சரி. நாம் இப்பொழுது திருப்புவோம்... வேதாகமங்களை வைத்திருந்து, பார்க்க விரும்புகிற ஜனங்களாகிய நீங்கள், என்னவென்று நாம் பார்ப்போம்... இதை பார்க்க எனக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை, ஆனால் ஏதோ ஒரு விதமான பதிலை நாம் காண்போம் என்று நான் நினைத்தேன். இதோ அது.
அந்நா... (ஓ, ஆமாம்!) அது நடக்கும்... அந்நாளில் ஏழு ஸ்திரிகள் ஒரே புருஷனை பிடித்து: நாங்கள் எங்கள் சொந்த ஆகாரத்தை புசித்து எங்கள் சொந்த வஸ்திரத்தை உடுப்போம்; எங்கள் நிந்தை நீங்கும்படிக்கு உன் பேர் மாத்திரம் எங்கள் மேல் விளங்கட்டும் என்பார்கள்.
நல்லது, சகோதரனே, அது அந்த விதமாகவே மிக மோசமாக இப்பொழுது உள்ளது. நம்முடைய தேசத்திற்கு எப்படிப்பட்ட ஒரு கீழ்த்தரமான காரியமானது சம்பவித்திருக்கின்றது! என் அருமை கிறிஸ்தவ நண்பனே, இதைநான் கூறட்டும். ஒவ்வொருவருக்கும் தேவ மரியாதையுடன் இதை நான் கூறுவேனாக: அப்படியொன்று... சரித்திரம் படித்திருக்கின்ற ஜனங்களாகிய உங்களுக்கு, காலங்களினூடாக ஒவ்வொரு அருமையான தேசமும் ஒழுக்க நெறி தவறுதல், சரியாக பின்புறம் செல்லுதல் இவற்றில் விழுந்து போன அதே பாதையில்தான் சரியாக நாம் இப்பொழுது இருக்கிறோம்.
47.இக்காலை நான் கூறின விதமாக... (அதை மறுபடியும் கூறுவதற்காக என்னை மன்னிக்கவும்). வெளிநாடுகளில் ஒரு மனிதன் என்னிடம் வந்து சகோதரன் பிரன்ஹாம், எந்த விதமான ஸ்திரீகளை நீங்கள் எல்லாரும் அங்கே கொண்டிருக்கிறீர்கள்? நல்லது, “நீங்கள் பாடுகின்ற எல்லா பாடல்களும், உங்கள் ஸ்திரீகளைக் குறித்த ஏதோ ஒரு பழைய கீழ்த்தரமான பாடல்களாய் இருக்கின்றனவே'' என்றார். அது தான். எல்லாரும் ஏதோ ஒரு எல்லாம் கலந்த கதம்ப கூளம் போன்ற - போன்ற - போன்ற... பாடுகிறார்கள்.
நல்லது, அது என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? சில வார்த்தைகளைக் கொண்டு நான் அதை உங்களிடம் கூறட்டுமா? உலகமானது இந்த விதமான நிலையை அடைந்துள்ளது, ஏனெனில் இது ஒரு நவீன சோதோம், கொமோரா ஆகும். சரியாக! கலிபோர்னியாவில் நான் ஒரு செய்தித்தாளை எடுத்தேன். ஆண்புணர்ச்சிக்காரர்களின் எண்ணிக்கை பெருகிக் கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு வருடம் எத்தனை ஆயிரம் பேர்களாக அதிகரிக்கிறது என்று நான் மறந்துவிட்டேன். அவர்களுடைய இயற்கையான விருப்பமாகிய - கணவன் மனைவிக்கிடையே, இருக்கின்ற ஒன்று, அது ஜனங்களைவிட்டு அகன்று கொண்டிருக்கிறது. அவ்விதம் நடந்தேறும் என்று தேவன் கூறியவாறு சரியாக அதே விதத்தில் நடக்கின்றது. ஆகவே தங்களுடைய சொந்த...
48.நீங்கள் காண்பீர்களானால்... புகழ் யாருக்கு கிடைக்கிறதென்று பாருங்கள். உங்கள் வானொலியில் கேட்டுப் பாருங்கள், அல்லது தொலைகாட்சிகள், அல்லது எதை நீங்கள் வைத்திருந்தாலும் சரி, அதைப் பாருங்கள். அது மிக மோசமான, மற்றும் கீழ்த்தரமான... ஏதோ ஒரு பெண் அல்லது அதைப் போன்ற ஏதோ ஒரு பாடல் இருக்கிறது, அது தான் தகாவழிப் பேர்போன (notariety) ஒன்றைப் பெற்றுக் கொள்கிறது.
நாம் நமது பெண்களுக்காக கவலைகொள்ளாத - அல்லது நம்முடைய பெண்கள் தங்களுக்காக அக்கறை கொள்ளாமல் உள்ளனரோ என்பதை போன்ற ஒரு நிலைக்கு அது வந்துவிட்டது. அதுதான். ஒரு பெண் தன்னைத் தானே சரியாக வைத்துக் கொள்வாளானால், மனிதனும் சரியாகத்தான் நடந்து கொள்ள வேண்டியவனாயிருக்கிறான். இது மனிதனுக்காக வாதிடுகின்ற ஒன்றல்ல, ஆனால் அது உண்மை என்று எனக்குத் தெரியும். ஆம் ஐயா! ஆனால் அது என்ன? அது ஒரு - ஒரு மிக மோசமான நிலையில் இருக்கின்றது, அது அவ்வாறே இருந்து கொண்டிருக்கின்றது. அது வேத வசனங்களுக்கு ஒத்திருக்கின்றது, அவ்விதமாகத்தான் இருக்கும் என்று வேதாகமம் கூறியிருக்கிறது. ஆகவே எப்படி நாம் ஒரு எழுப்புதலைக் கொண்டிருக்க முடியும்? எப்படி நாம் ஒரு எழுப்புதலைக் கொண்டிருக்க முடியும்?
49.கவனியுங்கள், கிறிஸ்தவ நண்பர்களே. இன்னும் சிறிது நேரம் இருக்கையில் நான் உங்களை ஒன்று கேட்கட்டும். நாம் பில்லி கிரஹாமைக் கொண்டிருக்கிறோம். நாம் ஜாக் ஷீலரைக் கொண்டிருக்கிறோம். எல்லா விதமான மத சம்பந்தமான அசைவுகள் உலகம் முழுவதுமாக நாம் கொண்டிருக்கிறோம். அவைகள் அமெரிக்கா முழுவதுமாக கடந்த ஆறு அல்லது ஏழு ஆண்டுகளாக முடிகின்ற அளவிற்கு வேகமாக ஓடிக் கொண்டிருக்கின்றது, ஆனால் எழுப்புதல் இல்லை. ஏன்? கதவுகள் அடைபடுகின்றன. இக்காலை நான் கூறின விதமாக, குளத்திலிருந்து ஒவ்வொரு மீனையும் நாம் வலைவீசி பிடித்திருக்கிறோம். ஒருக்கால் ஒன்று அல்லது இரண்டு எங்கேயோ ஒட்டிக் கொண்டிருக்கிறது.
பில்லி கிரஹாம் நடத்திய கூட்டத்தில் (பாஸ்டன் அல்லது எங்கோ என்று நான் நம்புகிறேன்) ஆறு வாரங்களில் இருபதாயிரத்திற்கும் மற்றும் முப்பதாயிரத்திற்கு இடையே அவ்வளவு எண்ணிக்கையில் மனந்திரும்பினார்கள் என்று கூறினார். சில வாரங்கள் கடந்து அவர்கள் சென்ற போது இருபது போர்களைக் கூட அவர்களால் கண்டு பிடிக்க முடியவில்லை. அதைக் குறித்து சிந்தியுங்கள்! சகோதரனே, அது ஏறக்குறைய முடிந்து போனது. இங்கே ஒன்றை என்னால் கூறமுடியும். பாருங்கள்?
50.வருவேன் என்று தேவன் உரைத்த நாட்களில் நாம் ஜீவித்துக் கொண்டிருக்கிறோம். நாம் ஜீவிக்கும் நேரமானது, மனிதர்... அதைக் குறித்து நாம் முயற்சிப்பதோ அல்லது சிந்திப்பதோ என்பதல்ல, நாம் முன்குறிக்கப்பட்டிருக்கிறோம் என்று தேவ வசனம் கூறுகின்றது. அது சரி. தேவன் எதை அழைத்திருக்கின்றாரோ அது தேவனிடம் வந்து சேரும்; தேவன் எதை அழைக்கவில்லையோ அது தேவனிடத்திற்கு வராது. தேவன் அழைக்கின்றார், அவர்கள் அழைப்புகளை ஏற்றுக் கொள்ள மறுக்கின்றனர்; அவர்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர்... இப்பொழுது, எந்த ஒருவரையும் தேவன் ஆக்கினைக்குள்ளாக்குகிறார் என்று நான் கூறவில்லை. எல்லாரும் - எந்த ஒருவரும் அழிந்து போக வேண்டுமென்று அவர் விரும்புவதில்லை, ஆனால் எல்லாரும் மனந்திரும்ப வேண்டுமென்று அவர் விரும்புகிறார். ஆனால் அவர் தேவனாக இருக்க வேண்டியதால், அவர்கள் வரமாட்டார்கள் என்று அவர் - அவர் துவக்கத்திலேயே அறிந்திருந்தார். ஆனால் இன்னுமாக அவர்களுக்கு ஒரு தருணத்தை அளிக்கிறார், ஆனால் அவர்கள் வருவதில்லை.
எப்படி... அவர் அதை அறியாதிருப்பாரானால், நாம் குதிரைகள் இல்லாத வண்டிகளை நாம் வைத்திருப்போம் என்று எப்படி அவர் அறிந்திருந்தார்? நாம் இப்பொழுது கொண்டிருக்கிறதைப் போல இந்த காலங்கள் வரும் என்று எப்படி அவர் அறிந்திருந்தார்? அவர் ஏன், “மனிதன் துணிகரமுள்ளவனாயும், இறுமாப்புள்ளவனாயும், சுகபோகப் பிரியனாயும் இருப்பான் என்று கூறினார்? துவக்கத்திலிருந்து இந்த எல்லா மற்றக் காரியங்களும் வரும் என்று எல்லா தீர்க்கதரிசிகளும் ஏன் முன்னுரைத்தனர்? தேவன் எல்லாவற்றையும் அறிந்திருந்தார். அது என்னவாக இருக்குமென்று அவர் அறிந்திருக்கிறார். காலங்களினூடாக தேவன் மனிதனை நோக்கிப் பார்த்தார். ''அவர்கள் வரமாட்டார்கள்'' என்று கூறினார். அவர்கள் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்பட்டிருக்கின்றனர், ஏனெனில் அவர்களாகவே அதைத் தெரிந்து கொண்டனர். ஆமென். இதோ புரிகின்றதா.
51.என் சகோதரனே, சகோதரியே நான் விசுவாசிக்கிறேன், (நான் இதை தேவ மரியாதையுடனும் என்னுடைய இருதயத்தில் தேவ பயத்தை கொண்டவனாகவும் கூறுகிறேன்), அமெரிக்கா மூழ்கிவிட்டது என்று நான் விசுவாசிக்கிறேன். அவள் ஒழுங்கு குலைந்து போயிருக்கிறாள். அவள் மிகவும் கீழான நிலைக்கு சென்றுவிட்டாள். அது பரிதாபகரமானதாகும்.
நான் இந்த வேத வசனத்திற்கு பதிலளிக்கையில் - நான் கூறுகையில் இங்கு சற்று சிந்தித்துப் பாருங்கள், ஏழு ஸ்திரீகள் ஒரு மனிதனை பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். முதலாம் உலகப் போரில் - இரண்டாம் உலகப் போரில் செய்தித்தாளிலிருந்து ஒரு பாகத்தை நான் வெட்டியெடுத்து வீட்டில் வைத்திருக்கிறேன். நீங்களே அதைப் வாசித்து பார்த்துக் கொள்ளுங்கள். அதில் ''நம்முடைய அமெரிக்க பெண்களின் ஒழுக்க நெறிமுறைகளுக்கு என்ன நேர்ந்தது? முதல் ஆறு மாதங்களுக்கு வெளிநாடு சென்றிருந்த இராணுவ வீரர்களில் மூன்றில் இரண்டு பேர்கள் தங்கள் மனைவிகளால் விவாகரத்து செய்யப்பட்டனர்“ என்றிருக்கிறது. மூன்றில் இரண்டு பேர் விவாகரத்து செய்யப்படனர். இந்த பெண்கள் ஓடிப் போனார்கள். அது ஏன்? நீங்கள் புரிந்து கொள்வீர்களானால், நண்பர்களே, அது இந்த காலத்தின் ஆவியாகும்.
52.கடைசி நாட்கள் இங்கிருக்கையில் நாம் இந்த கடைசி நாட்களின் ஆவிக்குள் சென்று தான் ஆகவேண்டும். நீ ஒரு நடன அரங்கத்திற்குள் செல்வாயானால், நீ நடன ஆவிக்குள் சென்றாக வேண்டும், அல்லது அவர்கள் அங்கே நடனமாட முடியாது. நீ ஒரு சபைக்குச் செல்கிறாய், நீ தேவனை ஆராதிக்கும் முன்பு நீ ஆராதிக்கும் ஆவிக்குள்ளாக வேண்டும். இந்த கடைசி நாட்கள் வருமுன்பாக உலகமானது இந்த கடைசி நாட்களின் ஆவிக்குள்ளாக வேண்டும். நாம் இந்த கடைசி நாட்களின் ஆவியில் இக்காரியங்கள் இங்கிருக்கும் என்று தேவன் வாக்குத்தத்தம் செய்தார். நாம் அதைத்தான் பெற்றுள்ளோம். நாம் கடைசி நாட்களில் இருக்கிறோம். புருஷரும், ஸ்திரீகளும் நித்திரையாயுள்ளனர். ஆனால் அவர்கள் அதை அறியவில்லை.
ஒழுக்கங்கள்... அன்றொரு நாள் ஒரு வாலிபப் பையனை... ஓ, சில காலத்திற்கு முன்பாக, கோடை காலத்தில், நான் அவனை சந்தித்தேன். நாங்கள் ஒரு நகரத்திற்குள் வந்து கொண்டிருந்தோம். அவன் உயர்நிலைப்பள்ளி செல்லும் வாலிபப் பையன், விவாகம் செய்துக் கொண்ட அவன் இவ்விதம் என்னிடம் கூறிக் கொண்டிருந்தான். அவன், நான் இந்தப் பெண்ணை விவாகம் செய்துக் கொண்டேன், ஏனெனில் அவள் மிகவும் நல்ல பெண்ணாயிருந்தாள். அவள் உயர்நிலைக் கல்வியை முடிக்கு முன்பே நான் அவளை விவாகம் செய்ய வேண்டியதாயிருந்தது,'' என்றான். மேலும் அவன்,''நான் அறிந்துள்ள வரையில், பல வருடங்களாக உயர்நிலைப் பள்ளியில் ஒரு கன்னிகையையும் நாங்கள் பெற்றிருக்கவில்லை,'' என்றான். பாருங்கள்? அவ்வளவாய் ஒழுக்கக்கேடாகியுள்ளது.
53.இங்கே கலிஃபோர்னியாவில் நீங்கள் இந்த விதியிற்கு விலகி இருக்க வேண்டுமென்று காவற்காரர் உங்களுக்கு சொல்லுகின்ற விதிகளின் வழியாய் நான் சென்றிருக்கிறேன். கடந்து செல்வதற்கு, ஒரு ஸ்திரீயைக் காட்டிலும், ஒரு மனிதனுக்கு அது மிகவும் அபாயமான தெருவாக இருந்து. இருளான குருட்டுச் சந்துகள். ஓ, தேவனே, இரக்கம் காட்டுவீராக! இக்காரியங்கள் யாவும் வரும் என்று வேதம் கூறுவதை நீங்கள் அறிவீர்களா?
சோதோம் கொமாராவை ஒரு முன் அடையாளமாக அளித்திருக்கிறார். அவர் அங்கு சென்றார். அதே காரியம் நடந்தேறியது. தேவன் அக்கினியை கீழே அனுப்பி அந்த இடத்தை சுட்டெரித்தார். அது அந்த இடத்திற்கு வருகையில், ஆம் அந்தக் காரியத்தையே பெற்றுக் கொள்ளும் என்று உலகம் முழுவதும் காண்பிக்கும்படியாய், அதுவே அந்த அடையாளக் கம்பமாயுள்ளது. (ஒலி நாடாவில் காலியிடம் - ஆசி)
54.நாம் கடைசி நாட்களில் இருக்கிறோம். நிச்சயமாக. ஏழு ஸ்திரீகள் ஒரு மனிதனைப் பிடித்துக் கொண்டு, “நாங்கள் எங்கள் சொந்த ஆகாரத்தைப் புசித்து எங்கள் சொந்த வஸ்திரங்களை உடுப்போம், எங்கள் நிந்தை நீங்கும்படிக்கு உன் பேர் மாத்திரம் எங்கள் மேல் விளங்கட்டும்” என்பார்கள். சகோதரனே, அமெரிக்க ஐக்கிய நாடுகளிலிருந்து நீ செல்ல வேண்டியதில்லை. நம்முடைய சொந்த தேசத்திலே நான் பார்த்த காரியங்களில், தெருக்களில் மிக மோசமானது என்று நான் எண்ணின, என் ஜீவியத்தில் நான் கண்டதில் ஒரே ஒரு இடம் தான் இருக்கிறது. ஆனால் நாம் சரியாகிக் கொண்டிருக்கவில்லை. நாம் அப்படியே காலங்கள் தோறும் மிக மோசமாக, மோசமாகிக் கொண்டேயிருக்கிறோம். நினைவில் கொள்ளுங்கள், கர்த்தருடைய நாமத்தில் நான் பேசிக் கொண்டிருக்கிறேன். நாம் தொடர்ந்து மோசமாகிக் கொண்டேயிருப்போம். ஒரேயொரு நம்பிக்கை மாத்திரமே உண்டு, அது கிறிஸ்து இயேசுவில்தான் ஆகும். நீ என்ன செய்தாலும் அது ஒரு பொருட்டல்ல.
நான் இங்கே தேசம் முழுவதும் சென்று கூக்குரலிட்டிருக்கிறேன். மரித்தோரையும் கூட தேவன் எழுப்பியுள்ளார், நாங்கள் நகரத்திற்குள் சென்றோம்; வருடக்கணக்காக சக்கர நாற்காலிகளில் இருந்த மக்கள் எழுந்தனர், டிரக் வண்டிகளுக்கு பின்னால் நகரத்தில் நடந்து, தங்களுடைய சக்கரநாற்களை, காரியங்களை தள்ளிக் கொண்டே சென்றனர். ஸ்திரீகள், இறந்துவிட்டார் என்றுடாக்டர்களால் சான்றிதழ் அளிக்கப்பட்டவர்கள், எழுதப்பட்ட டாக்டர்களின் பெயர்களைக் கொண்ட X-ரேக்கள் பெற்றிருந்தவர், மரித்த நிலையிலிருந்து எழுப்பப்பட்டனர். ஆனால் நகரம் முழுவதும் உட்கார்ந்து கொண்டு, ''ஹ, மனோத்தத்துவம், பரிசுத்த உருளையர் கூட்டம்'' என்று கூறிக் கொண்டிந்தது. ஓ, ஆக்கினையைத் தவிர வேறெதையும் உங்களால் எதிர்ப்பார்க்க முடியாது! ஓ! சரியே!
நியாயத்தீர்ப்பு இங்கே இருக்கிறது; நீ அதை பெற்றுத்தான் ஆகவே வேண்டும். வரவிருக்கின்ற கோபாக்கினையிலிருந்து தப்பியோடு, உன்னால் முடிந்த வரை கிறிஸ்து இயேசுவிடம் விரைந்துஓடு! இந்த காரியங்களிலிருந்து வெளியே செல்! ஆம், அது கடைசி நாட்களின் ஆவியாகும். கூறப்படக் கூடிய அநேகக் காரியங்கள் உண்டு. நான் விரைந்து செல்கிறேன்.