161. நல்லது, ஒரு ஸ்திரீ பிரசங்கியாயிருப்பாளானால் அவள் கூட்டத்தில் பிரசங்கிக்கவே கூடாது. ஆனால் அவளுக்கு அந்நிய பாஷையில் பேசும் வாரம் இருந்து, அவள் தீர்க்கதரிசனமும் மற்ற வரங்களும் கொண்டவர்கள் கூடியிருக்கும் இடத்தில் இருப்பாளானால், அவளுக்கு அப்படி செய்ய உரிமையுண்டு என்பது என் கருத்து. ஏனெனில் வேதாகமத்தில் மிரியாம் போன்ற தீர்க்கதரிசினிகளை நாம் காண்கிறோம். அவர்களுக்கு கட்டுப்பாடு எதுவும் இருக்கவில்லை... என் சிறு பிரசங்கத்தை செய்ய எனக்கு நேரமிருந்தால், அதைக் குறித்து பேசுவேன். பாருங்கள்?
162. ஸ்திரீகள் வரங்களைக் கொண்டவர்களாய் இருந்தால்... நாம் வெகு சீக்கிரத்தில் ஒன்றாக கூடும்போது, நாம் கடைபிடிக்க வேண்டிய சரியான வழி... நமது சபை இன்னும் சிறிது அதிகமாக அனுபவம் பெறும்போது... உங்களுக்குத் தெரியுமா, இன்னொரு குழு, இன்னொரு சபை, இந்த சபையுடன் இணையப் போகிறது, அவர்களுக்கு உட்கார சபையில் போதிய இடவசதி கிடைத்தவுடனே. இன்னொரு சபை இந்த சபையுடன் இணையப் போகிறது. அது ஒரு ஸ்தாபன மல்ல, அவர்கள் ஒரு கூட்டமாக இந்த சபைக்கு வரப் போகிறார்கள். அவர்கள் வரங்களைப் பெற்றுள்ள மக்கள்.
163. இப்பொழுது, அவர்கள் ஒன்றாக இணைந்த பிறகு, செய்ய வேண்டிய காரியம் என்னவெனில், வரங்களைப் பெற்றுள்ள இந்த மக்கள் குறிப்பிட்ட நேரங்களில் ஒன்றாக கூடி, ஆவியானவர் அவர்களுக்கு என்ன சொல்லுகிறார் என்பதை காண வேண்டும். அதன் பிறகு அது மேடையிலிருந்து அறிவிக்கப்படலாம். மக்கள்... அது சபையின் பக்திவிருத்திக்காக.
164. இப்பொழுது, நீங்கள் அந்நிய பாஷை பேசி, அதற்கு அர்த்தம் உரைப்பவர் யாரும் அங்கில்லை என்பதை நீங்கள் அறிந்திருந்தால்... நீங்கள் கூட்டங்களில் உள்ளபோது, சில நேரங்களில் அது மிகவும் அவபக்தியாயுள்ளது. சில நேரங்களில் நீங்கள் காண்பது என்னவெனில்... நான் என் சபையாரின் மத்தியில் நின்று கொண்டு பீட அழைப்பைக் கொடுத்துக் கொண்டிருக்கும்போது, யாராகிலும் ஒருவர் எழுந்து நின்று அந்நிய பாஷையில் பேசி பீட அழைப்பைக் கெடுத்து விடுகின்றனர். இப்பொழுது பாருங்கள், அந்த நபர் சரியாகவே அந்நிய பாஷையில் பேசக்கூடும்; அது பரிசுத்த ஆவியாயிருக்கக் கூடும். ஆனால் பாருங்கள், என்ன செய்ய வேண்டுமென்று அவர்கள் போதிக்கப்படாத காரணத்தால், அதை எப்படி அடக்கிக் கொள்வதென்று...
165. நான் மேடையின் மேல் உட்கார்ந்து கொண்டு, ஒரு பிரசங்கி பிரசங்கிப்பதைக் கேட்டு, அவர் ஒரு தர்மசங்கடமான நிலையை அடைவதை நான் கண்டிருக்கிறேன்... நான் எழுந்து நின்று அவருக்கு உதவி செய்ய விரும்பினேன், என்ன செய்வதென்று எனக்குத் தெரியவில்லை. நீங்களும் அதே காரியத்தை செய்திருக்கிறீர்கள்; நாம் எல்லோரும் அதை செய்திருக்கிறோம். ஆனால் அது என்ன? அது அவபக்தி. உட்காருங்கள். என் சகோதரனை மதியுங்கள்.
166. நான் சகோ. நெவில் பிரசங்கிப்பதை கேட்டிருக்கிறேன், நான் பிரசங்கிப்பதையும் அவர் கேட்டிருக்கிறார். நாங்கள், எவ்வித சந்தேகமுமின்றி, நாங்கள்... சகோ. ஜே.டி. இன்னும் மற்றவர். நாம் ஒருவர் பிரசங்கிப்பதை மற்றவர் கேட்டிருக்கிறோம். நாம், “ஓ, சகோதரனே, அவருக்கு உதவி செய்ய நான் எழுந்து போவேன்” என்று சொல்லியிருக்கிறோம். பாருங்கள்? ஆவி உங்கள் மேல் ஊற்றப்படுவதை நீங்கள் உணருகிறீர்கள். ஆனால் நீங்கள் என்ன செய்ய வேண்டும்? அமைதியாயிருக்க வேண்டும். பாருங்கள்? ஏனெனில் தீர்க்கதரிசிகளின் ஆவி தீர்க்கதரிசிக்கு அடங்கியிருக்கிறது. பாருங்கள்? அது உண்மை. அமைதியாயிருங்கள். பாருங்கள்? அதை செய்யுங்கள்.
167. நான் நம்புவது என்னவெனில் ஒரு ஸ்திரீ... கேள்வி என்னவெனில் ஒரு ஸ்திரீக்கு அந்நிய பாஷை பேசும் வாரம் இருந்து அவள் பேச விரும்பினால், அந்த நேரம் வரும்போது, அவளுக்கு அந்நிய பாஷையில் பேச உரிமையுண்டு, ஆனால் அவள் பிரசங்கம் செய்யவோ மனிதர் மேல் அதிகாரம் செலுத்தவோ கூடாது. அவள் பிரசங்கித்தால், மனிதர் மேல் அதிகாரம் செலுத்துகிறவளாக ஆகிவிடுகிறாள்.