176. நல்லது. இப்பொழுது, இங்கே - இது சபைக்கு உணர்ச்சியைத் தூண்டக் கூடிய ஒரு சிறு காரியம். சரியான முறை என்னவெனில், தசமபாகம் சபையின் போதகருக்கு செல்ல வேண்டும். அது தான் சரி! வேதாகமத்தில் பழைய ஏற்பாட்டில், ஆலயத்தை பழுது பார்ப்பதற்காக, அவர்கள் ஒரு பெட்டியை கதவண்டையில் வைத்தனர். ஜனங்கள் அந்த பெட்டியில் பணத்தைப் போடுவார்கள். அதை பலமுறை நீங்கள் பழைய ஏற்பாட்டில் படித்திருக்கிறீர்கள். அவ்விதமாகத்தான் அவர்கள் ஆலயங்களை பரிபாலித்தனர். அந்த நிதியை உபயோகித்து தான் அவர்கள் ஆலயங்களை பழுது பார்த்தனர். ஆனால் பத்தில் ஒரு பாகம் - தசம பாகம் அனைத்தும் - அவர்களுடைய ஆசாரியர்களுக்கு, அவர்களுடைய மேய்ப்பர்களுக்கு சென்றது. ஆம், தசமபாகத்தை வேறெதற்கும் உபயோகிக்கக் கூடாது.
177. ஜனங்கள் தங்கள் தசமபாகத்தை எடுத்து விதவைகளுக்கு கொடுப்பதை நான் கண்டிருக்கிறேன். அது தவறு. விதவைக்கு கொடுக்க உங்களிடம் வேறெதாவது இருக்குமானால், அதைக் கொடுங்கள். ஆனால் தேவனுடைய பணத்தை அவளுக்கு கொடுக்காதீர்கள். முதலாவதாக, அது உங்களுடையதல்ல, அது தேவனுடையது.
178. உங்களுக்கு ஒரு ரொட்டி வாங்கி வருவதற்காக என்னிடம் நீங்கள் இருபத்தைந்து சென்டு காசு கொடுத்தனுப்பி, நான் தெருவில் ஒருவரை சந்தித்து அவருக்கு இந்த இருபத்தைந்து சென்டு காசை கொடுத்து விடுவேனானால், பாருங்கள், நான் உங்கள் காசை எடுத்து கொடுத்து விடுகிறேன். அவர் என்னிடம் காசு கேட்டால், என் பாக்கெட்டில் உள்ள என் காசை அவருக்கு நான் கொடுக்க வேண்டும். இது உங்கள் காசு. அதை எடுத்து கொடுத்துவிடக் கூடாது. அது போன்று தசமபாகம் கர்த்தருடையது. ஆசாரியனாகிய லேவி தசமபாகத்தைக் கொண்டே வாழ வேண்டும்.
179. தசமபாகம் பண்டகசாலையில் கொண்டு வரப்பட்டு, அது தேவனால் ஆசீர்வதிக்கப்படும் என்னும் வாக்குத்தத்தத்தையும் அதன் நிரூபணத்தையும் உடையதாய் இருக்கிறது. அவர், “நீங்கள் என்னை நம்பாமல் போனால், அதைக் கொண்டு வந்து நான் அதை ஆசீர்வதிக்கமாட்டேனோ என்று என்னை சோதித்துப்பாருங்கள்” என்கிறார் (மல். 3:10). பாருங்கள்? அது உண்மை.
180. தசமபாகம் சபையின் போதகரின் ஜீவனத்துக்கென அவருக்கு செல்ல வேண்டும். கட்டிட நிதி இன்னும் மற்றவை எல்லாம் முற்றிலும் வேறுபட்ட நிதி. அது வேதப்பூர்வமானது!
181. ஒரு முறை நாம் தொடங்கி விட்டால், நான் ஒரு இரவு எடுத்துக் கொண்டு... சில நாட்களுக்கு முன்பு, நான் கூடாரத்தை விட்டு செல்வதற்கு முன்பு, இரண்டு மூன்று வாரங்களாக இப்படிப்பட்ட தலைப்புகளின் பேரில் பேசி, சபையில் தசமபாகம் எவ்விதம் செலுத்தப்பட வேண்டும் என்பதை காண்பித்தேன்.