106. இவர் இரண்டு கேள்விகளைக் கேட்டிருக்கிறார். அது உண்மை. அது உண்மை. ஸ்திரீகள் போதகர்களாக சபையில் பேசுவது சரியல்ல. அது உண்மை. 1 கொரிந்தியர் 14ம் அதிகாரம்.
107. இங்குள்ள சபையோராகிய உங்கள் அனைவருக்கும் இது தெரியும். இந்த கேள்வியை இன்று காலையில் கேட்டது ஒரு அந்நியராக இருக்கக் கூடும்; எனக்குத் தெரியாது. ஆனால் ஸ்திரீகள் பிரசங்கம் செய்வது சரியல்ல. அது உண்மை.
அந்த வேதபாகத்தை இங்கு நான் படிக்கிறேன். அப்பொழுது நீங்கள் கண்டு கொள்ளலாம். அப்பொழுது நீங்கள் அறிந்து கொள்வீர்கள். 1 கொரிந்தியர் 14ம் அதிகாரம் என்று நினைக்கிறேன். இன்னும் ஒரு நிமிடத்தில் அந்த பாகத்துக்கு நான் வருவேன் - என்னால் கண்டுபிடிக்க முடியுமானால்... ஆம், அது இங்குள்ளது.
சபைகளில் உங்கள் ஸ்திரீகள் பேசாமலிருக்கக் கடவர்கள்: பேசும்படிக்கு அவர்களுக்கு உத்தரவில்லை; அவர்கள் அமர்ந்திருக்க வேண்டும்; வேதமும் அப்படியே சொல்லுகிறது (முன்பிருந்த நாட்களில் நியாயப்பிரமாணம் ஸ்திரீ போதகர்களை அனுமதிக்கவில்லை) (law அதாவது “நியாயப்பிரமாணம் என்பதற்கு பதிலாக தமிழில் “வேதம்” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது - தமிழாக்கியோன்).
அவர்கள் ஒரு காரியத்தைக் கற்றுக் கொள்ள விரும்பினால், வீட்டிலே தங்கள் புருஷரிடத்தில் விசாரிக்கக்கடவர்கள்; ஸ்திரீகள் சபையிலே பேசுகிறது அயோக்கியமாயிருக்குமே.
1 கொரி 14: 34-35.
107. இப்பொழுது நீங்கள் கவனிப்பீர்களானால், கொரிந்து சபை... கொரிந்து கிறிஸ்தவர்களில் அநேகர்... அந்த நாளில் தியானாள் பெரிய பெண் தெய்வமாக விளங்கினாள். அவள் ஒரு ரோமப் பெண் தெய்வம். அவள் எபேசுவுக்கும் பெண் தெய்வமாயிருந்தாள். அவள் உலகம் முழுவதிலும் தொழுது கொள்ளப்பட்டாள். இப்பொழுது, அவளுக்கு ஊழியம் செய்தவர்கள்... அவள் பெண்ணாக இருந்த காரணத்தால், அவளுடைய ஊழியக்காரிகளும் பெண்களாக இருந்தனர். அவர்கள் பவுலின் மூலம் கிறிஸ்தவ மார்க்கத்தைத் தழுவின போது... பவுல் இந்த நிரூபங்களை எழுதின போது, அவன் ரோமாபுரியில் சிறையில் இருந்தான்.
108. அவர்கள் அந்நிய பாஷையில் பேசி, மகத்தான வரங்கள் அவர்களிடையே கிரியை செய்யத் தொடங்கின போது. அவர்கள் பவுலுக்கு நிரூபங்கள் எழுதினர். நல்லது. இந்த ஸ்திரீகள் தங்கள் ஊழியத்தை தொடர்ந்து செய்ய வேண்டுமென்று எண்ணினர்.
109. இப்பொழுது, வேதத்தைப் படித்துக் கொண்டிருக்கிற நீங்கள் கவனிப்பீர்களானால், அவன் 36ம் வசனத்தில் இவ்வாறு உரைக்கிறான் :
தேவ வசனம் உங்களிடத்திலிருந்தா புறப்பட்டது? அது உங்களிடத்துக்கு மாத்திரமா வந்தது?
ஒருவன் தன்னைத் தீர்க்கதரிசியென்றாவது. ஆவியைப் பெற்றவர்னென்றாவது எண்ணினால், நான் உங்களுக்கு எழுதுகிறவைகள் கர்த்தருடைய கற்பனைகளென்று அவன் ஒத்துக் கொள்ளக்கடவன்.
ஒருவன் அறியாதவனாயிருந்தால், அவன் அறியாதவனாயிருக்கட்டும்.
1 கொரி. 14: 36-38
110. இல்லையென்றால், ஸ்திரீகள்... இப்பொழுது, சபைக்கு எழுதப்பட்ட இந்த நிரூபத்தின் வரலாற்றை நீங்கள் எடுத்துக் கொண்டால், இந்த ஸ்திரீகள் எண்ணினது என்னவெனில்... தியானாளுக்கு அவர்கள் பூசாரிகளாக இருந்தது போலவே, இந்த ஊழியத்தை இங்கும் தொடர்ந்து செய்யலாமென்று எண்ணினர். தேவன் ஒரு ஸ்திரீயல்ல; தேவன் ஒரு மனிதன். உண்மையான ஒருவன் மாத்திரம் உண்டு, அதுதான் மனிதன். ஸ்திரீ மனிதனிலிருந்து தோன்றின உப பொருள். மனிதன் ஸ்திரீக்காக உண்டாக்கப்பட வில்லை, ஸ்திரீயே மனிதனுக்காக உண்டாக்கப்பட்டாள். பாருங்கள்? உங்கள் ஆவிக்குரிய சிந்தையை நீங்கள் திறந்து கொடுப்பீர்களானால். பாருங்கள்? பாருங்கள்?
111. மனிதன் பூமியில் முதலாவது தோன்றின போது, அவன் ஆணும் பெண்ணுமாக இருந்தான். அவன் ஆண் இனமாக ஆவதற்கு முன்பு, ஆண்மைத்தனமும் பெண்மைத்தனமும் ஒருங்கே கொண்டவனாயிருந்தான். பாருங்கள்? பெண்ணின் ஆவி, சற்று தாழ்ந்த ஆவி. அது பயந்த இயல்பைக் கொண்டது. பிறகு ஆண்மைத் தனம், ஆண். அவர் அவனை வித்தியாசமான... உலகத்தில் பலுகிப் பெருகுவதற்கென அவர் பெண்ணின் ஆவியை அவனிலிருந்து எடுத்து, அவனுடைய விலாவிலிருந்து ஒரு எலும்பை எடுத்து, பெண்ணை உண்டாக்கினார்.
112. அவள் ஆளுகை செய்ய வேண்டியவள் அல்ல! அவள் முதலில் அதைச் செய்த போது, மானிடவர்க்கம் முழுவதும் விழுந்து போவதற்கு அவள் காரணமாயிருந்தாள். பாருங்கள்? ஓ, அது முழுவதும்... அவளே வீழ்ச்சிக்கு காரணம். அதன் பிறகு தேவன் அவளை எடுத்து, ஒரு ஸ்திரீயின் மூலம் தோன்றின கிறிஸ்துவினால் ஜீவனை உலகத்துக்கு திரும்பக் கொண்டு வந்தார். ஆனால் சபையில் போதகராயிருப்பதற்கு ஒரு ஸ்திரீ அனுமதிக்கப் பட்டதாக எங்கும் இல்லை.
113. 2 தீமோத்தேயு 3ம் அதிகாரத்தில், “உபதேசம் பண்ணவும், புருஷன் மேல் அதிகாரஞ் செலுத்தவும், ஸ்திரீயானவளுக்கு நான் உத்தரவு கொடுக்கிறதில்லை; அவள் அமைதலாயிருக்க வேண்டும்” என்று பவுல் உரைத்திருக்கிறான் (1 தீமோ. 2:15). பாருங்கள்? ஸ்திரீ பிரசங்கம் பண்ணுவது சரியல்ல; அது உண்மை.
114. சில திறமையான பெண் பிரசங்கிகளை நான் கண்டிருக்கிறேன். அவர்களால் நன்றாக பிரசங்கிக்க முடியும் - ஏமி மக்பியர்ஸன் போன்றவர்கள், இன்னும் அநேக பெண்கள். உங்கள் கரத்தை அவர்கள் மேல் சிறிது நேரம் வையுங்கள். பாருங்கள்? அதுவல்ல... அந்நிய பாஷையில் பேசக் கூடியவர்கள் இன்று காலையில் இந்த சபையில் உட்கார்ந்து கொண்டிருக்கின்றனர் என்று நான் அறிவேன். அர்த்தம் உரைப்பவர் இல்லாமல் போனால், அவர்கள் அந்நிய பாஷையில் பேச துணிய மாட்டார்கள். பாருங்கள்?
115. அந்த ஸ்திரீகள். ஒரு குறிப்பிட்ட வம்சத்தில் பிறந்தவர்கள் என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும், அதனால் அவர்கள்... உங்கள் பிறப்பு அதனுடன் நிறைய சம்பந்தப்பட்டுள்ளது. அது உங்கள் பெயர், உங்களைக் குறித்த எல்லாமே (பாருங்கள்?). என்னவாயினும், அதனுடன் தொடர்பு கொண்டுள்ளது.
116. இன்று காலை இங்கு வந்து துப்பாக்கியின் குதிரையை (trigger) இழுத்து ஒரு மனிதனை என்னால் கொல்ல முடியும். ஆனால் அவ்விதம் செய்ய நான் துணிவு கொள்ள மாட்டேன். ஆனால் என்னால் செய்ய முடியும், நிச்சயமாக. பாருங்கள். நீங்கள் ஒரு அணிலைச் சுட்டுக் கொல்ல முடியும். ஆனால் நாம் அவ்விதம் செய்யக் கூடாது. பாருங்கள்? அதே காரியம் தான் பெண்கள் பிரசங்கிக்கும் விஷயத்திலும். நீங்கள் தவறு செய்யாதபடிக்கு இவைகளின் பேரில் கவனமாயிருக்க வேண்டும். இது கர்த்தருடைய கட்டளை.
117. அவர்கள் பவுலுக்கு நிரூபம் எழுதி, “பரிசுத்த ஆவியானவர் எங்களிடம் கூறினார் என்று சொன்ன போது, பவுல் “தேவனுடைய வார்த்தை உங்களிடத்திலிருந்தா புறப்பட்டது? அது உங்களிடத்துக்கு மாத்திரமா வந்தது? அங்கே தீர்க்கதரிசிகள் யாராகிலும் இருந்தால், நான் கூறுபவை கர்த்தருடைய கற்பனைகள் என்று அவர்கள் ஒத்துக் கொள்வார்கள். (பாருங்கள்? அது உண்மை). எவனாகிலும் இதற்கு முரணாக செயல்பட விரும்பினால், அவன் அறியாதவனாயிருக்க விரும்பினால், அவன் அறியாதவனாயிருக்கட்டும் (பாருங்கள்?).. அவனைத் தனியே விட்டு விடுங்கள், அவன் விருப்பப்படி செய்யட்டும் (பாருங்கள்?) நீங்களோ அதற்கு மாறாக எதையும் செய்யாதிருங்கள்' என்கிறான். அவள் சபையில் பேசக் கூடாது என்பதை ஞாபகம் கொள்ளுங்கள்.
118. அங்குதான் உங்கள் மேய்ப்பரோ அல்லது மற்றவரோ, ஆவிக்குரியவரா இல்லையா என்பதை நீங்கள் நிதானிக்கலாம், பாருங்கள்? பவுல், “ஒருவன் தன்னைத் தீர்க்கதரிசியென்றாவது. ஆவியைப் பெற்றவனென்றாவது எண்ணினால், நான் உங்களுக்கு கூறுபவை கர்த்தருடைய கற்பனைகளென்று அவன் ஒத்துக் கொள்ளக் கடவன்' என்கிறான். பாருங்கள்?
119. அதன் காரணமாகத்தான், ஜனங்கள் மறுபடியும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெறவேண்டுமென்று நான் கட்டளையிடுகிறேன். பவுல் அவ்விதம் செய்தான். அவன் “பரலோகத்திலிருக்கிற ஒரு தூதன் வந்து வேறெதையாகிலும் போதித்தால் அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்” என்றான். அது ஏற்கனவே இந்த சபையில் போதிக்கப்பட்டுள்ளது. எந்த மனிதனாகிலும் வந்து... பரலோகத்திலிருக்கிற ஒரு தூதன் வந்து, “ஸ்திரீகள் பிரசங்கம் பண்ணலாம். அவர்கள் பிரசங்கிகளாயிருக்கலாம். அவர்களை போதகராக அபிஷேகம் பண்ணுங்கள்” என்று சொல்வானானால், “அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்” என்று வேதம் உரைக்கிறது. இங்கு அது தேவனுடைய கட்டளையாயுள்ளது.