அது எங்குள்ளதென்று நமக்குத் தெரியும், யாத்திராகமம் 4:24. இது ஒரு அருமையான கேள்வியாகும். இப்பொழுது ஒரு க்ஷணம் இங்கே நாம் இதை வாசிப்போம். யாத்திராகமம் 4 மற்றும் 24:
வழியிலே தங்கும் இடத்தில் கர்த்தர் அவனுக்கு எதிர்ப்பட்டு அவனைக் கொல்லப் பார்த்தார்.
இந்த கதையை எத்தனைப் பேர் நினைவில் வைத்திருக்கிறீர்கள்? இப்பொழுது, மோசேக்கு அநேக சந்ததிகள் முன்பு தேவன் ஆபிரகாமிற்கு விருத்தசேதனம் என்னும் அடை யாளத்தை அளித்தார். அது ஒவ்வொரு யூதனும் விருத்தசேதனம் பண்ணப்பட வேண்டுமென்று தேவன் செய்த உடன்படிக்கையாகும். அது சரியா?ஒவ்வொரு மனிதனும்... அது ஒரு அடையாளமாகும்.
இன்றைக்கு நாம் விருத்தச்சேதனம் பண்ணப்பட்டுள்ளோமா? மாம்சத்தினால் அல்ல, பரிசுத்த ஆவியினால்.
இப்பொழுது, இப்பொழுது, தேவன் ஒவ்வொரு ஆணுக்கும் விருத்தசேதனம் பண்ணப்பட வேண்டும் என்று இந்த கட்டளையை அளித்தார். அங்கே சென்று இஸ்ரவேல் புத்திரரை விடுவிக்கத் தக்கதாக தேவன் மோசேயை அழைத்தபோது, அந்த அதே விடுவிக்கும் அடையாளத்தை தன்னுடைய குமாரனுக்கு அவன் செய்யவில்லை. நான் என்ன கூற முற்படுகிறேன் என்பதைப் பார்க்கிறீர்களா?
நான் ''இப்போழுது சபையாகிய நீங்கள் எல்லாரும், உங்களில் ஒவ்வொருவரும் நீங்கள் உள்ளே வந்து தண்ணீரால் ஞானஸ்நானம் பண்ணப்பட்டீர்கள். ஆகவே உங்களை சபை அங்கத்தினனாக செய்யப் போகிறோம். நாம் எல்லோரும் ஒன்றாக மகிமைக்கு செல்கிறோம்'' என்று நான் கூறுகிறேன் என்றால், என்ன, சகோதரனே, அது வேதவசனம் அல்ல. நீ மறுபடியும் பிறந்து, பரிசுத்த ஆவியினால் விருத்தசேதனம் பண்ணப்படும் வரை... நீ அப்படித்தான் இருக்க வேண்டும். நீ எவ்வளவு நல்லவனாக இருந்தாலும், எந்த சபையை நீ சேர்ந்தவனாக இருந்தாலும், உன் பெற்றோர் எவ்வளவு நல்லவர்களாக இருந்தாலும் அது எனக்கு ஒரு பொருட்டே அல்ல, நீ ஒரு தனிப்பட்ட நபராக பரிசுத்த ஆவியினால் மறுபடியும் பிறந்தாலொழிய நீ எடுத்து கொள்ளப்படுதலில் செல்லமாட்டாய். பாருங்கள்? உன்னால் செல்ல முடியாது. அதுதான் அந்த அதே விடுவிக்கும் அடையாளம், விருத்தசேதனம்; ஆகவே அந்த விருத்தசேதனம் பரிசுத்த ஆவியே. இப்பொழுது தேவன்...
42.கேள்வியை கேட்டவர் இதைக் கேட்டார்: “தேவன் மோசே அல்லது அவனுடைய குமாரனை கொல்லப் பார்த்தாரா என்று இந்த வேதவசனம் கூறுகிறதா? ஏன்?'' தேவன் மோசேயைத் தொடர்ந்தார். சிப்போராள் ஒருவள் தான் அங்கே அவனை காப்பாற்றினாள். எப்படியென்றால் சிப்போராள் ஒரு கருக்கான கல்லை எடுத்து, போய் தன் குழந்தையினுடைய நுனித்தோலை அறுத்து அதை மோசேயின் முன்பாக எறிந்து ''நீர் எனக்கு இரத்த சம்பந்தமான புருஷன்” என்றாள். அது சரியா?
தேவன் மோசேயின் உயிரை எடுத்துவிட்டிருப்பார், ஆனால் ஒருக்கால் ஒரு தூதன் அங்கே நின்று கொண்டிருந்திருப்பான். அவன், ''சிப்போராளே! அதை சீக்கிரமாக பிடித்துக்கொள்!'' என்று கூறினான். பாருங்கள்?
சிப்போராள் போய் குழந்தைக்கு விருத்தசேதனம் பண்ணினாள். ''மோசே நீர் மற்ற எல்லாவற்றைக் குறித்தும் மற்றும் உம்முடைய பிரயாணத்தைக் குறித்தும் மிக மிக அக்கறைக் கொண்டிருக்கிறீர், உன்னுடைய சொந்த குமாரனுக்கோ விருத்தசேதனம் பண்ணப்படவில்லை'' என்றாள்.
அநேக சமயங்களில் நான் ஆச்சிரியப்படுவதுண்டு... ஏனெனில் “ஓ, தேவனுக்கு மகிமை. நான் ஒரு குறிப்பிட்ட காரியத்தை செய்ய வேண்டுமென்று கர்த்தர் விரும்புகிறார். நான் ஆப்பிரிக்காவிற்கு, இந்தியாவிற்கு செல்ல வேண்டுமென்று அவர் விரும்புகிறார், என்று என்னிடம் கூறின மக்களை நான் சந்தித்திருக்கின்றேன்.
நான் ஒரு பால்காரனிடம் நீ இரட்சிக்கப்பட்டிருக்கிறாயா என்று நீங்கள் எப்பொழுதாகிலும் கேட்டதுண்டா? ஒரு பேப்பர் விநியோகிக்கும் பையனிடம் இன்னுமாக நீ மறுபடியும் பிறந்திருக்கிறாயா என்று நீங்கள் எப்பொழுதாகிலும் கேட்டதுண்டா? உங்கள் அக்கம் பக்கத்தில் குடியிருக்கிறவர்களைக் குறித்தென்ன, அவர்கள் இரட்சிக்கப்பட்டுள்ளனரா?'' என்று கூறினேன். பாருங்கள்? இப்பொழுது அதுதான் கேள்வி. பாருங்கள்? அது உங்களுடைய இருதயத்தில் இருக்குமானால்...
43.இங்கே சில காலத்திற்கு முன்னர் இங்கே ஃபிளாரிடாவில் ஒரு பெண் என்னை சந்தித்தாள். இந்த சிறிய பெண், எனக்கு ஒரு வழியும் இல்லை... நான் நீதிபதியல்ல. ஆனால் இங்கிருந்த இந்த மேடையிலிருந்து பிரசங்கித்த ஒரு சிறிய பிரசங்கி அங்கே இருந்தார். ஆகவே வேறொரு பிரதேசத்தில் இருந்த அந்த சிறிய நபர் திருமாணமாகி மனைவி மற்றும் மூன்று அல்லது நான்கு பிள்ளைகளைக் கொண்டவராக இருந்தார். ஆகவே இந்த பெண் ஒரு விதவைப் பெண்ணாக இருந்தாள். ஆகவே அவர்கள் இருவரும் ஒரு பெரிய காடிலாக் காரில் டெக்ஸாஸிலிருந்து ஒன்றாக வந்தனர்.
ஆகவே அந்த பெண் வந்தாள். அவள் விரும்பும் வகையில் எந்த விதத்திலும் உடையுடுத்த அவளுக்கு உரிமையுண்டு, அதினால் எனக்கொன்றுமில்லை; ஆனால் ஒரு கிறிஸ்தவ பெண்ணாக அதன் படி அவள் உடையுடுத்தியிருக்கவில்லை. அவள் (ஓ, என்னே!) அவள் ஒரு பெரிய நீண்ட காதணிகளை (அதை எந்த விதமாக அழைத்தாலும் சரி) இதைப்போன்று தொங்கிக் கொண்டிருந்தது, மேலும் வாயில் அடர்த்தியாக உதடு சாயம் பூசிக்கொண்டிருந்தாள்; மேலும் மேலும் அந்த மேலும் அவளுடைய கண் புருவங்கள் வெட்டப்பட்டு அதின் மேல் மைகளை, ஒரு பென்சிலினால் மையிட்டுக் கொண்டிருந்தாள். அவள் என்னிடம் “சகோதரன் பிரன்ஹாம், கர்த்தர் என்னை வெளி நாட்டிற்கு அழைக்கின்றார்'' என்று கூறினாள்.
நான் “அவர் அழைக்கிறாரா?''என்றேன்.
“ஆம்!'' மேலும் அவள், ''இந்த மனிதனுடன் நான் செல்லப் போகிறேன்'' என்றாள்.
நான், ''நல்லது, தேவன் உங்களை அழைக்கிறார் என்றால், நல்லது, சரி“ என்றேன் (ஆனால் அவர்களுடைய கனியினால்... எனக்கு அது சரியாக தென்படவில்லை... பாருங்கள்?)
அவள், ''நீங்கள் விசுவாசிக்கவில்லையா, கர்த்தர்...?'' என்றாள்.
நான், “என்னைக் கேட்காதே. கர்த்தர் உங்களிடம் கூறியிருந்தாரானால், நீங்கள் என்ன செய்ய வேண்டுமென்று கர்த்தர் உங்களிடம் கூறியிருக்கிறாரோ அதைச் செய்யுங்கள். ஆனால் என்னைப் பொறுத்தவரையில், என்னைப் பொறுத்தவரையில் நான் அவ்விதமாக நினைக்கவில்லை, நான் உங்களிடம் வெளிப்படையாக இருப்பேன்” என்றேன்.
அவள், ''நல்லது, ஏன் அவ்விதமாக எண்ணுகிறீர்கள்?''
நான், “முதல் காரியம், நீங்கள் ஒரு விவாகமான பெண்ணாக இந்த விவாகமான மனிதனுடன் நகரத்தில் ஒன்றாக இங்கே தங்குவது நல்லதாகத் தென்படவில்லை. இதனால் நிந்தை வருமானால், பாருங்கள்?'' என்றேன். மேலும் நான் கூறினேன், ”இப்பொழுது, முதல் காரியம் என்னவெனில்...''
44.அந்த பெண்ணிற்கு என்ன நேரிடும் என்று நான் வியக்கின்றேன்? அதே காரியமானது... இன்று என்னிடம் தொலைபேசியில் பேசின, அந்த மனிதனை விவாகம் செய்ய விரும்பின, தன்னுடைய சொந்த கணவனை விட்டுவிட்ட அந்த ஸ்திரீயைப் போல், இவளும் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ளாமல் சுற்றிலும் குழப்பிக் கொண்டிருந்தாள். அவள் ஒரு நிலைக்கு வந்தாள், ஒருக்கால் தேவனுடன் தொடர்பு கொண்டிருந்திருக்கலாம், ஆனால் உலகத்தின் காரியங்களை இச்சித்துக் கொண்டிருந்தாள். ஆகவே நான் அவளை, ''நீங்கள் பரிசுத்த ஆவியை பெற்றுக் கொண்டீர்களா?'' என்று கேட்டேன்.
அவள், “இன்னுமாக இல்லை, ஆனால் நான், அதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்'' என்றாள்.
நான், “முதலில் நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள், எந்தவித கணவனைக் கொண்டிருக்க வேண்டுமென்று அவர் உங்களுக்கு கூறுவார்” என்றேன். அது சரி. பாருங்கள்?
நீங்கள் - நீங்கள்... அது அவ்விதமாகத்தான் இல்லையென்றால் நீங்கள் ஆவிக்குரிய விதத்தில் மரித்துப் போவீர்கள். இன்றிரவு தேவன் அநேக காரியங்களை பேசிக் கொண்டிருக்கிறார். ஆனால் உங்களுடைய இருதயத்தை அநேக முறை தட்டினார் (சகோதரன் பிரன்ஹாம் பிரசங்க பீடத்தின் மீது தட்டுகிறார் - ஆசி). ஆனால் இந்த நேரங்கள் ஏதாவதொன்றில் அவர் கதவை அடைத்துவிடப் போகின்றார், ஆகவே - ஆகவே இரக்கம் அகன்றுவிடும். பாருங்கள்?
45.நிச்சயமாக, தேவன் அவனுடைய ஜீவனை எடுத்துவிட்டிருப்பார். அவர் அவனை கொல்லப் பார்த்தார் என்று அவர் கூறினார். வேதவசனம் எவ்வாறு இருக்கிறது என்று கவனியுங்கள்:
வழியிலே தங்கும் இடத்திலே கர்த்தர் அவனுக்கு எதிர்ப்பட்டு அவனை கொல்லப் பார்த்தார். (மோசே, இப்பொழுது கவனியுங்கள்).
அப்பொழுது சிப்போராள் கருக்கான ஒரு கல்லை - கருக்கான ஒரு கல்லை எடுத்து தன் புத்திரனுடைய நுனித்தோலை அறுத்து, அதை அவன் கால்களுக்கு முன்பாக எறிந்து, நீர் எனக்கு இரத்த சம்பந்தமான புருஷன் என்றாள்.
அது சரி. இப்பொழுது, தேவன் மகனை கொல்லப் பார்க்கவில்லை. தேவன்... அந்த ஒன்றுமறியாத சிறு குழந்தை என்ன செய்வதென்று அறியாதிருந்தது; அது ஒன்றும் அறியாத ஒன்றாகும். ஆனால் காரியம் என்னவெனில், அந்த குழந்தையின் தகப்பன், விருத்தசேதனம் என்னும் அடையாளத்தின் கீழ் இஸ்ரவேல் புத்திரரை விடுவிக்க குழந்தையுடன் சென்று கொண்டிருந்த அவன்; ஆனால் இன்னுமாக தன்னுடைய சொந்த மகனுக்கு விருத்த சேதனம் பண்ணப்படாதிருந்தது. பாருங்கள்? ஆகவே சிப்போராள் அதை, அந்த நுனித்தோலை, ஒரு கல்லைக் கொண்டு அறுத்து கீழே எறிந்து, ''நீர் எனக்கு இரத்த சம்பந்தமான புருஷன்“ என்றாள்.