111. சரி, உங்களால் கூடுமானால்... அது சரி, மல்கியா 4 ஆம் அதிகாரத்தில் வேதாகமம் அவ்வாறு கூறுகின்றது, “மனுஷன் தேவனை வஞ்சிக்கலாமா? (ஆங்கில வேதாகமத்தில் rob, திருட்டு என்று இருக்கிறது - தமிழாக்கியோன்) எதிலே உம்மை வஞ்சித்தோம் (robbed திருடினோம்) என்கிறீர்கள்? தசமபாகத்திலும் காணிக்கைகளிலுந்தானே. உங்கள் தசமபாகம் மற்றும் காணிக்கைகளையும் என்னுடைய பண்டகசாலைக்கு கொண்டு வாருங்கள்; அப்பொழுது நான் வானத்தின் பலகணிகளைத் திறந்து இடங்கொள்ளாமற்போகும் மட்டும் உங்கள் மேல் ஆசீர்வாதத்தை வருஷிக்கமாட்டேனோ வென்று அதினால் என்னைச் சோதித்துப் பாருங்கள்” என்று கர்த்தர் சொல்லுகிறார்.
112. அது எந்த ஒரு தனிப்பட்ட நபருக்கும் சவால் என்பதை நீங்கள் அறியவேண்டும். மேலும் எனக்கு அந்நேரம் மட்டுமிருந்தால் நான் அடுத்த பத்து நிமிடத்திற்கு இந்த சிறிய வேத வசனங்களுக்கு சென்றிருக்கமாட்டேன், நான் என்னுடைய தனிப்பட்ட சாட்சியை கூற விரும்புகிறேன். எப்படி நானும் பசியாயிருந்தேன், என் தாய் மற்றும் அவர்கள் பசியாயிருந்தார்கள், மற்றும் எனது தந்தையின் சுகவீனமான ஒரு சூழல், ஆனாலும் முதலாவதாக எனது தசமபாகத்தை எடுத்து அதை கர்த்தருக்கு கொடுத்தேன். நீங்கள் கொடுத்து அதன் பிறகு நடப்பவைகளை பாருங்கள். எந்த ஒரு மனிதனோ அல்லது ஸ்திரீயோ, நீங்கள் வாரத்திற்கு ஒரு டாலர் மாத்திரமே சம்பாதித்து, அந்த பணத்தில் பத்து சென்டுகளை கொண்டு வந்து உங்களுடைய பண்டகசாலையில், நீங்கள் செல்லுகின்ற உங்கள் சபையில் கொடுத்து, தேவன் அதை ஆசீர்வதிக்கவில்லையெனில் என்னை ஒரு மாய்மாலக்காரன் என்று கூறுங்கள். இப்பட்டதை என் வாழ்நாளில் இதுவரை நான் கண்டதேயில்லை ஆம், ஐயா. அது ஒவ்வொருவருக்கும் சவாலாகும். மேலும் ஒவ்வொரு கிறிஸ்தவனும்... அது மற்ற கேள்விக்கு செல்கிறது. ஒவ்வொரு கிறிஸ்தவனும் தசமபாகங்களை செலுத்த வேண்டும்! அது சரி. அதை செலுத்தித் தானாகவேண்டும்.