59. நல்லது. அந்த நபர் குறிப்பிட்டுள்ள எபிரேயர் 6:4லக் காண்போம். வேதாகமக் கேள்விகள் என்றால் எனக்கு மிகவும் பிரியம். அது உங்களிலிருந்து ஏதோ ஒன்றை இழுத்து வெளி கொணர்கிறது. உங்களுக்கு ஏதோ ஒன்று கிடைக்கப் பெறுகிறது; மற்றபடி நீங்கள் அதை பெற்றுக் கொள்வதில்லை. ஏனெனில் மற்றவர்களின் கருத்துக்களைத்தான், அவர்கள் இருதயத்தில் உள்ளதைத் தான். நீங்கள் கொண்டிருக்கிறீர்கள். அவர்கள் என்ன செய்கிறார்களென்று உங்களுக்குத் தெரியும்.
இப்பொழுது, அங்கே எபிரேயர் 10 உள்ளது, இங்கு எபிரேயர் 6:4 உள்ளது. சரி.
ஏனெனில், ஒரு தரம் பிரகாசிப்பிக்கப்பட்டும், பரம ஈவை ருசிபார்த்தும், பரிசுத்த ஆவியைப் பெற்றும்,
தேவனுடைய நல்வார்த்தையையும் இனிவரும் உலகத்தின் பெலன்களையும் ருசிபார்த்தும்,
மறுதலித்துப் போனவர்கள், தேவனுடைய குமாரனைத் தாங்களே மறுபடியும் சிலுவையில் அறைந்து அவமானப்படுத்துகிற படியால், மனந்திரும்புதற்கேதுவாய் அவர்களை மறுபடியும் புதுப்பிக்கிறது கூடாத காரியம். எபி. 6:4-6
அது ஒன்று. இப்பொழுது எபிரேயர் 10:26. சரி, எபிரேயர் 10ம் அதிகாரம் 26ம் வசனம்.
சத்தியத்தை அறியும் அறிவை அடைந்த பின்பு நாம் மனப் பூர்வமாய்ப் பாவஞ் செய்கிறவர்களாயிருந்தால். பாவங்களினிமித்தம் செலுத்தத்தக்க வேறொரு பலி இனியிராமல்,
நியாயத்தீர்ப்பு வருமென்று பயத்தோடே எதிர்பார்க்குதலும், விரோதிகளைப் பட்சிக்கும் கோபாக்கினையுமே இருக்கும்.
மோசேயினுடைய பிரமாணத்தைத் தள்ளுகிறவன் இரக்கம் பெறாமல் இரண்டு மூன்று சாட்சிகளின் வாக்கினாலே சாகிறானே;
தேவனுடைய குமாரனைக் காலின் கீழ் மிதித்து, தன்னைப் பரிசுத்தஞ் செய்த உடன்படிக்கையின் இரத்தத்தை அசுத்தமென்றெண்ணி, கிருபையின் ஆவியை நிந்திக்கிறவன் எவ்வளவு கொடிதான ஆக்கினைக்குப் பாத்திரவானாயிருப்பான் என்பதை யோசித்துப் பாருங்கள்.
எபி. 10: 26-29.
60. இவையிரண்டும் ஒரே காரியத்தை குறித்து உரைக்கின்றன. இப்பொழுது, இந்த கேள்வி கேட்ட நபருக்கு விளக்கிக் கூற விரும்புகிறேன். இப்பொழுது நீங்கள் எபிரேயர் 6:4ஐக் கவனிப்பீர்களானால், “ஒரு தரம் பிரகாசிக்கப்படுபவர்களை மறுபடியும் புதுப்பிக்கிறது கூடாத காரியம்” என்று அது உரைக்கிறது. அது இப்பொழுது நாம் வாசித்த மற்ற வேதபாகத்துடன் சம்பந்தப்பட்டுள்ளது. நீங்கள் பிரகாசிக்கப்பட்டு, அந்த பிரகாசிப் பிக்கப்படுதலை விட்டு விலகிச் செல்வீர்களானால், அந்த நபர் மறுபடியும் தன் இடத்தை பெற்றுக் கொள்ள முடியாது. பாருங்கள்?
61. இப்பொழுது, எபிரேயர் நிரூபம், இந்த புறக்கணிப்பினால் கிடைக்கப் பெறும் தண்டனையையே எடுத்துரைக்கிறது. கிறிஸ்துவை புறக்கணித்தல், வேதத்தின் வெளிச்சத்தைப் புறக்கணித்தல் என்பது உலகிலுள்ள மிகப் பயங்கரமான காரியங்களில் ஒன்றாகும்.
62. இப்பொழுது, கவனியுங்கள், “ஒரு தரம் பிரகாசிப்பிக்கப்பட்டும், பரிசுத்த ஆவியைப் பெற்றும் மறுதலித்துப் போனவர்களை மனந்திரும்புதற்கேதுவாய் மறுபடியும் புதுப்பிக்கிறது கூடாத காரியம்”. பாருங்கள்? “ஒரு தரம் பிரகாசிப்பிக்கப்பட்டும், (கவனியுங்கள்) பரம ஈவை ருசிபார்த்தும்”. அவர்கள் அந்த ஓரத்துக்கு வந்து விட்டனர்: “பரம ஈவை ருசிபார்த்தும்”.
63. இப்பொழுது, அவர்கள் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்துக்கு வரவில்லை என்பதை கவனியுங்கள். பாருங்கள்? அவர்கள் அதற்கு பிரகாசிப்பிக்கப்பட்டனர். “பரம ஈவை ருசி பார்த்து (பாருங்கள்?) பரிசுத்த ஆவியில் பங்கு கொண்டு (அதை ருசி பார்த்ததன் மூலம்), தேவனுடைய நல்வார்த்தையையும் (அதன் ஒரு பாகத்தை பாருங்கள்?) இனிவரும் உலகத்தின் பெலன்களையும் ருசிபார்த்தும், மறுதலித்துப் போனவர்களை மறுபடியும் புதுப்பிக்கிறது...
64. இப்பொழுது, எபிரேயர் 10ம் அதிகாரம் அதற்கான நியாயத்தீர்ப்பை அளிக்கிறது. “மோசேயினுடைய பிரமாணத்தைத் தள்ளுகிறவன் இரக்கம் பெறாமல் இரண்டு மூன்று சாட்சிகளின் வாக்கினாலே சாகிறானே. தேவனுடைய குமாரனைக் காலின் கீழ் மிதித்து, தன்னைப் பரிசுத்தஞ் செய்த உடன்படிக்கையின் இரத்தத்தை அசுத்தமென்றெண்ணினவன் எவ்வளவு கொடிதான ஆக்கினைக்குப் பாத்திரவானாயிருப்பான்?
65. உங்கள் கேள்விக்கு பதிலளிக்கும் வண்ணம் இவ்விரண்டு வேதபாகங்களையும் ஒன்று சேர்த்த பின்பு, இப்பொழுது அவ்விதம் செய்த ஒரு மனிதனை வேதத்திலிருந்து நாம் எடுத்துக் கொண்டு பார்ப்போம்.
66. இப்பொழுது, இன்றைய சபை அனைத்தும் முன்னடையாளத்தின் நிறைவேறுதலாயுள்ளது. அது நமக்குத் தெரியும். ஒரு முன்னடையாளமும் அதன் நிறைவேறுதலும் உள்ளன. இஸ்ரவேல் ஜனங்கள் பாலஸ்தீனாவிலிருந்து - எகிப்திலிருந்து பாலஸ்தீனாவுக்குப் பிரயாணம் செய்தல், ஆவிக்குரிய சபை வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்துக்கு பிரயாணம் செய்வதற்கு முன்னடையாளமாயுள்ளது... நீங்கள் எல்லோரும் அதை ஒப்புக்கொள்கிறீர்கள், இல்லையா? வேதசாஸ்திர பண்டிதர் அனைவருமே அது முன்னடையாளம் என்பதை ஒப்புக் கொள்கின்றனர்.
67. அவர்கள் எகிப்தை விட்டுப் புறப்பட்டனர். எகிப்துதான் உலகம். அவர்கள் அதை விட்டு வெளி வந்து, சிவந்த சமுத்திரத்தில் ஞானஸ்நானத்தின் மூலம் பிரிவினையின் தண்ணீர்கள் வழியாய் கடந்து, களிகூர்ந்து தேவனைத் துதித்தவர்களாய் மற்ற பக்கத்துக்கு வந்தனர். அவர்கள் நியாயப்பிரமாணத்தைப் பெற்றுக் கொண்டனர். அங்கிருந்து வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தை நோக்கிச் சென்றனர்.
68. நல்லது, நீங்கள் கவனித்தீர்களா? அவர்கள் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தை அடைவதற்கு சற்று முன்பு, வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்குள் அவர்கள் பிரவேசிப்பதற்கு முன்பு; அது சில நாட்களுக்குள் நடந்திருக்க வேண்டிய ஒன்று. பத்து அல்லது பதினொன்று நாட்களுக்கு அதிகமாக இருக்க வழியில்லை, ஏனெனில் அது நாற்பது சொச்சம் மைல்கள் தூரத்தில் இருந்தது. அவர்கள் நேராக வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்துக்குள் பிரவேசித்திருப்பார்கள், நமது பிரயாணத்தில் நாம் நடந்து செல்லும் ஒவ்வொரு கட்டத்தையும் அவர்கள் கடந்திருப்பார்கள். அவர்கள் வெளியே வந்து, சிவந்த சமுத்திரத்தைக் கடந்தனர், அவர்களுக்குப் பின்னே வந்த பார்வோனின் சேனை மூழ்கினது. அவர்களுடைய சத்துருக்களிலிருந்து அவர்கள் நீங்கலாகி, வனாந்திரத்தில் பிரயாணம் செய்து காதேஸ்பர்னேயாவில் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தின் எல்லையை அடைந்தனர். அங்கே அவர்கள் தோல்வியடைந்தனர். ஏன்? அவர்கள் ஏன் தோல்வியடைந்தனர்? இப்பொழுது, மோசே பத்துக் கோத்திரத்தினரிடமும் பேசி, அந்த தேசம் எவ்விதம் உள்ளது என்று வேவு பார்க்க ஒவ்வொரு கோத்திரத்திலிருந்தும் ஒரு பிரதிநிதியை அனுப்பப் போவதாக கூறினான்.
69. இன்று காலையில் நீங்கள் வந்துள்ள இடத்துக்கு அது ஒத்ததாய் உள்ளதல்லவா? இன்றைக்கு நீங்கள் - சபையானது லூத்தரின் மூலம் நீதிமானாக்கப்படுதலைக் கடந்து, மெதோடிஸ்டின் மூலம் பரிசுத்தமாக்கப்படுதலைக் கடந்து வந்து, இப்பொழுது வாக்குத்தத்தத்தின் நேரத்தை அடைந்துள்ளது. அந்த வாக்குத்தத்தம் ஆவியின் அபிஷேகமே. அது பழைய ஏற்பாடு முழுவதிலும் புதிய ஏற்பாட்டிலும் கூட (பாருங்கள்?) வாக்குத்தத்தம் செய்யப்பட்டுள்ளது; “என் பிதா வாக்குத்தத்தம் பண்ணினதை, இதோ, நான் உங்களுக்கு அனுப்புகிறேன்” (லூக். 24:49). பெந்தெகொஸ்தே நாளில் பேதுரு அவ்வாறு கூறினான்.
70. அதுதான் வாக்குத்தத்தம். வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசம் என்பது இந்த பரிசுத்த ஆவியின் தேசத்தில் வாழ்வதேயாகும். ஆவியின் வல்லமையில் வாழ்வதே தேவன் சபைக்கு அளித்துள்ள வாக்குத்தத்தம். அது வேறொரு உலகம்; அது வேறொரு தேசம். வாக்குத்தத்தத்தைப் பெற்று வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தில் வாழ்வதற்கு, நீங்கள் முன்பிருந்த நிலையிலிருந்து வெளியே வர வேண்டும். “உன்னதத்திலிருந்து வரும் பெலனால் நீங்கள் தரிப்பிக்கப்பட்டு, பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது பெலனடைவீர்கள்” என்னும் வாக்குத்தத்தத்தை நினைவுகூருங்கள்.
71. பழைய ஏற்பாட்டிலும் புதிய ஏற்பாட்டிலும் காலங்கள் தோறும் அளிக்கப்பட்ட வாக்குத்தத்தம் என்று பேதுரு கூறினான்... இந்த வாக்குத்தத்தம் அளிக்கப்பட்டு வந்துள்ளதை நீங்கள் படிப்படியாக பெந்தெகொஸ்தே நாள் வரைக்கும் காணலாம், அதன் பிறகு அவர்கள் வாக்குத்தத்தத்தில் பிரவேசித்தனர்.
72. வெளியே புறப்பட்டு வந்த இஸ்ரவேல் ஜனங்கள் பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் கண்டனர். அதன் பிறகு மோசே வேவு பார்ப்பதற்கென்று ஒவ்வொரு கோத்திரத்திலிருந்தும் ஒருவனை அனுப்பினான். அவர்களில் சிலர் திரும்ப வந்து... நல்லது. அவர்களில் சிலர் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்துக்கு செல்ல மறுத்தனர், அவர்களில் இருவர் மாத்திரமே சென்றனர். அவர்கள் திரும்பி வந்த போது, இரண்டு பேர் தூக்க வேண்டிய அவ்வளவு கனமான திராட்சைக் குலையை கொண்டு வந்தனர். அவர்கள் திராட்சை பழத்தை ருசிபார்த்ததில்லை. அவர்கள் வனாந்தரத்தில் இருந்தனர்; எனவே அது பழங்கள் தோன்றுவதற்கு ஏற்ற இடமல்ல. அவர்கள் வானத்திலிருந்து விழுந்த மன்னாவினாலும், காடைகளினாலும் போஷிக்கப்பட்டு வந்தனர்.
73. ஆனால் இப்பொழுது அவர்கள் அந்த தேசத்துக்குள் பிரவேசித்து, இருவர் தூக்க வேண்டிய அவ்வளவு பெரிய திராட்சைக் குலையைக் கொண்டு வந்தனர். இவர்கள் தேசத்துக்குள் பிரவேசித்து அங்கிருந்து திரும்பி வந்து, மற்றவர்களுக்கு இந்த திராட்சை பழங்களை ருசிபார்க்கக் கொடுத்தனர். அவர்கள் என்ன செய்தனர்?
அவர்கள் திரும்பி வந்த பிறகு, திராட்சை பழங்களை ருசி பார்த்ததன் நிமித்தம் களிகூருவதற்கு பதிலாக, தங்கள் கோத்திரத்தாரிடம் சென்று, “ஓ, பெலிஸ்தியர் அல்லது ஏத்தியர், அல்லது பெர்சியரின் பெரிய மதில் சூழ்ந்த பட்டினங்களை நாங்கள் கண்டோம். இங்கே எல்லா விதமான ஜாதிகளும் உள்ளனர். அவர்கள் இராட்சதர்கள். அவர்களுக்கு முன்பாக நாம் வெட்டுக்கிளிகளைப் போல் காணப்படுகிறோம். அந்த தேசத்தை நம்மால் கைப் பற்ற முடியாது. “மோசே, எங்களை ஏன் இங்கு கொண்டு வந்தாய்? என்றனர்” பாருங்கள்? அவர்கள் எல்லோரும் - அவர்கள் ஒவ்வொருவரும் - வனாந்தரத்தில் அழிந்து போனதாக வேதம் உரைக்கிறது. அவர்கள் என்ன செய்தனர்? அவர்கள் எல்லைக்கோடு விசுவாசிகள். அவர்கள் உண்மையான காரியம் வரைக்கும் வந்து வாக்குத்தத்தத்தைக் கண்டு, அங்கு சென்று வாக்குத்தத்தத்தைப் பெற்றுக் கொள்ள முடியாது என்று எண்ணினர்.
74. இப்பொழுது, நீதிமானாக்கப்படுதல், பரிசுத்தமாக் கப்படுதலின் வழியாக வந்தவர்கள் இன்றைக்கு அந்நிலையில் தான் உள்ளனர். பாருங்கள்? “தன்னைப் பரிசுத்தஞ் செய்த இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தைக் காலின் கீழ் மிதித்து”. பரிசுத்தமாக்கப்பட்ட ஜனங்கள் ஓரிடத்தை அடைந்து பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைக் கண்டு, திரும்பிச் சென்று அது மதவெறி. எங்களால் அதை ஏற்றுக் கொள்ள முடியாது. எங்கள் வகுப்புகளிலிருந்து நாங்கள் துரத்தப்படுவோம், எங்கள் இடங்களிலிருந்து நாங்கள் துரத்தப்படுவோம். எங்கள் சபைகளிலிருந்து நாங்கள் துரத்தப்படுவோம், எங்களால் அதை செய்ய முடியாது (பாருங்கள்?), ஏனெனில் எங்கள் சபை போதகத்துக்கு அது முரணாயுள்ளது' என்கின்றனர். பாருங்கள்? அவர்களை இவ்வளவு தூரம், வாக்குத்தத்தத்தினால் முத்திரிக்கப்படும் இடம் வரைக்கும் கொண்டு வந்த இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தை அசுத்தமென்றெண்ணி, அங்கிருந்து நடந்து திரும்பி சென்று விடுகின்றனர். அப்படிப்பட்டவர்கள் இரட்சிக்கப்படுவது முழுவதும் கூடாத காரியம் என்று அவர் கூறியுள்ளார். பாருங்கள், பாருங்கள்? வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்துக்குள் கடந்து சென்றவர்களை அல்ல.
75. ஞாபகம் கொள்ளுங்கள், அந்த இருபத்தைந்து லட்சம் ஜனக்கூட்டத்தில், யோசுவா காலேப் இருவர் மட்டுமே வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்துக்குள் சென்றனர். ஏனெனில் அவர்கள் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்துக்குள் ஏற்கனவே சென்று ஆசீர்வாதத்தைப் பெற்று திரும்பி வந்தனர். அவர்கள், “நம்மால் அதைக் கைப்பற்ற முடியும், ஏனெனில் தேவன் அவ்வாறு உரைத்திருக்கிறார்” என்றனர்.
76. அவர்கள் அதில் நிலைகொண்டிருந்தனர். ஏன்? மற்றவர்கள் சூழ்நிலையை நோக்கிக் கொண்டிருந்தனர், ஆனால் யோசுவாவும் காலேபும், “அந்த தேசத்தை நான் உங்களுக்குக் கொடுத்து விட்டேன், அதை போய் சுதந்தரித்துக் கொள்ளுங்கள்” என்று தேவன் உரைத்ததை நோக்கிக் கொண்டிருந்தனர்.
77. இன்றைக்கு ஜனங்கள், “ஓ, நான் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெற்றுக் கொண்டால், நான் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டால், நான் அந்நிய பாஷை பேசினால் அல்லது தீர்க்கதரிசனம் உரைத்தால், என் சபையில் நான் சாட்சி கூறி கூச்சலிட்டால், அவர்கள் என்னைப் புறம்பாக்குவார்கள்” என்கின்றனர். உங்கள் விருப்பப்படி செய்யுங்கள்!
78. நீங்கள், “நல்லது, இப்பொழுது நான் உங்களிடம் கூறுகிறேன், நான் கிறிஸ்தவ வாழ்க்கை வாழ்ந்து வருகிறேன், நான் நல்ல, சுத்தமான பரிசுத்தமான வாழ்க்கை வாழ்ந்து வருகிறேன்” எனலாம். அது உண்மைதான். ஆனால் நீங்கள் தீர்மானம் செய்ய வேண்டிய இடத்துக்கு, எல்லைக்கோட்டுக்கு வந்திருக்கிறீர்கள். அதை நீங்கள் மறுதலிப்பீர்களானால் ஒரு தரம் பிரகாசிக்கப்பட்டவர்களை கூடாத காரியம்”. பாருங்கள்?
79. வேறு விதமாகக் கூறினால், ஒரு மனிதன் நீதிமானாக் கப்படுதலின் வழியாகக் கடந்து வந்து, “எனக்கு வார்த்தையைப் பிரசங்கிக்க விருப்பமுள்ளது என்று நினைக்கிறேன் என்கிறார். அவர் இரசிக்கப்படுகிறார். அவர், “நான் பாவம் செய்து அலுத்துப் போய் விட்டேன்' என்கிறார். சரி. அவர் இன்னும் புகைபிடித்துக் கொண்டிருக்கிறார், ஒருக்கால் அவர் இச்சிக்கலாம், அப்படி ஏதாவதொன்றைச் செய்து கொண்டிருக்கக் கூடும். சற்று கழிந்து அவர், “தேவனே, இது கிறிஸ்தவனுக்கு உகந்ததல்ல, முக்கியமாக ஒரு போதகருக்கு - பெண்களைத் தவறான வழியில் பார்ப்பதும், புகை பிடிப்பதும் என்கிறார். அல்லது, “நான் அந்த ஆட்களுடன் சேர்ந்து கொண்டு சமுதாய மதுவாக 'பீர்' குடிக்கிறேன் - என் சபையோருடனும் கூட. அது சரியென்று தோன்றவில்லை. கர்த்தாவே, என்னைப் பரிசுத்தப்படுத்தும்' என்கிறார். அப்பொழுது கர்த்தர் அவரை பரிசுத்தப்படுத்தி, இச்சையையும் மற்றெல்லாவற்றையும் அவரிடத்திலிருந்து எடுத்துப் போடுகிறார். அப்பொழுது அவர் பரிசுத்தமாக்கப்பட்ட ஒரு பாண்டமாக ஆகிவிடுகிறார். அப்பொழுது தேவன் பரிசுத்த ஆவியின் அபிஷேகம் என்பதை அவருக்கு முன்பாக வைக்கிறார். அதைச் செய்வதற்கு அவர், தான் இருக்கின்ற அந்த கூட்டம் ஜனங்களை விட்டு வெளி வர வேண்டும். அங்குதான் அவர் தன் உண்மையான நிறத்தைக் காண்பிக்கிறார், அவர் அதிலிருந்து பின்வாங்குகிறார். அவர் அவ்விதம் பின்வாங்கும் போது என்ன செய்கிறார்? அவரைப் பரிசுத்தமாக்கின இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தை அசுத்தமென்றெண்ணி, அது தன்னை அங்கு கொண்டு செல்ல இயலாதென்று கருதி, அதைக் காலின் கீழ் மிதித்துப் போடுகிறார். அப்படிப்பட்டவர் இரட்சிக்கப்படுவது கூடாத காரியம். அப்படியானால் அது என்ன செய்கிறது? அவரை பட்சிக்கும் கோபாக்கினைக்கும் நியாயத்தீர்ப்புக்கும் கொண்டு செல்கின்றது.
இது தெளிவாகி விட்டதென்று நம்புகிறேன். இல்லையென்றால் அதை வேறொரு நேரத்தில் எனக்குத் தெரியப்படுத்துங்கள். இங்கு என்னிடம் அநேக கேள்விகள் உள்ளன.