202. அந்த பெண்மணி, இதற்கு கையொப்பமிட்டிருக்கிறாள். எனவே அது ஒரு பெண்மணி என்று (பாருங்கள்?) அவள் கையொப்பமிட்டுள்ளதால் என்னால் கூற முடிகிறது. ஆம், சகோதரியே. நீ பிறந்திருந்தால்... இப்பொழுது, இதை நான் உன்னிடம் கூறட்டும். பார், தற்காலிகமாக, சிறு விஷயங்களில், நாம் ஒவ்வொருவருமே ஒரு நாளில் பலமுறை பின் மாற்றம் அடைகிறோம். அது நமக்குத் தெரியும். நாம் ஒவ்வொருவருமே அதைக் குறித்து குற்றமுள்ளவர்களாயிருக்கிறோம்; நம்மில் எவருமே பிழையற்றவர் அல்ல. இந்த சரீரத்தில் நாம் உள்ள வரைக்கும், நாம் இன்னும்... ஜனங்கள் எவ்வளவுதான், “நான் பரிசுத்தமடைந்து விட்டேன், நான் அந்த ஸ்திரீயை முத்தமிடலாம், அல்லது அதைச் செய்யலாம்” என்று சொன்னாலும், அவர் பொய் சொல்லுகிறார்; அவரால் முடியாது. இப்பொழுது, அவ்வளவுதான்.
203. “கர்த்தாவே, நான் அதற்கு எவ்வளவு அருகாமையில் செல்ல முடியும் என்பதைக் காணட்டும்” என்று நான் கூற முயல்வதில்லை. அது “கர்த்தாவே, அதை விட்டு எவ்வளவு தூரம் நான் விலகியிருக்க முடியுமோ, அங்கு என்னை வைத்திரும்” என்பதாய் உள்ளது. பாருங்கள்? எவ்வளவு தூரம் உங்களால் விலகியிருக்க முடியுமோ, அவ்வளவு தூரம் விலகியிருங்கள். நீங்கள் இன்னும் மானிடர் என்பதை நினைவுகூருங்கள். பாருங்கள்?
204. மற்றும்... இப்பொழுது நீங்கள் ஏதாவதொரு தவறைச் செய்வீர்களானால்... நீங்கள் வேண்டுமென்று செய்யவில்லை... நீங்கள் கிறிஸ்தவராக, மறுபடியும் பிறந்த கிறிஸ்தவராக இருந்தால், நீங்கள் தவறு செய்ய எண்ணங்கொள்வதில்லை. உங்கள் எண்ணங்கள் மற்றும் எல்லாமே சரியாயிருக்கும். ஆனால் நீங்கள், ஏதாவதொரு தவறு செய்வீர்களானால், இந்த பெண் இங்கு சொன்னது போல, நீங்கள் அதில் தொடர்ந்து சென்று கொண்டேயிருந்து, இழக்கப்பட்டு, மரிக்கும்படி தேவன் விட்டு விடுவாரா, அல்லது நீங்கள் ஒப்புரவாகி, உங்களைத் திரும்பக் கொண்டு வருவாரா? அவர் உங்களைத் திரும்பக் கொண்டு வருவார்.
205. நீங்கள் ஏதாகிலும் தவறு செய்து. அது உங்களைக் குற்றப்படுத்தாமல், நீங்கள் அதில் தொடர்ந்து சென்று கொண்டிருப்பீர்களானால், நீங்கள் முதற்கண் இரட்சிக்கப்படவேயில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். அது உண்மை. நீங்கள் இரட்சிக்கப் படவேயில்லை; நீங்கள் ஏதோ ஒரு பாவனை விசுவாசத்தை கொண்டிருந்தீர்கள். நீங்கள் இரட்சிக்கப்படவேயில்லை. நீங்கள் இரட்சிக்கப்படும் போது, உங்களுக்கு வேறு ஆவி உள்ளது; உங்கள் சுபாவம் வித்தியாசமாகி விடுகிறது. நீங்கள் கிறிஸ்துவுக்குள் புது சிருஷ்டியாயிருக்கிறீர்கள், பழையவைகள் ஒழிந்து போய், அவை மரித்து மறதி என்னும் கடலில் புதைக்கப்படுகின்றன. பாருங்கள்?
206. மற்றும்... ஆனால் இந்த உலகத்தில் நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கையில், உங்களுக்கு எல்லாவிடங்களிலும் கண்ணிகள் வைக்கப்படுகின்றன, உங்கள் கண்களை கிறிஸ்துவின் மேல் வைத்து நீங்கள் நடந்து கொண்டிருக்கிறீர்கள். இதை ஞாபகம் கொள்ளுங்கள், நீங்கள் தவறு செய்வீர்களானால், ஒரு உண்மையான கிறிஸ்தவன் ஒப்புரவாகி விரைவில் திரும்பி வந்து விடுவான்.
207. பாருங்கள், பேழையிலிருந்து தேவன் காகத்தை வெளியே அனுப்பினார் - நோவா காகத்தை வெளியே அனுப்பினான். இப்பொழுது, அது யார்? அது ஒரு காகம். ஓ, ஆமாம், அது புறாவுடன் கூட ஒரே இடத்தில் உட்கார்ந்து கொண்டிருந்தது. அவையிரண்டுமே ஒரே இடத்தில் உட்கார்ந்து கொண்டிருந்தன; ஆனால் அவன் காகத்தை வெளியே அனுப்பின போது, நல்லது. அந்த... லட்சக்கணக்கான ஜனங்களின் உடல்கள் உப்பிப் போய், அழுகி, குதிரைகளும் மிருகங்களும் மூழ்கி செத்து, தண்ணீர் நாற்றமெடுத்திருக்கும் என்று எண்ணுகிறேன். முழு உலகமே அழிக்கப்பட்டது. அந்த செத்த பிணங்கள் தண்ணீரின் மேல் மிதந்து கொண்டிருந்தன. நோவா புறாவை வெளியே அனுப்பினான், ஏனெனில் சிறிது சூரிய வெளிச்சத்தை அவன் கண்டதாக எண்ணினான். தண்ணீர் மட்டம் இறங்கி விட்டதா என்று அறிய, அவன் காகத்தை வெளியே அனுப்பினான். ஆனால் காகமோ பறந்து பிணத்தின் மேல் இறங்கி, “என்னே, இது அருமையானது; மிகவும் நன்றாயுள்ளது” என்றது. பாருங்கள். அது பிணத்தை தின்று கொண்டிருந்தது. ஏன்? அதுதான் அதன் இயல்பு. அது ஒரு காகம். அது எவ்வளவு தான் புறாவுடன் உட்கார்ந்து கொண்டிருந்த போதிலும், அது எவ்வளவுதான் நோவாவின் பிரசங்கத்தைக் கேட்டிருந்த போதிலும், அது எவ்வளவு தான் இந்த சுத்தமான பறவையுடன் உட்கார்ந்து கொண்டிருந்த போதிலும், அது தொடக்கத்திலேயே ஒரு காகமாயிருந்தது. தன் நிறத்தைக் காண்பிக்க அதற்கு தருணம் கிடைத்த மாத்திரத்தில், அது காண்பித்து விட்டது.
208. ஆனால் அவன் புறாவை வெளியே அனுப்பினபோது, அது புறப்பட்டுச் சென்ற போது, வ்யூ, அதனால் சகிக்க முடியவில்லை. அது எங்கும் செல்ல முடியவில்லை, தன் பாதங்களை இளைப்பாறச் செய்ய அதற்கு இடம் எங்குமில்லை, எனவே அது பேழைக்கு திரும்பி வந்தது. அப்படித்தான் அது உள்ளது.
209. சில நேரங்களில், நீங்கள் என்ன செய்வீர்கள் என்று காண சிறிது நேரத்துக்கு நீங்கள் அவிழ்த்து விடப்பட்டிருக்கலாம். ஆனால் உங்களுக்கு புறாவின் சுபாவம் இருக்குமானால், உங்களால் காகத்தின் ஆகாரத்தை தின்ன முடியாது. அவ்வளவுதான், அது ஜீரணமாகாது; அவ்வளவுதான்.
210. நீங்கள் எங்கே செல்வீர்கள், நீங்கள் என்ன செய்வீர்கள்? நீங்கள் கிறிஸ்தவனாக இல்லாமல் போயிருந்தால் என்ன செய்திருப்பீர்கள் என்று எனக்குச் சொல்லுங்கள்! நான் கிறிஸ்தவனாக இல்லாமலிருந்தால், இன்று காலை நான் என்ன செய்திருப்பேன் என்று எனக்குச் சொல்லுங்கள்! என் தாயார் நினைவிழந்த நிலையில் மருத்துவமனையில் படுத்திருக்கும் போது, இந்த பிரசங்க பீடத்தில் நான் நின்று கொண்டு என்னால் பிரசங்கிக்க முடிந்து, நான் செல்லும் வழியில் சென்று, அதற்கு அதிக கவனம் நான் செலுத்தாதது போல் காணப்படுகிறதற்கு காரணமென்ன? ஏனெனில் என் தாயார் இரட்சிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியும். பாருங்கள்? அவர்கள் இரசிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று நானறிவேன். நான் விசுவாசித்திருக்கிறவர் இன்னாரென்று அறிவேன்; நான் அவரிடத்தில் ஒப்புக்கொடுத்ததை அவர் அந்நாள் வரைக்கும் காத்துக் கொள்ள வல்லவராயிருக்கிறாரென்று நிச்சயித்திருக்கிறேன்.
211. தாயார் இப்பொழுது என்ன செய்வார்கள்? ஒருக்கால் அவர்களுக்கு வாழ்நாள் பூராவும், “என்றாவது ஒரு நாள் நான் கிறிஸ்தவளாகி விடுவேன்' என்னும் நல்லெண்ணம் இருந்திருக்கக் கூடும். ஆனால் இப்பொழுது அவர்கள் நினைவிழந்த நிலையில் படுத்துக் கொண்டிருக்கும்போது, அவர்களால் எப்படி கிறிஸ்தவளாகியிருக்க முடியும்? அவர்கள் இப்பொழுது எப்படி கிறிஸ்தவளாகியிருக்க முடியும்? அவர்களுடைய பிள்ளைகள் என்ன செய்வார்கள்?
212. அன்று நாங்கள் அவர்களுக்கு க்ளுகோஸ் செலுத்த அவர்களைக் கொண்டு போன போது... அவர்களுடைய உடலில் உள்ள ஒன்றே ஒன்று க்ளூகோஸ் மட்டுமே. அவர்களால் விழுங்கமுடியவில்லை அவர்களுக்கு கைகால் முடங்கி விட்டது. அவர்கள், “பில்லி, இந்த ஒன்றை நீ அறிய வேண்டுமென்று விரும்புகிறேன்' என்றார்கள். அவர்கள் என்னைக் குறித்தும், அங்கு நின்று கொண்டிருந்த டீலோராஸைக் குறித்தும், அவர்களுடைய பிள்ளைகளைக் குறித்தும், என் சகோதரர்களில் சிலர் குடிப்பதைக் குறித்தும் பேசிக் கொண்டிருந்தார்கள்.
நான், “அவர்கள் உங்கள் இருதயத்தை உடைத்து விட்டார்கள்” என்றேன்.
அவர்கள், “ஆனால் பில்லி, இவையனைத்தும் ஒரு தாயாரின் வாழ்க்கை சக்கரத்தில் சுழலும் காரியங்களே. ஆனால் நான் இரட்சிக்கப்பட்டு விட்டேன், நான் போக ஆயத்தமாயிருக்கிறேன்” என்றார்கள்.
213. நான், “அம்மா, நீங்கள் ஜெபர்ஸன்வில் தொடங்கி ஊடிகா வரைக்கும் விஸ்தாரமுள்ள ஒரு அரண்மனையை எங்களுக்கு விட்டு சென்றாலும்.. நீங்கள் போய் விட்ட பிறகு நாங்கள் சண்டை போட்டுக் கொள்ள (அப்படித்தான் அது நடக்கும்) ஒரு கோடி டாலர்களை வைத்து விட்டுச் சென்றாலும், நீங்கள் எங்களுக்கு வைத்துப் போகும் மிகப் பெரிய பொக்கிஷத்துக்கு அது ஈடாகாது. நதிக்கு அப்பாலுள்ள அந்த தேசத்தில் நாங்கள் உங்களை மறுபடியும் காண்போம் என்னும் உறுதியை எங்களுக்கு நீங்கள் விட்டுச் செல்கிறீர்கள்” என்றேன். அது உண்மை. பாருங்கள்?
214. நீங்கள் இரட்சிக்கப்பட்டிருக்கிறீர்கள், கிறிஸ்து நம்மை இரட்சித்திருக்கிறார் என்பதற்காக நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்... நாம் பின் மாற்றமடையக் கூடும்; நாம் தவறு செய்யக் கூடும்; நம்மனைவருக்கும் ஏற்றத்தாழ்வு உண்டு; ஆனால் உங்கள் ஆத்துமாவில், நீங்கள் ஏதாவதொன்றைச் செய்யும்போது, உடனே உங்களில் ஏதோ தவறு ஏற்பட்டு விடுகிறது; அதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள். அது தான் குதித்து ஓடி விடுவதற்கான நேரம். அதிலிருந்து விலகிச் செல்லுங்கள்.
215. இன்று நீங்கள் இங்கிருந்து வெளியே செல்லுகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். யாராவது ஒருவர் உங்களிடத்தில் வந்து, “நீ உருளும் பரிசுத்தரில் ஒருவன் என்று அவர்கள் என்னிடம் சொல்லுகிறார்கள்' என்று சொல்லுகிறார் என்று வைத்துக் கொள்வோம். சாத்தான் உடனே உங்களிடம், “அவனை கன்னத்தில் அறை என்கிறான்.
216. “நான் உருளும் பரிசுத்தனா என்பது எனக்குத் தெரியாது. நான் ஒரு கிறிஸ்தவன்” என்று சொல்லுங்கள். பாருங்கள்? தீமையை நன்மையினால் சந்தியுங்கள். இதை ஞாபகம் கொள்ளுங்கள், நீங்கள் தீமையை நன்மையினால் சந்திக்கும்போது, தீமை நன்மைக்கு முன்பாக நிற்க முடியாது. அதனால் முடியாது.
217. நான் ஒரு மிஷனரி, நான் உலகம் முழுவதும் சென்று, பலவித தீமைகளை கண்டிருக்கிறேன் - பலவித மந்திரவாதிகள், கொள்கைகள், பலவித பிசாசு வழிபாடு, ஓ, நான் நினைத்துப் பார்க்கக் கூடிய எல்லாமே. தீமையை நன்மை எப்பொழுதும் வெல்கிறது என்பதை நான் கண்டிருக்கிறேன். –
218. கவனியுங்கள், இரவு எவ்வளவு இருளாயிருந்தாலும் எனக்குக் கவலையில்லை; உங்களால் உணர முடிகின்ற அளவுக்கு அது இருளாயிருக்கக் கூடும். உங்கள் கைகளை நீங்கள் உயர்த்தி எந்தவிதமான நிழலையும் காண முடியாமல் இருக்கக் கூடும். ஆனால் மிகச் சிறிய வெளிச்சம் கூட அந்த இருளை அம்பலப்படுத்தி விடும். நிச்சயமாக, அப்படித்தான் மரணத்தின் சமுகத்தில் ஜீவன் செய்கிறது. அப்படித்தான் தீமையின் சமுகத்தில் நன்மை செய்கிறது. அப்படித்தான் சந்தேகத்தின் சமுகத்தில் விசுவாசம் செய்கிறது, அது அதை சிதறடித்து விடுகிறது.
219. சூரியன் பிரகாசிக்கும்போது - ஆசீர்வாதம் பிரகாசிக்கும் போது - இரவு எவ்விதம் இங்கு தங்கியிருக்க முடியும்? இரவு எங்கு சென்று விடுகிறது? அது இருக்க முடியாது. இரவுக்கு என்ன நேர்ந்தது? பன்னிரண்டு மணி நேரத்துக்கு முன்பாக இந்த கூடாரத்தில் இருந்த இருள் இப்பொழுது எங்கே? இந்த சுவர்களுக்குள் பரந்து கிடந்த அந்த இருள் இப்பொழுது எங்கே? அது இப்பொழுது இல்லை, அது மறைந்து விட்டது. ஏன்? வெளிச்சம் உள்ளே வந்தது. வெளிச்சம் உள்ளே வரும்போது, இருள் போகத்தான் வேண்டும். ஆம், ஐயா!
220. இரவிலே திரியும் கரப்பான் பூச்சிகள், வண்டுகள் போன்றவைகளை எடுத்துக் கொள்ளுங்கள். சூரியன் எழும்பினால் அல்லது வெளிச்சம் பிரகாசிக்கத் தொடங்கினால், அவை எவ்விதம் இருளுக்கு ஓடி வருகின்றன என்பதை கவனியுங்கள். சுவிசேஷமும் அதை தான் செய்கிறது. அது பிரகாசிக்கும்போது, உங்களை “உருளும் பரிசுத்தர் என்று அழைக்க விரும்புகிறவர்களுக்கு என்ன நேரிடுகிறது? உங்களை கேலி செய்பவர்களுக்கு என்ன நேரிடுகிறது? வெளிச்சம் பிரகாசிக்கத் தொடங்கினவுடனே, அவர்கள் மெல்ல இருளுக்குச் சென்று விடுகின்றனர். ஏனெனில் அவர்கள் இருளின் பிள்ளைகள். ஆனால் வெளிச்சத்தின் பிள்ளைகளோ வெளிச்சத்தில் நடக்கின்றனர்.
221. நாமோ தேவனுடைய கிருபையினால் வெளிச்சத்தின் பிள்ளைகளாயிருக்கிறோம். எனவே வெளிச்சம் பிரகாசித்தபோது, நாம் தேவனுக்கு நன்றி செலுத்தி, திறந்த கண்களுடன் நடந்து சென்று, மாம்சக் கண்கள் காணக்கூடாதவைகளை நாம் பார்த்தோம். ஏன்? விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப் படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது. ஆமென்! அது எனக்குப் பிரியம்.