47. அந்தப் பாவி எந்த சரீரத்தில் பாவத்தைச் செய்தானோ, அந்த சரீரத்தில் நியாயந்தீர்க்கப்படுவதற்காக உயிர்த்தெழுதலில் உயிரோடெழுவான். உயிர்த்தெழுந்து நியாயந்தீர்ப்பில் அவன் நிற்க வேண்டியவனாக இருக்கிறான்.
48. உயிர்த்தெழுதல் என்பது பதிற்பொருளாய் (Replacement) என்பதல்ல, அது “கீழே சென்ற அதை மேலே கொண்டு வருதல்”' என்பதே. இயேசு மரித்தோரிலிருந்து எழுந்த போது, கீழே சென்ற அதே சரீரமாக அவர் இருந்தார், அதே சரீரத்தில் அவர் உயிர்த்தெழுந்தார். எந்த சரீரத்தோடே கீழே செல்கிறோமோ அதே சரீரத்தில் நாம் உயிரோடெழுகின்றோம்; அது ஒரு உயிர்த்தெழுதல், ஒரு பதிற்பொருளாய் வைக்கப்படுதல் அல்ல.
49. இப்பொழுது, வேதாகமம் கூறுகிறது அந்த... சரீரத்தில் செய்யப்பட்ட பாவங்களின்படியே நாம் நியாயந்தீர்க்கப்படு வோம். ஆகவே அக்கிரமக்காரன் உயிரோடெழும் போது, அவன் எந்த சரீரத்தைக் கொண்டு பாவம் செய்தானோ அதே சரீரத்தில் அவன் நியாயந்தீர்க்கப்படுவான், அதே காரியத்தில்.