இது ஒரு மிக அருமையான கேள்வி. ஆகவே இது - இதற்கு - அதிக கவனம் செலுத்தப்பட வேண்டிய ஒன்று, ஏனெனில் தன்னுடைய ஜீவியம் முடிந்த பிறகு அவன் என்னவாக இருக்கப் போகிறான்? ஒவ்வொரு மனிதனும் ஆர்வம் கொண்டவனாக இருக்கிறான். ஒவ்வொரு மனிதனுக்கும் ஆர்வம் இருக்கின்றது. நல்லது இப்பொழுது, நான் - என்னைப் பொருத்த வரையில், எனக்கு - எனக்குத் தெரியாது. வேதாகமத்திலிருந்துதான் நான் பதிலளிக்க வேண்டும்.
9.ஒரு சமயம் ஒரு பெண், லாஸ்ஏஞ்சலிலிருந்து, சுமார் முப்பத்தைந்து அல்லது நாற்பது நிமிடங்களாக அல்லது அதற்கு மேலாக, ஒரு நீண்ட தூரத்திலிருந்து என்னிடம் பேசினாள். ஐம்பது டாலர் தொலைபேசி கட்டணம் அவளுக்கு செலவானது என்று யூகிக்கிறேன். அவள் தன்னுடைய புருஷனை விட்டுவிட்டு வேறொரு மனிதனை விவாகம் செய்வது தனக்கு சட்ட ரீதியாகவும் சரியான ஒன்றாகவும் உள்ளது என்று நான் கூற வேண்டுமென்று முயற்சி செய்து கொண்டிருந்தாள். நான் அதைச் செய்யமாட்டேன். இல்லை! நான், ''இல்லை ஐயா!'' என்றேன்.
அவள், “நல்லது, என் கணவர் ஒரு பாவி, இந்த மனிதனோ ஒரு கிறிஸ்தவன்” என்றாள்.
நான் அதற்கும் இதற்கும் தொடர்பில்லை. நிச்சயமாக நீ விபசாரத்தில் இருப்பாய் என்று கூறினேன்.
அவள், “நல்லது, நான் எலும்புருக்கி வியாதி (tuberculosis) உடையவள், ஆகவே இந்த மனிதன் எனக்கு இல்லையெனில் நான் வாழவேண்டிய அவசியமேயில்லை'' என்றாள்.
நான், ''நீங்கள் மோகம் கொண்டிருக்கிறீர்கள். அன்பு, நேசம் கொண்டிருக்கவில்லை, ஏனெனில் உங்களால் அவ்வாறு இருக்க முடியாது, அவ்வளவுதான், ஏனெனில் அவர் தான் உங்கள் கணவர். மரணம் உங்களை பிரிக்கும்வரை அவருடன் வாழ நீங்கள் வாக்கு கொடுத்திருக்கிறீர்கள். அதிலிருந்து வேறெதுவாயிருந்தாலும் அது விபசாரம் ஆகும் என்றேன். அவள் பேசிக் கொண்டேயிருந்தாள். நான் கூறினேன் “ஸ்திரீயே, அதில்...''
அவள், ''நீர் மாத்திரம் அது சரி என்று என்னிடம் கூறினால் போதும்“ என்றாள்.
நான், ''நான் அதைச் செய்யமாட்டேன்'' என்றேன். நான் கூறினேன், “என்னால்...''
அவள், “ஆம், சகோதரன் பிரன்ஹாம், நாங்கள் உம்மிடம் மிகுந்த நம்பிக்கை கொண்டிருக்கிறோம்'' என்றாள்.
நான், “அப்படியானால் நான் உங்களுக்கு என்ன கூற முயற்சித்துக் கொண்டிருக்கிறேன் என்பதைக் கேளுங்கள். நான் உங்களுக்கு சத்தியத்தைக் கூறுகிறேன். தேவன் என்ன கூறினாரோ அதைத் தவிர வேறு எதையும் என்னால் கூறமுடியாது” என்றேன். அது உண்மை என்று தேவன் கூறினார். ஆகவே அது சரியாக அவ்விதமாகத்தான் இருக்கும். பாருங்கள்? நான் அந்த விதமாகத் தான் அது - அது இருந்தாக வேண்டும், அந்த விதமாகத்தான் அது இருக்க வேண்டும்'' என்று கூறினேன்.
10.ஆகவே இப்பொழுது, இந்த கேள்விகளில், அவ்விதமாகத்தான் இவைகள் இருக்க வேண்டுமென்று நாங்கள் விரும்புகிறோம். இப்பொழுது, அது எப்பொழுது... இப்பொழுது, இதில், இன்றிரவு இந்தச் சிறிய ஜனக்கூட்டத்தில், ஒருக்கால் எல்லா விதமான வித்தியாசமான கருத்துக்கள் இருக்கும் என்று நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்; அவையெல்லாம் சரியானது தான் என்று நாங்கள் நினைக்கிறோம், அவைகளில் ஒவ்வொரு கருத்தும் நல்லது தான், அது ஒரு... ஆனால் இப்பொழுது, நாங்கள் என்ன செய்கிறோமென்றால் யாராவது ஒருவரை நாங்கள் கொண்டிருக்க... இந்த வாத்துக்கள், குள்ளவாத்துக்கள், வேறெதுவாயிருந்தாலும், தேனீக்கள் - ஒவ்வொன்றிற்கும் ஒரு தலைவன் உண்டு. ஒரு ராணி தேனி மரித்தால், சம்பவிப்பதென்ன என்று நீங்கள் அறிவீர்கள். ஒரு வழிநடத்தும் குள்ள வாத்து மரித்தால், மற்றொன்றை அவைகள் தங்களுக்கென பெற்றுக் கொள்ள வேண்டும். அந்த - அவைகளுக்கு ஒரு தலைவன் இருக்கத்தான் வேண்டும்.
ஆகவே மனிதனும் ஒரு தலைவனைக் கொண்டிருக்கத்தான் வேண்டும்; அந்த தலைவர் பரிசுத்த ஆவியானவரே. பரிசுத்த ஆவியானவர் சபையில் முதலாவதாக அப்போஸ்தலர்களையும், அதற்குப் பிறகு, தீர்க்கதரிசிகளையும், இன்னும் மற்றவைகளையும் வைக்கின்றார்.
11.சில சமயங்களுக்கு முன்பாக யாரோ, ஒருவர் “என்ன, சகோதரன் பிரன்ஹாம், எங்களுக்கு போதிக்க யாரும் அவசியம் இல்லை. பரிசுத்த ஆவியானவர் வரும்போது, போதிக்க யாருமே எங்களுக்கு தேவையில்லை'' என்றார். ''உங்களுக்கு போதகம் தேவையில்லை என்று வேதாகமம் கூறுகின்றதே” என்றார்.
நான் ''அப்படியானால் அந்த அதே பரிசுத்த ஆவியானவர் சபையில் போதகர்களை வைத்தது ஏன்?'' என்று கூறினேன். (பாருங்கள், பாருங்கள்?) அவர் சபையை ஒழுங்கில் வைத்திருக்கின்றார். இதோ நாம் போதகர்களை கொண்டிருக்கத்தான் வேண்டும். அது சரி.
ஆனால் நீங்கள் மேலும் கொண்டிருக்க... உங்களுக்கு ''விபசாரம் செய்யாதிருப்பாயாக; சத்தியம் பண்ணாதிருப்பாயாக, எடு...'' என்று கூறி உங்களுக்கு போதிக்க வேண்டியதில்லை. அதை நீங்கள் ஏற்கெனவே அறிந்திருக்கிறீர்கள். அதை நீங்கள் செய்வது தவறு என்று பரிசுத்த ஆவியானவரைப் பற்றிய உங்கள் மனசாட்சியே உங்களுக்கு கூறும்.
ஆனால் இப்பொழுது வேத வசன போதனையைப் பொறுத்த வரையில், அதற்கு ஒரு பரிசுத்த ஆவியால் அபிஷேகம் பண்ணப்பட்ட ஒன்று தேவையாயிருக்கிறது. அது சரி. தேவன் சபையை, அப்போஸ்தலர்கள் மற்றும் தீர்க்கதரிசிகள், சுகமளிக்கும் வரங்கள், அற்புதங்கள், இன்னும் மற்றவைகளினால் ஒழுங்கில் வைத்திருக்கிறார். அவர் சபையை ஒழுங்கில் வைத்து, போதகர்களையும், இன்னும் மற்றவைகளையும் அங்கே வைத்து தம்முடைய சபையை வழிநடத்தி இலக்கை நோக்கி செலுத்துகிறார். ஆகவே இந்த நாம் - நாம் கூறின விதமாக, இயேசு பூமியின் மேல் தம்முடைய சரீரமாக... அவருடைய சரீரம் அசைகையில், பூமிக்கு பிரதிபலிக்கும் ஒரு நிழலாக மாத்திரமே அது இருக்கிறது. அதனுடன் அது அசையும்.
12.இப்பொழுது அநேக ஜனங்கள்... ஓய்வு நாள் ஆசரிக்கும் ஜனங்கள், ஒரு மனிதன் மரிக்கும் போது அவன் சரியாக கல்லறைக்குள் சென்று, ஆத்துமா, சரீரம் மற்றவையோடு உயிர்த்தெழுதல் வரை அங்கேயே தங்குகிறான் என்று விசுவாசிக்கின்றனர். அவர்கள்... அவர்கள் அதை “ஆத்துமா உறங்குதல்'' என்று அழைப்பார்கள். நல்லது, அது சரிதான். அவர்கள் இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து மறுபடியும் பிறந்திருக்கும் வரையில் அது பரவாயில்லை, அது அவர்களை புண்படுத்தாது. ஆனால் இப்பொழுது வேத வசனங்களை பொறுத்த வரையில், அந்த நபர் மரிக்கும் போது, அவன் ஒரு கிறிஸ்தவனாயிருந்தால், அவன் மறுபடியும் பிறந்து பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டிருந்தால், மரிக்கத்தக்கதாக அவன் நியாயத்தீர்ப்பில் நிற்க வேண்டிய அவசியமில்லை. பாருங்கள்? அவன் நேராக தேவனுடைய பிரசன்னத்திற்குச் செல்கிறான். ஆகவே அவன் நியாயத்தீர்ப்பில் இருக்க வேண்டிய அவசியமேயில்லை, ஏனெனில் அவன் ஏற்கெனவே... பாருங்கள்?
கிறிஸ்து எனக்கு செய்ததற்காக நான் காத்திருக்க வேண்டியதில்லை. இப்பொழுது, நான் ஒரு பாவியாக இருந்தேன், ஆனால் கிறிஸ்துவினுடைய நியாயத்தீர்ப்பு... இங்கே இங்கே சில வார்த்தைகளில் முழு காரியம், “அதை நீ புசிக்கும் நாளிலே, அந்த நாளிலே நீ சாவாய்'' அது அவ்வளவுதான்.
13.இப்பொழுது, தேவன் தம்முடைய வார்த்தையை காத்துக் கொள்ளத்தான் வேண்டும். தம்முடைய வார்த்தையைக் காத்துக் கொள்வதைத் தவிர வேறு எதையுமே அவரால் செய்ய முடியாது, ஏனெனில் அவர் தேவன். நல்லது அப்படியானால், அவரால் முடியாது. அப்படியானால், அவர்... நீ தேவனிடமிருந்து வேறு பிரிக்கப்படுகிறாய். அந்த... ஆகவே அப்படியானால், நீ பாவத்தில் பிறந்து, பொய் பேசுகிறவனாய் உலகத்திற்கு வந்தாய். ஆதலால் நீ பிறக்கும் போது, சுபாவத்தின்படி நீ ஒரு பாவி. அதைக் குறித்துச் செய்யும்படியாய் உலகத்தில் உங்களுக்கு எதுவுமே கிடையாது. என்னைத் தானே அல்லது உங்களையே இரட்சித்துக் கொள்ள என்னால் செய்ய கூடியது ஒன்றுமேயில்லை. அது கிறிஸ்து நமக்காக தேவனுக்குள் என்ன செய்தார் - அல்லது தேவன் கிறிஸ்துவுக்குள் நமக்கு என்ன செய்தாரென்பதே. பாருங்கள்? அப்படித்தானே, நல்லது, ஒருக்கால் நான் இதைச் சிந்தித்தாலோ அல்லது நான் இதைச் செய்தாலோ என்பதல்ல அது. அவர் அதைச் செய்தாரா என்பதே.
நல்லது, இப்பொழுது, நாம் அவருக்குள் இருக்கிறோம். அப்படியானால் அவர் தேவனுடைய நியாயத்தீர்ப்பில் இருந்தார்; அவர் நியாயத்தீர்ப்பை எடுத்தார். ஆகவே அவர், பாவத்திலிருந்து குற்றமற்றவராக, பாவத்தை அறியாதவராக இருந்தும் இன்னுமாக நமக்காக பாவமாக்கப்பட்டார். ஆகவே நீங்கள் கிறிஸ்துவுக்குள் இருக்கும் வரைக்கும், நியாயத்தீர்ப்பிலிருந்து விடுதலையாயிருக்கிறீர்கள். ''நான் இரத்தத்தை காண்கையில் உங்களைக் கடந்து போவேன். பாருங்கள், பாருங்கள்? அதுதான். உங்களை விடுதலையாக்கும் அந்த இரத்தம்.
14.இப்பொழுது, பாவி ஒருக்காலும்... பாவி நியாயத்தீர்ப்பில் நிற்கத்தான் வேண்டும். இந்த நியாயத்தீர்ப்பைத் தவிர வேறொன்றும் இராது. அது ஒரு... அது கிறிஸ்துவினுடைய இரத்தத்தின் உலகத்தை சுற்றி இருக்கிற ஒரு வானவில் அல்லது ஒரு - ஒரு வட்டம் தான் ஆகும். இங்கே நீங்கள் எவ்வளவு காலமாக இருக்கிறீர்களோ... கிறிஸ்துவின் இரத்தத்தின் மூலமாகவேயன்றி தேவன் வேறு எந்த வழியிலாவது இன்றிரவு பூமியை இந்த நிலையில் நோக்கிப் பார்ப்பாரானால், ஒரு வினாடியில் அவர் அதை அழித்துப் போடுவார். அவர் அதைச் செய்தாக வேண்டும், நிச்சயமாக அவர் செய்துத்தான் ஆகவேண்டும். அங்கேதான் நியாயத்தீர்ப்புகள் வருகின்றன.
இப்பொழுது, இல்லையென்றால் - அல்லது இங்கே கீழே ஒரு மனிதன் எவ்வளவு காலமாக இருக்கும் வரை, அந்த மனிதன் ஒரு குடிகாரனாகவும், ஒரு சூதாட்டக்காரனாகவோ அல்லது ஒரு மோசமான ஒரு அவிசுவாசியாக இருந்தாலும், தேவனுடைய இரக்கங்கள் இன்னுமாக அவனுக்காக பிராயச்சித்தம் செய்து கொண்டிருக்கிறது. ஆகவே ஒரு ஸ்திரீ, அவள் என்னவாயிருந்தாலும் சரி, ஒரு விபசாரியாகவோ, அல்லது என்னவாயிருந்தாலும், இயேசு கிறிஸ்துவினுடைய இரத்தம் இன்னுமாய் அவளுக்காக பிராயச்சித்தம் செய்துக் கொண்டிருக்கிறது. அவளுடைய ஆத்துமா இந்த சரீரத்தை விட்டுச் செல்கின்ற மாத்திரத்தில் அவள் அதற்கு புறம்பாக கடந்து செல்கிறாள், அவள் இரக்கத்தின் மேல் சென்று நியாயத்தீர்ப்புக்குள் செல்கிறாள். தேவன் ஏற்கெனவே அவளை நியாயந்தீர்த்துவிட்டார். அது காரியத்தை முற்றுப்பெறச் செய்கிறது. அது அவளுக்குச் செய்யப்படுகிறது. அவள் நியாயந்தீர்க்கப்படுகிறாள். அவள் நியாயந் தீர்க்கப்படுகிறாள்.
உங்கள் பாவங்களுக்காக அங்கே இருக்கும் தேவனுடைய பிராயச்சித்த பலியை நீ செயல்படுத்தும் விதத்தைப் பொருத்து நீ உன்னைத் தானே நியாயந்தீர்த்துக் கொள்கிறாய். பாருங்கள்? நீ உன்னைத் தானே நியாயந்தீர்த்துக் கொள்கிறாய். அவர் உன்னை மன்னிக்க மாத்திரமே போதும் என்று அவரைக் குறித்து கணக்கிடாதே. பாருங்கள்? அவர் உங்களை மன்னிப்பாரென்று நீங்கள் எண்ணினால், உங்களுடைய தவறுகளை அறிக்கையிடுங்கள், பிறகு அவர் உங்களை மன்னிப்பார்.
15.அப்படியானால் ஒரே ஆவியினால் (கவனியுங்கள்) ஒரே சரீரத்திற்குள்ளாக நாமெல்லாரும் ஞானஸ்நானம் பண்ணப்பட்டுள்ளோம். அந்த சரீரம் தேவனால் எழுப்பப்பட்டு, மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்து, நீதியாக்கப்பட்டு பரலோகத்தில் வல்லமையோடும் மகத்துவத்தோடும் அவருடைய வலது பாரிசத்தில் அமர்ந்திருக்கிறார், ஆதலால் கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள், கிறிஸ்துவுக்குள் இருக்கிறவர்கள், நியாயத் தீர்ப்பிலிருந்து விடுதலையானவர்கள், உயிர்த்தெழுதலில் வருவார்கள்.
இப்பொழுது, ஆனால் இப்பொழுது நாம் மரிக்கையில் நாம் இப்பொழுது மரிக்கையில், ஒரு வானத்துக்குரிய சரீரத்தில் சர்வ வல்லமையுள்ள தேவனுடைய பிரசன்னத்திற்கு நேராகச் செல்கிறோம். அங்கே நான் சகோதரன் நெவிலைச் சந்திப்பேனானால், இப்பொழுது நாங்கள் இருவரும் மரித்தால், இப்பொழுதிலிருந்து ஒரு மணி நேரத்தில் நான் அவரைச் சந்திப்பேன்; நான், ''வாழ்த்துக்கள் சகோதரன் நெவில் என்று கூறி அவருடன் பேசுவேன். நான் அவருடைய கையை குலுக்க முடியாது; அவர் ஒரு வானத்துக்குரிய சரீரத்தில் இருக்கிறார். நான் அவருடன் பேச முடியும்: இங்கே எப்படி இருக்கிறாரோ அவ்விதமாகவே அவர் காணப்படுவார். நானும் இவ்விதமாகவே இருப்பேன். ஆனால் நாங்கள் ஒருவரோடு ஒருவர் பேசுவோம், ஆனால் எங்களால் ஒருவரையொருவர் தொட முடியாது, ஏனெனில், பார்த்தல், ருசித்தல், உணர்தல் முகர்தல் மற்றும் கேட்டல் ஆகிய ஐந்து புலன்களில் ஒன்றாகில் எங்களிடத்தில் இருக்காது. பாருங்கள்? ஆனால் நாங்கள் அழியாமையில் இருப்போம், எங்களால் ஒருவரையொருவர் பார்க்க முடியும். நாங்கள் தேவனுடைய பீடத்தண்டையில் ஆசீர்வதிக்கப்பட்ட பரிமாணங்களில் ஜீவிப்போம். யோவான் பீடத்தின் கீழே ஆத்துமாக்கள் மறுபடியுமாக பூமிக்கு வந்து தங்கள் மேல் வஸ்திரம் பெற்றுக் கொள்ள ''எவ்வளவு காலம், ஆண்டவரே, எவ்வளவு காலம்“ என்று கதறியதை யோவான் கண்டான் என்பது உங்களுக்குத் தெரியுமா?
16.இப்பொழுது பரிசுத்த ஆவியின் வடிவில் நம்மில் இருக்கும் இயேசு, அவருடைய வானத்திற்குரிய சரீரம், பரிசுத்த ஆவி, மகிமையுள்ள சரீரத்தில் வரும் போது, நாம் அவருடன் அவரைப் போல மகிமைப்படுத்தப்படுவோம். நான் என்ன கூற முற்படுகிறேன் என்பதை காண முடிகிறதா? பிறகு நான் அவருடைய கையைக் குலுக்கி ''இதோ, சகோதரன் நெவில்'' என்று கூறுவேன். பிறகு நாங்கள்...
கவனியுங்கள். இயேசு தம்முடைய சீஷர்களிடம் கூறினார் அவர்கள் தங்கள் இராப்போஜனத்தை எடுத்துக் கொண்டிருந்தனர், அவர், ''நான் இந்த திராட்சப்பழ ரசத்தை நவமானதாய் உங்களோடே கூட என் பிதாவின் ராஜ்ஜியத்திலே நான் பானம் பண்ணும் நாள் வரைக்கும் இதை நான் பானம் பண்ணமாட்டேன்“ என்றார். அது சரியா? பாருங்கள்? அதோ அது. ஆதலால் நாம்... மரித்தோர் மரிக்கும் போது... தேவனுடைய பிரசன்னத்தில் நின்று கொண்டிருக்கும் ஒரு நீதிமானாக்கப்பட்ட நபராய், அழியாமை கொண்டவனாய் அவருடைய பிரசன்னத்திற்குள் சென்று திரும்ப வருகின்ற - அந்த நாள் வரைக்கும் சமாதானத்தின் ஆசீர்வதிக்கப்பட்ட பரிமாணங்களில் ஜீவித்துக் கொண்டிருப்பான்.
17.இப்பொழுது, நீதிமானாக்கப்பட்ட ஜனங்கள் மரித்தபோது தேவனுடைய பிரசன்னத்திற்குள் செல்லாத காலம் ஒன்று இருந்தது. அது பழைய ஏற்பாட்டில் இருந்தது. அவர்கள் பரதீசு என்னும் இடத்திற்குள் சென்றனர், நீதிமான்களின் ஆத்துமாக்கள் பரதீசில் காத்திருந்தன. நீதிமான்களின் ஆத்துமாக்களை தேவன் வைத்திருந்த ஸ்தலம் தான் பரதீசாகும்; இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சிந்தப்படும் வரையில் இது ஒரு சொப்பன இடம் போன்றிருந்தது. ஏனெனில் காளைகள் மற்றும் ஆட்டுக்கடாக்களின் இரத்தம் பாவத்தை எடுத்துப் போடவில்லை, அது பாவத்தை மூடிக் கொண்டிருந்தது. ஆனால் இயேசுவின் இரத்தம் பாவத்தை எடுத்துப் போடுகின்றது.
நீங்கள் கவனியுங்கள் அவருடைய - கல்வாரியில் அவர் மரித்த போது... அவர் வந்த போது, காளைகள், ஆட்டுக்கடாக்கள், மற்றும் கடாரி இவைகளின் இரத்தத்தின் பரிகாரத்தின் கீழ் மரித்த அந்த மரித்த பரிசுத்தவான்களை கல்லறையிலிருந்து வெளியே கொண்டு வந்தார். அவர்கள் நகரத்திற்குள் பிரவேசித்தார்கள், (ஓ!) அநேகருக்கு காணப்பட்டார்கள். ஓ, அதைத் தான் நாம் சற்று வரைவோமென்றால், அது எவ்வளவு அழகான ஒரு காட்சி! அவர் மரித்தபோது இயேசுவை கவனித்துப் பாருங்கள்.
18.இங்கே, நான் அடிக்கடி கூறுவது போல, இங்கே சபையில், இங்கே ஒரு பட்டியல் இருக்கிறது. இங்கே மானிடப் பிறவிகள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களில் ஒவ்வொருவரும் இந்த இருட்டு மற்றும் கறுப்பு, குற்ற உணர்வான மகத்தான கூட்டுத்திரளாக உள்ளனர். இங்கே அழிந்து போகக்கூடிய மானிடப் பிறவிகள் வாழ்கின்றனர். கீழ் உலகத்திலிருந்தோ அல்லது மேல் உலகத்திலிருந்தோ ஒரு பாதிப்பு இல்லாமல் நீ இங்கே ஒரு ஆவிக்குரிய இனமாக, பாவியாகவோ அல்லது பரிசுத்தவானாகவோ, இருக்க முடியாது. இங்கிருந்து பாதிப்பு உனக்கு உண்டாயிருக்குமானால், நீ மேலிருந்து வந்தவன். உன்னுடைய வானத்திற்குரிய சரீரம் மேலே இங்கே காத்துக் கொண்டிருக்கிறது. ஆனால் நீ ஒழுக்கக்கேடான, மாய்மாலமிக்க, இரண்டுங்கெட்ட நிலையில் இருந்தால், உங்களுடைய வானத்திற்குரிய சரீரம் இங்கே கீழேயே உள்ளது, அது மேலே உள்ளது என்று நீ எவ்வளவு தான் சிந்தித்தாலும் சரி; ஏனெனில் நீ கொடுக்கும் கனியானது ஜனங்களுக்கு முன்பாக நீ எங்கிருந்து வருகின்றாய் என்பதை நிரூபிக்கிறது. ஆதலால் வேறு எங்கேயோ நீ எப்படியிருக்கிறாயோ அவ்விதமே நீ இங்கேயும் இருக்கின்றாய். நீ இங்கேயிருந்து கடந்து செல்லும் போது அங்கே உன் ஜீவியமானது உன்னுடைய மரபு வழியை பிரதிபலிக்கிறது. உங்களுக்கு புரிகின்றதா?
19.சரியாக நாம் இப்பொழுது (ஓ, அதைக் குறித்து நான் நினைத்துப் பார்க்கையில்) சரியாக இப்பொழுது நாம் தேவனுடைய பிரசன்னத்தில் மகிமைப்படுத்தப்பட்டு, மறுபடியும் பிறந்த விசுவாசிகளாயிருக்கிறோம். ''இந்த பூமிக்குரிய கூடாரம் அழிந்து போனாலும், நமக்கென்று ஒன்று ஏற்கெனவே மகிமையில் காத்துக் கொண்டிருக்கிறது“. வேறெங்கேயோ அல்ல, சரியாக இப்பொழுது காத்துக் கொண்டிருக்கிறது. ஆகவே இந்த பூமிக்குரிய சரீரங்கள் அந்த அழியாமையால் உடுத்துவிக்கப்பட வேதனைப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அது சரியா? வியாதி மற்றும் பிணிகள் மற்றும் வலிகள், மற்றும் ஏமாற்றங்கள் மற்றும் இருதயவலிகள், மற்றும்... ஓ, இந்த பழைய பூச்சி நிறைந்த வீடு மூடப்படும் போது நான் மகிழ்ச்சி கொள்வேன், நீங்களும் தானே? ஆம், ஐயா! நாம் வீட்டிற்குச் செல்வோம். அது சரி.
இந்த... நாம் - தரித்துக் கொள்ள தவிக்கிறோம், ஆவிக்குரிய தவிப்பு. ஓ, சுற்றிலுமிருக்கின்ற எல்லா வேதனையும், பாவம், நாற்றம், அழிவுள்ள ஜீவியம், ஏமாற்றம் மற்றும் எல்லாமும் கொண்ட கூட்டுத்திரளை நீ நோக்கிப் பார்ப்பாயானால், நான் “ஓ, தேவனே, இது இன்னும் எவ்வளவு காலம் இருக்கும்?'' என்று நினைப்பேன்.
20.இந்த நாட்களில் ஒன்றில் என்னுடைய கடைசி பிரசங்கத்தைச் செய்து, அதைப் போல வேதாகமத்தை கீழே வைத்து விட்டு, வீட்டிற்குச் செல்வேன். ஓ, அது என்ன ஒரு சமயமாக இருக்கும். ஆகவே இந்த பூமிக்குரிய கூடாரம் இங்கே முடிக்கப்படும்போது, நான் ஒரு வினாடிக்குள் மறுபுறம் செல்வேன்; நீங்களும் அவ்விதமாகத்தான். ஓ, என்னே! அவர்கள் கூறியதில் ஆச்சரியம் இல்லை.
இந்த மாம்ச அங்கி, கீழே போட்டு மேல் எழும்புவேன் நான்,
நித்திய பரிசை பிடித்துக் கொள்வேன்;
காற்றினூடாக செல்லும் போது சத்தமிடுவேன்...
(நிச்சயமாக, மேலே செல்லும் போது)
இப்பொழுது, அது எங்கேயிருக்கிறது? நாம் அதை எப்பொழுது பெற்றுக் கொள்வோம்? இப்பொழுது! “எவர்களை நீதிமான்களாக்கினாரோ, அவர்களை மகிமைப் படுத்தியுமிருக்கிறார்'' ஆகவே நம்முடைய மகிமைப் படுத்தப்பட்ட, அழியாமை கொண்ட சரீரம் சரியாக இப்பொழுது இயேசு கிறிஸ்துவின் பிரசன்னத்தில், நாம் வரத்தக்கதாக காத்துக் கொண்டிருக்கிறது என்பதை உங்களால் உணரமுடிகிறதா?
21.நீங்கள் அறிவீர்களா? ஒரு குழந்தை பூமியில் பிறக்கின்ற போது, பிரசவிப்பதற்கு முன்பு அது உயிருள்ளதாயிருக்கின்றது. ஆனால் ஆனால் அது இன்னும் பிரசவிக்கப்படவில்லை. அந்த குழந்தை வரும்போதே - அது - அது ஆரம்பிக்க - பிறக்கும்போது... அதன் நுரையீரல்கள் மூடப்பட்டு, அது மரித்துவிடுகின்றது. அதன் தசைகள் உதறுகின்றன, நடுங்கின்றன. ஆனால் முதல் கேள்விகளும் பதில்களும் காரியம் என்னவெனில், இதைப் போன்று ஒன்றோ அல்லது இரண்டு முறை கையினால் அதைத் தட்டும் பொழுது... (சகோதரன் பிரன்ஹாம் விளக்கிக் காண்பிக்கிறார் - ஆசி) அது (சகோதரன் பிரன்ஹாம் திணறுதல் என்ன என்பதை காண்பிக்கிறார் - ஆசி) தன் சுவாசத்தை இழுத்துக் கொள்கின்றது. காரியம் என்ன? ஒரு தாயினுள் மாம்ச சரீரம் உருவாகும்போதே, அந்த குழந்தை பூமியில் பிறக்கும் போதே அதை ஏற்றுக்கொள்ள ஆவிக்குரிய சரீரம் காத்திருக்கின்றது.
இந்த ஆவிக்குரிய சரீரத்தின் பிறப்பு எவ்வளவு நிச்சயமோ அதேபோல அது இவ்வுலகத்தைவிட்டுக் கடந்து செல்கையில் மாம்ச சரீரம் அதை ஏற்றுக் கொள்ள காத்திருக்கின்றது. பாருங்கள்? எதிர்மறையாக, மறுபடியும் சரியாக ஏதேன் (பாருங்கள்?), சரியாக அங்கே செல்கிறது.
22.இப்பொழுது, அங்கே தேவன்... அதே போன்று, அது - அது மரணத்தினின்று எல்லா கூரையும் வெளியே அடித்துத் தள்ளுகிறது. எனவேதான் பவுல் நின்று ''மரணமே உன் கூர் எங்கே? பாதாளமே உன் ஜெயம் எங்கே?'' என்று கூறினதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. அவன் நம்முடைய, “கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலே நமக்கு ஜெயங்கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம்” என்றான். ஆம், நண்பர்களே! இந்த பூமிக்குரிய கூடாரம் ஒழிந்து போனாலும் ஏற்கெனவே காத்துக் கொண்டிருக்கிற ஒன்றை நாம் கொண்டிருக்கிறோம், ஆதலால் அதை குறித்து மறந்துவிடுங்கள்.
இப்பொழுது உனக்கு, நண்பனே அதைக் கேட்ட நீ ஒரு பாவியாயிருந்தால், தேவன் உன் மீது இரக்கமாயிருப்பாராக. ஆம், ஐயா இப்பொழுது நீ ஆக்கினைக்குள்ளாக இல்லை, இங்கே இல்லை, இல்லை! நீ செழிப்பாய், சென்று கொண்டேயிரு. ஆகவே அது எல்லாம் தேவனுடைய இரக்கங்கள் மூலமாகவே ஆகும். அவைகள் எல்லாம் தேவனுடைய இரக்கங்கள் மூலமாக நீ செழித்து நீ என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய். அது உண்மை. ஆனால் இந்த நாட்களில் ஏதாவதொன்றில், நீ ஒரு பாவியாயிருந்து உன்னுடைய ஆத்துமா வெளியே நழுவும் போது, அது நியாயத்தீர்ப்புக்குச் சென்று ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படும், ஆகவே பிறகு, நீ புறம்பாக்கப்படுவாய், நீ மறுபடியுமாக இந்த பூமிக்கு கொண்டு வரப்படும் நாள் வரைக்கும் வேதனைக்குட்படுத்தப்பட்டிருப்பாய். நீ ஒரு அழியாத சரீரத்தை பெறுவாய், மரிக்காத ஒரு அழியாத சரீரம், பிறகு அழுகையும் கூக்குரலும் பற்கடிப்பும் இருக்கின்ற புறம்பான இருளுக்குள் தள்ளப்படுவாய், அதில் ஒரு புழு கூட சாகாது, நெருப்பும் அவியாது, வரவிருக்கின்ற எல்லா காலங்களினூடாக நீ வேதனைக்குட்படுத்தப்படுவாய். இயேசு அதைக் கூறினார். அது ஒரு கடுமையான காட்சி, ஆனால் அதைத்தான் வேதாகமம் கூறுகின்றது.
23.தேவன் பாவத்தைக் கடிந்து கொண்டு அதற்கு எப்படிப்பட்ட ஒரு கிரயத்தை செலுத்த வேண்டியதாயிருந்தது, அந்த அநீதியான ஆவிகள் மறுபடியுமாக கட்டவிழ்க்கப்பட்டால் எப்படியாகயிருக்கும்? கடந்த ஆறாயிரம் வருடங்களாக நாம் கொண்டிருந்ததைப் போன்று வேறொரு காரியத்தை நாம் கொண்டிருப்போம். அது சரியா? மற்றொரு தருணம் என்பது இருக்கவேயிருக்காது.
இப்பொழுது நீங்கள் ''நல்லது, நீங்கள் கல்லறைக்கு சென்றால் நீங்கள் - நீங்கள் பாதாளத்திற்கு செல்கிறீர்கள் என்று நான் விசுவாசிக்கிறேன்“ என்று கூறலாம். உங்கள் சரீரம் பாதாளத்திற்கு செல்கிறது, அது சரி. பாதாளம் என்பதற்கு ”வேறு பிரித்தல்'' என்று அர்த்தம். மரணம் என்றால் “வேறு பிரித்தல்” என்று அர்த்தம். உங்கள் சரீரம் மரிக்கிறது, வேறு பிரிகிறது. நீங்கள் இங்கே உங்கள் பிரியமானவர்களிடமிருந்து சென்றுவிடுகிறீர்கள், ஆனால் அதைக் குறித்து நாம் பேசிக் கொண்டிருக்கவில்லை. “அன்றியும் ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும், மனுஷனுக்கு நியமிக்கப் பட்டிருக்கின்றது”, பாருங்கள்.
24.இப்பொழுது, நீங்கள் - தேவனுடைய நியாயத்தீர்ப்பில் நிற்க வேண்டுமென்றால், நீங்கள் கோபமுள்ள தேவனால் நியாயந்தீர்க்கப்படப் போகிறீர்கள். ஆகவே தேவன் - அவர் என்ன செய்யப் போகிறார் என்பதை ஏற்கெனவே அறிவித்துவிட்டார். ஆகவே நீங்கள் அங்கே செல்லுமுன்பே உங்களுடைய நியாயத்தீர்ப்பு என்னவென்பது உங்களுக்குத் தெரியும். ஆகவே செய்யப் படவேண்டிய காரியம் என்னவென்றால் இரட்சிக்கப்பட்டு, இந்த மகிமையான காரியத்தை கொண்டிருத்தல்...
கவனியுங்கள், நான் - என்னுடைய ஆவி... கவனியுங்கள், நாம் மரித்துப்போன ஏதோ ஒன்று அல்ல; நாம் உயிரோடிருக்கிறோம். என்னுடைய - இங்கிருக்கின்ற இந்த மேஜை - என் விரலிலுள்ள ஜீவனை இந்த பலகை கொண்டிருக்குமானால், அந்த மரணம் - அது அசையத்தக்கதாக ஒரு சக்தியை கொண்டிருக்குமானால், என்னுடைய விரல் அசைவது போல அது அசையும். அந்த விதமான பொருளைக் கொண்டு நாம் உண்டாக்கப்படவில்லை. நாம் அணுக்கள், ஜீவனால், நார்ப் பொருளால் உண்டாக்கப்பட்டிருக்கிறோம், இவையெல்லாம் கட்டுப்படுத்த ஒரு ஆவி அங்கேயிருக்கிறது.
அது எவ்வளவு வேகமாக பயணிக்க வேண்டும் என்பது பாருங்கள். இங்கே பாருங்கள்; என் கை அதைத் தொடுகிறது. இப்பொழுது சீக்கிரத்தில்... அங்கே ஒரு எதிர்மறை (negative) மற்றும் ஒரு நேர் எண் (positive) விளைவு ஏற்படுகிறது. என் விரல் அதைத் தொட்டவுடன், அதை உணர்கிறது. அது மிக வேகத்தில் என் மனதிற்கு செல்கிறது, என்மனது, “அது குளுமையாயிருக்கிறது'' என்று கூறுகிறது. அது திரும்பிவிடுகின்றது. அது எவ்வளவு வேகமாக இருக்கிறது என்பதை பாருங்கள்? அது எண்ணத்தை விட வேகமானது, எந்த ஒன்றையும் விட வேகமான செயல் அங்கே இருக்கின்றது. அது என்ன? அங்கே அதில் ஏதோ ஒன்று உயிரோடிருக்கிறது, அந்த நரம்பு மனதின் மேல் கிரியை செய்கின்றது. நான் என்ன கூறமுனைகிறேன் என்று தெரிகிறதா? நரம்பு அதை தொடுகிறது, அதை உணர்கிறது, மனதற்கு ”அது குளுமையாக இருக்கிறது'' என்று கூறுகிறது. மனது அது குளுமையாயிருக்கிறது என்று கூறுகிறது, ஏனெனில் அதை நரம்பு உணர்ந்து கொள்கிறது. ஓ என்னே! நீங்கள் ஒப்பனையைக் குறித்து பேசுகிறீர்கள்.
25.ஆகவே பிறகு அதனுடைய எல்லாம்... நாம் நினைக்கும் ஒவ்வொரு எண்ணத்தையும் தேவன் எவ்வளவு வேகமாக அறிந்து கொள்கிறார். நாம் செய்யும் ஒவ்வொரு காரியமும், அவர் அதை அறிந்திருக்கிறார். ஆதலால் ஒரு விசுவாசி மரிக்கையில் அவன் தன்னை உண்டாக்கினவராகிய, தன்னுடைய தேவனின் பிரசன்னத்திற்குள் சென்றுவிடுகிறான். ஆகவே பாவியானவன், அவன் மரிக்கையில், தன்னுடைய முடிவான இடத்திற்கு செல்கிறான். பிறகு வரும் போது... இப்பொழுது, நான் தெரிந்து கொள்ளப்பட்டவர்களைக் குறித்து இப்பொழுது பேசிக் கொண்டிருக்கிறேன்.
ஆனால் நியாயத்தீர்ப்பில் பாவியோடு நிற்கவேண்டிய, அவனோடு நியாயந்தீர்க்கப்பட வேண்டிய, இரண்டாம் வருகையில் வருகின்ற சிலர் இருக்கின்றனர். நீங்கள் அதை நிச்சயமாக அறிந்து கொள்ள வேண்டுமென்று நான் விரும்புகின்றேன். பாருங்கள்?
26.இப்பொழுத, அங்கே... முதலாவதாக நடக்கப் போவதென்னவென்றால் மணவாட்டியினுடைய வருகை. இந்த உலகத்தில்... ஜனங்கள் இருப்பார்கள்... நான்... இதனுடன் வித்தியாசமான கருத்தைக் கொள்ளலாம், ஆனால் கூர்ந்து கவனியுங்கள். நீங்கள் கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டதனால், நீங்கள் எடுத்துக் கொள்ளப்படுதலில் சென்றுவிடுவீர்கள் என்பதல்ல. அது தெரிந்து கொள்ளப்பட்டவர்களுக்கு மட்டுமே, அவர்கள் தான் எடுத்துக் கொள்ளப்படுதலில் செல்வார்கள். இங்கே உபத்திரவத்தினூடாக செல்கின்ற எஞ்சியுள்ள சிலர் பூமியில் விடப்பட்டிருப்பார்கள். சபை எடுத்து கொள்ளப்படுதலில் மேலே எடுக்கப்பட்டிருக்கும்.
27.பொருளிலிருந்து ஒரு துண்டை வெட்டப் போகிறீர்கள் என்றால் பொருளை இப்படியாக வைப்பீர்கள், பிறகு நீங்கள் வைத்திருக்கிற முன்வரைவு (pattern) மாதிரி படிவத்தை இந்த விதமாக அதன் மேல் வைத்து, முன்வரைவு படிவத்தின் படியே நீங்கள் பொருள்களை வெட்டுவீர்கள். இங்குள்ள ஸ்திரீகளின் எத்தனை பேர் அதை அறியாமல் இருக்கிறீர்கள்? அது சரியா? முன்வரைவு மாதிரி படிவத்தில் இருக்கின்ற அதே விதமான பொருள்கள் தான் ஏனைய மற்ற பொருள்களும் கூட. அது சரியா? ஆனால் இந்த விதமான ஒன்றைத் தான் நீங்கள் எடுக்கின்றீர்கள். நீங்கள் அதை பின்னர் உபயோகப்படுத்த அப்படியே வைத்துவிடுவீர்கள், ஆனால் நீங்கள் வெட்டி எடுத்துவிட்ட அந்த - அந்த பொருள்கள்
இப்பொழுது, இந்த முன் வரைவுமாதிரி படிவத்தை வைப்பது யார்? தேவன், தெரிந்து கொள்ளப்படுதல் மூலம். ஆமென் தேவன் தெரிந்து கொள்ளப்படுதல் மூலம் முன் வரைவு (pattern) மாதிரி படிவத்தை வைக்கின்றார். அவர் “இப்பொழுது, உலகத் தோற்றத்திற்கு முன் நான் தெரிந்து கொண்டேன்... நான் இவைகளை வைக்கிறேன்...” என்று கூறுகிறார். ஏன், இயேசுவும் சீஷர்களிடம் தாம் அவர்களோடு இருந்ததாகவும், தாம் அவர்களை தெரிந்து கொண்டதாகவும் உலகத்தின் அஸ்திபாரம் போடப்படுவதற்கு முன்பாகவே அவர்களை அறிந்திருந்ததாகவும் கூறினார். அது சரியா? ஆதலால் தேவன் முன்வரைவு மாதிரி படிவத்தை வைக்கின்றார். இப்பொழுது, எடுத்துக் கொள்ளப்படுதலில் செல்லும் தெரிந்து கொள்ளப்பட்ட குழுவொன்று இருக்கும். மேலும் நல்லவர்களாகவும், நேர்மையுள்ளவர்களாகவும், பரிசுத்த ஜீவியம் செய்பவர்களாகவும், தேவனால் இரட்சிக்கப்பட்ட ஜனங்களாகவும் இருந்து, எடுத்துக்கொள்ளப்படுதலில் செல்லாத ஒரு ஜனக்கூட்டம் ஒன்று இருக்கும்; அவர்கள் இரண்டாம் உயிர்த்தெழுதலில் வருவர், ஏனெனில்...
28.ஓ, நான் ஏதோ ஒன்று இங்கே உங்களுக்கு வெளிப்படையாக்குகையில் நீங்கள் என் மேல் கோபம் கொள்ளமாட்டீர்கள் என்று நான் - நான் நம்புகிறேன். பாருங்கள்! நீங்கள் அவ்வாறு செய்யாதீர்கள். நான் - நான் அதைக் கூறித்தான் ஆக வேண்டும், ஏனெனில் நான் - அதைக் கூறவேண்டும் என்று என்னை நெருக்கிக் கொண்டேயிருக்கிறது (நீங்கள் பாருங்கள்?) கவனியுங்கள். இப்பொழுது கவனியுங்கள். அப்படியானால், நான் இதைக் கூறப்போகிறேன்: விசுவாசத்தினால் நீதிமானாக்கப்படுதல் என்பதில் விசுவாசம் கொண்டுள்ள மக்கள் இருக்கின்றனர் (பாருங்கள்?) அவர்கள் ஒரு நல்ல, சுத்தமான, பரிசுத்த ஜீவியம் செய்கின்றனர்; அவர்கள் பரிசுத்தமாக்கப்படுதலிலும் கூட விசுவாசம் கொண்டுள்ளனர். திரும்ப...
யூதாஸ் காரியோத்தைப் பாருங்கள். யூதாஸ் காரியோத்து கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மேல் விசுவாசம் வைத்து அவரை தன்னுடைய சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டபோது நீதிமானாக்கப்பட்டான் - யூதாஸ்காரியோத்து. யோவான் 17:17-ல் யூதாஸ்காரியோத்து பரிசுத்தமாக்கப்பட்டு மத்தேயு 10-ல் வெளியில் சென்று பிசாசுகளை துரத்த வல்லமை கொடுக்கப்பட்டது. வியாதியஸ்தரை சுகப்படுத்திய பிறகு யூதாஸ்காரியோத்து திரும்பி வந்தான், அவன் களிகூர்ந்து, நீங்கள் எப்பொழுதும் கண்டிராத வகையில் ஒரு நல்ல உருளும் பரிசுத்தனாக சத்தமிட்டுக் கொண்டிருந்தான். அது சரியா? வேதாகமம் அவ்வாறு கூறுகிறது. ஆனால் அவன் பெந்தெகொஸ்தேவிற்கு வந்த போது தன்னுடைய நிறத்தைக் காட்டினான். இப்பொழுது அதை கவனியுங்கள் - அந்த ஆவி.
29.இன்றைக்கு உலகில் ஜனங்கள், நீதிமானாக்கப்படுதலில் விசுவாசம் கொண்டிருக்கின்ற நல்ல கிறிஸ்தவ ஜனங்கள், நீதிமானாக்கப்படுதலில் விசுவாசம் கொண்டிருக்கின்ற அநேகர், ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கானவர்கள் உள்ளனர். ஆனால் அவர்களுக்கு பரிசுத்தமாக்கப்படுதலுடன் எந்தவித தொடர்பும் இருக்காது. நாம் அதை பிரஸ்பிடேரியன், எபிஸ்கோபலியன், இன்னும் மற்றவை என்று கூறுவோம். அவர்கள் நீதிமானாக்கப்படுதலில் விசுவாசம் கொண்டுள்ளனர்; அதை பிரசங்கிக்கின்றனர். அது நல்லது தான்; அவர்கள் சரியே.
ஆனால் இப்பொழுது, அந்த - அந்த நசரீன்கள், பரிசுத்த யாத்ரீகர்கள், விடுதலை மெத்தொடிஸ்டுகள் பரிசுத்தமாக்கப்படுதலுக்குள் செல்கின்றனர். அவர்கள் பரிசுத்தமாக்கப்படுதலில் விசுவாசம் கொண்டிருக்கின்றனர். சரியான விதத்தில் அவர்கள் சரியாக உள்ளனர். அவர்கள் ஜெயத்தைப் பெற்றுக் கொள்கின்றனர், சத்தமிடுகின்றனர், கர்த்தரை ஸ்தோத்தரிக்கின்றனர். அவர்கள் சரியாக உள்ளனர்; அவர்கள் சரியாக இருக்கின்றனர். அவர்கள் யாராவது ஒருவரிடத்தில் பரிசுத்த ஆவியின் அபிஷேககத்தைக் குறித்தும், வல்லமை, மற்றும் அடையாளங்கள் மற்றும் அற்புதங்களைக் குறித்து பேசிப் பாருங்கள், அவர்கள் சரியாக அங்கேயே தங்களுடைய நிறத்தை காண்பிப்பர். அதைக் குறித்த ஒன்றுமே எனக்குத் தேவையில்லை. நான் விசுவாசிப்பதில்லை...'' என்று கூறுவார்கள். நல்லது, என்னுடைய நல்ல நசரின் ஜனங்களுக்கும் கூட, அந்நிய பாஷைகளில் பேசுகின்ற ஒரு மனிதன் பிசாசினால் உண்டானவன் என்று விசுவாசிக்கின்றனர். நல்லது, சகோதரனே நீ அதைச் செய்வாயானால், நீ...
30.என்ன, சுடான் மிஷன்ஸ் தலைவராகிய டாக்டர் ரீட்ஹெட், அவர் அந்நிய பாஷையில் பேசினதால் அவரை அவர்கள் வெளியேற்றினர், ''அதை எங்களால் வைத்திருக்க முடியாது'' என்றனர்.
நான், “அப்படியானால் பவுல் பிரசங்கித்த விதமாக உங்களால் பிரசங்கிக்க முடியாது. உங்களால் பவுலின் சுவிசேஷத்தை ஏற்றுக் கொள்ள முடியாது, ஏனெனில் பவுல் அந்நிய பாஷைகளைப் பேசுகிறதற்கும் தடை பண்ணாதிருங்கள் என்றான்'' என்று கூறினேன். அது சரி. ஆனால் அவர்களோ - அவர்களோ அது பிசாசினால் உண்டானது என்று கூறுகிறார்கள். அவர்கள் அநேக போலிகளைக் கண்டுள்ளனர், ஆதலால் அதை அங்கே கொண்டு சென்றுவிடுகின்றனர். பாருங்கள்? ஆனால் ஒரு நீதிமானாக்கப்பட்ட மற்றும் பரிசுத்தமாக்கப்பட்ட சபை ஒன்று இருக்கின்றது; ஆனால் பரிசுத்தமாக்கப்படுதலிலிருந்து பரிசுத்த ஆவியின் அபிஷேகம் வித்தியாசப்பட்டது என்று மறுதலிக்கின்றனர். ஆனால் அது - அது ஒரு வித்தியாசப்பட்ட கிரியையே. நிச்சயமாக அது அவ்வாறுதான்.
31.கிறிஸ்துவின் சரீரத்திலிருந்து மூன்று தனிப்பொருட்கள் வந்தன. அவருடைய சரீரத்திலிருந்து வந்த அதே தனிப் பொருட்களைத்தான், நாம் அவருடைய சரீரத்திற்குள் செல்லத்தக்கதாக உபயோகப்படுத்துகிறோம். அங்கே ஜலம் (அது சரியா?), இரத்தம் (அது சரியா?) மற்றும் ஆவி இருந்தது. ஆகவே - இயேசு - வேத வசனம் கூறுகிறது, ''பரலோகத்திலே சாட்சியிடுகிறவர்கள் மூவர், பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என்பவர்களே. இம்மூன்றும் ஒன்றாயிருக்கிறார்கள்; ஆனால் பூலோகத்தில் சாட்சியிடுகின்ற மூன்று இருக்கின்றது; அவைகள் ஒன்றல்ல,' அவர், “ஆனால் அவைகள் ஒன்றாக ஒருமைப்பட்டிருக்கிறது: ஜலம், இரத்தம், மற்றும் ஆவி'' என்று கூறுகிறார். அது சரியா?
இப்பொழுது, குமாரனைக் கொண்டிராமல் உங்களால் பிதாவைக் கொண்டிருக்க முடியாது. நீங்கள் பரிசுத்த ஆவியைக் கொண்டிராமல் உங்களால் குமாரனைக் கொண்டிருக்க முடியாது. ஏனெனில் ஆனால் பரிசுத்தமாக்கப்படாமல் நீங்கள் நீதிமானாக்கப்பட முடியும். மேலும் நீங்கள் நீதிமானாக்கப்படுதல் பரிசுத்தமாக்கப்படுதல் ஆகிய இரண்டுமே ஆக்கப்பட்டு இன்னுமாக பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை பெற்றுக் கொள்ளலாமலிருக்க முடியும். பாருங்கள்? அது உண்மை. அது வேதவசனம். ''இந்த மூன்றும் அவர் “பூலோகத்திலே சாட்சியிடுகிறவைகள், ஜலம், இரத்தம், ஆவி; இவைகள் ஒருமைப்பட்டிருக்கிறது'' என்று கூறினார், பாருங்கள். அவைகள் ஒன்று அல்ல, ஆனால் அவைகள் ஒன்றில் ஒருமைப்பட்டிருக்கிறது, ஏனெனில் அது அளவு முறையான அதே ஆவியாகும். தேவன் அந்த ஆவியை நமக்கு அளவாக அளிக்கின்றார்.
32.இப்பொழுது, நீதிமானாக்கப்படுதலின் கீழ், லூத்தர் ''விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான்“ என்று பிரசங்கித்தார். அவர் அதைத்தான் பிரசங்கித்தார். அது சரியா? அவர் ஒரு மகத்தான செய்தியைக் கொண்டிருந்தார். அது பரிசுத்த ஆவியின் ஒரு பாகமாக இருந்தது. அப்பொழுது, லூத்தரின் செய்தியானது வந்த போது - தேவன் தம்முடைய சபையை எழுப்பி மகத்தானதாக அதை வெளியே அனுப்பவிருந்தார் (ஓ, என்னே!) லூத்தர் ''ஓ, நாம் வார்த்தையில் அதைப் பெற்றுக் கொண்டோம் என்று நாங்கள் விசுவாசிக்கிறோம்'' என்றார்.
ஆனால் ஜான் வெஸ்லியோ “ஓ, இல்லை!'' என்றார். அவரும் ஜார்ஜ் வைட்ஃபில்டும், மற்றவர்களும், அவர்கள், ''நாங்கள் பரிசுத்தமாக்கப்படுதலில் விசுவாசிக்கிறோம் அது கிருபையின் இரண்டாவது உறுதியான கிரியையாக உள்ளது'' என்றனர். அது சரியா? ஆகவே அவர்களும் இரத்தத்தை பிரசங்கித்தனர். நல்லது, லூத்தர் அசைய விருப்பமில்லாதவராக இருந்ததால், தேவன் அதை வெஸ்லியன் மெத்தொடிஸ்டுகளிடத்தில் கொடுத்துவிட்டார். பாருங்கள்? ஆகவே அவர்கள் அதைக் கொண்டிருந்தனர். உலகமெங்கும் பரந்து சென்ற ஒரு எழுப்புதலை அவர்கள் கொண்டிருந்தனர்.
33.ஆகவே உண்மையான சபை... நல்லது இப்பொழுது, அந்த சமயமானது வருகையில்... இப்பொழுது, பரிசுத்த ஆவியின் அடையாளமாகிய அடையாளங்கள், அதிசயங்கள், மற்றும் அற்புதங்கள் ஆகியவையோடு வருகின்றது. இப்பொழுது, வெஸ்லி இதனுடன் உடன்பட விரும்பவில்லை. இப்பொழுது, இந்த சமயங்களில் வெஸ்லி பூமியின் மேல் இருந்திருப்பாரானால் மார்டின் லூத்தர் பூமியின் மேல் இருந்திருப்பாரானால், அதனுடன் அவர்கள் ஒருமைப்படுவார்கள், ஆனால் இரண்டாவது சுற்று...
இப்பொழுது, பெந்தெகொஸ்தேயினர் அந்நியபாஷைகளில் பேசுவதில் விசுவாசம் கொண்டு, பெற்றுக் கொண்டனர். பிறகு அவர்கள் அதை ஒரு தொடக்கத்திலுள்ள அடையாளம் என்று ஒவ்வொருவரும் அந்நிய பாஷைகளில் பேசவேண்டும் என்ற விதத்தில் மாற்றிப் போட்டனர். அது பிழையான ஒன்றாகும். ஆனால் இப்பொழுது - இப்பொழுது அவர்கள் திரும்பவுமாக வந்து... அவைகள் தேவனால் அளிக்கப்பட்ட தனிக் கூறுகள். நான் நீலக்கண்களைக் கொண்டிருக்கிறேன் என்றால் அதை என்னால் தவிர்க்க முடியாது அல்லது... தேவன் அதைக் கொடுத்தார். அது சபையில் அவருடைய வரம் ஆகும். தேவன் அவைகளை வைத்தார். ''தேவன் சபையில் அதை வைத்திருக்கின்றார்...'' பாருங்கள்?
34.இப்பொழுது. ஆனால் அவர்கள் அதனுடன் வந்த போது... இப்பொழுது, அவர்கள் ஒரு மகத்தான ஆசீர்வாதங்களை கொண்டிருந்தனர், அவர்கள் லூத்தரன்களை அல்லது அந்த மெத்தொடிஸ்ட், போன்றோரையும் கடந்து அப்பால் சென்றனர். ஆனால் இப்பொழுதோ, ''பெந்தெகொஸ்தேயினர், மெத்தொடிஸ்ட் மற்றும் மற்றவர்களையும் விட மோசமான நிலையை அடையத் தக்கதாக தங்களை ஸ்தாபித்துக் கொண்டுவிட்டனர். பிறகு அவர்கள் ஒரு இடத்திற்கு வந்தள்ளனர், இரண்டாவது மற்றும் மூன்றாவது சுற்று... அவர்கள் அந்நிய பாஷைகளில் பேசுவதை பெற்றுக் கொள்ள ஆரம்பித்து சுமார் நாற்பது வருடங்கள் ஆகின்றது. ஆனால் இந்த தேவனுடைய மரமானது ஒன்பது வித்தியாசமான கனிகளை அதன் மேல் கொண்டதாயிருக்கிறது. இப்பொழுது, நீங்கள் இந்த எந்த ஒரு கனிகளையும் கொண்டிருக்கலாம். பாருங்கள்? தேவன் அவைகளை அனுப்பியிருக்கின்றார், ஆனால் மொத்தமாக அவை அந்த மரத்திலிருந்து வெளிவருகிறது.
இப்பொழுது, நீதிமானாக்கப்படுதல், அதை நோக்கிப் பாருங்கள்.
35.இக்காலை அளிக்கப்பட்ட செய்தியைப் பாருங்கள். நியாய சங்கம் உட்கார்ந்த போது, புஸ்தகங்கள் திறக்கப்பட்டபோது... இப்பொழுது, இயேசு கோடா கோடி பரிசுத்தவான்களுடன் வந்தார், அப்பொழுது நியாய சங்கம் உட்கார்ந்தது. இங்கே அவர்கள் எல்லாரும் வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பை சுற்றிலும் இருந்தார்கள் (நாம் வேத வசனத்தினூடாக அதை பார்த்தோம்), புஸ்தகங்கள் திறக்கப்பட்டன, ஜீவ புஸ்தகம் என்னும் மற்றுமொரு புஸ்தகமும் திறக்கப்பட்டது. இங்கே எடுத்து கொள்ளப்படுதலில் இருந்த அவர்கள் அவர்களை நியாயந்தீர்த்துக் கொண்டிருந்தனர். அது சரியா? வீட்டிற்கு சென்று தங்களுடைய மகிமைப்படுத்தப்பட்ட சரீரங்களை பெற்றுக் கொண்டு, ஆயிர வருட அரசாட்சியினூடாக ஜீவித்த அவர்கள் இங்கே வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பில் அவர்களை நியாயந்தீர்த்துக் கொண்டிருந்தனர். அவர் செம்மறியாடுகளை வெள்ளாடுகளிலிருந்து பிரிப்பார் என்று கூறியுள்ளார்.
இப்பொழுது, நீங்கள் இங்கே, “ஏன், இப்பொழுது கவனியுங்கள்” என்று கூறலாம், ''அது வருமா... எப்படி சகோதரன் பிரன்ஹாம்?'' என்று கூறலாம். அது வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பில்.
36.“எடுத்துக் கொள்ளப்படுதலைக் குறித்தென்ன?'' நல்லது, எடுத்து கொள்ளப்படுதல் சமயத்தில்... இயேசு அதை ஒரு உவமையாக கற்றுக் கொடுத்தார். அவர் அதை பல வித்தியாசமான வழிகளில் போதித்தார். இதோ ஒரு வழி. கர்த்தரை சந்திக்க சென்ற பத்து கன்னிகைகள் இருந்ததாக அவர் கூறினார். ஆகவே... அவர்கள் எல்லாரும் கன்னிகைகளாக இருந்தனர், ஆனால் சிலர் தங்கள் தீவட்டிகளில் எண்ணெயை வைத்திருந்தனர், சிலர் எண்ணெயை வெளியே போக விட்டுவிட்டனர். அது சரியா? ஆகவே மணவாட்டி... இப்பொழுது, அந்த எண்ணெய் என்னவாயிருந்தது? அந்த எண்ணெய் பரிசுத்த ஆவி ஆகும்; வேதாகமம் அவ்வாறு கூறுகின்றது. இப்பொழுது கவனியுங்கள். அவர்கள் கன்னிகைகளாக இருந்தனர். இப்பொழுது, கன்னிகை என்றால் என்ன? ”பரிசுத்தமானது, சுத்தமானது, வேறு பிரிக்கப்பட்டது, பரிசுத்தமாக்கப்பட்டது“ அது சரியா?
37.ஒரு சிறிய கண்ணாடி என்னிடம் இருந்தால் அதை நான் காண்பிக்க... இங்கே உதாரணத்திற்கு, இங்கே இருக்கின்ற பாட்டிலைப் போல, அது காலியாக இருந்தால், நான் அதை எடுத்து, அதை எடுத்தேன். நான் அதை உபயோகிக்க விரும்புகிறேன். இப்பொழுது நல்லது, நான் முதலாவதாக செய்ய விரும்பும் காரியம், நீதிமானாக்கப்படுதல். நான் அதை உபயோகிக்க விரும்பினதாலேயே அதை எடுத்தேன். அது அழுக்காக இருக்கின்றது; நான் அதை பன்றித் தொட்டியில் கண்டெடுத்தேன், அல்லது வேறெங்காவது இருந்திந்தாலும் சரி. இப்பொழுது நான் ஒரு சரியான நபராக இருப்பேனானால், நல்லது, அங்கே நான் உபயோகப்படுத்தப் போகின்ற அதில் ஏதோ ஒரு சுத்தமானதை வைக்க நான் விரும்பமாட்டேன். முதலாவதாக நான் - நான் அதை தீர்மானித்தாக வேண்டும். இப்பொழுது, செய்ய வேண்டிய சிறந்த காரியம் என்னவெனில் அதை தேய்த்துக் கழுவி, அதை சுத்தமாக்கி, பிறகு அதை பரிசுத்தம் செய்தல் ஆகும். அது சரியா? இப்பொழுது பரிசுத்தமாக்குதல் என்ற வார்த்தையின் பொருள் என்ன? சுத்தமாக்கப்பட்டு, ஊழியத்திற்கென்று வேறு பிரிப்பது பழைய ஆலயத்தின் பாத்திரங்கள் சுத்தமாக்கப்பட்டு ஊழியத்திற்கு பிரிக்கப்படுகின்றது.
இப்பொழுது, அதோ அந்த சபை, தேவன் லூத்தரின் காலத்தின் மூலமாக அதை எடுத்தார், நீதிமானாக்கப்படுதல்; வெஸ்லியின் காலம், அவர் அவர்களை பரிசுத்தமாக்கினார். இந்த காலத்தில் அவர் அவர்களை நிரப்புகிறார். பாருங்கள்? பரிசுத்த ஆவியின் மூலமாக அவருடைய ஜீவன்... பரிசுத்தஆவி அவர்களை எடுத்தது; பரிசுத்தாவி அவர்களை பரிசுத்தமாக்கியது. பரிசுத்த ஆவிஅவர்களை நிரப்பினது. பாருங்கள்? அதே சபைதான்.
ஆனால் இப்பொழுது கவனியுங்கள், இப்பொழுது இந்த நாளில்...
38.இப்பொழுது, லூத்தர், வெஸ்லி, மற்றும் அவர்கள் எல்லாரும், அவர்களில் அநேகர் எடுத்துக் கொள்ளப்படுதலில் செல்வார்கள் என்று நான் நினைக்கிறேன். அவர்களுக்கு பிரசங்கிக்கப்பட்ட ஆவியின் பாகத்தை அவர்கள் கொண்டிருந்தனர்; அவர்கள் அதை விசுவாசித்தனர்.
இப்பொழுது எடுத்து கொள்ளப்படுதலில்... இன்று அசைந்து செல்லாத ஸ்தாபனங்களுக்குள் சென்றுவிட்ட ஜனங்கள் உள்ளனர். அது ஒரு... ஒரே ஒரு ஸ்தாபனம் தான் இருக்கின்றது, அது தேவனுடைய சபையாகும்; அது அதே விதமாக அசைந்து சென்றது. ஆனால் இந்த ஸ்தாபனங்களோ இந்த காரியங்களை உடைத்துப் போட்டிருக்கின்றன. அநேக ஜனங்கள் இன்றைக்கு பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை பார்த்து அது ஒன்றுமற்றது என்று கூறுகின்றனர். ஆனால் இன்னுமாக அவர்கள் நீதிமான்களாக்கப்பட்டிருக்கின்றனர்; இன்னுமாக அவர்கள் பரிசுத்தமாக்கப்பட்டிருக்கின்றனர். ஆனால் அவர்கள், “ஓ, அந்த உபயோகமற்ற காரியத்தை செய்து கொண்டிருக்கின்றனர்'' என்று கூறுவர்.
எல்லா விதமான சோளக் கொல்லை பொம்மைகளையும் பிசாசு வைத்திருக்கின்றான் என்று எனக்குத் தெரியும். எங்கே நல்ல ஆப்பிள் பழங்களை காண்கிறீர்களோ, அங்கே தான் சுற்றிலும் சோளக் கொல்லை பொம்மைகள் இருக்கின்றன. அது சரி. நீங்கள் நேராக அங்கே சென்று ஆப்பிள் பழங்களை சாப்பிட்டுக் கொண்டிருங்கள். பாருங்கள்?
39.இப்பொழுது இந்த... பிறகு தேவன் பரிசுத்த ஆவியால் நிரப்பினார்... பிறகு அவர் அதை மகிமைப்படுத்தத் தக்கதாக தம்முடைய சபையை வைக்கின்றார். இரண்டாவது வருகையில், இங்கே மணவாட்டி, சபை திரும்ப வருகிறது. இப்பொழுது கவனியுங்கள். அவர்கள் உபத்திரவக் காலத்தினூடாக செல்கின்றனரா என்று பாருங்கள். அவர் இந்த கன்னிகைகள் வந்து, “உங்கள் எண்ணெயில் எங்களுக்கு கொஞ்சங்கொடுங்கள் என்றார்கள்'' என்று கூறினார்.
“மணவாளன் வருகின்றார்'' என்கின்ற சத்தம் புறப்பட்டுச் சென்றது, ''இதோ மணவாளன் வருகின்றார். அவரை சந்திக்கத் தக்கதாக அவருக்கு எதிர் கொண்டுப் போகப் புறப்படுங்கள்''. ஆகவே இந்த கன்னிகைகள், கன்னிகைகள் என்றால் யார், பரிசுத்தமானவர்கள், பரிசுத்தமாக்கப்பட்டவர்கள் (அதைக் குறித்து சிந்தியுங்கள்), பரிசுத்தமானவர்கள், பரிசுத்த ஆவியின் அபிஷேகம் இல்லாமல் பரிசுத்தமாக்கப்பட்ட ஜனங்கள், அவர்கள், ''எங்களுக்கு எண்ணெயைக் கொடுங்கள்'' என்று கூறினார்கள்.
ஆகவே அந்த சபையானது “போதுமான அளவுதான் எங்களிடம் உள்ளது, அப்படியானால் நீங்கள் சென்று ஜெபியுங்கள்'' என்று கூறினது. ஆனால் அப்பொழுது மிகவும் காலதாமதமாகிவிட்டிருந்தது. ஆகவே, அந்த சபை கலியாணத்திற்குள் சென்றது, இந்த மற்றவர்கள் புறம்பான இருளுக்குள் தள்ளப்பட்டனர் (அது சரியா?) அங்கே அழுகையும், கூக்குரலும் பற்கடிப்பும் இருந்தது; ஆகவே அவர்கள் உபத்திரவத்திற்குள் சென்று, அவதிப்பட்டு, மரித்தனர்.
40.இயேசு பூமிக்கு திரும்பி வந்தார். அவருடன் ஆயிரம் வருடங்கள், ஆயிரவருட அரசாட்சி துவங்கினது. நீதியுள்ளவர்களும் அநீதியுள்ளவர்களும் வந்தனர். அவர்கள் ஒவ்வொரு மனிதனையும் நியாயந்தீர்த்தனர். ஒரு பக்கம் வெள்ளாடுகளும் மறுபக்கம் செம்மறியாடுகளும் இருந்தன. பிறகு தேவன் வந்து பூமியின் விசாலத்திலிருந்து, கூடார சந்திப்பிற்காக சபையை மேலே எடுக்கின்றார், அங்கே நம்முடைய அருமையானவர்களுடன் நாம் ஒன்று கூடுவோம். பாருங்கள்? அங்கேதான் அந்த வித்தியாசம் உள்ளது.
இப்பொழுது இங்கேயிருக்கின்ற இந்த ஜனங்கள்... நாம் மரிக்கையில், நாம் இயேசு கிறிஸ்துவுக்குள் இருப்போமானால், மறுகரையில் நிச்சயமாக கிறிஸ்து இயேசுவாகிய அந்த மகத்தான சரீரத்துடன் இருக்கத் தக்கதாக நாம் செல்வோம். நாம் பாவிகளாக இருப்போமானால், அவிசுவாசிகள் என்னும் பெரிய சரீரத்துடன் இருக்கத் தக்கதாக நாம் செல்வோம்; நம்முடைய பங்கு அங்கே நரகத்தில் மாய்மாலக்காரர்கள் இன்னும் மற்றவர்களுடன் இருக்கும் என்றும் தேவன் கூறியுள்ளார். ஆமென்! ஒருக்கால் சரியாக தெளிவாக இல்லாமலிருக்கலாம். ஆனால், நம்மால் கண்டுபிடிக்க முடியுமானால் நாம் இப்பொழுது பார்ப்போம். இப்பொழுது இங்கே சிறிய ஒன்று.