102. இப்பொழுது நீங்கள் கவனிப்பீர்களால், எசேக்கியல் 38 மற்றும் 39 கோகு மற்றும் மாகோகு குறித்து இருக்கிறது, அதுதான் வடக்கு தேசமாகிய ரஷியா ஆகும். இப்பொழுது, இது சரி என்று நான் கூறவில்லை, ஆனால் நான் அதை போதிப்பது என்னவென்றால், அது எடுத்துக்கொள்ளப்படுதலுக்கு பிறகு, சபை மேலே எடுத்துக் கொள்ளப்பட்டபிறகு நிறைவேறும். அங்கே இஸ்ரவேலுக்கு முன்பாக அவர்கள் வருகையில் கோகு மற்றும் மாகோகை தேவன் கையாளுவார். அது எடுத்துக் கொள்ளப்படுதலுக்கு பிறகு சம்பவிக்கும் என்று நான் நினைக்கிறேன். இப்பொழுது அது நடைபெறாது, பாருங்கள். ஆனால் நான் அதை அப்படித்தான் போதிக்கிறேன். அதைக் குறித்த என் கருத்து என்னவென்பதை அவர்கள் தெரிந்து கொள்ள விரும்பினர் என்று நான் கருதுகிறேன்.