80. நல்லது. இதுதான் அது. பாருங்கள், கிறிஸ்து மேய்ப்பர். அவர் போக வேண்டிய நேரத்தில், தாம் போஷித்துக் கொண்டிருந்த ஆடுகளை, தமது மந்தையை, தமது சபையை, ஒப்படைத்துச் செல்கிறார்... பாருங்கள் தமது மந்தையை தொடர்ந்து போஷிக்கும்படி அவர் தமது சீஷர்களுக்கு கட்டளையிட்டுச் செல்கிறார் - ஒரு மேய்ப்பனாக இருந்து, ஆடுகளைப் போஷிக்கும்படி
81. வேறு விதமாக கூறுவோமானால், இது இப்படி உள்ளது. இங்கு நீங்கள் பார்ப்பீர்களானால்... இக்காலை வேளையில் அதை தான் நான் செய்து கொண்டிருக்கிறேன். ஆடுகளுக்கு ஆடுகளின் ஆகாரம் கொடுத்தால் தான் அவை வளரும். நீங்கள் ஒரு பெரிய 'ஹாம்பர்கரை பொறித்து, அதை ஒரு ஆட்டுக்குக் கொடுத்தால், அதை உண்டு அதனால் வளர முடியாது. ஏனெனில், பாருங்கள். அது- அது ஆட்டின் ஆகாரமல்ல. பாருங்கள்? நீங்கள் ஒரு நல்ல டீ போன் ஸ்டிக்கை பொறித்து. அதை ஒரு ஆட்டுக்கு கொடுத்தால், அது - அது ஆட்டின் ஆகாரம் அல்ல. அதனால் அதை தின்ன முடியாது. அவ்வளவுதான், ஏனெனில் அது ஒரு ஆடு. ஆடுகள் ஆடுகளின் தீவனத்தையே விரும்பும். நல்லது. அப்படியானால், நீங்கள் தேவனுடைய மந்தையை போஷிக்கும் போது, அவைகளை மனிதனால் உண்டாக்கப்பட்ட வேதசாஸ்திரத்தினால் போஷிக்காதீர்கள்; அவைகளை வார்த்தையினால் போஷியுங்கள். அதைக் கொண்டுதான் ஆடுகள் வளரும். வார்த்தையைப் போஷியுங்கள்!
82. ஒரு மேய்ப்பனாக, உண்மையான மேய்ப்பனாக இருங்கள். “என் ஆடுகளை போஷிப்பாயாக” (ஆங்கிலத்தில் “Feed my sheep” என்பதை தமிழில் “என் ஆடுகளை மேய்ப்பாயாக என்று மொழி பெயர்த்துள்ளனர் - தமிழாக்கியோன்). ஆட்டுக்குட்டிகள் சிறியவை. ஆடுகள் பெரியவை. எனவே குட்டிகளானாலும் பெரியவைகளானாலும், தேவனுடைய மந்தையைப் போஷியுங்கள்! பாருங்கள்? அவைகளை வார்த்தையினால் போஷியுங்கள்! வசனமே (பாருங்கள்?) சத்தியம்! “மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்' என்று இயேசு கூறியுள்ளார் (மத். 4:4). அது சரியா? அப்படியானால் மனிதர் பிழைக்க வேண்டுமானால், அவர்கள் தேவனுடைய மந்தையாக - இந்த சபையாக - இருப்பார்களானால், அவர்கள் வார்த்தையினாலும் தேவனுடைய மன்னாவிலும் வளர வேண்டியவர்களாயிருக்கின்றனர். இதுவே அவருடைய மன்னா!
83. வேதத்திலே - சபைக் காலங்களைக் குறித்து தியானித்த போது நாம் பார்த்தோம் - இயேசு மறைவான மன்னாவாயிருக்கிறார்; கிறிஸ்துவே சபையின் மன்னா. மன்னா என்பது என்ன? பழைய ஏற்பாட்டிலே மன்னா ஒவ்வொரு இரவும் வானத்திலிருந்து புதிதாக விழுந்து, பிரயாணப்பட்டு சென்று கொண்டிருந்த சபையை போஷித்து வந்தது. அது சரியா? புதிய ஏற்பாட்டில் மறைவான மன்னா எது? “இன்னும் கொஞ்சக் காலத்திலே உலகம் என்னைக் காணாது (மறைவாயிருத்தல்), நீங்களோ என்னைக் காண்பீர்கள். ஏனெனில் நான் உலகத்தின் முடிவு பரியந்தம் உங்களுடனே வாசம் பண்ணி உங்களுக்குள்ளே இருப்பேன். கிறிஸ்துவே வானத்திலிருந்து ஒவ்வொரு நாளும் தேவனிடத்திலிருந்து புதிதாக வரும் மறைவான மன்னாவாயிருக்கிறார் - ஒவ்வொரு நாளும்.
84. நீங்கள். நல்லது. இரண்டு வாரங்களுக்கு முன்பு தேவனைக் குறித்த ஒரு பெரிய அனுபவம் எனக்கு உண்டாயிருந்தது' என்று கூற முடியாது. இப்பொழுது என்ன நடக்கிறது? பாருங்கள்? ஒவ்வொரு நாளும் புதிதாக ஒரு புது ஆசீர்வாதம். புதிதான ஒன்று தேவனிடத்திலிருந்து இறங்கி வருகிறது. மறைவான மன்னா - கிறிஸ்து - வானத்திலிருந்து தேவனிடத்திலிருந்து இறங்கி வருகிறது. நாம் கிறிஸ்துவாகிய இந்த மன்னாவைப் புசித்து, மறுபக்கத்திலுள்ள அந்த தேசத்தை அடையும் வரைக்கும் அவர் நம்மை போஷித்து வருகிறார்.
85. அவர் என் ஆடுகளை போஷிப்பாயாக என்று கூறினதன் அர்த்தம் இதுவே. இதைக் குறித்தே நாம் பேசிக் கொண்டிருந்தால், மற்ற கேள்விகளுக்கு நம்மால் சொல்ல முடியாது. இது ஒரு நல்ல கேள்வி. கிறிஸ்து மன்னாவாக, ஆடுகளின் ஆகாரமாக இருக்கிறார் என்பதைக் குறித்து பேசுவது எனக்கு பிரியம்.
86. அவர்களைக் கிறிஸ்துவினால் அவருடைய வார்த்தையிலிருந்து போஷியுங்கள். பாருங்கள்? கிறிஸ்துவின் வார்த்தையை, அது இங்கு எழுதப்பட்டுள்ள விதமாகவே எடுத்துக் கொண்டு, அதை ஆடுகளுக்குக் கொடுங்கள். ஒ, அவர்களுக்கு 'ஹாம்பர்கர் - தேவை. என்று யார் கூறினாலும் அதை விசுவாசிக்காதீர்கள். அவர்களுக்குத் தேவையானது இந்த வேதாகமத்தில் உள்ளது. அதுதான்! இதுவே ஆடுகளின் ஆகாரம். இதுதான் அவர்களை வளரச் செய்யும் பரிசுத்த ஆவி, இதுவே அவருடைய வார்த்தை. அவருடைய கட்டளை. வார்த்தை ஒரு விதை விதையானது செடியைத் தோன்றச் செய்கிறது; அந்த செடியை நாம் புசிக்கிறோம். பரிசுத்த ஆவி வளரச் செய்யும் இந்த செடியைத்தான் சபையானது புசிக்கிறது. பரிசுத்த ஆவி சபையைப் போஷித்து தேவனுடைய சமுகத்தில் களிகூரும் படி செய்கிறது. ஜனங்கள் அவருடைய வார்த்தையை விசுவாசித்து, பரிசுத்த ஆவி அவர்கள் மூலம் கிரியை செய்ய விட்டுக் கொடுக்கின்றனர். அப்பொழுது பரிசுத்த ஆவி, அவர்கள் என்ன செய்வார்கள் என்று தேவன் வாக்களித்ததை அவர்களுக்கு அளிக்கிறார். தேவன் தமது சபை வளர்ந்து வருவதைக் காண்கிறார். எனவே ஆடுகள் நன்றாக போஷிக்கப்படுகின்றன, பரிசுத்த ஆவி அதன் மூலம் மகிமைப்படுகிறார். பாருங்கள்? அதுதான். “என் ஆடுகளைப் போஷிப்பாயாக”. சரி. இது மாத்திரமல்ல, இன்னும் வேறெதாகிலும் இருந்தால், எனக்கு சற்று பின்பு தெரியப்படுத்துங்கள்.