103. இப்பொழுது, “நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?” என்று கூறின விதத்திற்காக நான் மகிழ்ச்சியடைகிறேன். சரியானதாக இருக்கும்படிக்கு அது செய்யும். ஏனெனில் நான் அதை குறித்து நினைத்துப்பார்ப்பேன். ஒருவனுக்கு தேவன் ஒளியை வெளிப்படுத்திக் கொடுக்காவிடில் எந்த ஒரு மனிதனாலும் தேவனுடைய ஒளியில் நடக்க முடியாதென்று நான் நம்புகிறேன். மற்றும் நான் விசுவாசிக்கவில்லை. எந்த ஒரு மனிதனும்... இந்த மறைக்கப்பட்ட காரியங்கள் எல்லாம் ஜனத்திற்கு மறைக்கப்பட்டுள்ளது, இவைகளை தேவன் வெளிப்படுத்தினாலொழிய எந்த ஒரு மனிதனாலும் இவைகளைக் கூட காணமுடியாது, அவ்வாறு நான் விசுவாசிக்கிறேன் ஏனென்றால் வேதாகமத்தில் அவ்விதமாகத் தான் எப்பொழுதுமே இருந்து வந்துள்ளன.
104. “உங்களுக்கு கண்களிருந்தும் உங்களால் காணமுடியவில்லை, உங்களுக்கு காதுகளிருந்தும் கேளாமற்போகிறீர்கள்” என்று இயேசு கூறிவில்லையா?
105. மத்தேயுவிலும், 8 அல்லது 12 வது அதிகாரம் என்று நான் நம்புகிறேன், அது “இயேசு இத்தனை அற்புதங்களை அவர்களுக்குள்ளாக செய்திருந்தும் அவர்களால் அவரை விசுவாசிக்க முடியவில்லை. ஏனென்றால் அவர்களுக்கு கண்களிருந்தும் காணாமலும், காதுகளிருந்தும் கேளாமலிருக்கிறார்கள்' என்று ஏசாயா கூறினான், அந்த தீர்க்கதரிசனமும் கூறினது”. பாருங்கள்?
106. “ஒருவனை என் பிதா முதலில் அழைக்காவிடில் ஒருவனும் என்னிடத்தில் வரமாட்டான், பிதாவானவர் எனக்கு கொடுத்திருக்கிற யாவும் என்னிடத்தில் வரும்” என்று இயேசு கூறினார். அது எல்லாவற்றையும் முற்றுப் பெறச் செய்கிறது, புரிகின்றதா?
107. இப்பொழுது, ஒளியை பரப்புவதற்குத் தான் நீங்கள் நீங்கள் பொறுப்பாளிகள், அவர்கள் அந்த ஒளியைப் பெறுவதற்கு நீங்கள் பொறுப்பாளிகளல்ல, அவர்களிடத்திற்கு அதை எடுத்துச் செல்ல நீங்கள் பொறுப்பாளிகள். ஆனால் அவர்களுடைய பதிற்செயலுக்கு நீங்கள் பொறுப்பாளிகள் அல்ல. ஆகவே தேவன் அவர்களை உள்ளே அனுமதிப்பாரென்றால், அது அவரைப் பொறுத்த ஒன்றாகும். அவர்கள் வஸ்திரமில்லாதவர்களாக இருந்தாலும், இன்னும் மற்றவை... ஆனால் அவர்கள்... அவர்களால் முடியாது. நினைவில் கொள்ளுங்கள், தேவன் அவர்களுக்கு அதை வெளிப்படுத்தினாலொழிய அவர்களால் அதைக் காண முடியாது.