இப்பொழுது... நான் நினைக்கவில்லை நான்... அதன் தொடர்ச்சி எனக்கு கிடைக்கிறதா என்று பார்க்கட்டும். “மிகச்சிறந்த வழி எது என்பதற்கான உங்கள் கருத்து (அங்கே ஒரு காற்புள்ளி (comma) இருக்க வேண்டுமென்று நினைக்கிறேன்)... “சில முக்கியமான விஷயங்களில் கர்த்தருடைய சித்தத்தை அறிந்து கொள்ள மிகச் சிறந்த வழி எது என்பதைக் குறித்து உங்கள் கருத்து என்ன?”
183. அருமை நண்பனே, நான் உமக்குச் சொல்லுகிறேன், சில முக்கியமான விஷயங்களில் தேவனுடைய சித்தத்தை அறிந்து கொள்ள மிகச் சிறந்த வழி ஜெபமே. பாருங்கள்?
184. இப்பொழுது, இதை நான்... இங்கு ஒரு அருமையான சிறு காரியம் உள்ளது. மிகவும் முக்கியமான விஷயம் உங்களுக்கு இருக்குமானால்... நான் கடைபிடிக்கும் முறை இதுவே. அதை நான் கர்த்தருக்கு முன்பாக கொண்டு செல்வேன். அது எப்பொழுதும் என் பெலனாக அமைந்துள்ளது; நான் கர்த்தருடைய சமுகத்தில் காத்திருந்து, அவர் என்ன சொல்லுகிறாரென்று பார்ப்பேன். நான் அந்த விஷயத்தில் எந்த பக்கத்தையும் ஆதரிக்காமல் நடுநிலை வகிப்பேன். நான், “இப்பொழுது, பரலோகப் பிதாவே, அது இப்படி இருக்க வேண்டும்...” என்று சொல்வதில்லை.
185. என் விஷயத்தில், பெரும்பாலும், அது மிகவும் முக்கியம் வாய்ந்தது என்பது உண்மையே. ஆகையால் நான் தரிசனத்துக்காக காத்திருப்பேன். ஆனால் அநேகருடன் தேவன் தரிசனத்தின் மூலம் ஈடுபடுவதில்லை. எனவே நீங்கள் தரிசனத்துக்காக காத்திருக்க வேண்டுமென்று ஆலோசனை கூற மாட்டேன். பாருங்கள்? ஏனெனில் சிலருக்கு தரிசனம் கிடைக்கின்றது. சிலர் வேறொன்றை செய்கின்றனர். நீங்கள் செய்பவைகளை என்னால் செய்ய முடியாது - நீங்கள் தேவனை சேவிக்கும் வழியில் - நான் செய்பவைகளை உங்களால் செய்ய முடியாது. பாருங்கள்? தேவன் வெவ்வேறு விதமாக நம்முடன் ஈடுபடுகிறார்.
186. நான் உங்கள் ஸ்தானத்தில் இருந்து கர்த்தரிடத்திலிருந்து தரிசனம் பெறாமலிருந்தால், நான் கர்த்தருடைய சமுகத்தில் காத்திருந்து, “கர்த்தாவே, என்ன தீர்மானம் செய்ய வேண்டுமென்று எனக்குக் காண்பியும்” என்று அவரைக் கேட்பேன். அதை ஒரு வழியில் செய்ய உங்களுக்கு உணர்வு தோன்றுமானால், சிறிது காத்திருங்கள், அதன்பிறகு இன்னும் சிறிது அதிகம் காத்திருந்து. எந்த வழியில், எந்த பக்கம் சாய்கிறீர்கள் என்பதைப் பாருங்கள், எந்த பக்கம் ஆவியானவர்... “பிதாவே, என் இருதயத்தில் உள்ளதை நீர் அறிந்திருக்கிறீர், அதனால் பரவாயில்லை. நான் என்ன செய்ய வேண்டுமென்று நீர் விரும்புவதை நான் அறிந்து கொள்ள விரும்புகிறேன்” என்று அவரைக் கேளுங்கள்.
187. கூட்டங்களைக் குறித்தும் சில நேரங்களில் நான் அப்படித்தான் செய்கிறேன். இந்த வழியாக அல்லது அந்த வழியாக செல்ல வேண்டுமென்று நான் வழிநடத்தப்படுவதாக எனக்குத் தோன்றும், அப்பொழுது நான் அந்த வழியாக செல்வேன். அப்படித்தான் அதை செய்ய வேண்டும், ஏனெனில் அது ஜெபத்தில் வைக்கப்படுகிறது; நீங்கள் உங்களால் முடிந்த அளவுக்கு சிறப்பானதை செய்கிறீர்கள்.
188. இதை நான் விசுவாசிக்கிறேன், என் நண்பர்களே. முன்காலத்தில், புதிய ஏற்பாட்டின் காலத்தில் பவுல் இரு வழிகளுக்கு இடையே மாட்டிக் கொண்டு, எந்த வழியாக செல்ல வேண்டுமென்று அவனுக்குத் தெரியவில்லை. அவன் தவறான வழியில் செல்லப் புறப்பட்ட போது, அவனுக்கு மக்கதோனிய அழைப்பு வந்தது. நான் விசுவாசிப்பது என்னவெனில், நீங்கள் தேவனுக்காக ஒரு தீர்மானம் செய்து, உங்களால் முடிந்த வரைக்கும் அதை மிகச் சிறந்த முறையில் செய்வீர்களானால், தேவன் உங்களைத் திருத்தி, நீங்கள் தவறு செய்யா பார்த்துக் கொள்வார். தேவன் அவ்விதம் செய்வாரென்று நான், விசுவாசிக்கிறேன்.