168. நல்லது, என் சகோதரனே, அதை நீங்கள் செய்ய இதுதான் ஒரே வழி. இது ஒரு பெரிய பொருள். சபை ஒழுங்கடைந்து அது இருக்க வேண்டிய இடத்தை அடையுமானால், என்றாகிலும் ஒரு நாள் இதைக் குறித்து பேச விரும்புகிறேன். இதை நான் பயபக்தியுடன் கூறுகிறேன், நான்... விவாகமும் விவாகரத்தும் என்னும் விஷயத்தில் சபைகளில் இரண்டு விதமான கருத்துக்கள் உள்ளன. ஒரு சாரார் ஒரு கருத்தை ஆதரிக்கின்றனர். மற்ற சாரார் மற்ற கருத்தை ஆதரிக்கின்றனர். ஆனால், தேவனுக்கு முன்பாகவும் அவருடைய வேதாகமத்துக்கு முன்பாகவும், கிருபையை என் இருதயத்தில் கொண்டவனாய், என் கருத்து என்னவெனில், அவர்கள் இருவருமே தவறு. பாருங்கள். ஆனால் அதில் ஒரு சத்தியம் அடங்கியுள்ளது.
169. இயேசு உரைத்ததை நீங்கள் கவனிப் பீர்களானால்... இங்கே என் சகோதரன் இருக்கிறார், இரத்த சம்பந்தமான என் சொந்த சகோதரன். அவர் ஒரு பெண்ணை மணந்து கொள்ளப் போகிறார். அவருக்கு ஏற்கனவே மணமாகி, ஒரு நல்ல பெண்ணின் மூலம் ஒரு பிள்ளை உள்ளது. அவர் என்னிடம் வந்து மணம் முடித்து வைக்கும்படி கேட்டார். நான் முடியவே முடியாது” என்று சொல்லி விட்டேன்.
170. இயேசு மத்தேயு 5ம் அதிகாரத்தில், “வேசித்தன முகாந்திரத்தினாலொழிய (அவள் விவாகம் செய்வதற்கு முன்பு அவ்விதம் நடந்து கொண்டு அவளுடைய கணவருக்கு அதை தெரியப்படுத்தாமலிருந்தால்) தன் மனைவியைத் தள்ளி விடுகிறவன், அவளை விபசாரஞ் செய்யப் பண்ணுகிறவனாயிருப்பான்; அப்படித் தள்ளிவிடப்பட்டவளை விவாகம்பண்ணுகிறவனும் விபசாரஞ்செய்கிற வனாயிருப்பான்' என்று கூறியுள்ளார் (மத். 5:32). எனவே அப்படி செய்யாதீர்கள். இல்லை, உங்கள் முதல் மனைவி மறுபடியும் விவாகம் செய்து கொண்டுவிட்டால், நீங்கள் திரும்பவும் அவளிடம் போகக் கூடாது. ஆனால் நீங்கள் - அவள் உங்களை விவாகரத்து செய்து உங்களைத் தள்ளிவிட்டிருந்தால்.
171. “நான் சுயாதீனமாயிருக்கலாமா?” என்று கேட்டிருக்கிறீர்கள். அதை நான் மறுபடியும் படிக்கட்டும்: “இதற்கு முன்பு விவாகமாகாத ஒரு பெண்ணை நான் விவாகம் செய்தேன். நாங்கள் விவாகரத்து செய்து கொண்டோம். அதன் பிறகு அவளுக்கு இரு முறை விவாகமாகி விட்டது (கேள்வி கேட்ட நபர் விவாகம் செய்து கொள்ளாமல் இருக்கிறார் என்று எண்ணுகிறேன்). நாம் மணம் புரிய விரும்பினால் முதல் மனைவியிடம் திரும்பிச் செல்ல வேண்டுமென்று வேதம் உரைக்கிறது.
172. இல்லை, ஐயா! லேவியராகமத்தில் கூறப்பட்டுள்ள பிரமாணத்தைப் பாருங்கள். அவள் வேறொருவருக்கு உரிமையாகி விட்ட பிறகு நீங்கள் அந்த பெண்ணிடம் சென்றால், அவளை நீங்கள் கறைபடுத்தி, நீங்கள் உங்களை முன்னைவிட மோசமான நிலைக்கு ஆளாக்கிக் கொள்வீர்கள். இல்லை, வேறொருவரை விவாகம் செய்து கொண்ட உங்கள் மனைவியை நீங்கள் திரும்பச் சேர்த்துக் கொள்ளக் கூடாது.
173. இப்பொழுது, “விவாகமாகி விட்ட என் மனைவியினிடத்தில் நான் திரும்பச் செல்லலாமா, அல்லது நான் சுயாதீனமாயிருக்க வேண்டுமா? நீங்கள் சுயாதீனமாயிருக்கிறீர்கள்! சுயாதீனமாக நிலைத்திருங்கள்! ஆம், நீங்கள் திரும்பிச் செல்லாதீர்கள். வேண்டாம், ஐயா! அவள் வேறொருவரை மணந்து கொண்டு விட்டாள்; அவளை விட்டு விலகியிருங்கள். அதுதான் சரி! வேண்டாம்... அது அசுத்தப்படுத்துகிறது. நீங்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள். நமக்கு இன்னும் சிறிது நேரம் இருந்தால், அதை விவரிக்க எனக்கு விருப்பம். ஆனால் உங்கள் கேள்விக்கு பதிலளிக்கும் வண்ணம், என் சகோதரனே, நீங்கள் யாராயிருந்தாலும், வேண்டாம், ஐயா! உங்களை விவாகம் செய்து கொண்ட பிறகு இரண்டு மூன்று முறை விவாகம் செய்து கொண்ட அந்த பெண்ணிடம் திரும்பச் செல்லாதீர்கள். அது தவறு!
174. இதற்கு முன்பு விவாகமாயிருந்த அந்த தம்பதிகளுக்கு அண்மையில் நான் விவாகம் செய்து வைத்தேன். அவர்கள் விவாகரத்து செய்து ஒருவரையொருவர் பிரிந்தனர் - வயோதிப தம்பதிகள். ஓ, அது சகோதரன் சகோதரி பக்கெட்; அவர்கள் தான் அது. அவர்களால் ஒன்று சேர்ந்து வாழ முடியவில்லை. அவர்களுக்கிடையே சிறு பூசல் உண்டானது; அவர்கள் விவாகரத்து செய்து கொண்டனர். அவள் மிகவம் உண்மையாக தனியாக வாழ்ந்து வந்தாள். அவரும் அதே விதமாக வாழ்ந்து வந்தார். சற்று கழிந்து. அது எவ்வளவு மூடத்தனம் என்பதை அவர்கள் உணர்ந்து, மறு படியும் விவாகம் செய்து ஒன்றாக வாழ விரும்பினர். நான், “நிச்சயமாக” என்றேன். பாருங்கள்? “அது நல்லது, அப்படித்தான் நீங்கள் இருக்க வேண்டும்” என்றேன். எனவே அவர்கள்... அவர்கள் விவாகமான நிலையிலே இருந்தனர். அவர்கள் விவாகரத்து செய்து கொள்ளவில்லை; அவர்கள் கணவனும் மனைவியுமாக வாழ்வதற்கு வேண்டிய பத்திரங்களைக் கொடுத்தேன்; அவ்வளவுதான், ஏனெனில் அவர்கள் தொடக்கத்தில் செய்திருந்தனர்.