இந்த இரண்டு குழுக்களும் காப்பாற்றப்பட்டதா? இப்போது, எனக்குத் தெரியாது. பார், எனக்கு எப்படி பதில் சொல்வது என்று தெரியவில்லை. இப்போது, இந்தக் குழுக்கள் காப்பாற்றப்பட்டதா? எனக்கு தெரியாது. ஆவிக்கு இடையிலான வேறுபாட்டை விளக்குங்கள். . . . என்பது இப்போது வேறு கேள்வி. இந்த இரண்டு குழுக்களும் காப்பாற்றப்பட்டதா? நான் அதை உங்களுக்கு இன்னும் கொஞ்சம் புத்திசாலித்தனமாகச் சொல்கிறேன், எனக்குத் தெரியாது என்று சொல்கிறேன். எனக்கு தெரியாது. இப்போது, நினைவில் கொள்ளுங்கள், இதோ என் எண்ணங்கள். அது தவறாக இருக்கலாம். ஒரு ரோமன் கத்தோலிக்கராகவோ அல்லது அவர் யாராக இருந்தாலும், மெதடிஸ்ட், பிரஸ்பைடிரியன், சர்ச் ஆஃப் கிறிஸ்து, லூத்தரன், எதுவாக இருந்தாலும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை நம்பி, அவருடைய இரட்சிப்புக்காக அவரை உறுதியாக நம்பினால், அவர் இரட்சிக்கப்பட்டார் என்று நான் நம்புகிறேன். ஆனால் ரோமன் கத்தோலிக்க திருச்சபை அதைச் செய்வதில்லை. தேவாலயம் அவர்களைக் காப்பாற்றுகிறது என்று அவர்கள் நம்புகிறார்கள், பாருங்கள். அவர்களின் இரட்சிப்பு தேவாலயத்தில் உள்ளது. இந்த பாதிரியார் சில காலத்திற்கு முன்பு இங்கே காற்றை நிறுத்தியது போல் வேறு இரட்சிப்பு இல்லை [டேப்பில் உடை] கிறிஸ்து, அது சரி. சபையால் அல்ல, கிறிஸ்துவால்.இப்போது, இந்த அப்போஸ்தலர்கள் மற்றும் அடிப்படைவாதிகள் என்றால், இப்போது, தங்களை அழைக்கிறார்கள். . .
இப்போது, ஒரு அடிப்படைவாதியைப் போல, சிறிது காலத்திற்கு முன்பு என்னிடம் வந்து, அவர் என்னிடம், “நீ ஒருவித மெலிந்த கால்வினிஸ்ட், இல்லையா?” என்றார்.நான், “கால்வின் பைபிளில் இருக்கும் வரை நான் அவருடன் இருக்கிறேன்” என்றேன். நான் சொன்னேன், “நான் பைபிளுடன் செல்கிறேன், கால்வின் பைபிளில் இருந்தால்; ஆனால் அவர் பைபிளை விட்டு வெளியேறினால், நான் பைபிளை நம்புகிறேன்.அவர் சொன்னார், ”சரி,“ அவர் கூறினார், ”நான் உங்களிடம் ஒன்று சொல்ல விரும்புகிறேன். ஒரு மனிதன் ஒரு முறை இரட்சிக்கப்பட்டால், அவன் ஒருபோதும் இழக்கப்படமாட்டான் என்று நீங்கள் சொல்வதை நான் கேள்விப்பட்டிருக்கிறேன் என்று நீங்கள் சொன்னீர்கள்.
நான் சொன்னேன், “அவர் நித்திய ஜீவனைக் கொண்டிருக்கிறார், அவர் ஒருபோதும் ஆக்கினைக்குள்ளாகவோ அல்லது நியாயத்தீர்ப்புக்குள் வரமாட்டார், ஆனால் ஏற்கனவே மரணத்திலிருந்து ஜீவனுக்குக் கடந்துவிட்டார்” என்று வேதம் கூறுகிறது. “நான் சொன்னேன், ”அது நான் அல்ல. அதைத்தான் இயேசு கிறிஸ்து சொன்னார்.“அதற்கு அவர், ”நான் உங்களிடம் ஒன்று கேட்க விரும்புகிறேன்“ என்றார். ”சவுல் இரட்சிக்கப்பட்டார் என்று நீங்கள் நம்புகிறீர்களா?“நான், ”சவுலே, ராஜா சவுலா?“ என்றேன்.அவர், ”ஆம்“ என்றார்.”ஏன்,“ நான் சொன்னேன், ”நிச்சயம்.“
143.நான், “நிச்சயமாக” என்றேன்.
அவர். “இப்பொழுது ஞாபகம் கொள்ளுங்கள், அவன் ஒரு தீர்க்கதரிசி” என்றார்.
144.நான், “அது சரியே. அவன் தீர்க்கதரிசிகளுடன் சேர்ந்து தீர்க்கதரிசனம் உரைத்ததாக வேதம் கூறுகிறது (அவனுக்கு தீர்க்கதரிசன வரம் இருந்தது. அவன் ஒரு தீர்க்கதரிசியல்ல, ஆனால் அவனுக்கு தீர்க்கதரிசன வரம் இருந்தது. தீர்க்கதரிசிகள் தீர்க்கதரிசனம் உரைத்துக் கொண்டிருந்தபோது இவன் அவர்களுடன் இருந்தான். ஆனால் சாமுவேல் அக்காலத்தில் தீர்க்கதரிசியாக இருந்தான் என்று நாமறிவோம். எனவே ...) சவுல் தீர்க்கதரிசிகளுடன் சேர்ந்து தீர்க்கதரிசனம் உரைத்தான்” என்றேன். அவர், “அவன் தீர்க்கதரிசியாயிருந்ததால், அவன் இரட்சிக்கப்பட்டானா?” என்று கேட்டார்.
நான், “நிச்சயமாக” என்றேன்.
அவர், “அப்படியானால் உங்களை ஒன்று கேட்க விரும்புகிறேன். சவுல் இரட்சிக்கப்பட்டான் என்று நீங்கள் கூறுகிறீர்கள். ஆனால் வேதமோ, கர்த்தர் அவனை விட்டுப் போய் விட்டதாகவும், அவன் தேவனுக்கு சத்துருவானான் என்றும், அவன் தற்கொலை செய்து கொண்டான் என்றும் உரைக்கிறதே! அவன் இரட்சிக்கப் பட்டான் என்று எவ்விதம் கூற முடியும்?' என்றார்.
145.நான், “நீர் அடிப்படைக் கொள்கைக்காரரா (fundamentalist)? சகோதரனே, அதை நீர் சரியாக வாசிக்கவில்லை; அவ்வளவு தான். வேதம் கூறுவதை நீர் வாசிக்கவில்லை' என்றேன்.
அவர், “நல்லது. அவன் தேவனுடைய சத்துருவான பிறகு இரட்சிக்கப்பட முடியாது” என்றார்.
நான், “சவுல் இரட்சிக்கப்பட்டான் என்றேன்.
அவர், “ஓ!” என்றார்.
146.நான், “அவன் தீர்க்கதரிசியாயிருந்தால், அவன் இரட்சிக்கப்பட வேண்டும். பாருங்கள்? தேவன் அவனை இரட்சித்தார். நாம் வழக்கமாக கூறுவது போல, தேவன் சிகப்பு இந்தியர் கொடுப்பது போல் கொடுப்பவர் அல்ல. அவர் அவ்விதம் செய்வதில்லை... நல்லது. உங்களை அவர் இழக்கப் போகிறார் என்று அறிந்து கொண்டே தேவன் உங்களுக்கு பரிசுத்த ஆவியைக் கொடுப்பாரானால், பரிசுத்த ஆவியை அவர் முதற்கண் கொடுத்ததே எத்தகைய மூடச் செயலாயிருக்கும்!” என்றேன்.
147.நீங்கள் பரிசுத்த ஆவியைப் பாவனை செய்து, பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டது போல் நடிக்கலாம். ஆனால் நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றிருப்பீர்களானால், தேவன் உங்கள் ஆதி முதல் அந்தம் வரைக்கும் அறிந்திருக்கிறார். அது உண்மை! அது வியாபாரத்தை தளர்ந்த முறையில் நடத்துவது போலிருக்கும். தேவன் அவ்விதம் நடத்துபவரல்ல. அவர் முடிவற்றவர். அவர் தொடக்கம் முதல் முடிவு வரைக்கும் எல்லாவற்றையும் அறிந்திருப்பவர். இங்கு என்னென்ன இருக்கும் என்பதை முன்கூட்டியே அறிந்தவர். பூமியில் இருக்கப் போகின்ற ஒவ்வொரு மலரையும், ஒவ்வொரு சிறு பூச்சியையும், உலகத் தோற்றத்துக்கு முன்பே அவர் அறிந்திருந்தார். எனவே பாருங்கள்,
148.அவருடைய அலுவலை அவர் ஏன் அவ்விதம் நடத்த வேண்டும்? அவர் அவ்விதம் செய்வதில்லை. நீங்கள் கவனிப்பீர்களானால், நீங்கள் நித்தியமாக இரட்சிக்கப்பட்டு விட்டீர்கள். அதை நான் வேதவாக்கியங்களைக் கொண்டு நிரூபிக்க முடியும். நாம் அதை எத்தனையோ முறை செய்திருக்கிறோம். ஆனால் மற்ற கேள்விகளுக்கு பதிலளிக்க நாம் நேரத்தை மிச்சப்படுத்தும் வகையில், இதை மட்டும் கூற விரும்புகிறேன். அந்த ஆள் என்னிடம், “நல்லது, சவுலைக் குறித்து என்ன சொல்கிறீர்கள்?” என்றார்.
149.நான், 'நிச்சயமாக சவுல் இரட்சிக்கப்பட்டான்“ என்றேன். நான் தொடர்ந்து, சவுல் பின்மாற்றமடைந்தான் என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன். அவன் பின் மாற்றமடைந்து தேவனை விட்டு விலகிப் போனான். ஏனெனில் அவன் பேராசை பிடித்தவன். அவனுக்கு பண ஆசை இருந்தது என்றேன். எல்லாவற்றையும் அழித்துப் போட வேண்டும் என்று சாமுவேல் தேவனுடைய வார்த்தையைக் கொண்டு அவனை எச்சரித்திருந்த போதிலும், அவன் பலிகளைக் கொண்டு வந்தான். அவன் ராஜாவையும் கூட காப்பாற்றினான், அவன் நிறைய பொருட்களை அழிக்காமல் கொண்டு வந்தான். ஏனெனில் பாருங்கள்? தேவனுடைய வார்த்தை உரைக்கிறபடியே, அதை பின்பற்றுவதற்கு பதிலாக, உங்கள் சொந்த கருத்துக்களை அதில் நுழைத்து விடுகிறீர்கள். அங்கு தான் நீங்கள் பின்மாற்றமடைகிறீர்கள்.
150.ஸ்தாபனங்களையும் மற்றவைகளையும் குறித்து நான் கொண்டுள்ள கருத்து அதுவே அவர்கள் வார்த்தையைப் பின் பற்றாத காரணத்தால் பின் மாற்றமடைகின்றனர். நீங்கள் வார்த்தையை அவர்களுக்கு எடுத்துக் காண்பித்தால், அவர்கள் அதற்கு புற முதுகு காட்டி, “ஓ, எங்கள் சபை இதை தான் போதிக்கிறது” என்கின்றனர். அது சரியல்ல, தேவன் உரைத்துள்ளதே முக்கியம் வாய்ந்தது.
151.சாமுவேல், இல்லை சவுல், அங்கு சென்று எல்லாவற்றையும் முழுவதுமாக அழித்துப் போடும்படிக்கு கட்டளை பெற்றான். அதை செய்வதற்கு பதிலாக அவன் பலிக்காக சிலவற்றை சேகரித்தான், அவன் ராஜாவின் உயிரையும் காப்பாற்றினான், எல்லாவற்றையும் செய்தான். சாமுவேல் அவனிடம் நடந்து சென்று, தேவனுடைய ஆவி அவனை விட்டுப் போய் விட்டதாகக் கூறினான் - அப்படி எல்லாமே.
152. சாமுவேல் மரித்தான். இரண்டு ஆண்டுகள் கழித்து சவுலுக்கு... தேவனுடைய ஆவி அவனை விட்டுப்போய் விட்டது, ஆனால் அவன் இழக்கப்படவில்லை. நிச்சயமாக இழக்கப்படவில்லை, அபிஷேகம் அவனை விட்டுப் போய் விட்டது. இப்பொழுது கவனியுங்கள், என்ன நடந்ததென்று.
153.சவுல், வெகு தூரம் கர்த்தரை விட்டு விலகிப் போன பிறகு, அவன் யுத்தத்துக்கு சென்றான். அவன் யுத்தத்துக்கு செல்ல ஆயத்தமானான். யுத்தத்துக்கு செல்வதைக் குறித்து அவன் கவலை கொண்டான். அவன் கர்த்தரிடத்தில் ஒரு சொப்பனம் தரும்படி கேட்டான். கர்த்தர் அவனுக்கு எந்த சொப்பனமும் அருளவில்லை. அந்நாட்களில் தேசத்தில் தீர்க்கதரிசிகள் எவரும் இருக்கவில்லை. சாமுவேல் ஒரு தீர்க்கதரிசியாயிருந்தான். தீர்க்கதரிசனம் உரைப்பவர்கள் அவர்களுக்கு இருந்தனர். ஆனால் தேவனிடத்திலிருந்து பதில் கிடைக்க அவர்களுக்கு எந்த வழியும் இருக்கவில்லை. அவன் ஊரிம் தும்மீமிடத்திற்கும் சென்று அங்கு கேட்டான். ஊரிம் தும்மிமின் மின்னல் பிரகாசம் கூட அவனுக்கு பதிலளிக்கவில்லை. அவன் என்ன செய்தான்? அவன் ஒரு குகைக்குள் ஊர்ந்து சென்றான். அங்கே அஞ்சனம் பார்க்கிற ஒரு ஸ்திரீ இருந்தாள், குறி சொல்லும் ஒருத்தி. அஞ்சனம் பார்க்கிற இவள்.... அவன் வேலைக்காரனைப் போல வேஷம் மாறி அவளிடம் சென்று, “நீ தீர்க்கதரிசியாகிய சாமுவேலின் ஆவியுடன் எனக்காக தொடர்பு கொள்வாயா? என்று கேட்டான்.
அவள், “நல்லது, சவுல் என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா?” (அவள் சவுலிடம் பேசிக் கொண்டிருந்தாள். ஆனால் அவள் அதை அறிந்திருக்கவில்லை) “அவர் அஞ்சனம் பார்க்கிறவர்களையும் குறி சொல்லுகிறவர்களையும் கொன்று போடுவதாக சொல்லியிருக்கிறாரே” என்றாள்.
அவன், “நான் சவுலிடமிருந்து உன்னைக் காப்பாற்றுவேன். நீ. எனக்காக சாமுவேலின் ஆவியுடன் தொடர்பு கொள்” என்றான். எனவே அஞ்சனம் பார்க்கிற அந்த ஸ்திரீ தன் மந்திர சக்தியால் செயல்படத் தொடங்கினாள். முதலாவதாக என்ன தெரியுமா, சாமுவேல் எழும்பி வருவதை, அவனுடைய ஆவி வந்து, அவர்களுக்கு முன்பாக காணக்கூடிய ரூபமாக ஆனதை அவள் கண்டபோது, அவள், “தேவர்கள் பூமிக்குள்ளிருந்து ஏறி வருவதைக் காண்கிறேன்” என்றாள்.
154.அது ஆறுதலாக இருந்தது. வயோதிப சாமுவேல் அங்கு நின்று கொண்டிருப்பதைப் பாருங்கள். அவன் மரித்து இரண்டு ஆண்டுகளாயின. ஆனால் அவன் நின்றுகொண்டிருந்தான். அது மாத்திரமல்ல... அவன் தன் தீர்க்கதரிசியின் அங்கியுடன் அங்கு நின்று கொண்டிருந்தான். அவன் உயிரோடிருந்தது மாத்திரமல்ல, அவன் அப்பொழுதும் ஒரு தீர்க்கதரிசியாயிருந்தான். அல்லேலூயா! அவள், சவுலிடம், “நீர் என்னை ஏமாற்றி விட்டீர்” என்றாள்.
சவுல்,“ சாமுவேலே, எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை; நான் நாளைக்கு யுத்தத்துக்குப் போகிறேன் , கர்த்தருடைய ஆவி என்னை விட்டுப் போய்விட்டது. எனக்கு கர்த்தரிடத்திலிருந்து ஒரு சொப்பனம் கூட கிடைக்கவில்லை. ஊரிம் தும்மீமும் கூட என்னிடம் பேச மறுக்கின்றன. நான் பயங்கரமான நிலையில் இருக்கிறேன் என்றான்.
155.சாமுவேல் சவுலிடம், “நீ தேவனுக்கு சத்துருவாய் இருக்க, என்னை ஏன் என் இளைப்பாறுதலிலிருந்து வெளியே அழைத்தாய்?” பாருங்கள்? சாமுவேல் அவ்விதம் கூறினான். அவன் தொடர்ந்து மற்றவைகளைக் கூறினான். அவன் சொன்னான். எவ்வாறாயினும், அவன் கர்த்தருடைய வார்த்தையை அவனுக்கு உரைத்தான். அவன் அவ்விதம் செய்தபோது... ஞாபகம் கொள்ளுங்கள், அவன் மரித்து இரண்டு ஆண்டுகளாகி விட்டன. பாருங்கள்? ஆனால் அவன், “நான் வார்த்தையை உரைக்கிறேன் என்றான். அவன் அவனிடம் கர்த்தருடைய வார்த்தையை உரைத்தான். அவன், ”நாளைக்கு நீ யுத்தத்தில் மடியப் போகிறாய், உன் குமாரனாகிய யோனத்தானும் உன்னுடன் மடியப் போகிறான். நாளை இரவு இந்நேரம் நீ என்னோடிருப்பாய்“ என்றான். அவன் இழக்கப்பட்டிருந்தால், தீர்க்கதரிசியாகிய சாமுவேலும் இழக்கப்பட்டிருக்க வேண்டும். அது அடிப்படை கொள்கை (fundamentalism); அது ஏன் அவ்விதம் அழைக்கப்படுகிறதென்று காண்கிறீர்களா? பாருங்கள், பாருங்கள்? அவன், ”நாளை இரவு இந்நேரம் நீ என்னோடிருப்பாய்“ என்றான். பாருங்கள்? சவுல் இழக்கப்பட்டிருந்தால், சாமுவேலும் இழக்கப் பட்டிருக்க வேண்டும். ஏனெனில் இருவருமே ஒரே இடத்தில் இருந்தனர்.
156.இல்லை, இல்லை! அடிப்படை கொள்கைக்காரரே, நீங்கள்... அடிப்படை கொள்கைக்காரர் என்று அழைக்கப்படுபவரே, கிறிஸ்தவ சபை என்று அழைக்கப்படுபவரே. கிறிஸ்தவர் என்று அழைக்கப்படுபவரே - கிறிஸ்தவ மார்க்கம் என்று அழைக்கப்படுவது. இன்றைக்கு நீ அமெரிக் கனாயிருப்பதால் நீ கிறிஸ்தவன் என்று கருதப்படுகிறாய். பார்? அது கிறிஸ்தவ மார்க்கம் என்று அழைக்கப்படுவது. ஆனால் ஒரு உண்மையான கிறிஸ்தவர் என்னப்படுபவர் ஆவியினால் மறுபடியும் பிறந்த ஆணும் பெண்ணுமாவர். அதுவே உண்மையில் மற்ற இவர்கள் பாவனை செய்பவர்கள், ஆனால் உண்மை கிறிஸ்தவர்கள் தேவனால் அழைக்கப்பட்டவர்கள்.