189. நல்லது, உறங்கும் கன்னிகைகள் இரட்சிக்கப் படுவார்கள் என்பது உண்மையே. அவள் நியாயத்தீர்ப்பின் போது இரட்சிக்கப்படுவாள். அவள் மணவாட்டியாக இருக்க முடியாது. அவள் நியாயத்தீர்ப்புக்கு வரும் ஒரு கூட்டம் ஜனங்கள். அவர்கள் கன்னிகைகளாய் இருப்பதனால், அவர்கள் தேவனுக்கு முன்பாக இருக்கின்றனர். பாருங்கள்? அவர்கள் இரட்சிக்கப்பட வேண்டும். அவர் பிரிக்கிறார். அவர்கள் அவருடைய வலது பக்கத்திலுள்ள செம்மறியாடுகள். இரட்சிக்கப்படாதவர்கள் அந்த பெரிய வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பின்போது அவருடைய இடது பக்கத்திலுள்ள வெள்ளாடுகள்.
அதன் பேரில் நான் நிறைய நேரம் பேச முடியும், ஆனால் நேரமாகிக் கொண்டிருக்கிறது.