50. இப்பொழுது பெரியவர்களாகிய நமக்கு “அறிந்தான்” என்பது எதைக் குறிக்கிறது என்றறிவோம். இப்பொழுது இந்த கேள்வி இணையிடைச் சொல் (conjuction) என்பதைக் குறித்த ஒன்றாக இருக்கிறது. நண்பர்களே இப்பொழுது நீங்கள் கவனிப்பீர்களானால், பாருங்கள், வேதாகமம் ஒரு காரியத்தை ஒரு இடத்திலும் வேறொன்றை வேறொரு இடத்திலும் கூறும்படிக்கு உங்களால் செய்ய முடியாது. எல்லா சமயத்திலும் அது அதே காரியத்தை மாத்திரமே கூற வேண்டும். அது இங்கே ஒரு காரியத்தை கூறும்படிக்குச் செய்து பிறகு இங்கே வேறெதோ ஒரு காரியத்தை கூறும்படிக்குச் செய்தால், அப்படியானால் உங்களுடைய வியாக்கியானம் தவறானதாகும். பாருங்கள்? உங்களால் அவ்விதமாகச் செய்யமுடியாது. சர்ப்பமானது ஏவாளை வஞ்சித்தது, பிறகு வேறொரு இடத்தில் அவள் மறுபடியுமாக வஞ்சிக்கப்பட்டதாக உங்களாலே காணவே முடியாது. பாருங்கள்? அவள் கர்ப்பந்தரித்தபோதுதான் அவள் முதல் முறையாக வஞ்சிக்கப்பட்டாள். நீங்கள் அவள் இரண்டு முறை வஞ்சிக்கப்பட்டாளென்று உங்களாலே காண்பிக்க முடியாது.
51. இணையிடைச் சொற்களை (conjuctions) நான் உங்களுக்கு காண்பிக்கட்டும். வேதாகமத்தை வாசிக்கையில் நீங்கள் காண்கின்ற இணையிடைச் சொற்கள் எவ்வாறாக செல்கிறது என்பதை அறிந்திருக்க வேண்டியது அவசியம். இணையிடைச் சொல் ஒரு வாக்கியத்தை பிணைக்கிறது. பாருங்கள்? இப்பொழுது இதைக் கவனியுங்கள். இப்பொழுது, ஆதியாகமம் 1:26ல் இந்த இணையிடைச் சொல்லை கவனியுங்கள், பிறகு நீங்கள் இதை விளக்குங்கள், அதன் பிறகு நான் உங்களுக்கு கூறுகிறேன் எப்படி அவன்... ஆதாம் தன்னுடைய மனைவியை அறிந்தபோது. ஆதியாகமம், 1ஆம் அதிகாரம் 26வது வசனம் முதல் - இப்பொழுது கூர்ந்து கவனியுங்கள். தேவன் இப்பொழுது தம்முடைய சிருஷ்டிப்பை உண்டாக்கினார், பூமியானது ஊரும் சகல பிராணிகளை பிறப்பிக்கவும் செய்தார்- பூமியானது பிறப்பித்த எல்லா காரியங்களும் இப்பொழுது 26வது அதிகாரம்... ஆதியாகமம் 1ஆம் அதிகாரத்தின் 26வது வசனம்:
பின்பு தேவன்: நமது சாயலாகவும் நம்முடைய ரூபத்தின்படி யேயும் மனுஷனை உண்டாக்குவோமாக... அவர்கள் (மனுஷன்)... (அவன் என்றல்ல; 'அவர்கள் பாருங்கள், பன்மை) சமுத்திரத்தின் மச்சங்களையும் (and) ஆகாயத்துப் பறவைகளையும் (and) மிருக ஜீவன்களையும் (and)... (ஆங்கில வேதாகமத்தில் இடையே இணையிடைச் சொல்லான (and) காணப்படுகிறதுதமிழாக்கியோன்)... (பாருங்கள் மற்றும், மற்றும், மற்றும்” [and, and, and] ஒன்றாக இணைக்கின்றன)... பூமியனைத்தையும் பூமியின்மேல் ஊரும் சகலப் பிராணிகளையும் ஆளக்கடவர்கள் என்றார்.
தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்மித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார்; (and) ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார். [ஆணும் and] பெண்ணுமாக)
பின்பு தேவன் அவர்களை நோக்கி: நீங்கள் பலுகிப் பெருகி, (and) பூமியை நிரப்பி (and) அதைக் கீழ்ப்படுத்தி... தம்முடைய சிருஷ்டிப்பிற்கு பிறகு தேவன் அவர்களை ஆசீர்வதித்தார்.
52. இணையிடைச் சொல் பிறகு இணையிடைச் சொல்... மனுஷன் பூமியை நிரப்பி. (and, பிறகு, இணையிடைச் சொல்) பலுகிப் பெருகி, அதன்பின் பூமியைக் கீழ்ப்படுத்துதல்; அது நேராக ஆயிர வருட அரசாட்சிக்குள்ளாக செல்கிறது. பாருங்கள்? அது சரி, “பூமியைக் கீழ்ப்படுத்தி.” அது சரி:... (and) சமுத்திரத்தின் மச்சங்களையும், (and) மற்றும்) ஆகாயத்துப் பறவைகளையும் (and மற்றும்) பூமியின் மேல் நடமாடுகிற சகல ஜீவ ஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள்.
53. இப்பொழுது, தேவன் தம்முடைய சாயலாக மனுஷனை சிருஷ்டித்தார், சிருஷ்டித்து, அவர்கள் (அந்த மனுஷன்) பூமியின் மீது ஆளுகை செய்து அதைக் கீழ்ப்படுத்தி, எல்லாவற்றையும் செய்ய விட்டார். அவர்கள் இதைச் செய்ய, அவர்கள் மச்சங்கள் மீது ஆளுகை செய்ய விட்டார். அவர் உண்டாக்கின எல்லாமும். மேலும் நாம் ஆதியாகமம் 2:7ல் காண்பது இதைக் கவனியுங்கள். தேவன் பூமியை உண்டாக்கின பிறகு, மனுஷனை உண்டாக்கின பிறகு, பூமியின் மீதான ஆளுகையை அவனுக்கு அளித்து, அவனுக்கிருந்த எல்லாவற்றையுமே அவனுக்கு அளித்தார், தேவன் அவர்களை சிருஷ்டித்தார், அவர்கள் பெருகி... பலுகிப் பெருகி பூமியை நிரப்பும்படிக்கு அவர்களுக்கு கூறினார். அவர் வானமும் பூமியும் மற்றும் எல்லாக் காரியமும், அவர் செய்து முடித்திருந்து எல்லா காரியங்களுக்குப் பிறகு - அந்த ஏழு வசனங்களுக்குப் பிறகு, “and தேவனாகிய கர்த்தர் மனுஷனை பூமியின் மண்ணிலிருந்து உருவாக்கி” “And” இங்கே அவர் “(and “ இணையிடைச் சொல்) (ஆங்கிலத்தில் ஆதி 2:7 வசனம் And என்று துவங்குகிறது - தமிழாக்கியோன்) அவர் ஏற்கெனவே உண்டாக்கியிருந்த மனுஷனை உருவாக்குகின்றார். பாருங்கள்? ஒரு மனுஷனை உருவாக்குகின்றார்.
and (ஆங்கிலத்தில் உள்ளவாறே - தமிழாக்கியோன்).... தேவன்... மனுஷனை பூமியின் மண்ணிலிருந்து உருவாக்கி ஜீவ சுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார் (அந்த மூச்சு) மனுஷன் ஜீவாத்துமாவானான்
54. இப்பொழுது, அதைக் குறித்து சிந்தித்துப் பாருங்கள்! ஆதியாகமம் 1:26லிருந்து 28க்குள் அவர் மனுஷனை (பெண் மற்றும் ஆண்) உண்டாக்கின பிறகு, அவர் மனுஷனை தம்முடைய சாயலாக உண்டாக்கினார், அவனை சிருஷ்டித்து, அவனுக்கு அளித்தார். ராஜ்யங்களை கீழ்ப்படுத்தி, இந்த அதிகாரங்களையும் மற்ற எல்லாவற்றையும் அளித்தார், ஆனால் இன்னுமாக அவர் மனுஷனை உண்டாக்கவேயில்லை.
55. பாருங்கள், சாத்தான் ஏற்கெனவே ஏவாளை வஞ்சித்தான். ஆதாம் அவளை அறிந்தான் என்பதில் சந்தேகமில்லை, ஆனால் அவள் ஏற்கெனவே வஞ்சிக்கப்பட்டிருந்தாள். ஏனெனில் சரியாக அங்கே அவன்.... அவர்கள். அவர்கள் வருவதற்கு முன்னர்... அவர்கள் நியாயத்தீர்ப்புக்கு வந்தபோது, தேவன் அவர்களை ஒன்றாக நிற்க வைத்து, “இதைச் செய்தது யார்?” என்றார். அவர்களை நோக்கி கேள்வி கேட்டார்.
ஆதாம், “நீர் எனக்குத் தந்த ஸ்திரீயானவள்” என்று கூறினான். அந்த ஸ்திரீ, “சர்ப்பம் என்னை வஞ்சித்தது” என்று கூறினாள்.
56. ஆகவே தேவன் அவர்கள் மீது சாபத்தை - அதைப் போன்றதை எல்லாம் வைத்தார்- அதன் பிறகு ஆதாம் தன்னுடைய மனைவியை அறிந்தான், பாருங்கள், அவள் ஏற்கெனவே வஞ்சிக்கப்பட்டு ஒரு தாயாகியிருந்தாள். இங்கே ஆதியாகமம் 1: 26ல் தேவன் மனுஷனை உண்டாக்கியிருந்து, ஆனாலும் இன்னுமாக அவன் உருவாக்கப்படாதிருதந்தது போலவே. பாருங்கள்? அது சரி.
57. இப்பொழுது கவனியுங்கள் இப்பொழுது நாம் இங்கே திருப்பி இதையும் வாசிப்போமாக:
ஆதாம் தன் மனைவிக்கு... ஏவாள் என்று பேரிட்டான்; ஏனெனில் அவள் ஜீவனுள்ள காரியங்களுக்கு தாயானாள் எல்லா... அல்லது ஜீவனுள்ளளோருக்கெல்லாம் தாயானாள். அந்த ஸ்திரீயை மனைவி என்று அழைத்தான். ஏனெனில் அவள்... அல்லது அந்த ஸ்திரீ... ஜீவனுள்ள காரியங்கள் எல்லாவற்றிற்கும்.
தேவனாகிய கர்த்தர் ஆதாமுக்கும் அவன் மனைவிக்கும், தோல் உடைகளை உண்டாக்கி அவர்களை மூடத்தக்கதாக...
58. இப்பொழுது, இப்பொழுது இங்கே ஆதியாகமம், 1:21ல் மறுபடியும் கவனியுங்கள், தேவன் மச்சங்களை சமுத்திரத்திலே சிருஷ்டித்தார். அவர் எல்லாவற்றையும் செய்து முடித்திருந்தார், பிறகு சிருஷ்டிப்பைச் செய்தார், மனிதனை தமது சொந்த சாயலில் உண்டாக்கினார். மனிதனை உண்டாக்கினார், “ஒரு” மனிதனை அல்ல, முழு மனிதன்- இவை எல்லாவற்றையும் தம்முடைய சொந்த சாயலில். பாருங்கள்? அவர் அவர்களை தேவனுடைய சாயலின்படியே சிருஷ்டித்தார்; ஆணும் பெண்ணுமாக இரண்டைப் போலவே அவனை சிருஷ்டித்தார்.
59. ஆகவே இப்பொழுது நாம் இங்கே காண்பதென்ன வெனில், அவர் மனிதனை தம்முடைய சொந்த சாயலிலே சிருஷ்டித்த பிறகு, இங்கே அவனை ஆணும் பெண்ணுமாக சிருஷ்டித்த பிறகு, இங்கே பூமியின் மண்ணிலிருந்து அவர் மனிதனை உண்டாக்குகிறார்.
60. பிறகு, அவர் அதைச் செய்த பிறகு, அவனை ஆணும் பெண்ணுமாக உண்டாக்கின பிறகு, அவனை ஏற்கனவே உண்டாக்கின பிறகு, அவர் இங்கே திரும்பவுமாக வந்து அவனுக்காக ஒரு மனுஷியை உண்டாக்குகிறார். பாருங்கள்?
61. இதோ அந்த இணையிடைச் சொல் அந்த வாக்கியத்தை ஒன்று சேர்க்கிறது. அது முன்பு செய்த விதமாகவே இங்கும், “தேவன் தம்முடைய மனுஷனைச் சிருஷ்டித்தார், தம்முடைய ரூபத்தின்படியேயும் அவர் அவனை சிருஷ்டித்தார்”. இது தேவன் தம்முடைய சிந்தையில் கொண்டிருந்தது, தேவன் தம்முடைய சிந்தையில் எதைக் கொண்டிருந்தாரோ அது. தேவன் தம்முடைய சிந்தனைகளில் பேசுதல். இங்கே தான் அவர் சரியாக கிரியையைச் செய்திருந்தார்.
62. இயேசு தாமே உலகத்தோற்றத்திற்கு முன்னே அடிக்கப் பட்ட ஆட்டுக் குட்டி. அவர் நாலாயிரம் ஆண்டுகளுக்கு பிறகு அடிக்கப்படவில்லை. புரிகின்றதா?
63. ஆகவே சர்ப்பம் ஏவாளை வஞ்சித்தது. அது உண்மையானதே. தீர்ப்பு கொடுக்கப்பட்டப் பிறகு, ஆதாம் தன்னுடைய மனைவியை அறிந்தான். அப்பொழுது அவள் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்றாள், அது காயீன். உங்களால் புரிந்து கொள்ள முடிகிறதா? பாருங்கள், ஆதாம் செய்ததை இணையிடைச் சொல் அப்படியே தொடர்ச்சியாகக் கொண்டுச் செல்கிறது. ஆதாமுக்கு முன்னர் நடந்தவை இணைக்கப்படவில்லை.
64. இப்பொழுது இங்கே பாருங்கள், நீங்கள் அதைத் தொடர்ந்து பார்க்க விரும்பினால், இங்கே அந்த மகத்தான வாக்குமூலத்தில், பார்க்கலாம். அது இங்கே... இங்கே 4 வது அதிகாரத்தில், அது அதில் இருக்கிறது என்று நான் நினைக்கிறேன்.
ஆதாம் தன் மனைவியாகிய... அறிந்தான்; (and, இணையிடைச் சொல் - ஆங்கில வேதத்தில் உள்ளவாறு) அவள் கர்ப்பவதியாகி காயீனைக் பெற்று, (and, இணையிடைச் சொல்) கர்த்தரால் ஒரு மனுஷனைப் பெற்றேன் என்றாள் (And Adam knew... his wife; and she conceived, and bare Cain, and (a conjuction) said, I have gotten a man from the LORD.) (ஆங்கில செய்தியில் உள்ளவாறே - தமிழாக்கியோன்)
65. அப்படியானால் அது சரியாக அது ஆதாம் அல்ல, அதன்படி பார்த்தால் அது தேவனுடைய குமாரன் என்றிருக்கிறது. புரிகிறதா? புரிகிறதா? அந்த இணையிடைச் சொல்லை நீங்கள் பொருத்த விரும்பினால், பாருங்கள் (“and”, மறுபடியுமாக) “தேவனால் ஒரு மனுஷனைப் பெற்றேன்.” அப்படியானால் அந்த வேறுபாடான காரியமான காயீன் என்றழைக்கப்பட்ட அதை தேவன் தனக்கு கொடுத்தார் என்று அவள் கூறுகிறாளே? காயீன் கொண்டிருந்த அந்த மதிகேடான, அசுத்தமான காரியங்கள் எல்லாவற்றின் மூலக்காரியம் செயல்திறன் எங்கிருந்து வந்தது, தேவனிடத்திலிருந்தா வருகின்றது? அப்படி இருக்குமா! பாருங்கள்? அவள் சர்ப்பத்தால் வஞ்சிக்கப்பட்டாள், அந்த சர்ப்பம்... அவள் ஏற்கெனவே தாயாகி விட்டாள். பிறகு ஆதாம் அவளை அறிந்தான், நிச்சயமாக அவன் செய்தான், அவன் மனைவியுடன் ஜீவிப்பது போல அவளுடனே சென்று வாழ்ந்தான், ஆனால் அவளோ ஏற்கெனவே இந்தப் பிள்ளையின் தாயாக இருந்திருந்தாள்.
66. பிறகு முடிவில் ஆதாமுடைய குமாரன் பிறந்த போது, அவன் ஆதாமைப் போலவே, மென்மையான, இனிமையான, தாழ்மையான, எளிமையான நபராக இருந்தான்.
67. ஆனால் இவனோ, அந்த பச்சைப் பொய் (pure lying)... அந்த பாவம் எங்கிருந்து வந்தது? இந்த ஆள், காயீன், இந்த கொலைக்காரன் எதிலிருந்து வந்தான்? வேதாகமம், “பிசாசானவன் மனுஷ கொலைபாதகனாயிருக்கிறான்” என்று கூறுகிறதே. ஆகவே அந்தப் பொய் எங்கிருந்து வருகின்றது? (பிசாசானவன்தான் பொய்க்குப் பிதாவாயிருக்கிறான்; அவன் ஒரு பொய்யன் மற்றும் பொய்க்கு பிதாவுமாயிருக்கிறான்.) அது தேவனுக்கு புறம்பே இருக்கின்ற ஒரு மூலக் காரியத்திலிருந்து வந்திருக்க வேண்டியதாக இருக்கின்றது. ஆகவே காயீன்தான் அந்த பொல்லாங்கன், அவனுடைய தகப்பன் சாத்தான்; அவன்தான் இந்த பொல்லாங்கனைக் கொண்டு வந்தான்.
பிறகு, ஆதாம் தன்னுடைய மனைவியை அறிந்தான் - நிச்சயமாக.
68. ஆகவே, ஆமாம், ஒருக்கால் இந்த விதமாக நீங்கள் இதைக் கூறியிருந்தால்... நான் என்னையே எடுத்துக் கொள்வேனானால், நான் கூறுவதன்னவெனில், நல்லது, இப்பொழுது, ரெபெக்காள் பிறந்தாள், அதற்குப் பிறகு சிறிது...
69. ஒரு நாள் யோசேப்பின் சம்பவத்தைக் குறித்து வாசித்துக் கொண்டிருந்தேன், யோசேப்பின் சம்பவ விவரத்தைக் குறித்து வாசித்த போது மிக நான் எழுச்சியூட்டும் ஒன்றாக இருந்தது. அங்கே அது மின்னிபோலிசில், நான் ஒரு சிறிய தனி அறையில் சென்று முழங்காலிட்டு “கர்த்தராகிய தேவனே, யோசேப்பென்ற மனிதனாகிய ஒருவனுக்காக எவ்வளாவாக உமக்கு நான் நன்றி செலுத்துகிறேன்!” என்று கூறினேன். அப்பொழுது நான், “நான்.... அந்த மகத்தான சிறப்பு வாய்ந்த குணவியல்பு வாய்ந்த 'ஜோசப்' என்ற பெயரை பில்லி பாலுக்கு நான் வைத்திருக்கலாமே” என்று நினைத்தேன். வேதாகமம் முழுவதுமாக அவனுக்கு எதிராக ஒரு கறை கூட இல்லை, ஒவ்வொரு விதத்திலும் கிறிஸ்துவின் பரிபூரணமான எடுத்துக்காட்டாக அவன் இருந்தான். “எப்படியாக நான் நேசிக்கிறேன்...” என்றேன், “ஓ, எனக்கு ஒரு மகன் பிறப்பானென்றால் அவனுக்கு 'ஜோசப்' என்று பெயரிடுவேன்” என்று நினைத்தேன்.
70. அப்பொழுது கட்டிடத்தில் அந்த ஒளியானது அசைந்து உள்ளே வந்து, “உனக்கு ஒரு குமாரன் பிறப்பான். அவனை 'ஜோசப்' என்று பெயரிட்டு கூப்பிடு” என்று கூறினது.
71. நான் என் மனைவியை அறிந்தேன், அவள் சாராளைப் பெற்றாள். பிறகு நான் என் மனைவியை அறிந்தேன், அப்பொழுது (and- இணையிடைச் சொல்லை தீர்க்கதரிசி கூறுகிறார் - தமிழாக்கி யோன்) அவள் ஜோசப்பை பெற்றாள். நான் என்ன கூற விழைகிறேன் என்று உங்களுக்கு புரிகின்றதா? பாருங்கள், முதலில் உள்ளதற்கு இதனுடன் எந்த விதத் தொடர்பும் கிடையாது. தேவனுடைய வாக்குறுதி. “ஜோசப்” என்பதுதான் நடுவாக சாராள் வந்தாள். நான் சாராளை அந்த விதமான சிக்கலான சூழலில் வைக்கிறேன் என்றல்ல, ஆனால் நான் என்ன கூற வருகிறேன் என்பதை உங்களுக்கு காண்பிக்கவே இதைக் கூறுகிறேன். பாருங்கள்... சாராளும் தேவனால் அனுப்பப்பட்டவளே. ஆகவே இப்பொழுது நாம் அதை அறிந்து கொள்கிறோம்.
72. இப்பொழுது பாருங்கள். ஆதாம் மற்றும் ஏவாளின் மீது தேவன் தீர்ப்பை அளித்தபோது, அவர் தீர்ப்பை அளிக்கு முன்னரே அவள் ஏற்கெனவே அந்த பாவத்தை செய்திருந்தாள். ஆகவே கவனியுங்கள், உலகத்திலே பிறந்த முதல் குழந்தை, “பாவத்தில் பிறந்து, அக்கிரமத்தில் உருவாகி, பொய் பேசுகிறதாய் உலகத்துக்கு வந்தது” என்பது உங்களுக்குத் தெரியுமா? முதல் முதலில் பிறந்த குழந்தை அந்த விதமாகத்தான் பிறந்தது, ஏனெனில்...
73. “அப்படியானால் ஆதாம், ஏவாளைக் குறித்து என்ன?” அவர்கள் பிறக்கவேயில்லை. அவர்கள் சிருஷ்டிக்கப்பட்டார்கள். புரிகிறதா?
74. ஆகவே முதன் முதலாக வந்த குழந்தையானது பாவத்தில் பிறந்த ஒன்றாக இருந்தது, ஆகவே அது அந்த வழியின் படியே தான் இருக்கும். “ஸ்திரீயினிடத்தில் பிறந்த மனுஷன் வாழ்நாள் குறுகினவனும் சஞ்சலம் நிறைந்தவனுமாயிருக்கிறான்”. அவன் பாவத்தில் பிறந்திருக்கிறான். அதன் காரணமாக்கத்தான் அவன் ஆவியினாலே மறுபடியும் பிறக்க வேண்டியவனாக இருக்கிறான்: ஒரு ஆவிக்குரிய கருத்தினால் அல்ல; ஆவிக்குரிய பிறப்பினால். பாருங்கள், அது அவனை திரும்பவும் உருவாக்குகிறது, அவனை ஒரு புது சிருஷ்டியாக ஆக்குகின்றது. முதலில் பிறந்த மனிதனானவன் பாவத்தில் பிறந்தவனாக இருந்தான்.
75. ஆகவே, இனச்சேர்ககை இல்லாமல் ஒருவர் வரவேண்டியதாயிருந்தது. இப்பொழுது ஆண் பெண் பாகுபாடு முதலாவதாக இல்லாதிருந்ததென்றால், அவர்களுக்கு ஏன் ஒருவர் பாலினத்தில் வந்து முழு மானிட வர்க்கத்தையும் மீட்க வேண்டியதாயிருக்க வேண்டும்? ஏன் அவர் ஒரு நடைப் பாதையை அமைத்து அதைக் கீழே கொண்டு வந்து “இதோ சரியாக சிந்திக்கும் அந்த நீதியுள்ளவர்” என்று கூறியிருக்கலாமே? ஆகவே அது மனித இனத்தின் மூலமாகவே வரவேண்டும், ஒரு ஸ்திரீயின் மூலமாக வரவேண்டும், ஏனெனில் முதல் நிலையில் அவ்விதமாகத் தான் வந்தது. பாலினத்தின் மூலமாகத்தான் அநீதி கொண்டு வரப்பட்டது; பாலினத்தின் மூலமாகத்தான் நீதியும் கொண்டு வரப்பட்டது. பாருங்கள்? தேவன், விபச்சாரம் இல்லாமல், பாலுறவு இச்சையில்லாமல், மாசற்ற கருத்தரிப்பினால் இயேசு கிறிஸ்துவை கொண்டு வந்தார். மரியாளை நிழலிட்டு பாலினம் மூலமாகவே வந்த இந்த குழந்தையாகிய அதை அவளுக்குள் உண்டாக்கினார். பாருங்கள்? ஆகவே அந்த விதமாகத்தான் இருக்க வேண்டியதாயிருந்தது, அதற்கு வேறெந்த வழியும் இல்லை.
76. ஸ்திரீயினால் பிறந்த ஒவ்வொரு மனிதனும் மரணத்தை நோக்கி பிரயாணித்துக் கொண்டிருக்கிறான், அவன் பிறக் கையிலே மரித்திருக்கிறான். அது சரியே.
77. அதின் காரணமாகத்தான், நாம் இப்பொழுது அந்த ஆசீர்வதிக்கப்பட்ட நம்பிக்கையை கொண்டவர்களாக இருக்கின்றோம் என்று முன்னொரு நாளில் நான் பேசினேன்.
78. இஸ்ரவேல்... அது... ஒன்றுமே இல்லாத அநேக காரியங்களை நான் பேசுகிறேன், ஆனால் சில சமயங்களில் கர்த்தர் எனக்கு சிலவற்றை அளிப்பார், அது என்னை அப்படியே மெய்சிலிர்க்க வைத்துவிடும். ஆகவே அவர் எனக்கு அதை அளித்த போது, அநேக வருடங்களாக நான் பெற்றிருந்ததை விட அது என்னை மெய்சிலிர்க்க வைத்தது. அன்றொரு நாள் அவர் எனக்கு அதை அளித்த போது, இஸ்ரவேலை (ஒரு அடிமை) நான் பார்த்தபோது, தேவனுடைய பிள்ளைகளாகிய அவர்களுக்கு வீடு கூட இல்லாதிருந்தது. அவர்களுக்கு தேவையாயிருந்த எந்த ஒன்றும்! அழுகின அப்பத்தை போட்டார்கள், அவர்கள் அவர்களுக்கு ஓ, அவர்களுக்கு.... அவர்கள், சமாதானமாக வாழ ஒரு வீடு இருந்து, தங்களுடைய முகத்தின் வியர்வையால் தங்கள் ஜீவனத்திற்காக சம்பளத்தை பெறும்படியாக இருக்குமானால்!
79. ஆகவே, ஒரு நாள், அக்கினி ஸ்தம்பத்தால் வழிநடத்தப்பட்டு வனாந்திரத்திலிருந்து வந்த ஒரு தீர்க்கதரிசி, ஒரு வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தைக் குறித்து அவர்களிடம் கூறினான். அந்த இடத்திற்கு யாருமே சென்றதில்லை, அதைக் குறித்து ஒன்றுமே அவர்களுக்குத் தெரியாது. ஆனால் அது ஒரு வாக்குத் தத்தமாக இருந்தது. அதன் பேரில் அவர்கள் விசுவாசித்து அந்த வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசம் அருகாமையில் செல்லும் வரைக்கும் அந்த தீர்க்கதரிசியை அவர்கள் பின்பற்றினர்.
80. “யேகோவா- இரட்சகர்” என்னும் அர்த்தமுடைய யோசுவா என்றழைக்கப்பட்ட ஒரு சாட்சி அங்கே இருந்தான். அவன் யோர்தானைக் கடந்து அந்த தேசத்துக்குள் சென்று, சரியாக அந்த தீர்க்கதரிசி கூறினபடியே, தேவனுடைய வார்த்தையின்படியே இருந்த அந்த தேசத்தை குறித்த அத்தாட்சியுடன் திரும்பி வந்தான். இரண்டு மனிதர் தூக்கி வரவேண்டியதாக இருந்த அந்த திராட்சைக் குலையை கொண்டு வந்தனர், அந்த தேசத்திலிருந்து கொண்டுவரப்பட்ட அசலான பழத்தை அவர்களால் ருசி பார்க்க முடிந்தது. அந்த தேசம் அங்கே இருந்தது என்பது யாருக்குமே தெரியாது, அவர்கள் அதை அப்படியே விசுவாசித்தனர். அவர்கள் விசுவாசத்தால் வெளியே நடந்து வந்து அதை விசுவாசித்தனர்.
81. இப்பொழுது, அவர்கள் அந்த தேசத்தை சுதந்தரித்த போது, அவர்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தார்கள்! ஒவ்வொருவரும் சமாதானத்தோடு வாழ ஏதுவாயிருந்தது, ஒவ்வொருவரும் தன்னுடைய சிறு தோட்டத்தை உடையவனாக இருந்தான், அவர்கள் தன்னுடைய பிள்ளைகள் மற்றும் எல்லாவற்றையும் கொண்டவர்களாக இருந்தார்கள். ஆனால், முடிவாக முதிர் வயது அவனை அடைந்தது, மரணம் அவனை சுற்றி வளைத்து அவனை எடுத்துக் கொண்டது.
82. பிறகு பரலோக நடைபாதையிலிருந்து கீழே, ஒரு ஸ்திரீயின் மூலமாக மற்றொரு மகத்தான மாவீரர், அவர்களெல்லாரிலும் பெரியவர், இயேசு கிறிஸ்து வந்தார். தேவன் தம்மைத்தாமே மாம்சத்தில் வெளியாக்கிக்கொண்டார். அவர் இஸ்ரவேலிடம், அவர்கள் எப்படிப்பட்ட ஒரு மத்தான மக்களாக இருந்தனர் என்று கூறினார். ஆனால் மரணம் அவர்களை நோக்கி இருந்தது, அவர், “ஆனால் நான் உங்களுக்கு வேறொரு தேசத்தைக் குறித்து கூறுகிறேன். என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு. அப்படியில்லாதிருந்தால் நான் உங்களுக்குச் சொல்லியிருப்பேன். நீங்கள் உங்கள் தேசத்தில் சந்தோஷமாயிருக்கிறீர்கள், உங்களுக்கு உங்கள் வீடுகள் உள்ளன, உங்கள் பிள்ளைகள் இருக்கிறார்கள். நீங்கள் ஒவ்வொருவரையும் அங்கே அடக்கம் பண்ணுகிறீர்கள், அது தான் முடிவு என்பது போலத் தெரிகிறது” என்று கூறினார்.
83. யோபு அதைக் கண்டான், “ஒரு மரம் மரித்தாலும் திரும்பத்தழைத்து வாழும். ஆனால் மனுஷன்படுத்துக்கிடக் கிறான், மனுபுத்திரன் ஜீவித்துப் போன பின் அவன் எங்கே? அவன் பிள்ளைகள் அவனை கனம் பண்ண வந்தாலும் (His Sons come to honour him - ஆங்கில வேதாகமத்தில் உள்ளபடி - தமிழாக்கி யோன்) அதை அவன் கவனியான். ஓ, நீர் என்னை பாதாளத்தில் ஒளித்து, உமது கோபம் தீருமட்டும் இரகசிய இடத்தில் என்னை மறைத்து..!” என்று கூறினான். “மனுஷன் செத்தபின் பிழைப்பானோ?” என்றான்.
84. அதற்கு நாலாயிரம் வருடங்களுக்கு முன்னதாக, அந்த கல்லறைக்கு அப்பாலே ஏதோ ஒன்றுக்காக அவர்கள் நோக்கிக் கொண்டிருந்தார்கள். தேவன் அவர்களுக்கு ஒரு வீடு, குடும்பம் மற்றும் பிள்ளைகள், மற்றும் ஒரு சபை தீர்க்கதரிசிகள், மற்றும் இந்த காலம் வரைக்கும் மகத்தான மனிதர் மகத்தான காரியங்கள் போன்றவை அளித்தார். ஆனால் அவர்கள் ஒவ்வொருவரும் மரித்து தங்களுடைய கல்லறைக்கு சென்றனர். ஆனால் இங்கே ஒருவர் வந்து “என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு, நான் சென்று ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம் பண்ணப் போகிறேன்” என்று கூறுகிறார்.
85. யோசுவாவைப் போல, அவன் தன்னுடைய காதேஸ் பர்னேயாவை சந்தித்தான். இஸ்ரவேல் காதேஸ் பர்னேயாவிற்கு வந்த போது... அக்காலத்தில் காதேஸ் உலகத்தின் நியாயஸ்தலமாக இருந்தது ஒரு பெரிய நீரூற்றிலிருந்து ஏழு நீரூற்றுகள், அதற்கு நியாயத்தீர்ப்பு என்று அர்த்தம் - தேவனுடைய வீடு மற்றும் அதிலிருந்து வெளியே புறப்பட்டுச் செல்லுகின்ற சபைகளைப் போன்று. ஆகவே யோசுவா, அத்தாட்சியைக் கொண்டு வருவதற்காக காதேஸ் பர்னேயாவிலிருந்து கடந்து வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்துக்குள் சென்றான்.
86. இப்பொழுது, இயேசுவும் தம்முடைய காதேஸை சந்தித்தார். அது என்னவாயிருந்தது? நியாயஸ்தலம்! அது எங்கே இருந்தது? கல்வாரியில், அங்கேதான் தேவன் அவரை உலகத்தின் பாவங்களுக்காக நியாயந்தீர்த்தார். அவர்கள் என்ன செய்தனர்? தேவனுக்கான பாவ நிவர்த்தியாகிய மரணத்தை அவர் சந்தித்தார். பாவிகளை தேவனிடம் ஒப்புரவாக்கத்தக்கதாக அவர் மரணத்தை அடைந்து யோர்தான் நதியைக் (மரணம்) கடந்தார். அவர்கள் அவரை அடக்கம் செய்தனர்.
87. அவர் மரித்தார், சந்திரனும் நட்சத்திரங்களும் தங்களுக்கு அவமானம் என்று நினைத்துக் கொள்ளும் நிலைக்குச் சென்றன. அவர் மரித்தார், பூமிக்கு நரம்புத்தளர்ச்சி உண்டானது. அது அதிர்ந்ததால் கற்கள் மலைகளிலிருந்து உருண்டோடின. அது அதிர்வுற்றதால் நட்சத்திரங்கள் பிரகாசிக்க முடிமாற்யோயிற்று, சந்திரனால் பிரகாசிக்க முடியவில்லை, பகலின் நடுவேளையிலே சூரியன் மறைந்தது. அவர் மரித்தார்! ஒரு ரோமன் பத்து பவுண்ட் எடையுள்ள ஈட்டியை எடுத்து அதை அப்படியே அவருடைய இருதயத்திற்குள் முழுவதுமாக குத்தி அழுத்தித் திணிக்கும் அளவிற்கு அவர் மிகவுமாக மரித்துக் கிடந்தார்; தண்ணீரும் இரத்தமும் வந்தன. அவர் மரித்திருந்தார். அவர் யோர்தானைக் கடந்தார். அவர்கள் அவரை ஒரு கல்லறைக்குள் வைத்து நூற்றுக் கணக்கானோர் ஒரு கல்லைப் புரட்டி வைத்து அதை அடைத்தனர், அவர் மரித்திருந்தார்! அதற்கு மேலாக ஒரு ரோம் முத்திரையை அவர்கள் போட்டனர்.
88. ஆனால் ஒரு ஈஸ்டர் காலையில் அவர் யோர்தானைக் கடந்து திரும்பவுமாக வந்து “மரித்தேன், ஆனாலும் சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன்!” என்று கூறினார்.
அவர்களில் சிலர், “நாம் ஒரு ஆவியைக் காண்கிறோம்” என்றனர்.
89. அவர், “என்னைத் தொட்டுப்பாருங்கள். எனக்கு மாம்சமும் எலும்புகளும் இருக்கிறது போல ஒரு ஆவிக்கு இருக்குமா?” என்றார். மேலும், “புசிக்கிறதற்கு ஏதாகிலும் உங்களிடம் உண்டா? எனக்கு ஏதேனும் ஒன்றைக் கொண்டு வாருங்கள்” என்றார். அவர்கள் மீன்கண்டத்தையும் அப்பமும் அவருக்கு கொடுத்தார்கள். அவர் அதை புசித்தார். அவர் ஒரு மனிதனாக இருந்தார்!
90. அவர் என்னவாக இருந்தார்? நாம் செல்லப்போகின்ற ஒரு தேசம் உள்ளது என்பதற்கான அத்தாட்சியை அவர் திரும்பக் கொண்டு வந்தார். அவர் என்ன செய்தார்? யோசுவாவைப் போல அதற்குரிய அத்தாட்சியை அவர் கொண்டு வந்தார். அவர், “இப்பொழுது, அதற்கான அத்தாட்சி உங்கள் தேவையாயிருக்கிற தென்றால், “நீங்கள் மனந்திரும்பி ஒவ்வொருவரும் பாவ மன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது பரிசுத்த ஆவியைப் பெறுவீர்கள்? என்னை உயிரோடெழுப்பினது அந்த அத்தாட்சிதான். உங்களுடைய சுதந்தரத்தின் அச்சாரத்தை நான் உங்களுக்குத் தருவேன்” என்று கூறினார். அப்பொழுது என்ன சம்பவித்தது? பெந்தெகொஸ்தே நாளிலே பரிசுத்த ஆவியானவர் விசுவாசியின் மீது வந்தார்.
91. நாம் என்ன செய்ய வேண்டும்? நம்முடைய பாவங்களை அறிக்கையிட்டு, நம்மை நாமே மரித்தவர்களாக எண்ணி ஞானஸ் நானத்தில் அவருடன் அடக்கம் பண்ணப்பட்டு, அவருடைய உயிர்த்தெழுதலில் அவருடன் எழுப்பப்பட்டோம். எதற்காக? “உன்னதங்களிலே அவரோடே கூட உட்காரத்தக்கதாக”. இன்றிரவு அங்கேதான் நாம் உட்கார்ந்து கொண்டிருக்கிறோம் (சரீரப்பிர காரமாக அல்ல) ஆவிக்குரிய பிரகாரமாக, நம்முடைய சிந்தைகள், நம்முடைய நினைவுகள், நம்முடைய ஆத்துமாக்கள் உலகத்தின் கவலையிலிருந்து சரியாக இப்பொழுதே அப்பாற் பட்டிருக்கிறது. நாம் எங்கேயுள்ளோம்? “கிறிஸ்து இயேசுவுக்குள் உன்னதங்களிலே”. அதற்குள்ளாக நாம் எப்படிச் செல்கிறோம்? “ஒரே ஆவியினாலே ஒரே சரீரத்திற்குள்ளாக பரிசுத்த ஆவியால் ஞானஸ்நானம் பண்ணப்பட்டிருக்கிறோம்”. காணப்படாத தேவனுடைய ராஜ்யம்!
92. நாம் அதற்குள்ளாகச் சென்று திரும்பி பார்த்து நாம் எப்படியெல்லாம் பொய் சொல்லுகிறவர்களாக, திருடுபவர்களாக, ஏமாற்றுபவர்களாக, புகை பிடிப்பவர்களாக, தவறான காரியங்களை செய்பவர்களாக இருந்தோம் என்பதைக் காண்போம். நாம் அதிலிருந்து எழுப்பப்பட்டுள்ளோம். நாம் உன்னதங்களிலே இருக்கிறோம். அது என்ன? அவருடைய சொந்த மகிமையின் சரீரத்தைப் போலவே ஒரு நாளிலே நாமும் ஒன்றைப் பெற்றிருப்போம் என்பதற்கான அத்தாட்சி. அதுவே, அது உயிர்த்தெழுதலின் சரியான அத்தாட்சியாகும், ஏனெனில் இயல் திருமுறையிலே (Potentially) நாம் ஏற்கெனவே அவருடனே எழுந்து விட்டோம், இயல் திறமுறையிலே நாம் ஏற்கெனவே மரித்து விட்டோம்.
93. வழக்கம் போல ஜீவிக்கும் வில்லியம் பிரன்ஹாம் இப்பொழுது இல்லை, அவர் சுமார் முப்பதிற்கு மேலான வருடங்களுக்கு முன்னர் மரித்து விட்டார். இப்பொழுது அது புதிய சிருஷ்டியாக உள்ளது. வழக்கம் போல இருந்த ஆர்மன் நெவில் இப்பொழுது இல்லை, அநேக வருடங்களுக்கு முன்னர் அவர் மரித்து விட்டார். இப்பொழுது இருப்பது புதிய சிருஷ்டியாகும். ஆர்மன் நேவில் மரித்து விட்டார், அந்த குதிரைப் பந்தயம் செல்பவர், சூதாட்டம் ஆடினவர், அல்லது என்னவாயிருந்தாலும் சரி, ஒருகாலத்தில் இருந்த அந்த மனிதன் மரித்து விட்டார். சகோதரன் நெவில் அப்படிப்பட்டவர் அல்ல; எனக்குத் தெரியாது. அவர் எப்படிப்பட்டவராயிருந்திருந்தாலும், அவர் எல்லாவற்றிலும் குற்றவாளி. “ஒன்றில் தவறினால் எல்லா வற்றிலும் குற்றவாளியாயிருப்பான்”. எப்படிப் பட்டவனாக இருந்தாலும் சரி, நீ ஒரு பாவிதான், அப்படித்தான் நீங்கள் இருந்தீர்கள்.
94. நீங்கள் மரித்திருக்கிறீர்கள். ஏனெனில் நீங்கள் உலகத்தின் காரியங்களில் அன்பு கூருகிறீர்கள். நீங்கள் இங்கே இருப்பதாக எவ்வளவாக அறிக்கையிட்டாலும் அதனால் ஒரு உபயோகமும் இல்லை, நீங்கள் உலகத்தை இன்னுமாக நேசிக்கின்ற வரையில் நீங்கள் இங்கே மேலே இல்லை, நீங்கள் இன்னுமாக கீழாக அங்கே தான் இருக்கிறீர்கள். “ஒருவன் உலகத்திலும் உலகத்திலுள்ள வைகளிலும் அன்பு கூர்ந்தால் தேவனுடைய அன்பு அவனுக் குள்ளாக இன்னுமாக பிரவேசிக்கவேயில்லை.”
95. ஆனால் நீங்கள் அதற்கு மேலே உன்னத காரியங்களுக்காக கடந்து சென்று மேலே உள்ள காரியங்களின் பேரில் உங்கள் அன்பு இருக்குமானால், எந்த ஒரு காரியமும் உங்களுக்கு தீங்கு செய்யாது என்ற நிச்சயமிருக்கட்டும், எந்த ஒரு காரியமானாலும், மரணம் கூட... உங்களுக்கு ஒன்றுமே செய்யாது ஏனெனில் நீங்கள் கிறிஸ்துவுடனே எழுந்து இப்பொழுது நீங்கள் உன்னதங் களில் அவரோடு அமர்ந்திருக்கிறீர்கள் நீங்கள் ஏற்கனவே கிறிஸ்துவுக்குள் நங்கூரமிடப்பட்டிருக்கிறீர்கள். அந்த நம்பிக்கை, அந்த அச்சாரம், கிரயம் ஏற்கனவே செலுத்தப்பட்டாயிற்று, நீங்கள் அதை ஏற்றுக்கொண்டீர்கள். நீங்கள் என்ன செய்தீர்கள்? அவருடன் கூட உயிர்த்தெழுதலில் எழுந்து விட்டீர்கள்.
96. நான் எங்கிருந்தேன் என்பதை திரும்பிப் பார்த்தால், இப்பொழுது இதற்கு மேலாக நான் இருக்கிறேன். எப்படி? அவர் தம்முடைய கிருபையினால் என்னை மேலே தூக்கி எடுத்தார், ஆகவே இப்பொழுது நான் கிறிஸ்துவுக்குள்ளாக உன்னதங்களில் அமர்ந்திருக்கிறேன். ஓ, என்னே! உங்களுக்கு புரிகின்றதா. அப்பொழுது வேதாகமம் உங்களுக்கு புதிய புஸ்தகமாகின்றது. அப்பொழுது நீங்கள் அதை ஆவிக்குரிய கண்களாலும் ஆவிக்குரிய புரிந்து கொள்ளுதலாலும் வாசிக்கின்றீர்கள். அப்பொழுது நீங்கள் பெயற்சொல்களையும், (nouns) பிரிதி பெயர் சார்ந்த சொற் களையும் (Pronouns) மற்றும் சந்திப்புகளையும் (junctions)... மற்றும் இணையிடைச் சொற்களையும் (conjuctions) இன்னும் மற்றவைகளையும் வேதாகமத்தில் நீங்கள் காண்பீர்கள்.
97. ஓ, அது கூறுவதெல்லாமே... சிலர் “அது தனக்குள்ளாக முரண்பாட்டைக் கொண்டிருக்கிறதே” என்று கூறலாம்; அப்படியென்றால் நீங்கள் இங்கே இந்த பகுதியை வாசிக்கின்றீர்கள். சற்று மேற்பகுதிக்கு வந்து அதை வாசித்துப்பாருங்கள், அப்பொழுது அது வித்தியாசமாக இருக்கும். புரிகின்றதா? நிச்சயமாக அது உண்மை. நீங்கள் ஆவிக்குள்ளாக அதை வாசித்தால் அது முழுவதுமாக ஒரு புதிய காரியமாக இருக்கும். ஆம்.