120. இல்லை, ஐயா! இல்லவே இல்லை! இல்லை, ஐயா! நீங்கள் ஒரே ஒரு பெண்ணைத்தான் முத்தமிடலாம், சகோதரனே. அது உங்கள் மனைவி (பாருங்கள்?), அல்லது உங்கள் பிள்ளையை, அல்லது பாருங்கள்?
“அது சரியா... அதை சரியாக படித்தேனா என்று பார்க்கட்டும்: வாழ்த்தும் போது கிறிஸ்தவ மனிதரும் ஸ்திரீகளும் ஒருவரை யொருவர் முத்தமிட்டுக் கொள்வது சரியா?”
121. இல்லை, ஐயா! இல்லவே இல்லை! அது... அதை ஒரு போதும் தொடங்கி விடாதீர்கள்! ஆம், ஐயா! வேண்டாம், ஐயா! ஸ்திரீகளிடத்திலிருந்து விலகியிருங்கள். அவர்களை விட்டுப் புறம்பேயிருங்கள். முற்றிலும் உண்மை.
122. இப்பொழுது, அவர்கள் நமது சகோதரிகள். ஆனால் செய்யாதீர்கள். இப்பொழுது, அவர்களுக்கு அது உள்ளது. அது... அது பெந்தெகொஸ்தே சபைகளிலும் கூட நுழைந்து விட்டது, அது “சுயாதீன அன்பு” (free love) என்று அழைக்கப்படுகிறது. யாராகிலும் அவ்விதம் செய்வார்களானால், அதை விட்டு விலகியிருங்கள். அது உண்மை !
123. நீங்கள் எவ்வளவு சுத்தமாயிருந்தாலும், எனக்கு கவலையில்லை... நீங்கள் என் சகோதரன், நீங்கள் ஒரு நல்ல பரிசுத்தமாக்கப்பட்ட, பரிசுத்த மனிதன் என்று நான் நம்புகிறேன். நீங்கள் எவ்வளவு பரிசுத்தமாயிருந்தாலும், எனக்குக் கவலையில்லை; நீங்கள் இன்னும் ஒரு மனிதனே; அவள் எவ்வளவு பரிசுத்தமாயிருந்தாலும் எனக்குக் கவலையில்லை; அவள் இன்னும் ஒரு ஸ்திரீயே. உங்களுக்கு விவாகமாகும் வரைக்கும் அதை விட்டு விலகியிருங்கள். அவ்விதம் நீங்கள் செய்யுங்கள்
124. ஞாபகம் கொள்ளுங்கள், சரீரமானது... இப்பொழுது நான் இரு சாராரிடமும் பேசப் போகிறேன். அப்பொழுது வயது வந்த நீங்கள் புரிந்து கொள்வீர்கள். இது ஆண்களும் பெண்களும் கலந்துள்ள கூட்டம். ஆனால் நான் உங்கள் சகோதரன். இது கேட்கப்பட்ட ஒரு கேள்வி. பாருங்கள்?
125. மனித குலத்தைச் சேர்ந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் வெவ்வேறு சுரப்பிகள் (glands) உண்டு. பெண்ணுக்கு பெண் சுரப்பி உள்ளது, இன சுரப்பி. ஆணுக்கு ஆண் சுரப்பி உள்ளது. இன சுரப்பி. இந்த சுரப்பிகள் மனித உதடுகளில் அமைந்துள்ளன. அது உண்மை.
126. மற்றும் ஒன்றைத் தொடங்க வாய்ப்புண்டு, அதாவது மனிதன் வேறொரு மனிதனை வாயில் முத்தமிடுதல். அது அசுத்தமான செயல்! அது அசுத்தம்! அது என்ன செய்கிறது? அது ஓரினப் புணர்ச்சிக்காரரைத் தோற்றுவிக்கிறது. அதிலிருந்து விலகியிருங்கள்! நீங்கள் சொல்லலாம்...
127. அண்மையில் ஒரு ஆள் என்னிடம், “சகோ. பிரன்ஹாமே, அவர்கள் ஒருவரையொருவர் பரிசுத்த முத்தத்தினால் வாழ்த்தினார்களே' என்றார். அவர்கள் கழுத்தின் பின்புறத்தில் முத்தமிட்டனர். அவர்கள் கழுத்தின் மேல் விழுந்து அவர்களைக் கழுத்தின் பின்புறத்தில் முத்தமிட்டனர். அது கைக்குலுக்குதல் உள்ளே வருவதற்கு முன்பு. அது ஒரு வாழ்த்துதல். அப்படித்தான் அது உள்ளது. அவர்கள் ஒருவர் கைகளை ஒருவர் குலுக்குவதில்லை; அவர்கள் ஒருவரையொருவர் தழுவி, ஒருவரையொருவர் கழுத்தின் பின்புறத்தில் முத்தமிட்டனர் - உதடுகளிலோ, முகத்திலோ அல்ல. அவ்விதம் செய்வது சீர்குலைதலை உண்டாக்கும். அதிலிருந்து விலகியிருங்கள். அவ்விதம் செய்யாதீர்கள்!
128. இந்நாட்களில் நாம் ஒருவரோடொருவர் கைகுலுக்குகிறோம். நீங்கள் விரும்பினால்... உங்கள் சகோதரனைக் கட்டித் தழுவி, அவரைக் கழுத்தின் பின்புறத்தில் முத்தமிடலாம். அல்லது அவர் உங்களை கழுத்தின் பின்புறத்தில் முத்தமிடலாம், அதில் தவறொன்று மில்லை. ஆனால் ஒரு ஸ்திரீயை முத்தமிடாதீர்கள். அவளும் உங்களை முத்தமிட அனுமதிக்காதீர்கள். பாருங்கள்? அது உண்மை! நீங்கள் அவள் கையைப் பிடித்து. “ஒரு நிமிடம் பொறு. சகோதரியே. ஒரு நிமிடம்; இதை நேராக்கிக் கொள்வோம்” என்று சொல்லுங்கள். எனவே அதை செய்யுங்கள்.
129. சற்று முன்பு, பிரசங்கத்தின் தொடக்கத்தில் நான் உங்களிடம் என்ன கூறினேன்? தொண்ணூறு மைல் வேகத்தில் ஒரு கார் சாலையின் வழியாக வருவதைக் காண்பீர்களானால், அதன் வழியிலிருந்து விலகுங்கள். அது உண்மை! நீங்கள் அப்படிப்பட்ட ஒரு சிறு மாற்றத்தை ஏதாகிலும் ஒன்றில் காணும்போது, அதிலிருந்து விலகுங்கள். அவ்விதமான தரையில் நீங்கள் இருக்கக் கூடாது. சாத்தான் உங்களுக்கு முன்பாக ஏதாவதொன்றைக் கொண்டுவந்து, அது உங்கள் ஆத்துமாவை சேதப்படுத்தி உங்களை நரகத்துக்கு அனுப்பி விடும். அதிலிருந்து விலகியிருங்கள்! பொல்லாங்கை கண்டால் அதைப் புறக்கணியுங்கள். அது உண்மை.
130. மனிதனாக இருங்கள், ஸ்திரீயாக இருங்கள்... ஒரு நிமிடம் நான் ஸ்திரீகளை ஆதரித்து பேசப் போகிறேன். அது வழக்கத்துக்கு மாறானது, இல்லையா? அவர்கள், “ஓ.. ஸ்திரீயே அதற்கு காரணம்! ஓ, அது ஸ்திரீயின் தவறு. அவள் தன் வழியை விட்டு விலகாமல் இருந்தால், மனிதனும் அவன் வழியை விட்டு விலகாமல் இருந்திருப்பான்' என்கின்றனர். அது உண்மை. அது உண்மையென்றே வைத்துக் கொள்வோம். அவள் தன் வழியை விட்டு விலகிவிட்டாள். ஒரு கெட்ட ஸ்திரீ இல்லாமல் போனால், மனிதன் கெட்டவனாக இருக்க முடியாது; ஆனால் கெட்ட மனிதன் இல்லாமல் ஒரு கெட்ட ஸ்திரீ இருக்க முடியாது என்பதை ஞாபகம் கொள்ளுங்கள். அது உண்மை!
131. தேவனுடைய புத்திரன் என்று உரிமை கோருபவனே, உன்னுடைய கொள்கைகள் எங்கே? ஒரு ஸ்திரீ தன் வழியை விட்டு விலகினாலும், நீ தேவனுடைய புத்திரன் அல்லவா? நீ அவளைக் காட்டிலும் உயர்ந்த, அதிக பெலமுள்ள பாண்டம் அல்லவா? அவளை பெலவீனமான பாண்டம் என்று வேதம் அழைக்கிறதே. அவள் பெலவீனமாயிருந்தால், உன்னை தேவனுடைய மனிதனாகக் காண்பி. அவளிடம், “சகோதரியே, நீ தவறாய் இருக்கிறாய்' என்று சொல். அது உண்மை! அவ்விதம் நான் செய்திருக்கிறேன், மற்ற கிறிஸ்தவர்களும் செய்துள்ளனர். நீ கிறிஸ்தவனாக இருக்கும் வரைக்கும் அவ்விதம் செய்வாய். உன்னைக் கிறிஸ்தவனாகக் காண்பி. நீ தேவனுடைய புத்திரன். உனக்கு ஸ்திரீயைக் காட்டிலும் உன் மேல் அதிக கட்டுப்படுத்தும் வல்லமை உள்ளது. அவள் பெலவீனமாயிருந்தால். அவள் பெலவீனமானவள் என்பதை அடையாளம் கண்டு கொள். அவளுடைய தவறுகளைப் புரிந்து கொள், அவளைத் திருத்த முயற்சி செய். அவளிடம், 'சகோதரியே, நாம் கிறிஸ்தவர்கள். நாம் அவ்விதம் செய்யக் கூடாது என்று சொல். பார்? உண்மையான ஒரு மனிதனாயிரு, தேவனுடைய புத்திரனாக இரு. ஸ்திரீகளை கவனி.
132. அங்கு தான் தொடக்கத்தில் பெரிய வீழ்ச்சி உண்டானது. அது சாத்தான் ஏவாளுடன் கூட. அதன் மூலமாகத் தான் மானிட வர்க்கம் முழுவதுமாக விழுந்து போனது.
133. நீ தேவனுடைய புத்திரனாயிருப்பாயானால், பெலமுள்ளவனாயிரு: உண்மையில் ஒரு மனிதனாயிரு. நீ அவ்விதம் இராமல் போனால், அவ்விதம் ஆகும் வரைக்கும் பலிபீடத்தில் தங்கியிரு. பொல்லாங்கு தோன்றும் போதே, அதை புறக்கணித்து விடும். இந்த விதமான வாழ்த்துதலை இப்பொழுது தொடங்காதே.
134. சில நாட்களுக்கு முன்பு யாரோ ஒருவர் என்னிடம், அவர்கள் இரண்டு மூன்று முறை இங்குள்ள என் சபையில் கண்டதாக... இந்த சபையில் உள்ளவர்கள் அல்ல, ஆனால் இந்த சபைக்கு வெளியிலிருந்து வந்த மக்கள் செய்வதை. இன்று காலை நீங்கள் இங்கு உட்கார்ந்திருக்க நேர்ந்தால், இதை உங்களுக்கு மிகவும் ஆழமாக பதிய வைக்கப் போகின்றேன். பாருங்கள்?
135. ஸ்திரீகள், வாலிப ஸ்திரீகள் வருவதும், இந்த மனிதர் இந்த ஸ்திரீகளை முத்தமிடுவதும். அவ்விதம் செய்யாதீர்கள்! அதிலிருந்து விலகியிருங்கள். இதை - ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்! அவள் வாலிபப் பெண்ணாக, விவாகமாகாதவளாக இருப்பாளானால், என்றாவது ஒரு நாள் அவள் யாரோ ஒருவரின் மனைவியாக இருப்பாள். அதைச் செய்ய உங்களுக்கு அதிகாரமே கிடையாது. அவளை விட்டு விலகியிருங்கள். அவளுக்கு வாழ்த்து கூற நீங்கள் விரும்பினால், ஒரு தேவனுடைய புத்திரனாக, அவளுடன் கைகுலுக்கி, “எப்படியிருக்கிறாய், சகோதரியே?” என்று கேளுங்கள். அத்துடன் அது முடிவு பெறட்டும். பாருங்கள்?
136. இத்தகைய காரியங்களிலிருந்து விலகியிருங்கள்; அது அசுத்தம்! அது விரைவில் உங்களைத் தொல்லையில் மாட்டி விடும். நீங்கள் சும்மா... ஓ. அது... பாவம் மிகவும் எளிதாகவும், பசியை உண்டு பண்ணுவதாகவும், இனிமையாகவும் உள்ளது. அதற்குள் விழுவது மிகவும் எளிது. செய்யக்கூடிய சிறந்த காரியம் என்னவெனில், அது தோன்றுவதைக் காணும்போதே, அதிலிருந்து விலகியிருத்தலே. திரும்பிப் போய் விடுங்கள். உண்மையான கிறிஸ்தவனாக இருங்கள்!
137. மனிதன் ஒருவரையொருவர் முத்தமிடும் விஷயத்தில், உங்கள் சகோதரனை நீங்கள் கழுத்தில் முத்தமிட்டால், அவ்விதம் செய்ய நீங்கள் விரும்பினால், அது சரியானது. ஆனால் எந்த மனிதனையும் உதடுகளில், வாயில், முத்தமிடாதீர்கள். அப்படி ஒன்றும் செய்து விடாதீர்கள். ஏனெனில் அது சரியல்ல. பாருங்கள்? தொடக்கத்திலேயே ஏதோ தவறுள்ளது என்பதை அது காண்பிக்கிறது. பாருங்கள்? எனவே அதிலிருந்து விலகியிருங்கள். அதைப் புறக்கணியுங்கள். அதை இங்குள்ள இந்த கூடாரத்தில் தொடங்கி விடாதீர்கள். வேண்டாம், அதை நாங்கள் நிச்சயமாக ஆதரிக்க முடியாது. பாருங்கள்?
138. உங்கள் சகோதரனை நீங்கள் காண விரும்பினால், அவரை கழுத்தில் முத்தமிட விரும்பினால், நல்லது. நீங்கள் முன்சென்று அதைச் செய்யுங்கள். ஆனால் ஜனங்களை வாயில் முத்தமிடாதீர்கள். ஏனெனில் அது கிரியை செய்யாது, அது சரியல்ல. அது ஒரு சீர்குலைதலைத் தொடங்குகிறது. அது ஓரினப் புணர்ச்சிக்காரர்களையும் அப்படிப்பட்ட காரியங்களையும் தோன்றச் செய்கிறது.
139. இப்படிப்பட்ட விஷயங்களைச் செய்யத் தூண்டுவது இரண்டு காரியங்களே... நீங்கள் தொடங்கினால்... அந்த மனிதன்... நான் கண்டிருக்கிறேன்... ஓ. பலமுறை, ஜனங்களின் மத்தியிலே. அவர்கள் வருவார்கள். சபைகளில் கண்டிருக்கிறேன். போதகர் வந்து ஒவ்வொரு சகோதரியிடமும் சென்று அவளைத் தழுவி முத்தமிட்டு அவளை உட்காரச் செய்வார். “எப்படியிருக்கிறாய். சகோதரியே, அல்லேலூயா! மற்றொரு சகோதரியிடம் சென்று அவளை முத்தம்மிடுவார். இப்படியாக சபை முழுவதிலும் சென்று செய்வார். என்னைப் பொறுத்த வரையில் அது தவறு!
140. நான் ஃபின்லாந்தில் இருந்த போது, நாங்கள் எல்லாரும் அங்கு சென்றிருந்தோம்... உங்களுக்கு அது ஒருவேளை தெரிந்திருக்கும், அங்கு நாங்கள் கூட்டங்கள் நடத்தினோம். நான் ஒய்.எம்.சி.ஏ.வுக்கு சென்றிருந்தேன். ஃபின்லாந்தில் சோப்புகள், டிடெர் ஜெண்டுகள் எதுவும் இருக்கவில்லை. என்னிடம் சவர சோப்பு இருந்தது. நாங்கள் ஒவ்வொருவரும் அங்கு நின்று கொண்டு, அந்த சவரசோப்பை உபயோகித்து குளிக்க வேண்டியதாயிற்று. எங்களிடம் ஒரு துண்டு சோப்பு மாத்திரமே இருந்தது. ஃபின்லாந்தில் சோப்புகள் கிடையாது. அவர்கள் ஏதோ ஒருவகை இரசாயனப் பொருளை உபயோகித்து குளிக்கிறார்கள். அது உங்கள் தோலை அரித்து விடுகிறது.
141. எனவே அவர்கள். அவர்கள் எங்களை ஃபின்லாந்து தேசத்து 'சானா' குளியலுக்கு கொண்டு போகப் போவதாக கூறினார்கள். நாங்கள் ஒய்.எம்.சி.ஏ.வுக்குச் சென்றோம். 'சானா' குளியலுக்காக அங்கு சென்றோம். அது பிரபலம் வாய்ந்த ஃபின்லாந்து தேசத்து 'சானா'. இதற்கு முன்பு நான் 'சானா' குளியலை எடுத்திருக்கிறேன். அது நன்றாயிருந்தது. நான், 'நல்லது. நாம் ஒய்.எம்.சி.ஏ.வுக்குப் போகப் போகிறோம். அது நன்றாயிருக்கும்” என்று எண்ணினேன்.
142. ஆனால் அங்கு போக நான் புறப்பட்ட போது, பரிசுத்த ஆவியானவர் என்னிடம், “அப்படிச் செய்யாதே (ஓ, பரிசுத்த ஆவியைப் பெற்றுள்ளது மிகவும் நல்லது), அப்படிச் செய்யாதே என்றார்.
நல்லது. நான் உடனே, “இன்று காலை எனக்கு குளியல் அவசியமில்லை என்று நினைக்கிறேன் என்று சொன்னேன்.
டாக்டர் மானியனும் மற்றவர்களும், “ஓ, சகோ. பிரன்ஹாமே, என்னே, அங்கே சில பெரிய கண்ணாடி அறைகள் உள்ளன. அது மிகவும் அழகானது' என்றனர்.
வழக்கமாக அவர்கள் என்ன செய்வார்கள் என்றால், அவர்கள் இந்த தண்ணீரை அந்த பாறைகளின் மேல் ஊற்றி அதை ஆவியாக மாற்றி, உங்களை 'பிர்ச் (birch) மரத்தின் இலைகளால் இப்படி அடிப்பார்கள். அதன் பிறகு நீங்கள் வெளியே ஓடி குளிர்ந்த தண்ணீரில் குதிக்க வேண்டும். ஃபின்லாந்து நாட்டினர் பனிக்கட்டி போன்றவைகளுக்குள் செல்கின்றனர்.
(ஒலிநாடாவில் முதலாம் பக்கம் முடிந்து இரண்டாம் பக்கம் தொடர்ச்சி இல்லாமல் தொடங்குகிறது - ஆசி).
...நியாயத்தீர்ப்படையாமல், மரணத்திலிருந்து ஜீவனுக்குள் பிரவேசிக்கிறான்.
நான், “அதை நான் சொல்லவில்லை. அதை இயேசு கிறிஸ்து உரைத்தார்' என்றேன்.
அவர், “அப்படியானால் உங்களை ஒன்று கேட்க விரும்புகிறேன். சவுல் இரட்சிக்கப்பட்டான் என்று நீங்கள் நம்புகிறீர்களா?” என்று கேட்டார்.
நான், “சவுல் ராஜாவா? என்று கேட்டேன். அவர் “ஆம்” என்றார்.
143. நான், “நிச்சயமாக” என்றேன்.
அவர். “இப்பொழுது ஞாபகம் கொள்ளுங்கள், அவன் ஒரு தீர்க்கதரிசி” என்றார்.
144. நான், “அது சரியே. அவன் தீர்க்கதரிசிகளுடன் சேர்ந்து தீர்க்கதரிசனம் உரைத்ததாக வேதம் கூறுகிறது (அவனுக்கு தீர்க்கதரிசன வரம் இருந்தது. அவன் ஒரு தீர்க்கதரிசியல்ல, ஆனால் அவனுக்கு தீர்க்கதரிசன வரம் இருந்தது. தீர்க்கதரிசிகள் தீர்க்கதரிசனம் உரைத்துக் கொண்டிருந்தபோது இவன் அவர்களுடன் இருந்தான். ஆனால் சாமுவேல் அக்காலத்தில் தீர்க்கதரிசியாக இருந்தான் என்று நாமறிவோம். எனவே...) சவுல் தீர்க்கதரிசிகளுடன் சேர்ந்து தீர்க்கதரிசனம் உரைத்தான்” என்றேன்.
அவர், “அவன் தீர்க்கதரிசியாயிருந்ததால், அவன் இரட்சிக்கப்பட்டானா?” என்று கேட்டார்.
நான், “நிச்சயமாக” என்றேன்.
அவர், “அப்படியானால் உங்களை ஒன்று கேட்க விரும்புகிறேன். சவுல் இரட்சிக்கப்பட்டான் என்று நீங்கள் கூறுகிறீர்கள். ஆனால் வேதமோ, கர்த்தர் அவனை விட்டுப் போய் விட்டதாகவும், அவன் தேவனுக்கு சத்துருவானான் என்றும், அவன் தற்கொலை செய்து கொண்டான் என்றும் உரைக்கிறதே! அவன் இரட்சிக்கப்பட்டான் என்று எவ்விதம் கூற முடியும்?' என்றார்.
145. நான், “நீர் அடிப்படைக் கொள்கைக்காரரா (fundamentalist)? சகோதரனே, அதை நீர் சரியாக வாசிக்கவில்லை; அவ்வளவு தான். வேதம் கூறுவதை நீர் வாசிக்கவில்லை' என்றேன்.
அவர், “நல்லது. அவன் தேவனுடைய சத்துருவான பிறகு இரட்சிக்கப்பட முடியாது” என்றார்.
நான், “சவுல் இரட்சிக்கப்பட்டான் என்றேன்.
அவர், “ஓ!” என்றார்.
146 நான், “அவன் தீர்க்கதரிசியாயிருந்தால், அவன் இரட்சிக்கப்பட வேண்டும். பாருங்கள்? தேவன் அவனை இரட்சித்தார். நாம் வழக்கமாக கூறுவது போல, தேவன் சிகப்பு இந்தியர் கொடுப்பது போல் கொடுப்பவர் அல்ல. அவர் அவ்விதம் செய்வதில்லை... நல்லது. உங்களை அவர் இழக்கப் போகிறார் என்று அறிந்து கொண்டே தேவன் உங்களுக்கு பரிசுத்த ஆவியைக் கொடுப்பாரானால், பரிசுத்த ஆவியை அவர் முதற்கண் கொடுத்ததே எத்தகைய மூடச் செயலாயிருக்கும்!” என்றேன்.
147. நீங்கள் பரிசுத்த ஆவியைப் பாவனை செய்து, பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டது போல் நடிக்கலாம். ஆனால் நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றிருப்பீர்களானால், தேவன் உங்கள் ஆதி முதல் அந்தம் வரைக்கும் அறிந்திருக்கிறார். அது உண்மை! அது வியாபாரத்தை தளர்ந்த முறையில் நடத்துவது போலிருக்கும். தேவன் அவ்விதம் நடத்துபவரல்ல. அவர் முடிவற்றவர். அவர் தொடக்கம் முதல் முடிவு வரைக்கும் எல்லாவற்றையும் அறிந்திருப்பவர். இங்கு என்னென்ன இருக்கும் என்பதை முன்கூட்டியே அறிந்தவர். பூமியில் இருக்கப் போகின்ற ஒவ்வொரு மலரையும், ஒவ்வொரு சிறு பூச்சியையும், உலகத் தோற்றத்துக்கு முன்பே அவர் அறிந்திருந்தார். எனவே பாருங்கள், அவருடைய அலுவலை அவர் ஏன் அவ்விதம் நடத்த வேண்டும்? அவர் அவ்விதம் செய்வதில்லை.
148. நீங்கள் கவனிப்பீர்களானால், நீங்கள் நித்தியமாக இரட்சிக்கப்பட்டு விட்டீர்கள். அதை நான் வேதவாக்கியங்களைக் கொண்டு நிரூபிக்க முடியும். நாம் அதை எத்தனையோ முறை செய்திருக்கிறோம். ஆனால் மற்ற கேள்விகளுக்கு பதிலளிக்க நாம் நேரத்தை மிச்சப்படுத்தும் வகையில், இதை மட்டும் கூற விரும்புகிறேன். அந்த ஆள் என்னிடம், “நல்லது, சவுலைக் குறித்து என்ன சொல்கிறீர்கள்?” என்றார்.
149. நான், 'நிச்சயமாக சவுல் இரட்சிக்கப்பட்டான்” என்றேன். நான் தொடர்ந்து, சவுல் பின்மாற்றமடைந்தான் என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன். அவன் பின் மாற்றமடைந்து தேவனை விட்டு விலகிப் போனான். ஏனெனில் அவன் பேராசை பிடித்தவன். அவனுக்கு பண ஆசை இருந்தது என்றேன். எல்லாவற்றையும் அழித்துப் போட வேண்டும் என்று சாமுவேல் தேவனுடைய வார்த்தையைக் கொண்டு அவனை எச்சரித்திருந்த போதிலும், அவன் பலிகளைக் கொண்டு வந்தான். அவன் ராஜாவையும் கூட காப்பாற்றினான், அவன் நிறைய பொருட்களை அழிக்காமல் கொண்டு வந்தான். ஏனெனில் பாருங்கள்? தேவனுடைய வார்த்தை உரைக்கிறபடியே, அதை பின்பற்றுவதற்கு பதிலாக, உங்கள் சொந்த கருத்துக்களை அதில் நுழைத்து விடுகிறீர்கள். அங்கு தான் நீங்கள் பின்மாற்றமடைகிறீர்கள்.
150. ஸ்தாபனங்களையும் மற்றவைகளையும் குறித்து நான் கொண்டுள்ள கருத்து அதுவே அவர்கள் வார்த்தையைப் பின் பற்றாத காரணத்தால் பின் மாற்றமடைகின்றனர். நீங்கள் வார்த்தையை அவர்களுக்கு எடுத்துக் காண்பித்தால், அவர்கள் அதற்கு புற முதுகு காட்டி, “ஓ, எங்கள் சபை இதை தான் போதிக்கிறது” என்கின்றனர். அது சரியல்ல, தேவன் உரைத்துள்ளதே முக்கியம் வாய்ந்தது.
151. சாமுவேல், இல்லை சவுல், அங்கு சென்று எல்லாவற்றையும் முழுவதுமாக அழித்துப் போடும்படிக்கு கட்டளை பெற்றான். அதை செய்வதற்கு பதிலாக அவன் பலிக்காக சிலவற்றை சேகரித்தான், அவன் ராஜாவின் உயிரையும் காப்பாற்றினான், எல்லாவற்றையும் செய்தான். சாமுவேல் அவனிடம் நடந்து சென்று, தேவனுடைய ஆவி அவனை விட்டுப் போய் விட்டதாகக் கூறினான் - அப்படி எல்லாமே.
152. சாமுவேல் மரித்தான். இரண்டு ஆண்டுகள் கழித்து சவுலுக்கு... தேவனுடைய ஆவி அவனை விட்டுப்போய் விட்டது, ஆனால் அவன் இழக்கப்படவில்லை. நிச்சயமாக இழக்கப்படவில்லை, அபிஷேகம் அவனை விட்டுப் போய் விட்டது. இப்பொழுது கவனியுங்கள், என்ன நடந்ததென்று. –
153. சவுல், வெகு தூரம் கர்த்தரை விட்டு விலகிப் போன பிறகு, அவன் யுத்தத்துக்கு சென்றான். அவன் யுத்தத்துக்கு செல்ல ஆயத்தமானான். யுத்தத்துக்கு செல்வதைக் குறித்து அவன் கவலை கொண்டான். அவன் கர்த்தரிடத்தில் ஒரு சொப்பனம் தரும்படி கேட்டான். கர்த்தர் அவனுக்கு எந்த சொப்பனமும் அருளவில்லை. அந்நாட்களில் தேசத்தில் தீர்க்கதரிசிகள் எவரும் இருக்கவில்லை. சாமுவேல் ஒரு தீர்க்கதரிசியாயிருந்தான். தீர்க்கதரிசனம் உரைப்பவர்கள் அவர்களுக்கு இருந்தனர். ஆனால் தேவனிடத்திலிருந்து பதில் கிடைக்க அவர்களுக்கு எந்த வழியும் இருக்கவில்லை. அவன் ஊரிம் தும்மீமிடத்திற்கும் சென்று அங்கு கேட்டான். ஊரிம் தும்மிமின் மின்னல் பிரகாசம் கூட அவனுக்கு பதிலளிக்கவில்லை. அவன் என்ன செய்தான்? அவன் ஒரு குகைக்குள் ஊர்ந்து சென்றான். அங்கே அஞ்சனம் பார்க்கிற ஒரு ஸ்திரீ இருந்தாள், குறி சொல்லும் ஒருத்தி. அஞ்சனம் பார்க்கிற இவள்... அவன் வேலைக்காரனைப் போல வேஷம் மாறி அவளிடம் சென்று, “நீ தீர்க்கதரிசியாகிய சாமுவேலின் ஆவியுடன் எனக்காக தொடர்பு கொள்வாயா? என்று கேட்டான்.
அவள், “நல்லது, சவுல் என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா?” (அவள் சவுலிடம் பேசிக் கொண்டிருந்தாள். ஆனால் அவள் அதை அறிந்திருக்கவில்லை) “அவர் அஞ்சனம் பார்க்கிறவர்களையும் குறி சொல்லுகிறவர்களையும் கொன்று போடுவதாக சொல்லியிருக்கிறாரே” என்றாள்.
அவன், “நான் சவுலிடமிருந்து உன்னைக் காப்பாற்றுவேன். நீ. எனக்காக சாமுவேலின் ஆவியுடன் தொடர்பு கொள்” என்றான்.
எனவே அஞ்சனம் பார்க்கிற அந்த ஸ்திரீ தன் மந்திர சக்தியால் செயல்படத் தொடங்கினாள். முதலாவதாக என்ன தெரியுமா, சாமுவேல் எழும்பி வருவதை, அவனுடைய ஆவி வந்து, அவர்களுக்கு முன்பாக காணக்கூடிய ரூபமாக ஆனதை அவள் கண்டபோது, அவள், “தேவர்கள் பூமிக்குள்ளிருந்து ஏறி வருவதைக் காண்கிறேன்” என்றாள்.
154. அது ஆறுதலாக இருந்தது. வயோதிப சாமுவேல் அங்கு நின்று கொண்டிருப்பதைப் பாருங்கள். அவன் மரித்து இரண்டு ஆண்டுகளாயின. ஆனால் அவன் நின்றுகொண்டிருந்தான். அது மாத்திரமல்ல... அவன் தன் தீர்க்கதரிசியின் அங்கியுடன் அங்கு நின்று கொண்டிருந்தான். அவன் உயிரோடிருந்தது மாத்திரமல்ல, அவன் அப்பொழுதும் ஒரு தீர்க்கதரிசியாயிருந்தான். அல்லேலூயா!
அவள், சவுலிடம், “நீர் என்னை ஏமாற்றி விட்டீர்” என்றாள்.
சவுல்,” சாமுவேலே, எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை; நான் நாளைக்கு யுத்தத்துக்குப் போகிறேன், கர்த்தருடைய ஆவி என்னை விட்டுப் போய்விட்டது. எனக்கு கர்த்தரிடத்திலிருந்து ஒரு சொப்பனம் கூட கிடைக்கவில்லை. ஊரிம் தும்மீமும் கூட என்னிடம் பேச மறுக்கின்றன. நான் பயங்கரமான நிலையில் இருக்கிறேன் என்றான். –
155. சாமுவேல் சவுலிடம், “நீ தேவனுக்கு சத்துருவாய் இருக்க, என்னை ஏன் என் இளைப்பாறுதலிலிருந்து வெளியே அழைத்தாய்?” பாருங்கள்? சாமுவேல் அவ்விதம் கூறினான். அவன் தொடர்ந்து மற்றவைகளைக் கூறினான். அவன் சொன்னான். எவ்வாறாயினும், அவன் கர்த்தருடைய வார்த்தையை அவனுக்கு உரைத்தான். அவன் அவ்விதம் செய்தபோது... ஞாபகம் கொள்ளுங்கள், அவன் மரித்து இரண்டு ஆண்டுகளாகி விட்டன. பாருங்கள்? ஆனால் அவன், “நான் வார்த்தையை உரைக்கிறேன் என்றான். அவன் அவனிடம் கர்த்தருடைய வார்த்தையை உரைத்தான். அவன், “நாளைக்கு நீ யுத்தத்தில் மடியப் போகிறாய், உன் குமாரனாகிய யோனத்தானும் உன்னுடன் மடியப் போகிறான். நாளை இரவு இந்நேரம் நீ என்னோடிருப்பாய்” என்றான். அவன் இழக்கப்பட்டிருந்தால், தீர்க்கதரிசியாகிய சாமுவேலும் இழக்கப்பட்டிருக்க வேண்டும். அது அடிப்படை கொள்கை (fundamentalism); அது ஏன் அவ்விதம் அழைக்கப்படுகிறதென்று காண்கிறீர்களா? பாருங்கள், பாருங்கள்? அவன், “நாளை இரவு இந்நேரம் நீ என்னோடிருப்பாய்” என்றான். பாருங்கள்? சவுல் இழக்கப்பட்டிருந்தால், சாமுவேலும் இழக்கப் பட்டிருக்க வேண்டும். ஏனெனில் இருவருமே ஒரே இடத்தில் இருந்தனர்.
156. இல்லை, இல்லை! அடிப்படை கொள்கைக்காரரே, நீங்கள்... அடிப்படை கொள்கைக்காரர் என்று அழைக்கப்படுபவரே, கிறிஸ்தவ சபை என்று அழைக்கப்படுபவரே. கிறிஸ்தவர் என்று அழைக்கப்படுபவரே - கிறிஸ்தவ மார்க்கம் என்று அழைக்கப்படுவது. இன்றைக்கு நீ அமெரிக் கனாயிருப்பதால் நீ கிறிஸ்தவன் என்று கருதப்படுகிறாய். பார்? அது கிறிஸ்தவ மார்க்கம் என்று அழைக்கப்படுவது. ஆனால் ஒரு உண்மையான கிறிஸ்தவர் என்னப்படுபவர் ஆவியினால் மறுபடியும் பிறந்த ஆணும் பெண்ணுமாவர். அதுவே உண்மையில் மற்ற இவர்கள் பாவனை செய்பவர்கள், ஆனால் உண்மை கிறிஸ்தவர்கள் தேவனால் அழைக்கப்பட்டவர்கள்.