130. ஏன், நிச்சயமாக. அது சரியே. நிச்சயமாக நீங்கள் எதை நோக்குகிறீர்கள் என்பதை நானறிவேன். அதோ பவுல் கூறுகிறான் அவையெல்லாம்... “நீங்கள் தீர்க்கதரிசனம் உரைத்து அந்நிய பாஷையில் பேசுகிறீர்கள்” என்பதைப் போல, பவுல் கூறுகிறான்...
131. சிறிது நேரம் கழித்து, நீங்களெல்லாரும். சகோதரன் நெவில், இப்பொழுது நீங்களெல்லாரும் பெற்றுக் கொள்ள விரும்புகிறீர்கள், இந்த மக்கள் எல்லாரும் இந்த ஆவிக்குரிய வரங்களை உடையவர்களாக இருக்கிறீர்கள். இப்பொழுது என்னுடைய வேத வசனத்தின் புரிந்து கொள்ளுதலில் நீங்கள் முழு மனதான நம்பிக்கை வைப்பீர்களானால், இந்த வரங்களையுடைய மக்களாகிய உங்களோடு மாத்திரமே நானும் வந்து நாமெல்லாரும் ஒன்று கூடி... நீங்கள் எப்படி... நீங்கள் கவனியுங்கள், சகோதரன் நெவில் மற்றும் சபையில், பாருங்கள், அது தேவனாகும், தேவன் அவர்கள் மத்தியில் அசைவாடுகிறார், அது தான் நமக்கு தேவை படுகிறது, ஆனால் அதை நாங்கள் ஒழுங்கில் வைக்கவே விரும்புகிறோம் அதினால் அது சபைக்கு ஆசீர்வாதமாக அமைந்து காரியங்களைச் செய்யும். நான்... தேவனால்... வேத வசனங்களை அறிவேன், என்ன செய்ய வேண்டும் என்பதையும் அறிவேன். அதைத் தான் நாங்கள் செய்ய விரும்புகிறோம்.
132. இப்பொழுது, இங்கேயிருக்கும் இந்த நபர், இவர் அந்நிய பாஷையில் பேசுகிறவர் என்பது எனக்கு தெரியும், அது இரண்டு வல்லமைகளால் உந்தப்படுகின்றன, மூன்றுக்கு மேற்பட்டவைகளாக இருக்காது. அது சரியானது, ஆனால் இங்கு நீங்கள் கவனிப்பீர்களனால், அது...
133. அங்கே ஒருவர் அளிப்பது போல... சகோதரன் சாத்மேன் எழுந்து தீர்க்கதரிசன செய்தியை அளிப்பது அல்லது அந்நிய பாஷையில் பேசுவது போல. அந்நிய பாஷையை வியாக்கியானம் செய்வது தீர்க்கதரிசனமே, பாருங்கள், தீர்க்கதரிசனத்தின் ஆவி. இப்பொழுது, வியாக்கியானிப்பவர் இல்லாதிருக்கையில், நீங்கள் அந்நிய பாஷையில் மாத்திரம் பேசிக் கொண்டிருந்தால், அந்த நபர் ஆவியினாலே ஆசீர்வதிக்கப்பட்டவராக இருக்கிறார், ஆனால் அவர் சபையை புண்படுத்துவதில்லை.
134. இப்பொழுது பவுல் இதைக் கூறத்தான் முயன்று கொண்டிருந்தான், “நீங்கள் ஆராதனை முழுவதையும் அந்நிய பாஷை பேசுவதிலேயே உபயோகிக்கிறீர்கள், பாருங்கள், அப்பொழுது கல்லாதவர்கள் 'இது என்ன, எதைக் குறித்ததாயிருக்கிறது'? என்பார்கள்”. பாருங்கள், அவர்கள் அதை பெற்றுக் கொள்ளமாட்டார்கள். ஆனால் அங்கே ஒரு வியாக்கியானம் இருக்க வேண்டும், அங்கே இருக்க வேண்டும். ஆகவே... ஒரு கூட்டத்தில் ஒன்று, இரண்டு அல்லது மூன்று செய்திகள் மாத்திரமே இருக்கட்டும்.
135. இப்பொழுது, இங்கே அந்த நபர் “பிறகு ஜெபவரிசையிலும்?” என்று கேட்கிறார். அது ஒருக்கால் ஜெப வரிசையில் யாராவது ஒருவராக இருக்கலாம். ஒருக்கால் சகோதரன் நெவில், அல்லது வேறொரு சபையில் அல்லது எங்கிருந்து வந்ததாயிருந்தாலும் சரி, ஜெப வரிசையில் இந்த மனிதன்... அல்லது தெய்வீக சுகமளித்தல் கூட்டங்களில், சகோதரன் ராபர்ட்ஸின் கூட்டத்தில் இருந்திருக்கலாம், சகோதரன் ஆலன் அவர்களுடைய கூட்டத்தில் அல்லது ஏதோ ஒன்றில், என்னுடைய கூட்டத்தில் அல்லது யாரோ ஒருவருடையதில், எனக்குத் தெரியாது. ஆனால், அது என்னவாயிருந்தாலும் சரி, அங்கே சபையில் ஒரு தீர்க்கதரிசன செய்தியைக் குறித்து பவுல், “மூன்று பேர் மாத்திரம் பேசலாம்” என்று பேசுகிறான், ஏனெனில் தேவனுடைய செய்தியானது ஒரு செய்தியைப் பேசி அதை சபையாருக்கு கொண்டு வர முயற்சிக்கிறது. ஆனால் ஒரு மனிதன் ஜெப வரிசையில் இருக்கையில் அவன் ஒரு தனிப்பட்ட நபருக்கு தீர்க்கதரிசனம் உரைக்கின்றான், முழு சபைக்கு அல்ல. அப்படியாக இருக்குமானால், பாருங்கள், ஒரே இரவில் அவர்களில் முப்பது அல்லது நாற்பது பேர்கள் இருக்கையில் என்னுடைய எல்லா ஜெப வரிசைகளிலும் எப்படி என்னால் அதை தவிர்க்க முடியும். பாருங்கள், நீங்கள் ஒரு தனிப்பட்ட நபருக்கு தீர்க்கதரிசனம் உரைத்துக் கொண்டிருக்கையில்...
136. ஆனால் இந்த மனிதன் முழு சரீரத்துக்கும் தீர்க்கதரிசனம் உரைக்கின்றார், அது இரண்டு அல்லது மூன்று செய்திகளாக இருந்து பிறகு நிறுத்தப்படவேண்டும். பரிசுத்த ஆவி இன்னுமாக பேச விரும்புவார், ஆனால் ஒரு நிமிடம் பொறுங்கள், வார்த்தை புறப்பட்டுச் செல்ல தருணம் கொடுங்கள். நீங்கள் பாருங்கள்? மேலும் உண்மையாகவே, அந்த உரைத்தலானது ஒன்று வார்த்தை கொடுக்கப்படுவதற்கு முன்னதாகவோ அல்லது அதற்கு பிறகோ தான் இருக்க வேண்டும், வார்த்தையானது புறப்பட்டுச் செல்ல ஆரம்பித்துவிட்ட பிறகு எதுவும் அதற்கு இடையூறு செய்யக் கூடாது. ஆனாலும், ஆவிகளும் வரங்களும் பரிபூரணத்திற்குள்ளாக செல்ல ஆரம்பிக்கையில் பிறகு அதை நாம் ஒழுங்கிற்குள் அமைத்து விடலாம்.
137. நாம் இப்பொழுது பெந்தெகொஸ்தே சபையின் முக்கியத்துவத்தின் பேரில் பேசிக்கொண்டிருக்கிறோம், நான் உண்மையான பெந்தெகொஸ்தே சபையையே குறிப்பிடுகிறேன். தேவன் இன்னுமாக ஜீவித்து, அரசாட்சி செய்து, நம்மிடம் பேசிக் கொண்டிருப்பதைக் குறித்து நாம் மகிழ்ச்சி கொள்கிறோம்.
138. இப்பொழுது, உதாரணத்திற்கு, இங்கிருக்கும் சகோதரி நமக்கு அந்நிய பாஷை அல்லது தீர்க்கதரிசனத்திலோ ஒரு செய்தியை அளித்து மற்றும் இவர்களுக்கு பக்கத்தில் இருக்கும் பெண்மணி அல்லது பின்புறத்தில் இருக்கும் யாரோ ஒருவர் தீர்க்கதரிசனமாகவோ அல்லது அந்நிய பாஷையில் ஒரு செய்தியை அளிப்பார்கள். அவர்கள் ஏறக்குறைய அதே காரியத்தின் பேரில் தான் பேசியிருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை- அது தேவன் துரிதமாக ஏதோ ஒன்றை அளிக்க முயற்சி செய்தல், சபையில் சில தனிப்பட்ட நபர்கள் ஒன்றை செய்ய வேண்டும் என்று அழைத்தல், அல்லது செய்யப்பட வேண்டுமென்று அவர் விரும்புகின்ற ஒன்றைக் கூறுதல்.
139. இப்பொழுது, உதாரணத்திற்காக, ஜெபவரிசை அழைக்கப்பட்டு, சகோதரன் நெவில் அல்லது நான் அல்லது யாராவது ஒரு போதகர் இந்த தனிப்பட்ட நபரிடம் செல்லும்போது, சரீரத்திற்கு அல்ல, அது அந்த தனிப்பட்ட நபருக்கு ஆகும். இந்த தனிப்பட்ட நபரிடம் ஏதோ ஒன்றைக் கூற தேவனுடைய ஆவி அவர் மீது வருகிறது, அப்பொழுது அந்த நபரிடம் கூறுகிறது, ஏனெனில் அவர் சபையோரிடம் பேசவில்லை. அவர் இந்த தனிப்பட்ட நபரிடம் பேசுகிறார், சபையோருக்கல்ல, ஆகவே அதனால் பரவாயில்லை.