145. எனக்கும் கூட இதைப் புரிந்துக் கொள்ள இயலவில்லை; பாருங்கள், “சத்தமிடுவது, நடனமாடுவது, அந்நிய பாஷையில் பேசுவது, ஆனால் வேதவசனங்களே வாசிக்கப்படுவதில்லை”. நான் - நான் - நான் வில்லியம் பிரன்ஹாம், இதைக் கூறுகிறேன், நினைவில் கொள்ளுங்கள், இது ஒருக்கால் இலட்சக்கணக்கான மைல் அளவிற்கு தவறாக இருக்கக்கூடும். நான் நம்புகிறேன் அநேக மக்கள். அதைப் போன்ற ஒரு ஒழுங்கைக் குறித்து இன்று ஒரு சகோதரனால் அந்த கேள்வி என்னிடமாக கேட்கப்பட்டது. அதாவது, அவர்கள் வியாதியஸ்தருக்காக ஜெபிக்க செல்லும் போது, ஒருக்கால் ஒரு சகோதரன் ஒருவருக்கு ஜெபிப்பார், அப்பொழுது அவர் அவர்கள் எல்லாரையும் ஆவியில் நடனமாட அல்லது பாடும்படி செய்வார், ஜனங்கள் மத்தியில் அது வல்லமையைக் கொண்டு வரும் என்று எண்ணி அவ்விதமாகச் செய்வார். இல்லை, என்னைப் பொறுத்த வரையில் நான் அது தவறான ஒன்று என்று விசுவாசிக்கிறேன்.
146. ஒரு சுகமளிக்கும் கூட்டத்திற்கு வருகின்ற ஒரு நபர் இரட்சிப்பிற்கென வருவது போல, பயபக்தியுடன், விசுவாசித்து வருகிறார் என நான் நம்புகிறேன். அதில் இருக்கின்ற ஒவ்வொரு நபரும், சத்தமிட்டு கொண்டு நடனமாடிக் கொண்டிருக்க மாட்டார்கள். ஆனால் தங்கள் சகோதரனோ அல்லது சகோதரியோ தேவனுடைய இரக்கத்தை கேட்க அங்கே மேலே செல்வதைக் காண்கையில், அவர்கள் தலையைத் தாழ்த்தி “தேவனே, என் சகோதரனை அபிஷேகித்து அவருக்காக மேய்ப்பர் ஜெபத்தை ஏறெடுக்கையில் சகோதரனை ஆசீர்வதியும். பரிசுத்த ஆவியானவர் தாமே அவர் மீது வந்து தன்னுடைய சுகத்திற்காக அவருக்கு விசுவாசத்தை அளிக்கட்டும். அவர் விலையேபெற்ற ஒரு சகோதரனாவார். அவள் ஒரு விலையேறப்பெற்ற சகோதரியாவாள்” என்று ஜெபிப்பார்கள். பாடல்கள் பாடி, சத்தமிட்டு, நடனமாடுவதற்கு பதிலாக அவருக்காக ஜெபித்துக் கொண்டிருங்கள்.
147. ஆனால் நம்முடைய பெந்தெகோஸ்தே கூட்டங்களில் அந்தக் காரியங்கள் அதிகமாக இருப்பதை நாம் காண்கிறோம், அது தொடர்ச்சியாக... அது ஒரு ஆராதனை என்று நான் விசுவாசிக்கிறேன், அவர்கள் தேவனை ஆராதிக்கிறார்கள் என்று நான் உண்மையாகவே விசுவாசிக்கிறேன். ஆம், ஐயா. என் முழு இருதயத்தோடு நான் அதை விசுவாசிக்கிறேன். அந்நியபாஷை பேசுதல், சத்தமிடுதல் மற்றும் நடனமாடுதலில் நான் விசுவாசம் கொண்டுள்ளேன். அதின் ஒவ்வொரு பாகத்தையும் நான் விசுவாசிக்கிறேன், ஆம். வேதாகமத்தில் அவர்கள் செய்த எந்த ஒரு காரியமும், அப்பொழுது இருந்தது போலவே இன்றும் சரியானதாகவே உள்ளது என்று நான் விசுவாசிக்கிறேன், நிச்சயமாக, ஆனால் அதற்கு அதன் நேரமும், அதன் ஒழுங்கும் உள்ளது என நான் விசுவாசிக்கிறேன்.
148. இப்பொழுது, அந்த மகத்தான ஆசீர்வாதம் வந்திருக்கிறது, மக்களும் சத்தமிட்டு, கர்த்தருடைய மகிமையும் விழுகின்றது, மக்கள் கூச்சலிடவும், சத்தம் போடவும், ஆவியானவர் அவர்கள் என்னவெல்லாம் செய்யும்படிக்குச் சொல்கிறாரோ அதையெல்லாம் செய்யவும் விரும்புகின்றனர். தொடர்ந்து செய்யுங்கள், அது சரியே. ஆனால் ஒரு மனிதன் சுகமாக்கப்பட வரும் போது, மரணம் மற்றும் ஜீவனை குறித்த ஒரு கேள்வியானது சம்பந்தப்பட்ட ஒன்றாக இருக்கையில், நான் விசுவாசிப்பது என்ன என்றால் நாம் பயபக்தியுடன் இருந்து பிதாவிடம் பேச வேண்டும். இந்த சகோதரனுக்காக நாம் அவரிடம் பேச வேண்டும். அவரை தொழுது கொள்வதற்கு பதிலாக, அவரிடம் “பிதாவே, நான் உம்மைத் தொழுது கொள்கின்ற ஒருவனாவேன். நான் உம்மை நேசிக்கிறேன், நான் அவ்வாறு உள்ளேன் என்பதை நீர் அறிவீர், நான் என் அன்பை உம்மிடம் வெளிப்படுத்துகிறேன். இப்பொழுது என் விசுவாசத்தை நான் உம்மிடம் வெளிப்படுத்துகிறேன், என் சகோதரன் நலமாக இருக்கும்படிக்கு உதவி செய்யும், பிதா அவ்விதமாக செய்வீரா?” என்று கேளுங்கள். நீங்கள் அந்த விதமாக செய்கையில் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும் என நான் நம்புகிறேன். உண்மையாகவே நானும் அதைச் செய்கிறேன். பயபக்தியுடன், தேவ ஆவியுடன்.
149. என்னே, இவை நூறு மைல் நீளத்திற்கு இருந்திருக்கலாம். ஆனால் இவைகளுக்கு நான் பதிலளித்தேன் என நம்புகிறேன், வெளிச்சத்தை சிறிது காண்பித்தேன். எப்படியாயினும், உங்கள் மனதில் என்ன இருக்கிறது என்பது எனக்குத் தெரியும். என்னவென்று நான் உங்களுக்கு கூறுவேன்- சிறிது நேரம் கழித்து இங்கே மேய்ப்பரிடம் கேட்க விரும்புகிறேன், எனக்கு உதவி செய்ய... ஒருக்கால் கீழே வந்து, வரங்களின் உருவில் தேவனுடைய ஆவியை தங்கள் மேல் பெற்றுள்ள மக்கள் எல்லாரையும் ஒன்று கூடச் செய்து, சிறிது நேரம் அதைக் குறித்து நாம் பேசலாம். ஒருக்கால் நீங்கள் ஏணியில் சிறிது உயரமாக ஏறி தேவனண்டையில் இன்னும் நெருங்கிச் செல்ல என்னால் உதவி செய்ய முடியும், அதனால்... சபையில் அதை அதிகமாக ஒழுங்கிற்குள் அமைக்கலாம். நான் கவனித்துக் கொண்டே வருகிறேன், எனக்கு அது மிகவும் அற்புதமாகக் காணப்படுகிறது. அது இன்னுமாக மேலும், மேலுமாக முன்னே செல்வதை காண்பது எனக்கு மிகவும் பிடிக்கும்.
150. ஆகவே நாம் வளர்ந்து வருகையில், சாத்தான் உள்ளே பதுங்கி ஊர்ந்து வர அனுமதிக்காதீர்கள். பையனே, அவன் திறமை சாலியாவான். அவனை சாதுரியமாக தோற்கடிக்க முயற்சி செய்யாதீர்கள், ஏனெனில் உங்களால் அது முடியாது. நீங்கள் தேவனை மாத்திரம் சார்ந்திருந்து தாழ்மையுடன் நடந்து கொண்டேயிருக்க மாத்திரம் செய்யுங்கள், அப்பொழுது தேவன் அதைச் செய்வார், தேவன் உங்களை இன்னும் அதிகமாக, அதிகமாக, அதிகமாக உபயோகிப்பதை நீங்கள் கண்டு கொள்வீர்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.