுங்கள், அப்பொழுது மாத்திரமல்ல, இன்னுமாக அது ஒரு பயங்கரமான செயலாகும், நிச்சயமாக எப்பொழுதுமே அவ்விதமே.