இல்லை…!
29. பாருங்கள், இவர் என்ன கூறுகிறார் மற்றும் இவருடைய கேள்வியை நீங்கள் புரிந்து கொள்ளவில்லை. அவர்கள் விவாகம் செய்யமுடியாது. பாருங்கள், அது வேதாகமத்தில் முரண்பாட்டைக் கொண்டு வரும், வேத வசனங்கள் ஒன்றுக் கொன்று முரண்பாடானது அல்ல. புரிகின்றதா? இப்பொழுது, நாம்... நீங்கள் வேதாகமத்தை (ஒரு வசனத்தை வாசிப்பதனால் மாத்திர மே) அது என்ன கூறவேண்டுமென்று நீங்கள் விரும்புகிறீர்களோ அந்த விதமாகவே உங்களால் செய்யமுடியும் - உங்கள் கருத்துக்கு பொருத்தமான விதத்தில் பொருந்தும்படியாக. ஆனால் அவை எதைக் குறித்து பேசுகின்றதோ அந்த கருத்தைத்தான் நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டியவர்களாக இருக்கிறீர்கள்.
30. இந்த விதமாக இருக்கலாம்- நான் சகோதரன் நெவிலுடன் பேசிக் கொண்டிருக்கையில் நான் போர்ட் (Board) என்னும் வார்த்தையை கூறுவதை நீங்கள் கேட்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம்.
31. அதன் பிறகு நீங்கள் திரும்பிச் சென்று “அவர் எதைக் குறித்து பேசிக் கொண்டிருக்கிறார் என்று உங்களுகத் தெரியுமா? இன்றிரவு நாம் அவரை சோர்ந்து போகும் அளவு “போர்” (Bored) அடித்து விட்டோமா” என்று கூறுவீர்கள். பாருங்கள்? ஆனால் மற்றொரு நபரோ, “நீ கூறுவது தவறு, அவர் என்ன கூறமுற்பட்டார் என்றால், மரப்பலகை (Board, போர்ட்) கட்டணம் அவர் செலுத்த வேண்டுமாம், அவர் அதற்கான பணத்தை செலுத்தப் போகிறார்” என்று கூறுவார். இன்னொரு நபர், “ஓ, இல்லை, அவர் அதை அர்த்தம் கொள்ளவில்லை, வீட்டின் பக்கவாட்டில் உள்ள அந்த தடித்த அட்டையைத் தான் (போர்ட், board) குறிப்பிட்டார்” என்று கூறினார். அடுத்த நபரோ, “இல்லவே இல்லை, என்னவென்று நான் உங்களுக்கு கூறுகிறேன், அவர் துளையிட்டு (boring, போரிங்) ஒரு ஓட்டையை போடுவதைக் குறித்து அவர் விளக்க முயற்சித்துள்ளார் என்று நான் நம்புகிறேன்” என்று கூறினார். பாருங்கள்? பாருங்கள்?
32. நீங்கள் உரையாடலை கவனிக்க வேண்டும், அப்பொழுது தான் நீங்கள் எதைக் குறித்து பேசுகிறீர்கள் என்பதை அறிந்தவர்களாயிருப்பீர்கள், ஏனெனில் இங்கே பவுல் சில சமயங்களில் அவர்களுடைய கேள்வியையே பதிலாக அளிக்கின்றான்.
33. சில சமயங்களில் அவர்கள், “வேதாகமம் தனக்குத் தானே முரண்பாடாக அமைந்துள்ளது” என்று கூறுகிறார்கள். நான் அதைப் பார்க்க விரும்புகிறேன். அவ்விதமாக அது முரண்பாடாக இல்லை. முப்பத்திரண்டு வருடங்களாக இந்த பிரசங்க பீடத்தின் பின்னால் நான் நிற்கின்றேன், இன்னும் ஒரு முரண்பாட்டைக் கூட நான் காணவில்லை. பாருங்கள்? அது தனக்குத்தானே முரண் பாடாக அமையவில்லை! அது... அதை முரண்பாடாக ஆக்குவது நீங்கள்தான், பாருங்கள். அதை புரிந்து கொள்வதில்லை. பரிசுத்த ஆவியானவர்தாமே வார்த்தைக்குரிய வெளிப்பாட்டை வெளிப் படுத்துபவர் ஆவார். ஆதலால் அந்த முரண்பாடு...
34. பாருங்கள், பவுல் அவர்களுக்கு எழுதுகின்றான், “நீங்கள் இந்த - இந்த காரியத்தை கேட்டீர்கள்” என்கின்றான். நீங்கள் கேட்டீர்கள் என்று மாத்திரம் அவன் கூறவில்லை, அவன் அதையே கூறுகின்றான். பிறகு அவன் திரும்பவுமாக அவர்களுக்கு பதிலளிக்கின்றான், அது அவர்கள் கேட்டதற்கு முரண்பாடாக இருந்தது.
35. அவர்கள், “நாங்கள் இதை, இதை மற்றதை செய்கின் றோம்” என்று கேட்டனர். பவுல் திரும்பி ஏதோ ஒன்றைக் கூறுகிறான், பாருங்கள், அது ஒரு முரண்பாடு போலக் காணப் படுகிறது. அது அப்படி அல்ல. நீங்கள் முழு வசனத்தையும் முழு அதிகாரத்தையும், வாசிப்பீர்களானால், அவர்கள் அவனுக்கு என்ன எழுதினார்களோ அதற்கு அவன் விளக்கம் அளிக்க முயற்சிப்பதை நீங்கள் காண்பீர்கள்.
36. இப்பொழுது, இதை நாம் பார்ப்போமாக, அது... அந்த விதமாகத்தான் நீங்கள் வேதாகமத்தில் முரண்பாடுகளாக புரிந்து கொள்கிறீர்கள், ஆனால் அது அவ்விதமாக அல்ல. இப்பொழுது இங்கே, அந்த நபரானவர் தெரிந்து கொள்ள விரும்புகிற, அல்லது அவர்கள் எதை அறிந்து கொள்ள விரும்புகின்றனரோ அதைப் பற்றிய ஒரு கேள்வி:
கர்த்தருக்குள்ளாக இருக்கின்ற ஒரு சகோதரனோ அல்லது சகோதரியோ, மறுபடியும் மறுவிவகாம் செய்ய தங்கள் துணையை விட்டுவிட்டு, விவாகம் அல்லது மறுவிவாகம் செய்துகொள்ளலாமா? செய்யக் கூடாது
37. இப்பொழுது நாம்... 10வது வசனத்திலிருந்து ஆரம்பிப் போம்:
விவாகம் பண்ணிக் கொண்டவர்களுக்கு நானல்ல, கர்த்தரே (பாருங்கள்?) கட்டளையிடுகிறதாவது: மனைவியானவள் தன் புருஷனை விட்டுப் பிரிந்து போகக் கூடாது: (பாருங்கள்)
பிரிந்து போனால் அவள் விவாகமில்லாதிருக்கக்கடவள், அல்லது புருஷனோடே ஒப்புரவாகக்கடவள்; புருஷனும் தன் மனைவியைத் தள்ளிவிடக்கூடாது. (அதுதான் கர்த்தருடைய கட்டளைகள், பாருங்கள்) மற்றவர்களைக் குறித்துக் கர்த்தர் அல்ல, நானே சொல்லுகிறதாவது: (பாருங்கள்) சகோதரனொருவனுடைய மனைவி அவிசுவாசியாய் இருந்தும்...
38. இப்பொழுது, அவனுடைய பொருளைக் கவனியுங்கள், பாருங்கள். நீங்கள் இதற்கு முன்பிருந்து, அல்லது அதிகாரம் முழுவதுமாக நீங்கள் வாசித்துப் பார்த்தால், “நாம் ஒரு மனைவியை மணந்து, அவள்... நாம்... நான் விவாகம் செய்து, பிறகு நான் ஒரு விசுவாசியாகும் போது, என் மனைவியும் ஒரு விசுவாசியாக இல்லையெனில், நான் அவளைத் தள்ளி விடுவேனாக”. ஓ, இல்லை. அது அவ்வாறாக இல்லை. அவ்விதமாக நீங்கள் செய்யவே கூடாது. பாருங்கள்? புரிகின்றதா?
...சகோதரனொருவனுடைய மனைவி அவிசுவாசியாயிருந்தும், அவனுடனே வாசமாயிருக்க அவளுக்குச் சம்மதமிருந்தால், அவன் அவளைத் தள்ளிவிடாதிருக்கக்கடவன். (அது, விவாகத்தின் காரணத்தால் அல்ல, அது அவிசுவாசத்தின் காரணத்தால். திரும்பவும் “மறுவிவாகம் செய்ய அல்ல. பாருங்கள், அவளுடனே தரித்திருத்தல்) அப்படியே ஒரு ஸ்திரீயினுடைய புருஷன்
அவிசுவாசியாயிருந்தும், அவளுடனே வாசமாயிருக்க அவனுக்குச் சம்மதமிருந்தால், அவள் அவனைத் தள்ளிவிடாதிருக்கக்கடவன் (அது சரியே! பாருங்கள்) (ஆங்கில வேதாகமத்தில், அவள் அவனை விட்டுப் பிரிந்து செல்லாதிருக்கக்கடவள், Let her not leave him என்று இருக்கிறது - தமிழாக்கியோன்)
என்னத்தினாலெனில், அவிசுவாசியான புருஷன் தன் மனைவியால் பரிசுத்தமாக்கப்படுகிறான், அவிசுவாசியான மனைவியும் தன் புருஷனால் பரிசுத்தமாக்கப்படுகிறாள். இல்லாவிட்டால் உங்கள் பிள்ளைகள் அசுத்தமாயிருக்குமே; இப்பொழுதோ அவைகள் பரிசுத்தமாயிருக்கின்றன. ஆகிலும் அவிசுவாசி பிரிந்துபோனால் பிரிந்து போகட்டும்...
39. இப்பொழுது, அந்த அவிசுவாசி, “இனிமேல் உன்னோடு நான் வாழப்போவதில்லை, நீ ஒரு கிறிஸ்தவனாகிவிட்டாய்” என்று கூறினால், ஒரு மனிதன் தன்னுடைய மனைவியிடம், “நீ இரட்சிக்கப்பட்டு, ஒரு காலத்தில் நாம் இருந்த உலகத்தை விட்டு நீ வெளியே செல்லப் போவதால், நான் உன்னை விட்டு பிரிந்து செல்லப்போகிறேன்” என்று கூறுவானானால், அதைக் குறித்து உன்னால் ஒன்றுமே செய்ய முடியாது. அவன் பிரிந்து செல்லட்டும். பாருங்கள்?
40. அல்லது அந்த பெண் தன்னுடைய கணவனிடம் “நான் அந்த உருளும் பரிசுத்தர் கூட்டத்தினருடன் சேரமாட்டேன். நான் அதைச் செய்ய மாட்டேன்! நான் உங்களை விட்டுப் பிரிந்து சென்று விடுகிறேன்” என்று கூறுவாளானால், நீ சபையை விட்டு விடாதே, அவள் பிரிந்து செல்ல விட்டுவிடு. பாருங்கள்?
41. இந்த விதமான ஒரு விஷயத்தில் ஒரு சகோதரனோ அல்லது ஒரு சகோதரியோ அடிமைப்பட்டவர்கள் அல்ல, அது என்னவெனில், உங்களுடைய துணை அதற்காக உங்களை தள்ளிப்போட்டு, பிரிந்து போக விரும்புவது. நீங்கள் இன்னுமாக அவர்களைப் பற்றிக்கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர்கள் உங்களை விட்டு பிரிந்து போக விரும்புவது, கிறிஸ்துவின் காரணமாக உங்களை அவர்கள் விட்டுவிடப் போகிறார்களென்றால், அவர்கள் செல்லும்படிக்கு விட்டு விடுங்கள். ஆனால் நீங்கள் மறுவிவாகம் செய்துக் கொள்ளக் கூடாது! “ஆனால் சமாதானமாயிருக்கும்படிக்கே தேவன் நம்மை அழைத் திருக்கிறார்”. பாருங்கள்? இப்பொழுது, நீங்கள் திரும்பவுமாக மறுவிவாகம் செய்து கொள்ளலாம் என்றல்ல, அவன் ஏற்கெனவே அதைக் கூறிவிட்டான், ஆனால் நீங்கள் ஒரு அவிசுவாசிக்கின்ற புருஷனோ அல்லது அவிசுவாசிக்கின்ற மனைவியோ அவர்களுக்கு வாழ விருப்பமில்லையெனில், நீங்கள் அவர்களுடன் வாழ வேண்டிய அவசியம் இல்லை.
42. அவர்கள் உங்களுடன் வாழ விரும்பி “பாருங்கள், நீங்கள் சபைக்குச் செல். அங்கே செல்ல நீங்கள் விரும்பினால், அது உன் காரியம். உங்கள் சபைக்கு நீங்கள் செல்ல விரும்பினால், நீ செல். என்னைப் பொறுத்தவரையில் நான் அதை விசுவாசிப்பில்லை. மேலும் நான் உங்களுக்காக எதை வேண்டுமானாலும் செய்வேன், நான் உங்களுடைய வழியில் குறுக்கே நிற்கமாட்டேன், நீ சபைக்கு செல்” என்று கூறுவார்களானால், அப்பொழுது நீங்கள் அப்படியே வாழ வேண்டும், ஏனெனில் உங்களுடைய பரிசுத்தமாக்கப்பட்ட ஜீவியம் அந்த விசுவாசியை (believer) பரிசுத்தப்படுத்தி, அவர்கள் விசுவாசிக்கும்படிக்குச் செய்யும். பாருங்கள்? மனிதனோ அல்லது ஸ்திரீயோ அது இரண்டு பக்கங்களிலும், பாருங்கள். நீங்கள்...
43. ஆனால் இப்பொழுது நீங்கள், “நான்... சகோதரன் பிரன்ஹாம், நான் விவாகம் செய்து கொண்டேன். என்னுடைய மனைவி ஒரு அவிசுவாசியாயிருக்கிறாள், ஆனால் நான் விவாகம் செய்யத்தக்கதாக ஒரு சகோதரி இங்கே இருக்கின்றார்கள். நான் இந்தப் பெண்னை விட்டுவிட்டு அந்த பெண்னை விவாகம் செய்யப் போகிறேன்” என்று கூறலாம். ஓ, இல்லை! நிச்சயமாக கூடாது! மரணம் உங்களைப் பிரிக்கும்வரை என்று தான் உங்களுடைய வாக்கை நீங்கள் அளித்திருக்கிறீர்கள், உங்கள் வாழ்க்கைத் துணை மரிக்கும் வரைக்கும் (வேதாகமத்தில்) நீங்கள் மறுவிவாகம் செய்து கொள்ள உங்களுக்கு அனுமதி ஒன்று கூட இந்த உலகத்தில் கிடையாது. அது சரியே. இருக்கின்ற ஒரே அடிப்படை! வாழ்க்கைத் துணை மரித்தால் தவிர மறுவிவாகம் செய்து கொள்வது என்பது எங்குமே கிடையாது. அவ்வளவுதான். பாருங்கள்?
44. வேதாகமத்தை தனக்குத் தானே முரண்பாடாக ஆக்க உங்களால் முடியாது. ஆகவே வசனங்களை முன்னும் பின்னுமாக வாசியுங்கள், அப்பொழுது அவன் எதைக் குறித்துப் பேசுகிறான் என்பதை நீங்கள் கிரகித்துக் கொள்வீர்கள். இப்பொழுது, இது என்னவென்றால்... பாருங்கள்:
அப்படியென்றால் ஒரு சகோதரியோ அல்லது ஒரு சகோதரனோ மறுவிவாதம் செய்து கொள்ளலாமா?
45. இல்லை ஐயா. பாருங்கள் அவன் அதை முதலில் விளக்கினான். பாருங்கள்:
...விவாகம் பண்ணிக் கொண்டவர்களுக்கு நானல்ல, கர்த்தரே கட்டளையிடுகிறதாவது; மனைவியானவள் தன் புருஷனை விட்டுப் பிரிந்து போகக்கூடாது. பிரிந்து போனால் அவள் விவாகமில்லாதிருக்கக்கடவள், அல்லது புருஷனோடே ஒப்புரவாகக்கடவள்... (பாருங்கள்?)
46. ஒரு விசுவாசி திரும்பவுமாக மறுவிவாகம் செய்யும்படிக்கு உயிரோடிருக்கின்ற வாழ்க்கை துணையுடன் ஒப்புரவாகுதல் என்பதைப் போன்ற காரியங்கள் கிடையவே கிடையாது.