197. இல்லை! இதை முதலில் எடுக்க முடியுமா என்று பார்க்கிறேன், 1 கொரிந்தியர்,வேகமாக, 1 கொரிந்தியர் 12ம் அதிகாரம், சரி, 27ம் வசனம்:
நீங்களே கிறிஸ்துவின் சரீரமாயும், தனித்தனியே அவயங்களாயுமிருக்கிறீர்கள்.
அடுத்த வசனம் என்ன? வெளிப்படுத்தல் 21:9. வெளிப்படுத்தல் 21ம் அதிகாரம் 9ம் வசனம். சரி, இங்கே உள்ளது.
பின்பு. கடைசியான ஏழு வாதைகளால் நிறைந்த ஏழு கலசங்களையுடைய அந்த ஏழு தூதரில் ஒருவன் என்னிடத்தில் வந்து: நீ இங்கே வா; ஆட்டுக்குட்டியானவருடைய மனைவியாகிய மணவாட்டியை உனக்குக் காண்பிக்கிறேன் என்று சொல்லி,
199. ஆம், கிறிஸ்துவின் சரீரம். பாருங்கள், கிறிஸ்துவின் சரீரம் நமது பாவங்களுக்காக நொறுக்கப்பட்டது. ஒரே ஆவியினாலே அந்த ஒரே சரீரத்திற்குள்ளாக நாம் ஞானஸ்நானம் பண்ணப்பட்டு, அதன் அங்கத்தினர்களாகிறோம். அந்த சரீரம் எங்கேயிருந்து... அடையாள ரீதியில் பேசுவோமானால், என் மனைவி எங்கிருந்து... ஏவாள் எங்கிருந்து வந்தாள்? ஆதாமின் சரீரத்திலிருந்து. அவள் அவனுடைய விலாவிலிருந்து எடுக்கப்பட்டாள். கிறிஸ்து.. அவள் அவனுடைய சரீரத்தின் பாகமாயிருந்தாள். அவன், “இவள் என் எலும்பில் எலும்பும், என் மாம்சத்தில் மாம்சமுமாய் இருக்கிறாள். இவளை நான் மனுஷி என்று அழைப்பேன்” என்றான். பாருங்கள்?
200. இப்பொழுது, கிறிஸ்துவின் சரீரம் இயேசுவின் சரீரத்திலிருந்து எடுக்கப்பட்டது. எனவே நாம் அவருடைய ஆவியாயும், மாம்சமாயும், எலும்பாகவும் இருக்கிறோம். பாருங்கள்? நாம் அவருடைய சரீரத்துக்குள் பிறந்திருப்பதனாலும், இங்குள்ள இந்த சரீரம் அவருக்குச் சொந்தமானதாயும், ஆனால் பாவத்தில் பிறந்திருந்ததனாலும், அவர் அதை மீட்டுக் கொண்டார். “அதை கடைசி நாட்களில் தேவன் எழுப்புவார், நான் அதற்குள் நித்திய காலமாய் வாசம் செய்வேன்” பாருங்கள்? அதுதான். சரி.
201. இப்பொழுது பார்ப்போம். இந்த கேள்வியின் கடைசி பாகம், “புதிய எருசலேம் ஆவிக்குரியதா? இல்லை, இல்லை, புதிய எருசலேம் தேவனிடத்தினின்று பரலோகத்தை விட்டு இறங்கி வருவதை யோவான் கண்டான். அது சபையின் பகுத்தறிதல் அல்ல. பாருங்கள்? அது... புதிய எருசலேம் தேவனிடத்தினின்று பரலோகத்தை விட்டு இறங்கி வருவதை யோவான் கண்டான் - வெளிப்படுத்தல் 21 (பாருங்கள்?). அது தன் புருஷனுக்காக அலங்கரிக்கப்பட்ட மணவாட்டியைப் போல ஆயத்தமாயிருந்தது.