140. ஏன், ஆம், என் சகோதரன் அல்லது சகோதரி, அது யாராயிருந்தாலும் சரி. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. என்னுடைய கருத்தின்படி, அந்த காரியமானது அது தேவனுடைய வரம் ஆகும். அது தேவனுடைய வரமாகும். சொப்பனங்களைக் குறித்து வேதாகமம் கூறுவது உங்களுக்கு தெரியுமல்லவா? யோசேப்பு, எப்படி அவன் சொப்பனங்கள் கண்டு அதன் அர்த்தத்தையும் கூறினான், மற்றவர்கள் எப்படி சொப்பனங்கள் கண்டார்கள். அந்த காரியங்கள் தேவனாலுண்டானவைகள். இப்பொழுது, அது தேவனுடையதாயிருந்தால், அது எப்பொழுதுமே உண்மையுள்ளதாக இருக்கும், அவர் கூறின விதமாகவே சரியாக எப்பொழுதும் அப்படியே அது சம்பவிக்கும்.
141. மேலும் இப்பொழுது... வேண்டாம். நீங்கள் அதை காட்சி பொருளாக வெளிகாட்ட ஆரம்பிப்பீர்களானால், அது உங்களை விட்டுச் சென்று விடும். பாருங்கள், பயபக்தியுடனும் இனிமையாகவும் மாத்திரமே இருங்கள். ஆகவே அவர் உங்களுக்கு ஒன்றைக் காண்பித்தால், அது ஒருவர் ஏதோ ஒரு தவறைச் செய்து, அந்த தவறை நீங்கள் அவரிடம் சொல்ல வேண்டியதாக அந்த சொப்பனம் இருக்குமானால், நீங்கள் நேராகச் சென்று அந்த நபரைக் கடிந்து கொள்ளக்கூடாது நீங்கள் அவர்களிடம் சென்று “சகோதரியே, சகோதரனே, உங்களுக்கு தெரியுமா, நீங்கள் தவறான ஒன்றை, ஒரு குறிப்பிட்ட காரியத்தை செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று கடந்த இரவு கர்த்தர் என்னிடம் கூறினார்” என்று கூறுங்கள்.
142. அந்த நபர், “நீங்கள் கூறுவது தவறு! அது பொய்! நான் அவ்வாறு செய்யவில்லை!” என்று கூறுவாரானால்.
143. இப்பொழுது, நீங்கள் செய்ய வேண்டிய காரியம் என்னவெனில் நீங்கள் திரும்பிச் சென்று “பரலோகப் பிதாவே, அது தவறான ஒன்றா?” என்று கேளுங்கள்.
144. இப்பொழுது, அந்த நபர்... அந்த நபர் உங்களுக்கு கூறினது உண்மையாயிருக்கும் பட்சத்தில், நீங்கள் தவறான ஆவியைக் கொண்டவர்களாக இருக்கிறீர்கள். ஆனால் அந்த நபர் நீங்கள் சொல்கின்ற காரியத்தை செய்திருந்து, இல்லை என்று பொய் சொன்னால், தேவன் அந்த நபரைப் பார்த்துக் கொள்வார். புரிகின்றதா? ஆம் ஐயா. ஏனெனில், பாருங்கள், அந்த நபர் செய்திருப்பது என்னவென்றால், அவர் பரிசுத்த ஆவிக்கு விரோதமாக தூஷணம் செய்துள்ளார், பரிசுத்த ஆவி அந்த நபருக்கு சொல்லத்தக்கதாக கூறியிருப்பதை மறுதலிக்கின்றார். புரிகின்றதா, ஆகவே அது தவறான ஒரு காரியமாகும்.