38. இப்பொழுது, இது ஒரு நல்ல கேள்வி. இந்த கேள்விகளின் பேரில் நான் மறுபடியும் கூற விரும்புகிறேன் (பாருங்கள்?) உங்கள் கருத்துக்கேற்ப இவைகளுக்கு நான் விடையளிக்காமல் போனால்... எனக்குத் தெரிந்தவரையில் இவைகளை வேதரீதியாக்க, வேதவாயிலாக இவைகளுக்கு விடையளிக்கப் போகின்றேன்.
39. வேதப்பிரகாரமான தண்ணீர் ஞானஸ்நானம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்திலே. அது அப். 2: 38லும் வேதாகமத்தின் மற்ற பாகங்களிலும், வேதாகமம் முழுவதிலும் காணப்படுகிறது. இன்றைக்கு அநேகர் - அதை தொடங்கின சபையிலிருந்து வழிவழியாக வந்த ஏறக்குறைய எல்லா சபைகளுமே - ஜனங்களுக்கு பிதாவின் நாமத்தில், குமாரனின் நாமத்தில், பரிசுத்த ஆவியின் நாமத்தில் ஞானஸ்நானம் கொடுக்கின்றன. அவர்கள் தவறாக அவ்விதம் செய்கின்றனர். அப்படிப்பட்ட ஒரு கட்டளை வேதத்தில் எங்குமே இல்லை. அது வேதத்தில் காணப்படவில்லை.
40. பேதுரு... இயேசு சொன்னதை மத்தேயு எழுதிக் கொண்டிருந்த போது... அவர்கள், “நீங்கள் உலகமெங்கும் போய், சகல ஜாதிகளுக்கும் போதித்து, பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தினால் அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுங்கள்' என்று மத். 28:19ல் உரைக்கப்பட்டுள்ளதை எடுத்துக் கொள்கின்றனர்.
41. பிதா, குமாரன், பரிசுத்த ஆவி பட்டப்பெயர்களே, நாமம் அல்ல, பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து என்பதாகும். பிதா, குமாரன், பரிசுத்த ஆவி... அவர்... வேதாகம காலங்கள் அனைத்திலும் அவர்கள் ஒவ்வொரு நபருக்கும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் மாத்திரமே ஞானஸ்நானம் கொடுத்து வந்தனர். வரலாற்றில் வழிவழியாக லவோதிக்கேயா (என்னை மன்னிக்கவும்) - ரோமாபுரியிலுள்ள நிசாயா என்னுமிடத்தில் நிசாயா ஆலோசனை சங்கம் நடைபெற்று கத்தோலிக்க சபை ஸ்தாபிக்கப்படும் வரைக்கும்.
42. பெந்தெகொஸ்தே சபை... இரண்டு குழுக்கள், அவர்கள் பிரிந்து சென்றனர். ஒரு குழு வார்த்தையில், எழுதப்பட்ட வார்த்தையில் நிலைத்து நிற்க விரும்பினது, மற்ற குழுவோ ஒரு முதல் தரமான (classical) சபையை விரும்பினது. அது கான்ஸ்டன்டைனின் அரசாட்சியின்போது நடந்தது. கான்ஸ்டன்டைன் மதப்பற்று கொண்டவன் அல்ல. அவன் தொடக்கத்திலிருந்தே ஒரு அஞ்ஞானி. ஆனால் அவன் இருதரப்பினரை இணைக்க விரும்பின ஒரு அரசியல்வாதி... ரோமாபுரியில் பாதி பேர் கிறிஸ்தவர்கள், பாதி பேர் அஞ்ஞானிகள். எனவே அவன், முதல் தரமான குழு அஞ்ஞானக் கொள்கைகள் சிலவற்றையும் கிறிஸ்தவக் கொள்கைகள் சிலவற்றையும் கைக்கொள்ளும்படி செய்தான். அவர்கள் தங்கள் சொந்த மார்க்கத்தை உண்டாக்கிக் கொண்டனர்.
43. எனவே, வேதாகமத்தை அவமதிக்கும் வண்ணமாக, கத்தோலிக்க சபையானது, தேவன் சபைக்கு, அதன் விருப்பப்படி மாற்றவோ அல்லது எதையும் செய்யவோ அதிகாரம் அளித்துள்ளார் என்று விசுவாசிக்கிறது. பாருங்கள்? எனவே அது உண்மையாயிருக்குமானால், கத்தோலிக்கரைத் தவிர நம்மெல்லாரும் தவறாயிருப்போம் (பாருங்கள்?), கத்தோலிக்க சபை மட்டுமே சரியாயிருக்கும். அப்படியானால் மெதோடிஸ்டு சபை செய்வது சரி, பாப்டிஸ்டு சபை செய்வது சரி, அனைத்து ஸ்தாபனங்களும் செய்வது சரி. பாருங்கள்? அவர்களுக்கு அதிகாரம் உள்ளது. அப்படியானால் யார் சரி? கத்தோலிக்க சபைக்கு வேதம் கூறியுள்ள எதையும் மாற்றி அமைத்து, “மரியாளே வாழ்க' போன்றவைகளை உபதேசங்களாக செய்துவிட அதிகாரம் இருக்குமானால், மெதோடிஸ்டு சபைக்கு, “முழுக்கு ஞானஸ்நானம் தவறு, நாங்கள் தெளிப்போம்' என்று கூறுவதற்கு அதிகாரம் உண்டு. அவர்கள் ஒவ்வொருவரும் செய்வது சரியே; ஏனெனில் சபை தனக்கு விருப்பமானதை செய்து கொள்ளலாம் என்றால், எது உண்மையான சபை? மெதோடிஸ்டு சபையா, பாப்டிஸ்டு சபையா, பிரஸ்பிடேரியன் சபையா, கத்தோலிக்க சபையா, அல்லது எந்த சபை? பாருங்கள்?
44. எனவே நீங்கள் அவ்விதம் செய்யக் கூடாது. சகல ஞானத்துக்கும் காரணராயுள்ள தேவன் அத்தகைய ஒன்றை செய்ய மாட்டார் என்று உங்களுக்குத் தெரியும். அப்படிப்பட்ட ஒன்று... இயற்கைக்கு மேம்பட்டவரின் ஞானத்தை நீங்கள் கணக்கெடுக்காமல் போனாலும், அது சாதாரண அறிவும் கூட பொருந்திய ஒன்று அல்ல. ஒன்று மட்டுமே சரியாயுள்ளது. அது தான் வார்த்தை. வார்த்தை உரைப்பதே சரியானது!
45. எனவே கத்தோலிக்க சபை இன்று காலையில், “நாம் ஞானஸ்நானத்தை முழுவதுமாக புறக்கணித்து விட்டு, ஒவ்வொரு நாள் காலையிலும் ஒரு கட்டி சர்க்கரையை தின்போம். நம்முடைய பாவ மன்னிப்புக்கென்று அதை தின்போம்” என்று கூறுமானால், தேவன் சபைக்கு அந்த அதிகாரத்தை அளித்திருப்பாரானால், அது செய்வது சரியான செயலாக இருக்க வேண்டும்.
46. ஆனால் பாருங்கள், என்னை பொறுத்த வரையில், வசனம் கூறுவதே சரி. ஏனெனில் வேதாகமத்தின் முடிவில், தேவன், “இதிலிருந்து யாராகிலும் ஒரு வார்த்தையை எடுத்துப் போட்டால், அல்லது இதனுடன் ஒரு வார்த்தையைக் கூட்டினால், அவனுடைய பங்கு ஜீவபுஸ்தகத்திலிருந்து எடுத்து போடப்படும்” என்று கூறியுள்ளார். எனவே எனக்கு வார்த்தையே முக்கியம் வாய்ந்தது!
47. எவராகிலும் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தில் ஞானஸ்நானம் பெற்றுக் கொண்டதாக வேதத்தில் எங்குமே இல்லை; ஏனெனில் அப்படிப்பட்ட ஒன்று கிடையவே கிடையாது. பிதா என்பது நாமமல்ல; குமாரன் என்பது நாமமல்ல; பரிசுத்த ஆவி என்பதும் நாமமல்ல. பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே. அதை தான் அப்போஸ்தலர்களும் காலங்கள் தோறும் இருந்தவர்களும் அறிந்து பின்பற்றினர்.
48. இப்பொழுது, அடுத்த கேள்வி... நான் கூறினது வேதப்பிரகாரமாக சரி. அது உண்மை.
49. வேதாகமத்தில் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலன்றி வேறெந்த வகையிலும் ஞானஸ்நானம் பெற்றிருந்தவர்கள், தாங்கள் பரிசுத்த ஆவியைப் பெறுவதற்கென இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் மறுபடியும் ஞானஸ்நானம் பெறும்படி கட்டளையிடப்பட்டனர் - அப். 19:5. உண்மை! எனவே வேதப்பிரகாரமாக அதுவே சத்தியம்.
50. அதற்கு விரோதமாக எந்த ஒரு பேராயரும், எந்த ஒரு தலைமைப் பேராயரும், எந்த ஒரு ஊழியக்காரனும், வேறு எவருமே ஒரு வார்த்தையும் கூற முடியாது, ஏனெனில் அதுவே சத்தியம். பாருங்கள்?
51. அன்றொரு நாள் சிக்காகோவில் இதைக் குறித்து வாக்குவாதம் செய்ய அங்கு நின்று கொண்டிருந்த முன்னூறு போதகர்களைக் கேட்டேன்... நான்... கர்த்தர் என்னிடம் கூறினார். அவர் எனக்கு ஒரு தரிசனத்தை அருளி நாங்கள் எங்கிருப்போம் என்றும், என்ன செய்ய வேண்டுமென்றும் என்னிடம் கூறினார். நான் முன்னூறு திரித்துவ போதகர்களின் முன்னால் நின்று கொண்டு, “இந்த உபதேசத்தில் நான் தவறாயிருந்தால், உங்களில் சிலர் எழுந்து நின்று வேதப்பிரகாரமாக நான் எங்கு தவறாயிருக்கிறேன் என்பதை எனக்குக் காண்பியுங்கள் - பாடபுத்தகத்தைக் கொண்டல்ல. நான் போதித்து வருகிற சர்ப்பத்தின் வித்து என்பது போன்ற ஒன்று கிடையாதென்றால், இங்கு வந்து வேதத்தின் மூலமாக அதை எனக்குக் காண்பியுங்கள்” என்றேன். யாருமே அசையவில்லை (பாருங்கள்?), எனெனில் அதை செய்ய முடியாது. அது உண்மை. நான் வித்தியாசப்பட்டவனாக இருக்க வேண்டும் என்பதற்காக அல்ல, ஆனால் அது சத்தியம்; அது வார்த்தை. அங்குதான். அதைக் குறித்து யாரும் வாக்குவாதம் செய்ய முடியாது; அது தேவனுடைய வார்த்தை; அதை எவருமே செய்ய முடியாது. பாருங்கள்?
52. இப்பொழுது, “இதை பெற்றிராதவர்கள்... அது சரியா என்று நிச்சயப்படுத்திக் கொள்ள, அதை நான் படிக்கட்டும். பாருங்கள்? “மற்ற ஞானஸ்நானத்தைப் பெற்றுக் கொண்டவர்கள் இரட்சிக்கப்பட்டுள்ளனரா இல்லையா? மேலும் தொடர்ந்து சென்று வெளிச்சத்தைப் பெற்றுக் கொள்ளாதவர்கள்?”
53. நல்லது, நான் விசுவாசிக்கிறேன் - தேவன் தமது ஜனங்களை அழைத்து அவருடைய சபையை நியமித்திருக்கிறார் என்றும், உலகத் தோற்றத்துக்கு முன்பிருந்த அனைவரும் அதில் இருப்பார்கள் என்றும் நான் உறுதியாக நம்புகிறேன். வேதாகமம் அவ்விதம் போதிக்கிறதென்று நான் விசுவாசிக்கிறேன். தேவனிடத்தில் அன்புகூரும் ஒவ்வொரு மனிதனும் தன் முழு இருதயத்தோடும் சத்தியத்தை அறிந்து கொள்ள அதைத் தேடுவான் என்று நான் விசுவாசிக்கிறேன். அதை நான் விசுவாசிக்கிறேன், அவர்கள் அவ்விதம் செய்வார்கள் என்று. தேவனிடத்தில் அன்புகூரும் ஒவ்வொரு மனிதனும் அதைச் செய்வான்.
54. ஒரு மனிதன் அறியாமையின் காரணமாக தவறான ஞானஸ்நானம் பெற்றுக் கொண்டு, அவன் பெற்றது தவறான ஞானஸ்நானம் என்பதை அறியாமல் இருந்தால்... இப்பொழுது, வேதப்பிரகாரமாக இதை என்னால் கூற இயலாது. ஆனால், ஒரு மனிதன் சரியானதை செய்ய அறியாமலிருந்து, தன் அறிவுக்கு எட்டின விதமாக அவன் ஒன்றைச் செய்திருந்தால், தேவன் அதை பாராமல், அவனை எப்படியும் இரட்சிப்பார் என்று என் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறேன். ஏனெனில் அவனுக்கு... வெஸ்லியின் காலத்தில், சீர்திருத்த காலமாகிய லூத்தரின் காலத்தில், தேவன் கனப்படுத்தி, அவர் கனப்படுத்தினதாக நிரூபித்த அந்த தேவனுடைய மகத்தான மனிதர், அவர்களுக்கு கிடைக்கப் பெற்ற வெளிச்சத்தில் அந்த விசுவாசத்தைக் கொண்டவர்களாய் மரித்தனர் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
55. நான் நம்புவது என்னவெனில் இன்னும் அநேக காரியங்கள்... இன்று காலை சார்ல்ஸ் ஃபுல்லர் “பழைய பாணியில் எழுப்புதலின் நேரம்” என்னும் வானொலி நிகழ்ச்சியில் பேசினதை கேட்டீர்களா? அவர் எனக்கு மிகவும் பிரியமான வேத போதகர்களில் ஒருவர், இருப்பினும் அவர் மிகவும் அவர் சிறந்த வேதப் போதகர் என்பது என் கருத்து. இன்று காலை அவர் (அவர் தீர்க்கதரிசனத்தைக் குறித்துப் பேசினார் என்று எண்ணுகிறேன்); இன்னும் பெரிய காரியங்கள் வரப் போகின்றன என்றும், சபை இதுவரைக்கும் அறியாத காரியங்கள் ஜனங்களுக்கு வெளிப்படும் என்றும் அவர் கூறினார். நான் அதற்கு “ஆமென்” என்றேன். இன்னும் ஒரு பெரிய வெளிச்சம் வரவிருக்கிறது என்றும், இந்நாட்களில் ஒன்றில் அது ஒரு குறுகிய காலத்திற்கு - ஒருக்கால் ஒரு சில மாதங்களுக்கு - பூமியை வெள்ளம் போல் நிரப்பும் என்றும் நான் நம்புகிறேன். ஒரு பெரிய வெளிச்சம் வரவிருக்கிறதென்று நான் நம்புகிறேன்.
56. எந்த ஒரு நபரும் தனக்குள்ள விசுவாசத்திலும் உத்தமத்திலும், தனக்குக் கிடைக்கப் பெற்ற வெளிச்சத்தில் நடந்தால் இரட்சிக்கப்படுவார் என்று நான் நம்புகிறேன்.
57. ஞாபகம் கொள்ளுங்கள், கர்த்தராகிய இயேசு இவ்வுலகில் வந்த போது, அப்பொழுது அவர்களுக்கிருந்த வெளிச்சத்தில் அவர் கண்டார் என்று உங்களுக்கு ஞாபகமுள்ளதா? என்ன நடந்ததென்று நினைவில் உள்ளதா? “அந்த ரோம் நூற்றுக்கு அதிபதி நல்லவன் அல்லவா? அவன் நமது பட்டினத்தைக் கட்டினான் - நமக்கு ஒரு ஆலயத்தைக் கட்டினான், (இவையனைத்தும் அவன் செய்தான்) அவனுக்கென்று கேட்கப்படும் ஆசீர்வாதங்களுக்கு அவன் தகுதியுள்ளவன்”. பாருங்கள், தேவன் புரிந்து கொள்ளும் பிதாவாயிருக்கிறார்; அவர் உங்கள் இருதயத்தை அறிந்திருக்கிறார். நீங்கள் உண்மையில் வெளிச்சத்தைக் காண்கிறீர்களா அல்லது காணவில்லையா என்று அவருக்குத் தெரியும்.
58. இப்பொழுது, இந்த கேள்விக்கு சரியான விடை, சரியான ஞானஸ்நானம் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் கொடுக்கப்படும் ஞானஸ்நானமே. அதற்கு மாறாக வேறு வழியில் ஞானஸ்நானம் பெற்றவர்கள், தங்கள் இருதயத்தில் சுயநலமில்லாமல், “நல்லது, அதனுடன் நான் விளையாடிக் கொண்டிருக்க விரும்பவில்லை” என்று கூறுங்கள்... அது அந்த நபருக்கும் தேவனுக்கும் இடையே உள்ள ஒன்று. ஆனால் அவர்களுக்கு வித்தியாசம் தெரியாமலிருந்தால், அவர்கள் இரட்சிக்கப்படுவார்கள் என்பது என் கருத்து. அதை என் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறேன். ஏனெனில் அவர்களுக்கு வித்தியாசம் தெரியாது.
அதன் பேரில் நாம் நீண்ட நேரம் நிலைத்திருக்க முடியும், ஆனால் கூடுமானால், இக்கேள்விகள் அனைத்தையும் நாம் காண முயல்வோம்.