193. மத். 16:10 என்னவென்று நாம் பார்ப்போம், அது என்னவென்று இப்பொழுது எனக்கு நிச்சயமாகத் தெரியவில்லை. அந்த வேதபாகத்தை நான் எடுக்கட்டும். மத். 16:9-10. இதோ உள்ளது:
இன்னும் நீங்கள் உணரவில்லையா? ஐந்து அப்பங்களை ஐயாயிரம் பேருக்குப் பகிர்ந்ததையும், மீதியானதை எத்தனை கூடை நிறைய எடுத்தீர்கள் என்பதையும்; ஏழு அப்பங்களை நாலாயிரம் பேருக்குப் பகிர்ந்ததையும், மீதியானதை எத்தனை கூடை நிறைய எடுத்தீர்கள் என்பதையும் நீங்கள் நினைவுகூராமலிருக்கிறீர்களா?
(இப்பொழுது கவனியுங்கள், இதற்கு முன்புள்ள சில வசனங்களை வாசிப்போம்)
இயேசு அவர்களை நோக்கி: பரிசேயர் சதுசேயர் என்பவர்களின் புளித்த மாவைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள் என்றார்.
நாம் அப்பங்களைக் கொண்டு வராதபடியால் இப்படிச் சொல்லுகிறார் என்று அவர்கள் தங்களுக்குள்ளே யோசனை பண்ணிக் கொண்டார்கள்.
இயேசு... (இப்பொழுது கவனியுங்கள்) இயேசு அதை அறிந்து. (அவர்களுடைய சிந்தனைகளை அவர் அறிந்து கொண்டார். பாருங்கள்?). அற்ப விசுவாசிகளே, அப்பங்களைக் கொண்டு வராததைக் குறித்து நீங்கள் உங்களுக்குள்ளே யோசனை பண்ணுகிற தென்ன?
இன்னும் நீங்கள் உணரவில்லையா? ஐந்து அப்பங்களை ஐயாயிரம் பேருக்குப் பகிர்ந்ததையும், மீதியானதை எத்தனை கூடை நிறைய எடுத்தீர்கள் என்பதையும்;
194. வேறு விதமாகக் கூறுவோமானால்: “தேவன் ஒரு அற்புதத்தை செய்து தேவையானதை தருவதை நீங்கள் கண்டிருக்க, அவரால் ஒரு அற்புதத்தை மறுபடியும் செய்ய முடியாதா என்ன? பாருங்கள்?... இதை வேறு விதமாக இவ்விதம் கூறலாம்: அவர் உங்களை பாவ வாழ்க்கையிலிருந்து இரட்சித்திருக்க உங்கள் சரீரத்தை அவரால் சுகமாக்க முடியாதா என்ன? நீங்கள் பாவியாயிருந்த போது, நீங்கள் விசுவாசிக்கத்தக்கதாக உங்கள் ஆத்துமாவை எவ்வளவாக விசுவாச நிலைக்கு உயர்த்தினார் என்பதை நினைவுகூராமலிருக்கிறீர்களா? அவர் அப்படிப்பட்ட மகத்தான ஒன்றை உங்களுக்கு மறுபடியும் செய்ய முடியாதா என்ன? அவர் அற்புதத்தை அல்லது வேறெதாவதொன்றை உங்களுக்கு செய்ய முடியாதா என்ன? ஐந்து கூடைகள்... நினைவுகூருங்கள் என்றார்.
195. உதாரணமாக... அவர்கள் சிவந்த சமுத்திரத்தைக் கடந்த போது, தேவன் சிவந்த சமுத்திரத்தை பிளந்து. வழியை உண்டாக்கி, அதன் வழியாக அவர்கள் நடந்து போகும்படி செய்தார். ஆனால் அவர்களுக்கு தண்ணீர் கிடைக்காத மாத்திரத்தில், அவர்கள் முறுமுறுத்தனர். அது சரியா? அவர்களுக்கு அப்பம் கிடைக்காத மாத்திரத்தில், அவர்கள், “எங்களுக்கு அப்பம் இல்லை என்று கூச்சலிட்டனர். பாருங்கள்? “சிவந்த சமுத்திரத்தில் நடந்த அற்புதத்தை நீங்கள் உணரவில்லையா? அதன் வழியாக நீங்கள் வரவில்லையா?' என்று மோசே கேட்டான். அவர்கள் சிவந்த சமுத்திரத்தின் அருகில் கடினமான சூழ்நிலையில் சிக்கிக் கொண்டபோது, “ஓ, நாங்கள் அங்கேயே செத்திருக்க வேண்டும். எகிப்தியர் எங்களைத் துரத்திக் கொண்டு வருகிறார்கள். நாங்கள் என்ன செய்வோம்?” என்று அவர்கள் கூச்சலிட்டனர்.
196. அப்பொழுது மோசே, 'பூமியை அங்கே வாதைகளால் வாதித்தவர் யார்? கோசேனில் சூரியன் பிரகாசிக்கும்படி செய்தவர் யார்? என்று கேட்டான். பாருங்கள். அவைகளை நாம் நினைவில் கொண்டிருக்க வேண்டும். தேவன் தேவனாயிருக்கிறார் என்பதை நாம் நினைவுகூர வேண்டும். அல்லேலூயா! அவர் இன்னும் தேவனாயிருக்கிறார், அவர் நிச்சயமாக எதையும் செய்ய முடியும்.