இப்பொழுது நான் இதை மறுபடியுமாக வாசிக்கட்டும்:
ஒரு நபர் அல்லது நபர்கள் ஒவ்வொரு முறையும் ஒரே குரல் மற்றும் தொனியில் அதே காரியத்தை அந்நிய பாஷையில் பேசும் போது, (வேறு விதமாகக் கூறுவோமானால் ஒரு குறிப்பிட்ட, குறிப்பிட்ட வார்த்தையை மறுபடியும், மறுபடியும், மறுபடியுமாக அதே காரியத்தையே கூறிக்கொண்டிருத்தல்) அதற்கான வியாக்கியானம் ஒவ்வொரு முறையும் வியாக்கியானம் செய்பவரால் பலவிதமாக வியாக்கியானிக்கப்படும் போது, அது பரிசுத்த ஆவியாக இருக்குமா?
113. இப்பொழுது, இது கடினமான ஒரு காரியம், ஆனால் என்னால் கூடுமான வரைக்கும் இதன் பேரில் சில உண்மைகளை நான் கொண்டு வருவேனாக. இது சகோதரன் பிரன்ஹாம் தன்னால் முடிந்த வரைக்கும் முயற்சி செய்வது என்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்று நான் நிச்சயிக்கிறேன், ஆவிக்குரிய காரியங்களைக் குறித்த விவகாரங்களில் எனக்கிருக்கும் இந்த தனிப்பட்ட அனுபவத்தை நான் உங்களுக்கு கூறுவேனாக. இதைப் போன்ற கேள்விகளை என்னிடமாக கேட்பதற்கு உங்களுக்கு இருக்கும் நம்பிக்கையை நான் பாராட்டுகிறேன். உங்களுக்கு என் மீது நம்பிக்கை இல்லாதிருக்கும்பட்சத்தில் இந்த விதமாக என்னிடத்தில் கேள்வியைக் கேட்டிருக்கமாட்டீர்கள். வாக்கு வாதத்தை எழுப்பவதற்கென்றே கேள்விகளை ஒரு கிறிஸ்தவன் கேட்கமாட்டான் என்று நான் விசுவாசிக்கிறேன், சத்தியம் என்னவென்பதை கண்டு கொள்வதற்காகவே அவர்கள் முயற்சி செய்கிறார்கள் என்று நான் நம்புகிறேன். பாருங்கள்?
நான் பதிலளிப்பேன், ஆனால்... “எனக்கு தெரிந்த வரையில் உண்டாயிருக்கிற அறிவு” என்று நான் என்னை தெளிவுபடுத்திக்கொண்ட பிறகே நான் அதற்கு பதிலளிப்பேன், அதன் பிறகு உங்களுக்குள் இருக்கும் ஆவி கோபம் கொண்டால், உங்களுக்குள் இருக்கும் அந்த ஆவி பரிசுத்த ஆவி அல்ல என்று தான் அர்த்தம். புரிகின்றதா? அப்படியானால் பரிசுத்த ஆவி கோபம் கொள்ளாது, ஒவ்வொரு முறையும் வார்த்தையினால் அது திருத்திக்கொள்ளும், சீர்திருத்தலை தாங்கும்.
114. இப்பொழுது இதை நான் கூறட்டும், நான்... இந்த காரியத்தில், நினைவு கொள்ளுங்கள், தேவன் என்னுடைய நியாயாதிபதியாக இருப்பாராக. நான், இது வில்லியம் பிரன்ஹாம், என்னால் இதை கூறமுடியாது. அபிஷேகத்தின் கீழாக இப்படிப்பட்ட கூட்டங்களில் நான் கண்டிருக்கின்ற அனுபவங்களில், அந்த நபர் ஒவ்வொரு முறையும் அதே காரியத்தை, அதே குரல் தொனியில், பேசுவது அந்நிய பாஷையில் தான் பேசுகிறார் என்று நான் விசுவாசிக்கிறேன். நான் விசுவாசிப்பது என்ன வென்றால் அவர்கள் கிறிஸ்தவர்களாயிருந்தால் அவர்கள் ஆவியினாலே அந்நிய பாஷை பேசுகின்றார்கள். அவர்கள் அந்நிய பாஷையில் பேசுகிறார்கள் என்பதில் சந்தேகமேயில்லை. ஆனால் தவறான தொனியில் உள்ள வியாக்கியானத்தை நீங்கள் பெற்றுக் கொள்கிறீர்கள் என நான் நம்புகிறேன்.
115. இப்பொழுது, அநேக சமயங்களில், மக்கள்... நான் நான்... எப்படியாயினும்... இன்று இங்குள்ளோர் அனைவரும் சபை மக்கள் என்றே நான் யூகிக்கிறேன். அப்படித்தானே சகோதரன் நெவில், என்னவாயிருந்தாலும் சரி? இங்கே வெளியேயிருந்து வந்துள்ளவர்களாக இருந்து இதன் பேரில் கருத்து வேறுபாடு கொள்வீர்களானால், நான் இதை என் சொந்த சபைக்கு பேச முயற்சித்துக் கொண்டிருக்கிறேன் என்பதை புரிந்து கொள்ள வேண்டும், பாருங்கள்.
116. இப்பொழுது, சுவிசேஷத்தில் உங்கள் தகப்பனான, உங்களுடைய மேய்ப்பனான நான் கூறிட விரும்புவது, இன்னும் சிறிது காலத்திற்கு பிறகு, உங்களுடைய ஆவிகளும் வரங்களும் பரிபூரணத்தை நோக்கி வருகையில்... அவை கட்டுக்கடங்காமல் இருப்பதை நீங்கள் கவனிக்க நேரிடுகையில்... அப்பொழுது நீங்கள் சற்று கவனித்தால் நல்லது - அந்த நபரை கவனியுங்கள், அதை அப்படியே விட்டு விடுங்கள், ஏனெனில் அவர்கள் மேல் இருப்பது தேவனுடைய ஆவி அல்ல. ஆனால் அவர்கள் இனிமையாகவும், தாழ்மையாகவும் ஆயத்தமுள்ளவர்களாகவும் மற்றெல்லாமும் உடையவர்களாகவும் இருந்தால் அது தேவனுடைய ஆவியாகும். யாராவது ஒருவர் ஒழுங்கை மீறி நடந்து கொள்ளும் போது, மேய்ப்பர் அதை அடக்க நேரிடும் போது, அப்போது அந்த ஆவி எழும்புமானால், அப்படியானால் அது தேவனுடைய ஆவி அல்ல. தேவனுடைய ஆவி எப்பொழுதுமே வார்த்தைக்கு வரும், நிற்கும். புரிகின்றதா? அது ஒவ்வொரு முறையும் வார்த்தையை அடையாளங்கண்டு கொள்ளும்.
117. இப்பொழுது, ஆனால் இப்பொழுது நான் முகஸ்துதியோ அல்லது அதிர்ச்சியோ செய்ய முயலவில்லை, நான் உண்மையைக் கொண்டு வரவே முயல்கின்றேன். இப்பொழுது, ஒருவர் அந்நிய பாஷையில் பேசி மற்றொருவர் வியாக்கியானம் செய்ய எழுந்திருக்கையில் இப்பொழுது கூர்ந்து கவனியுங்கள் (இது ஒலிநாடாவில் பதிவு செய்யப்படுகிறது என்று நான் நினைக்கிறேன். அப்படித்தானே?) அந்நிய பாஷைக்கு வியாக்கியானம் செய்யப்படுகையில்... இதனுடன் சேர்த்து சில போதகத்தையும் நான் பேச வேண்டியுள்ளது. அந்நிய பாஷைக்கு வியாக்கியானம் அளிக்கப்படும்போது, சில மக்கள் அசாதாரணமான முகபாவம், சொற்களுடன் ஒரு காரியத்தை கூற முற்படுகின்றனர். அது வியாக்கியானம் அல்ல.
118. வியாக்கியானம் என்பது, அவர்கள் அந்நிய பாஷையில் பேசுவதை, அவர்கள் என்ன பேசினார்களோ அதை அப்படியே மறுபடியுமாக திரும்பக் கூறப்படுவதே, நீங்கள் அதை ஆங்கிலத்தில் கூறக் கேட்கிறீர்கள். ஆனால் அந்த... இந்த நபர் உங்களுடைய சபையில் பேசுகையில்... இதில் ஒன்று நம்மிடையே இல்லை என்று நான் நினைக்கிறேன். அப்படியானால், அதை நான் இன்னும் கேட்கவில்லை.
119. ஆனால் யாரோ ஒருவர் எழுந்து ஒரு குறிப்பிட்ட வார்த்தையை மறுபடியும், மறுபடியும் அல்லது அதே குரல் மற்றும் தொனியில் இப்படியாக, இப்படியாக, இப்படியாக, இப்படியாக கூறும் போது...
120. நான் உங்களுக்கு கூறுகிறேன், இன்றிரவு, சகோதரன் ஜீனியர் ஜாக்சன் இங்குள்ளார் என்று நான் நினைக்கவில்லை. அவர் இருக்கிறாரா? அவர் இல்லை என்று நான் நினைக்கிறேன். சகோதரன் ஜூனியர் ஜாக்சன் மற்றும் அவர் பேசுகின்ற அந்நிய பாஷை குறித்தும், மற்றும் சகோதரன் ஹிக்கின்பாத்தம் மற்றும் இங்கிருக்கின்ற உங்களில் அநேகரைக் குறித்து நான் எப்பொழுதுமே ஆச்சரியப்படுவதுண்டு, அந்நியபாஷை வியாக்கியானத்தின் சத்தத்தில் இருக்கின்ற மாற்றத்தை நீங்கள் காணும் போது எப்படியாக இருக்கின்றது. பாருங்கள்? இப்பொழுது - இப்பொழுது அது பரவாயில்லை. இப்பொழுது, நான்... என் சபையைக் குறித்து நான் பெருமையாகச் சொல்லவில்லை. இல்லை ஐயா. என்னுடைய சபைக்கு திருத்தப்படுதல் தேவையாயிருக்கும் பட்சத்தில், அது புண்படுத்துகிறதோ அல்லது புண்படுத்தவில்லையோ, நான் - நான் இங்கே நின்று என் இரட்சகருக்காக என்னால் முடிந்த வரைக்கும் அதை நான் செய்வேன், அது சரியே, சுவிசேஷத்தில் நான் உங்கள் தகப்பனாவேன், பாருங்கள், ஆகவே நான்... நீங்கள் தவறான ஆவியை விரும்பமாட்டீர்கள், நீங்கள் சரியான ஆவியைக் கொண்டிருப்பதையே விரும்புவீர்கள். நீங்கள் எல்லாவற்றையும்.
121. பெந்தெகொஸ்தே வானங்கள் முழுவதிலும் உண்மையானது நிறைந்திருக்க ஏன் ஒரு மாற்று பதிலீட்டை (substitute) எடுக்கவேண்டும்? சுத்தமான ஒரு மேஜை அமைக்கப்பட்டு அதில் கோழி கறி, மாவு பணியாரங்கள் மற்ற எல்லாமும் வைக்கப் பட்டிருக்கையில் நீங்கள் ஏன் ஒரு குப்பைத் தொட்டியிலிருந்து எடுத்து உண்ணவேண்டும்? புரிகின்றதா? நாம் ஏன் அதைச் செய்வதில்லை? பாருங்கள்? உண்மையானதை நாம் பெற்றுக் கொள்வோம், அது தான் நமக்குத் தேவையாயிருக்கிறது, அந்த உண்மையான கலப்படமில்லாத தூய்மையான ஒன்று.
122. இப்பொழுது, இங்கே கூறப்பட்டுள்ள இந்த காரியத்தையும் நான் விசுவாசிக்கிறேன், அதே போல் அந்த காரியத்தை நான் விசுவாசிக்கின்றேன். இரண்டும் சரியே. ஆனால் வியாக்கியானம் செய்பவர் அந்த நபருடைய பாஷையை வியாக்கியானம் செய்கிறார் என்றும் நான் நம்புவதில்லை. நான் அதை விசுவாசிப்பதில்லை. ஆவியானவர் இருக்கிறார் என்றும் அந்த வியாக்கியானம் செய்பவர் தீர்க்கதரிசனம் உரைக்கிறார் என்று நான் விசுவாசிக்கிறேன். அவர் வியாக்கியானிப்பவர் என்பதைக் காட்டிலும் தீர்க்கதரிசனம் உரைப்பவர் என்றே நான் விசுவாசிக்கிறேன் அவர் தன்னுடைய சொந்த சத்தத்தை கேட்காமல் இருந்தால். அப்படியிருக்க, நம்மில் அவரவர்களுடைய ஜென்ம “மொழியிலே இவர்கள் பேசக் கேட்கிறோமே, இதெப்படி?” பாருங்கள்? அதே விதமாக நீங்கள் பேசக் கேட்க வேண்டும், நீங்கள் ஆங்கிலத்தில் பேசக் கேட்க வேண்டும்.
123. வியாக்கியானிப்பவர். இப்பொழுது, என்னால் எழுந்து நின்று, எனக்கு இரண்டு அல்லது மூன்று வார்த்தைகள் தான் அந்நிய மொழியில் எனக்குத் தெரியும். அதுதான் இப்பொழுது நான் பேசப் போகிறேன், ஆவிக்குரிய விரோதமாக அல்ல புரியவைப்பதற்காக நான் அதைப் பேசப் போகிறேன் “பைய், பைய் ப்ளை, ஐ... எக்கே வில் ஆப்பிரிக்கான்ஸ் ஸ்பிரெக்கென்.” நான் என்ன பேசினேன் என்பதை அறிந்துள்ள நபர் யாராவது இங்கிருப்பார்கள் என்பதில் எனக்கு நிச்சயமில்லை. ஆமாம், சகோதரனே, நான் என்ன கூறினேன்? (சபையோரிலிருந்து ஒரு சகோதரன் “ஆப்பிரிக்கான்ஸ் மொழியை என்னால் பேச முடியும் என்று நீங்கள் கூறினீர்கள்” என்று கூறுகிறார் - ஆசி) ஆப்பிரிக் கான்ஸ் மொழி, “பைய், பைய் ப்ளை” “எனக்கு மிகவும், மிகவும் மகிழ்ச்சி.” “ஆப்பிரிக்கான்ஸ் மொழியில் பேச நான் இங்கிருக்கிறேன்” பாருங்கள், “ஆப்பிரிக்கான்ஸ் ஸ்பிரெக்கென்” பாருங்கள்? “ஆப்பிரிக்கான்ஸ் மொழியில் பேச நான் இங்கிருக்கிறேன்.”
124. இப்பொழுது, அவர் என்ன செய்தார்? அவர்... நான் ஆப்பிரிக்கான்ஸில் பேசிக்கொண்டிருந்தேன். ஆனால் அவர் என்னை ஆங்கிலத்தில் பேசக் கேட்டார். அது சரியா? ஏனெனில் உங்களுக்கு ஆப்பிரிக்கான்ஸ் தெரியும். இப்பொழுது நீங்கள் பேசிக்கொண்டிருக்கையில்... நான் இங்கே நின்று கொண்டிருந்து அல்லது பேசிக் கொண்டிருந்து... பிரசங்கித்துக் கொண்டிருக்கையில், சகோதரன் நெவில் அதை மற்ற மக்களுடைய மொழியில் வியாக்கியானிக்கும் போது, நான் என்ன கூறுகிறேன் என்பதை அவர் கேட்டு அதை அவர்களுடைய மொழியில் கூறுகின்றார்; நான் எதைக் குறித்து பேசுகிறேன் என்பதை அவர் அறிவார். ஏனெனில் என்னுடைய மொழியை அவர் அறிவார்.
125. நீங்கள் ஒரு அறியாத மொழியில் பேசி அதை வியாக்கியானிக்கும் போது, நீங்கள் அதை உங்கள் ஜென்ம மொழியில் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள், ஏனெனில் அவர்கள் கூறுவதை அந்த விதமாகத்தான் உங்களால் வியாக்கியானிக்க முடியும், ஏனெனில் பரிசுத்த ஆவியானவர் அதை உங்களுக்கு வியாக்கியானம் செய்து விட்டார். அப்பொழுது நீங்கள் பரிசுத்த ஆவியானவருக்காகவே மாத்திரம் பேசுகிறீர்கள்.
126. இந்த ஏழை நபரை ஆசீர்வதிக்க பரிசுத்த ஆவியானவர் இங்கிருக்கையில், அவர்களும் எழுந்திருக்கும் போது... நம்மை விட்டு கடந்து சென்று இன்றிரவு மகிமையில் இருக்கின்றார் என்று நான் உண்மையாக விசுவாசிக்கின்ற விலையேறப் பெற்ற வயதான சகோதரன் போல் எனக்கு தெரிந்த அருமையான வயதான ஆத்துமா, சகோதரன் ரையான், நாமெல்லாரும் அவரை அறிவோம். அவர் அங்கே தெருவில் நிற்பது வழக்கம்... (தேவனே, என்னை மன்னிக்கவும், பரிசுத்த தன்மைகளை மதியாத ஒன்றாக இருக்க அல்ல... அது... பரிசுத்த ஆவியை தூஷணம் செய்வது மன்னிக்க முடியாததாகும் என்பதை நானறிவேன்) ஆனால் சகோதரன் ஒரேயொரு வார்த்தையை எல்லா நேரத்திலும் திரும்பத் திரும்பக் கூறுவது வழக்கம் “சீக்கெம், சீக்கெம், சீக்கெம்” அல்லது அதைப் போன்ற ஒன்றை கூறுவார். அவர்... ஏன், ஒருவர் “அது தேவனால் உண்டானதென்று நீங்கள் நினைக்கிறீர்களா?” என்று கேட்டார்.
127. நான் “நிச்சயமாக, அது தேவனாலுண்டானது! நிச்சயமாக, அது தேவனுடையதுதான்” என்று கூறினேன். ஆனால் அவர் அந்நிய பாஷையில் பேசினார், அவர் என்ன சொல்லிக் கொண்டிருந்தார் என்று என்னால் கூற முடியவில்லை, ஏனெனில் எனக்குத் தெரியாது. ஆனால் ஆவியானவருடைய பிரசன்னம் அங்கே இருந்தது.
128. ஆகவே ஆவியானவருடைய பிரசன்னம் இருக்கும் போது, இந்த நபர் ஒரு வார்த்தையை மறுபடியும், மறுபடியும், மறுபடியும் கூறும் போது, இன்னொருவர் குதித்தெழுந்து வியாக்கியானம் அளிக்க முயன்று, இன்னுமாக அவர் என்ன கூறுகிறார் என்பதை இவர் அறியாதிருக்கிறார். இந்த நபர் வியாக்கியானம் அளிக்க வில்லை, இவர் தீர்க்கதரிசனம் உரைக்கின்றார்: தீர்க்கதரிசனத்தின் ஆவி இவர் மீது தங்கி அதினாலே இவர் தீர்க்கதரிசனம் உரைக்கின்றார், வியாக்கியானம் அளிக்கவில்லை.
129. ஆகவே அருமையான கிறிஸ்தவனே, “அது பரிசுத்த ஆவியாக இருக்குமா” என்று கேட்டவராகிய உங்களுக்கு கூறுகிறேன். அது பரிசுத்த ஆவியானவர் இரண்டு அலுவல்களை உபயோகிப்பதாக இருக்கக் கூடும். ஒன்று, அந்நிய பாஷையில் பேச ஒரு ஆத்துமாவை ஆசீர்வதிப்பதாகும்; மற்றொன்று, தீர்க்கதரிசனம் உரைத்தல், அந்த நபர் கூறுவதை அதை வியாக்கியானம் செய்வதாக அல்ல ஆனால் அவர் உரைத்தார். பரிசுத்த ஆவியானவர் அவர் மேல் வந்து அவர் தீர்க்கதரிசனம் உரைக்கும் அதே நேரத்தில் இவர் அந்நிய பாஷையில் பேசிக் கொண்டிருந்தார். அது வியாக்கியானம் என்று இவர் எண்ணினார், என்ன வித்தியாசத்தை அது உண்டு பண்ணினது? அது தேவனுடைய ஆவியானவர் சபைக்கு ஒரு செய்தியை அளிப்பதாகும். ஆனால் வியாக்கியானம் என்பது, ஆங்கிலத்தில் அது புரிந்து கொள்ளப்பட்டு, சரியாக அந்த நபர் என்ன கூறினாரோ அதை மறுபடியுமாக மீண்டும் கூறுதலாகும். அது தான் வியாக்கியானம் பண்ணுகின்ற வரமாகும்.