157. நல்லது. அது கடினமான ஒன்று. முதலாவதாக நீங்கள் ஒரு திரியேகன், பிதா, குமாரன், பரிசுத்த ஆவியைப் போல. பிதா குமாரன், பரிசுத்த ஆவி என்பவை ஒரு நபருக்கு உரிமையான மூன்று பட்டப்பெயர்கள், அவர்தான் இயேசுகிறிஸ்து. நீங்கள் சரீரம், ஆவி, ஆத்துமாவாயிருக்கிறீர்கள். இந்த மூன்றும் சேர்ந்து தான் நீங்கள். அவைகளில் ஒன்று மாத்திரம் இருக்குமானால், நீங்கள் நீங்களாயிருக்க மாட்டீர்கள். இந்த மூன்றும் சேர்ந்து தான் நீங்கள்.
158. அன்றொரு நாள் நான் கூறினது போல, “இது என் கை; இது என் விரல்; இது என் மூக்கு; இது என் கண்கள்; ஆனால் நான் யார்?” இது சொந்தமாயுள்ள நான் யார்? அதுதான் எனக்குள்ளே இருக்கும் ஒன்று அது தான் ஞானம்.
இந்த கண்கள், இந்த கைகள், இந்த சரீரம் இன்றைக்கு உள்ளது போல் இங்கு நின்று கொண்டிருந்த போதிலும், நான்... என் சரீரம் இங்கிருக்கலாம், ஆனால் நான் போய்விட்டிருக்கக் கூடும், நான் என்னவாயுள்ளேனோ அது எனக்குள்ளே நான் என்னவாயுள்ளேனோ, அது போய் விட்டிருக்கக் கூடும். அந்த பாகம் தான் ஆவி ஆத்துமா என்பது அந்த ஆவியின் சுபாவம், பரிசுத்த ஆவி உங்கள் மேல் வரும்போது அது ஒன்றும் செய்வதில்லை. நீங்கள்... அது உங்கள் ஆவியை ஒரு வித்தியாசமான ஆத்துமாவாக மாற்றி விடுகிறது. அந்த ஆத்துமா அந்த ஆவியின் மேலுள்ள வித்தியாசமான சுபாவமாகும். எனவே ஆத்துமா என்பது உங்கள் ஆவியின் சுபாவம்.
159. தொடக்கத்தில் நீங்கள் நீசத்தனமாகவும், பொல்லாதவர்களாகவும், பகை, குரோதம், விரோதம் போன்றவைகளைக் கொண்டவர்களாயும் இருந்தீர்கள். இப்பொழுது நீங்கள் அன்புள்ளவர்களாயும், இனிமையாயும், தயவாயும் இருக்கிறீர்கள். வித்தியாசத்தைப் பார்த்தீர்களா? அது உங்கள் சுபாவம். நாம் அதை நான் அவ்விதமே அழைப்பேன். உங்கள் ஆத்துமா மாற்றம் பெறுகிறது. பழைய ஆத்துமா செத்து, புதிய ஆத்துமாவாகிய புது சுபாவம் உங்களுக்குள் பிறக்கிறது. பாருங்கள்?
160. உங்களுடைய மூளை உங்கள் ஞானம் அல்ல, உங்களுக்குள் இருக்கும் ஆவியே உங்கள் ஞானம். பாருங்கள்? உங்கள் மூளை உயிரணுக்களையும் மற்றவைகளையும் கொண்டது. அதற்கு தானாகவே ஞானம் கிடையாது. அதற்கு அப்படி ஞானம் தானாகவே இருக்குமானால், அது அங்கிருக்கும் வரைக்கும், நீங்கள் மரித்தாலும் உயிரோடெழுந்தாலும், அது எப்பொழுதும் இயங்கிக் கொண்டிருக்க வேண்டும். பாருங்கள்? அது உங்களுடைய மூளை அல்ல; அது உங்களுக்குள் இருக்கும் உங்கள் ஆவியே. உங்கள் ஆத்துமா அந்த ஆவியின் சுபாவம். அது சரீரத்தை கட்டுப்படுத்தும் ஆவியின் ஆத்துமா. பாருங்கள்? பார்த்தீர்களா?
நான் விரைவாகச் செல்ல வேண்டும், ஏனெனில் நமக்கு தாமதமாகிக் கொண்டிருக்கிறது. இப்பொழுது, நான் நினைக்கிறேன் - அது விளங்கி விட்டது என்று நம்புகிறேன்.