190. ஓ, ஆமாம்! ஆம், ஐயா! ஆம், பரிசுத்த ஆவியினால் நிறைந்த ஒரு நபர். அப்பொழுது தான் நீங்கள் இந்த காரியங்களைச் செய்யத் தூண்டப்படுவதற்கான நிலையில் இருக்கிறீர்கள். நீங்கள் உங்களை ஒரு இலக்காக ஆக்கிக்கொள்கிறீர்கள். நீங்கள் பிசாசை சேவித்துக் கொண்டிருந்த போது, உங்கள் விருப்பப்படி நீங்கள் அவலட்சணமாக நடந்து கொள்ள அவன் உங்களை அனுமதிக்கிறான். ஆனால் நீங்கள் கிறிஸ்துவுக்கென்று ஒரு நிலையை தெரிந்து கொண்ட மாத்திரத்தில், நீங்கள் மற்ற பக்கத்துக்கு வந்து விடுகிறீர்கள். அப்பொழுது அவன் ஒவ்வொரு துப்பாக்கியையும் உங்கள் பக்கம் திருப்பி குறிவைக்கிறான். ஒவ்வொரு சோதனையையும், உங்கள் மேல் எறியப்படக்கூடிய ஒவ்வொன்றையும், உங்களை நோக்கி எறிகிறான். அப்பொழுது உங்களுக்கு கடினமாகி விடுகிறது. ஆனால் உங்களுக்கு என்ன உள்ளது “உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிரலிருக்கிறவர் பெரியவர்” (1 யோவான் 4:4). பாருங்கள்?
191. நீங்கள் பிசாசின் பக்கம் இருந்தபோது, உங்களுக்கு எந்தப் போராட்டமும் இருக்கவில்லை, நர், அசுத்தத்தில் சுற்றிதிரிந்தீர்கள். பாருங்கள்? ஆனால் இப்பொழுதோ நீங்கள் உங்கள் போக்கை சுத்தமாக்கிக் கொண்டீர்கள்; நீங்கள் நாணயமாக உடை உடுக்கிறீர்கள்; நீங்கள் சவரம் செய்து கொள்கிறீர்கள்; தலையை நன்றாக வாரிக்கொள்கிறீர்கள்; நீங்கள் ராணுவ உடையை போட்டுக் கொள்கிறீர்கள்; உங்கள் கையில் ஒரு துப்பாக்கியை வைத்துக்கொண்டு, “வாருங்கள், போகலாம்” என்கிறீர்கள். பாருங்கள்? நீங்கள் போர்களத்தில் இருக்கிறீர்கள், உங்களைப் பெரிதாக காண்பித்துக்கொள்ள அல்ல, ஆனால் போரிட… போரில் சோதனைகள் எழும்பும்போது. ஆவியினால் - விசுவாசம் என்னும் கேடயத்தை பிடித்துக் கொண்டு, போராயுதங்களை தொடுத்துக்கொண்டு முன் செல்கிறீர்கள். அது நிச்சயம்! பாருங்கள்? அது உண்மை. ஓ. தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தை தரித்துக் கொள்ளுங்கள். நீங்கள் போரிடவில்லையென்றால், எதற்காக போராயுதங்களைத் தரித்துக்கொள்ள வேண்டும்? இராணுவ வீரர் அனைவரும் சண்டையிடுவதற்காகவே அவ்விதம் தரித்துக்கொள்கின்றனர். தங்களைப் பெரிதாக காண்பித்துக் கொண்டு, “நான் இன்னார். நான் ஒரு கிறிஸ்தவன், நான் யாரென்று பாருங்கள். நான் இன்னின்னதை சேர்ந்தவன். அல்லேலூயா! அன்றொரு இரவு நான் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டேன். நிச்சயமாக, ஒன்றும் என்னை தொல்லைப் படுத்துவதில்லை” என்று சொல்வதற்காக அல்ல. உ-ஊ! ஓ, சகோதரனே, நீ திரும்பிச் சென்று மறுபடியும் முயற்சி செய்வது நலமென்று எண்ணுகிறேன். பார்?
192. ஒ. நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்ட மாத்திரத்தில், சாத்தான் ஒவ்வொரு துப்பாக்கியையும் உங்களை நோக்கி குறிவைத்து உங்களைச் சுட முற்படுகிறான். ஆனால் நீங்களோ சர்வாயுதவர்க்கத்தை தரித்துக் கொண்டிருக்கிறீர்கள். விசுவாசம் என்னும் கேடயத்தை எடுத்துக் கொள்ளுங்கள், ஆவியின் பட்டயத்தை, வார்த்தையின் பட்டயத்தை கையில் பிடித்துக்கொள்ளுங்கள், சுவிசேஷம் என்னும் பாதரட்சையை கால்களில் தொடுத்துக்கொள்ளுங்கள், அந்த நடுத்துண்டாகிய மார்கச்சையை போட்டுக்கொண்டு, அதிலுள்ளவாரை இழுத்து இறுகக்கட்டிக்கொண்டு, ஆயத்தமாகுங்கள். ஏனெனில் அது வந்து கொண்டிருக்கிறது. கவலைப்படாதீர்கள். ஆம், ஐயா! உங்களுக்கு நிறைய தொல்லைகள் வரும். ஆனால் “உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.