108. ஓ, இந்த நபர் தன்னுடைய பெயரை இதனுடன் சேர்த்து கையொப்பமிட்டுள்ளார். அடுத்த ஞாயிறு என்னுடைய பொருள் இதுவேயாகும், அது தானியேலின் எழுபது வாரங்களுடன் வருகின்றது. ஆனால்... இதை நான் உங்களுக்கு கூறட்டும், இங்கே கையொப்பமிட்டுள்ள என் மிகவும் விலையேறபெற்ற சகோதரன், நம்மெல்லாருக்கும் அருமையான நண்பராவார். ஆம், “பாழாக்கும் அருவருப்பு” இயேசு, மத்தேயு 24ல் அதைக் குறித்து பேசியுள்ளார். அந்த அருவருப்பு, (என்றால் அசுத்தம்) அந்த பாழாக்கும் அருவருப்பு, அது, ஒருக்காலத்தில் பரிசுத்த இடமாயிருந்த அந்த தேவாலய இடத்தில் தானே முஸ்லீம் மதத்தினரின் ஓமர் மசூதி கட்டப்பட்டது தான் அந்த அருவருப்பு.
109. கி.பி. 96ஆம் ஆண்டில், தீத்து அரசன் உள்ளே வந்து எருசலேமை கைப்பற்றி தேவாலயத்தை சுட்டெரித்தான், அந்த நிலத்திலே, அவர்கள், முஸ்லீம் மதத்தினரின் ஓமர் மசூதியை கட்டினார்கள், (முகமதியர் மதம்) அது இன்று வரையிலும் அங்கே இருக்கின்றது. தேவன் யூதர்களிடம் திரும்ப வரும் வரைக்கும் அது அங்கே இருக்கும். “அந்த அருவருப்பு (அது தான் ஓமரின் மசூதி) பரிசுத்த ஸ்தலத்தை பாழாக்கும் ஒன்று”. அங்கே பரிசுத்த ஸ்தலத்தில் நின்று கொண்டிருக்கின்றது, பாருங்கள்.
110. இயேசு அதைக் குறித்து குறிப்பிட்டிருக்கிறார், “வாசிக்கிறவன் சிந்திக்கக்கடவன்” என்று கூறினார். பாருங்கள்? ஆதலால், அவர் அந்த நேரம் முதற்கொண்டு அநேக நாள்... அந்த அரசனுக்கு பிறகு, அநேக நாள், நாம் அடுத்த ஞாயிறன்று பார்க்கப்போகிறோம். எனக்கு தெரிந்த வரை சிறந்த முறையில் அதை நான் உங்களுக்கு அடுத்த ஞாயிறன்று எடுத்துரைப்பேன். தேவாலயத்தின் இடத்தை எடுத்துக் கொண்ட அந்த ஓமர் மசூதி தான் அந்த அருவருப்பு, “மேலும் அந்த பரிசுத்த ஸ்தலத்தில் நின்று கொண்டிருக்கின்ற பாழாக்குகிற அருவருப்பைக் குறித்து தானியேல் தீர்க்கதரிசி சொல்லியிருக்கிறானே, “ பாருங்கள், தேவாலயம் இருந்த அந்த இடத்தில் (பரிசுத்த ஸ்தலம்) ஓமரின் மசூதி இருக்கின்றது.