98. இதோ, ஒரு கேள்வி இருக்கிறது, சற்று முன்னர் அதை வாசித்த போது அதை நான் கவனிக்கவில்லை. இதோ ஒரு கேள்வி. இப்பொழுது அந்த நபர் இங்கே இருப்பாரானால்... இதை நான் உங்களுக்கு வாசிக்கட்டும்:
நான் கர்த்தரை கண்ட வரைக்கும் அநேக வருடங்களாக நான் பாவத்தில் வாழ்ந்தேன். தயவு செய்து சகோதரன் பிரன்ஹாம்... (பாருங்கள்?)... நான் மறுபடியும் பாவம் செய்தேன். ஆகவே இந்த பரிசுத்த ஸ்தலத்தில் உங்களுக்கு முன்பாக வருவதற்கு நான் தகுதி யற்றவன். மறுபடியும் முழுவதுமாக திரும்பவும் புதிய வாழ்க்கைக்கு நான் கொண்டு வரப்பட்ட முடியுமா என்று எனக்கு தயவு செய்து கூறுங்கள். ஆம்.
99. நீங்கள் பாவம் செய்யவில்லை (என் நண்பரே) தேவனுக்குள் இருக்குமட்டும் நீங்கள் புதிய வழிக்கு திரும்பக் கொண்டுவரப்படமுடியும். புதிய வாழ்க்கைக்கு திரும்பக் கொண்டுவரப்படமுடியாதபடிக்கு அந்த நிலைக்கு நீங்கள் பாவம் செய்திருப்பீர்களானால், நீங்கள் திரும்பக் கொண்டுவரப்பட (restore) விரும்ப மாட்டீர்கள். பாருங்கள்? பாருங்கள்? ஆனால் உங்கள் இருதயத்துடன் தொடர்பு கொண்டிருக்கும் ஒன்று இருக்கும்வரைக்கும், நீங்கள் திரும்பக் கொண்டுவரப்படும் பாதையில் இன்னுமாக இருக்கின்றீர்கள்.
100. “சிறிய ஒன்றுக்கு குற்றவாளி முழுவதற்கும் குற்றவாளி யாயிருக்கிறான்”. நான் அநேக முறை பாவம் செய்திருக்கிறேன், நாம் செய்ய விரும்பாத அநேக காரியங்களை நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் செய்கின்றோம்.
101. நம்முடைய இருதயத்தில்... நீங்கள் அவ்விதமாக இருக்க விரும்பவில்லை. இல்லையென்றால் நீங்கள் இந்தக் கேள்வியை கேட்டிருக்கமாட்டீர்கள். பாருங்கள்? இதுவே தேவன் உங்களுடன் காரியங்களைச் செய்து கொண்டிருக்கிறார் என்பதற்கான அத்தாட்சியாகும். (ஒருக்கால் நீங்கள் பயந்து போயிருப்பீர்கள், நீங்கள் திரும்பக் கொண்டுவரப்படமுடியாது என்று சாத்தான் உங்களிடம் கூறிக்கொண்டிருந்திருப்பான். அவன் பொய் சொல்கிறான், நிச்சயமாக அவன் பொய்யைக் கூறுகிறான்). ஏனெனில், கவனியுங்கள், கூப்பிடுகின்ற ஒரு ஆழம் இருக்குமானால், அதற்கு பதிலளிக்கிற ஆழம் ஒன்று இருந்தேயாக வேண்டும். ஏதோ ஒன்றிற்காக ஒரு பலி இருக்குமானால், அந்த ஏதோ ஒன்று எங்கோ ஓரிடத்தில் இருந்தாக வேண்டும். இல்லையென்றால் நீங்கள் அதற்கான பசி உங்களிடம் இருக்காது. பாருங்கள்?
102. அநேக முறை நான் கூறியிருப்பது போல், ஒரு மீனுக்கு அதனுடைய முதுகில் நீந்த பயன்படும் உறுப்பு இருக்கும் முன்னர், அது நீந்தத்தக்கதாக முதலாவதாக தண்ணீர் இருக்க வேண்டும், இல்லையென்றால் அந்த மீனுக்கு அந்த நீந்த உதவும் உறுப்பு இருக்கவே இருக்காது. பூமியிலே ஒரு மரம் இருப்பதற்கு முன், ஏன்? அந்த மரம் வளரவேண்டுமாயின், அதற்கு முன்பே ஒரு பூமி இருக்க வேண்டும்.
103. இப்பொழுது, ஒரு சிருஷ்டிப்பிற்கு முன், அந்த சிருஷ்டிப்பைச் சிருஷ்டிக்க ஒரு சிருஷ்டிகர் இருந்தாக வேண்டும். நான் என்ன கூற முயல்கிறேன் என்பதைக் காணமுடிகிறதா? நீங்கள் தேவனிடம் திரும்புவதற்காக விருப்பமும் பசியும் கொண்டிருக்கிறவர்களாக இருக்கும் பட்சத்தில், உங்களை அழைத்துக் கொண்டிருக்கும் தேவன் எங்கோ இருக்கின்றார், பாருங்கள், இல்லையென்றால் நீங்கள் பசி, வாஞ்சையுடைவர்களாய் இருக்கமாட்டீர்கள். ஒரு சிருஷ்டிகர் இருக்கின்றார்!
104. இப்பொழுது, நீங்கள்... நீங்கள் திரும்பவும் வரமுடியாத படிக்கு நீங்கள் கடந்து செல்கிற ஒரு இடம் இருக்கிறது, நீங்கள் முன்பிருந்த நிலைக்கே மறுபடியுமாக சென்று விடுகின்ற நிலைதான் அது. அது எதைக் காண்பிக்கிறதென்றால் நீங்கள் கிருபையிலிருந்து விழுந்து போனீர்கள் என்பதே. பின்மாற்றம் இழந்து போகப்பட்ட நிலை அல்ல. பின்மாற்றமடைதல் இழந்த ஒரு நிலை என்பது எங்குள்ளது என்றும் அதை யாராவது வேதப்பூர்மாக என்னிடமாக கூறி நிருபிக்க நான் விரும்புகிறேன்.
105. இஸ்ரவேலர் பின்மாற்றமடைந்தனர். ஆனால் அவர்கள் தங்கள் உடன்படிக்கையை இழக்கவில்லை, அவர்கள் தங்கள் துதிகளையும் சந்தோஷத்தையும் இழந்தனர்.
106. உரியாவின் மனைவியாகிய பத்சேபாளை தாவீது எடுத்துக் கொண்ட போது தாவீது இரட்சணியத்தின் (Salvation) சந்தோஷத்தை இழந்தான், ஆனால் தன்னுடைய இரட்சணியத்தை (Salvation) இழக்கவில்லை. “என் இரட்சணியத்தை (Salvation) திரும்பவும் எனக்குத் தந்து” என்று அவன் ஒருக்காலும் கூறவில்லை. அவன் “என் இரட்சணியத்தின் சந்தோஷத்தை திரும்பவும் எனக்கு தந்து” என்று தான் கூறினான்.
107. ஓ, இன்றைக்கு பிரமாணத்தை மீறி அனுசரித்தல் கொள்கை (legalism) போன்றவை மிக அதிகமாக உள்ளது, “தொடாதே, ருசிபாராதே” போன்றவை. நீங்கள் காரியங்களை சரியான அனுசரிப்பின்படியே (Legalism) செய்வதில்லை.
108. நான் சபைக்கு இன்றிரவு முழுவதும் சரியான அனுசரித்தலோடு வரவில்லை. நான் களைப்புற்றிருக்கிறேன், நான் நரம்புத்தளர்ச்சியுற்றவனாக இருந்திருக்கிறேன், வெளியே எனக்காக இருக்கின்ற ஏதோ ஒன்றிற்காக நான் ஆச்சரியத்துடன் எதிர் நோக்கிக் கொண்டிருக்கிறேன், என் இருதயம் எரிந்து கொண் டிருக்கிறது, என் இருதயம் விரைவாக துடிக்கின்ற அளவிற்கு காரியம் இருக்கிறது. சரியாக இந்த நிமிடத்தில் எனக்கு வலியும், மேலும் கீழும் முன்னும் பின்னும் வலியெடுக்கும் தசைப்பிடிப்பு இங்கே இருக்கிறது. பலவீனம், நரம்புத்தளர்ச்சி, நடுக்கம்; இங்கே பிடித்துக்கொண்டு பிழிகின்றது; என் காலணிகளில் என் கால்விரல் வலிக்கின்றது. எல்லா வலியும் இருந்தது. ஆனாலும் இங்கே வந்து விட்டேன். அப்படியானால் நான் ஏன் இங்கு வந்துள்ளேன்? ஏனெனில் நான் தேவனை நேசிக்கிறேன். வாழ்வோ அல்லது சாவோ, அவருக்காக நான் இங்கே நிற்க வேண்டும். நான் அப்படியாக செய்ய வேண்டும் என்பதனால் அல்ல. நான் செய்தேனா அல்லது செய்யவில்லையா என்று அவருக்கு ஒரு பொருட்டல்ல. நான்... எப்படியாயினும், நான் மரித்தால் நான் பரலோகம் செல்வேன். நான் இங்கே வருகின்றேன். ஏனென்றால் நான் அவரை நேசிக்கின்றேன். நீங்கள் தேவனை நேசிப்பதால் தான் அவருக்கு ஊழியம் செய்கிறீர்கள், நீங்கள் அதை செய்ய வேண்டும் என்பதற்காக அல்ல. ஏனென்றால் அவ்வளவாக அவரை நீங்கள் நேசிப்பதால் தான்!
109. என் மனைவி என்னை விவாகரத்து செய்து விடுவாளோ என்ற பயத்தில் நான் என் மனைவிக்கு உண்மையாயிருக்கிறேன் என்றல்ல. நான் அவளை நேசிப்பதால் நான் அவளுக்கு உண்மையாயிருக்கிறேன். ஏனென்றால் எனக்கு அவளைத் தவிர உலகத்தில் வேறெந்த ஸ்திரீயும் தெரியாது. அதன் காரணமாகத்தான் நான் அவளுக்கு உண்மையாயிருக்கிறேன். நான் ஒரு தவறு செய்து, நான் ஏதோ தவறு செய்து விட்டேன் என்று அவர்கள் நினைக்கும் போது, நான் இவளிடம் வந்து, “மேடா, தேனே, அவ்விதமாக நான் செய்ய வேண்டும் என்று விழையவில்லை” என்று கூறும் போது அவள் அதை மன்னித்து விடுவாள், அவள் அவ்விதமாகச் செய்வாள் என்று நான் அறிவேன். நான் அவளை மன்னித்து விடுவேன்; நான் அவளை நேசிக்கிறேன். நானும் அவளை மன்னிப்பேன்; அவளும் என்னை மன்னிப்பாள். ஆனால் நான் அந்த விதமாக தவறு செய்யமாட்டேன், ஏனெனில் அவளை நான் மிகவுமாக நேசிக்கிறேன். ஆதலால் நான் செய்ய மாட்டேன். அவள் என்னை மன்னிப்பாள் என்று நான் நினைக்காததால் அல்ல, அவளை நான் மிகவுமாக நேசிப்பதாலே நான் முதலாவதாக அவ்விதமாக செய்யவில்லை. நான் அந்த விதமாக அவளை நேசிக்கின்ற வரையில், நான் அந்த தவறைச் செய்யமாட்டேன்; அவள் என்னிடமாக அன்பு கூரவேண்டிய விதத்தில் அவள் என்னை நேசித்தால் அவளும் கூட அவ்விதமாக செய்யமாட்டாள்.
110. ஆகவே நீ கர்த்தரை உன் முழு இருதயத்தோடு அவரை நேசித்தால் இந்த காரியங்களைக் குறித்து நீ கவலைப்பட வேண்டிய அவசியம் உனக்கு இல்லை. நீங்கள் தவறு செய்யும் போது, நீங்கள் மனப்பூர்வமாக பாவம் செய்யவில்லை, நீங்கள் தவறான ஏதோ ஒன்றை செய்துவிட்டீர்கள். பாருங்கள், நீங்கள் பின்னாலே சென்றுவிட்டீர்கள். உண்மையாக, நீங்கள் இங்கே மேலே ஐக்கியத்தில் இருந்தீர்கள், இங்கிருந்து மறுபடியுமாக நீங்கள் இந்த தாறுமாறுக்குள் கீழ் நிலைக்கு சென்று விட்டீர்கள்.
111. ஆனால் அது என்ன? அது ஒரு கழுகு போல. ஒரு சமயம் நான் கண்ட... இங்கே சின்சின்னாட்டி மிருகக் காட்சி சாலையில், நான் சாராளை அழைத்து அதில் சென்று கொண்டிருந்தேன். நான் ஒரு காட்சியைக் கண்டு அது என்னை பாதிப்படையச் செய்யுமானால், அது மிருகங்கள் கூண்டுக்குள் அடைக்கப்பட்டிருப்பதே ஆகும்.
112. ஒரு கூண்டுக்குள் எந்த ஒன்றும் அடைக்கப்பட்டிருப்பதை நான் காணும் போது என்னால் அதை பொறுத்துக் கொள்ளவே முடியாது - சிறு பறவைகள் அடைக்கப்பட்டிருந்தாலும் கூட. பெண்களாகிய நீங்கள் அதைப் போன்ற சிறு பறவைகளை வைத்திருக்கிறீர்கள் என்பதை நானறிவேன், நீங்கள் அவைகளை வெளியே விட்டு விடுங்கள்.
113. நான் ஒரு சிறு பையனாக இருக்கையில், “எனக்கு ஒரு தருணம் கிடைக்குமானால், நான் ஒரு மனிதனாக ஆகும்போது, நான் ஒவ்வொரு வீட்டிற்குள் மெதுவாக நுழைந்து அந்த சிறு உயிரினங்களை வெளியே எடுத்து விட்டு விடுவேன்” என்று கூறுவதுண்டு. ஆம், ஐயா. நான் கூறினேன். அங்கே சூரிய உஷ்ணத்தில் அவை இருக்கின்றன, இவர்கள் அதைப் பார்த்து 'ஹா, ஹா, ஹா” என்று சிரிக்கின்றனர். அங்கே ஒரு பெண் ஒரு முன் தாழ்வாரத்தில் உட்கார்ந்து சிகரெட் புகைத்துக் கொண்டிருப் பாள், பாவம் அந்த சிறு பறவை அங்கே வெப்பத்தில் பொசுக்கப்பட்ட நிலையில் உட்கார்ந்து கொண்டிருக்கும். அந்த பறவையால் ஒன்றுமே செய்யமுடியாது, அது அங்கேயே உட்கார்ந்து கொண்டிருக்கத்தான் முடியும். அது அதற்காக பிறக்கவில்லை! நான் “உம், நான் மாத்திரம் மெதுவாக நுழைந்து அதை வெளியே திறந்து விட முடியுமானால், அது நீண்ட காலம் அதில் இருக்காது” என்று நினைத்தேன். பாருங்கள்?
114. கூண்டில் அடைக்கப்பட்ட எந்த ஒன்றையும் பார்க்க எனக்கு விரும்பமில்லை. ஒரு மனிதன் தன்னை ஒரு கிறிஸ்தவன் என்று அழைத்துக் கொண்டு பிறகு ஏதோ ஒரு சபைக் கோட் பாட்டிற்குள் அடைபட்டுக்கிடப்பதை காண்பது எனக்கு வெறுப்பாக இருக்கிறது “என்னால் ஆமென் என்று சொல்ல முடியாது. அதில் எனக்கு விசுவாசம் கொள்ள முடியவில்லை. 'அதை விசுவாசிக்காதே' என்று போதகர் கூறுகிறார்”. ஓ, என்ன, அது! நீ சுதந்தரமாய்ப் பிறந்த ஒருவன்.
115. அப்படியானால் ஒரு பெரிய கழுகைக் குறித்தென்ன? அது ஒரு உன்னதப் பறவையாகும். அது மேலே மேகங்களுக்கு மேலே வாழ்கின்ற ஒன்று. ஒரு காலையில் அது அங்கே தான் செல்கின்றது. மிக உயரத்தில் அது பறக்கும். வேறெதுவுமே அதைப் பின் தொடர்ந்து பறக்க முடியாது! எந்த ஒரு பறவையும்... அந்த கழுகைப் பின் தொடர்ந்து பறக்க முயலுமானால் அது சிதறிப் போய்விடும். அது விசேஷமாக உருவாக்கப்பட்ட பறவை யாகும்.
116. அந்த கழுகை யாரோ சிலர் மனிதனால் உண்டாக்கப்பட்ட கண்ணியில் சிக்க வைத்து, இந்த பெரிய கழுகைப் பிடித்து இந்த கூண்டிற்குள் அடைத்துப் போட்டனர். பாவம், இந்த பரிதாபத்திற்குரியது. நான் அதை நோக்கிப் பார்த்தேன், என் இருதயம் அப்படியே எரிந்தது. அது வேறு பக்கமாக திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்தது. இந்த கூண்டிலிருந்து எப்படி வெளியே செல்ல வேண்டுமென்று அதற்குத் தெரியாதிருந்தது. அது அப்படியே அங்கே... எப்படி மேலே எழும்ப முடியும் என்பதுதான் அதற்கு தெரியும். அது தன் இறக்கைகளை அடிக்கும். மேலே எழும்பும், நேராக இரும்பு கம்பிகளில் தன் தலையை மோதும். அதன் இறக்கைகளிலிருந்து சிறகுகள் விழும், இறக்கைகளை விரித்து அசைக்கும், அது தன் தலையில் இரத்தம் வடியும் அளவிற்கு அவ்விதமாக செய்து கொண்டிருக்கும். அது மேலே உள்ள இரும்புக் கம்பியில் வேகமாக மோதி அப்படியே வேகமாக கீழே விழும். அது அப்படியே இருந்து அதன் சோர்ந்து போயிருக்கின்ற கண்களை உருட்டி வானத்தை நோக்கிப்பார்த்துக் கொண்டிருக்கும், “நான் அதோ அந்த இடத்தைச் சேர்ந்தவன். அதோ என் வீடு. அந்த இடத்திற்காகத்தான் நான் பிறந்திருக்கிறேன். ஆனால், பார், எனக்கும் அதற்கும் நடுவில் ஒரு கூண்டு இருக்கிறது. ஆம், எனக்குத் தெரிந்த ஒன்றேயொன்று என் சிந்தையை அதற்கு நேராக வைப்பதேயாகும், இதோ நான் வருகிறேன்.” அப்பொழுது அது எழும்பும். “படார்” என்று மோதும் சத்தம் கேட்கும், திரும்பவும் அது கீழே விழுந்து விடும்.
117. 'ஓ, என்னே, அது பயங்கரமாயிருக்கிறதே!” என்று நான் நினைத்தேன். “அவர்கள் அதை எனக்கு விற்றால் நலமாயிருக்கும். நான் என் ஃபோர்ட் காரை அடகு வைத்து அதை வாங்கி அதை சுதந்தரமாக விட்டு விடுவேன்” என்று நினைத்தேன். பாருங்கள்? ஓ, அந்த காட்சி என்னை வேதனையுறும்படிக்குச் செய்தது. அந்த பரிதாபத்திற்குரிய பெரிய பறவை, அது சிறகுகளை அடித்துக் கொண்டிருந்தது.... “நான் கண்டதிலேயே மிகப் பயங்கரமான காட்சி இதுதான்” என்று நான் நினைத்தேன்.
118. இல்லை, நான் அதைத் திரும்ப பெற்றுக்கொள்கிறேன், நான் கண்டதிலேயே மிகப்பயங்கரமான காட்சியானது தேவனுடைய குமாரனாக இருக்க ஒரு மனிதன் பிறக்கிறான். ஆனால் பிறகோ அவன் ஏதோ ஒரு கோட்பாடு என்னும் கூண்டுக்குள் அடைபட்டுப் போகிறான். அங்கேயிருந்து அவன் மேலே நோக்கிப் பார்த்து தான் உண்மையாகவே ஊழியம் செய்ய விரும்புகிற ஒரு தேவனைக் காண்கிறான். ஆனால் அவனால் அதைச் செய்ய முடியவில்லை. அவ்விதமாகச் செய்ய அவனை அவர்கள் விடமாட்டார்கள். பாருங்கள், அவன் கூண்டில் அடைக்கப்பட்டிருக்கிறான். அது ஒரு மோசமான காரியமாகும்.
119. ஆம், ஆம், சகோதரியே, சகோதரனே, இதை எழுதின யாராயிருந்தாலும் சரி, நீங்கள் இங்கே விழுந்து போயிருப்பீர்களானால், அதனாலே நீங்கள் இழந்து போகப்பட்டீர்கள் என்று அர்த்தமல்ல. நீங்கள், ஒரு கூண்டிற்குள் சென்றிருக்கின்ற ஒரு கழுகுதான், அவ்வளவே. நீங்கள் இங்கே மறுபடியுமாக பாவத்தில் மேலும் கீழுமாக அடைக்கப்பட்டிருக்கிறீர்கள். அதிலே இருக்க உங்களுக்கு விருப்பமில்லை, அதன் காரணமாகத்தான் நீங்கள் மேல் நோக்கிப் பார்க்கிறீர்கள். இதோ உங்கள் நிலை “ஓ, சகோதரன் பிரன்ஹாம், ஒரு காலத்தில் நான் அங்கே மேலே ஜீவித்துக் கொண்டிருந்தேன், இங்கிருந்து வருவதற்கு ஒரு வழி இருக்கிறதா?” ஆம்.
120. ஒரு நாளில் நான் (ஓ, ஒரு சிறு பையனாக இருக்கையில்) ஒரு பண்ணைக்கு பின்புறமாக நடந்து சென்றது என் நினைவிற்கு வருகிறது, இங்கே... யாரோ ஒருவர் ஒரு காகத்தை அந்த தானியப் பயிரிடம் செல்ல முடியாதபடிக்கு கட்டி வைத்திருந்தார். அந்த பரிதாபமான காகம் ஏறக்குறைய மரிக்கும் நிலையில் இருந்தது. அந்த விதமாக கேவலமான காரியத்தை செய்யும் நிலைக்கு நான் மட்ட மானவன் அல்ல. அவன் அந்த பரிதாபமான காகத்தின் ஒரு காலைக் கட்டியிருந்தான், அந்த காகத்திற்கு தின்பதற்கென எல்லாமே அதைச் சுற்றிலுமிருந்தன, ஆனால் அந்த காகத்தால் எதையுமே சாப்பிட முடியவில்லை. அந்த விவசாயி அதை அப்படியே விட்டுச் சென்றுவிட்டான். அந்த காகம் எழுந்திருக்கவே முடியாமல் மிகப்பரிதாபமான நிலையில் காணப்பட்டது. அதனால்... மற்ற காகங்கள் பறந்து வந்து “கா, கா, கா” என்று இந்த காகத்தின் மேலிருந்து கூறினது. வேறுவிதமாகக் கூறினால், “எழும்பி வா, ஜானி காகமே! குளிர் காலம் வருகின்றது, நாம் தென்பாகம் சென்று விடுவோம்” என்பதே. ஆனால் அந்த காகத்தால் எழும்பவே முடியவில்லை, அது கட்டப்பட்டிருந்தது.
121. ஒரு நாளிலே ஒரு குறிப்பிட்ட ஆள் அங்கே வந்து அந்த பரிதாபமான காகத்தைக் கண்டான். ஆகவே அவன் அதனிடம் சென்று அதைப் பிடித்து அதைக் கட்டவிழ்த்து “ஓ, பையனே, நீ விடுதலையாயிருக்கிறாய்' எழும்பிச் செல்” என்றான். பாருங்கள்? ஆகவே அப்பொழுது, முதலாவதாக என்னவென்று உங்களுக்கு தெரியுமா, அந்த காகம் சுற்றுமுற்றும் நடந்து கொண்டிருந்தது.
122. அங்கே திரும்பவுமாக அந்த காகங்கள் வந்து “ஜானி காகமே! எழும்பி வா, கா, கா, கா! நாம் தென் பாகம் சென்று விடுவோம், குளிகாலம் வருகின்றது. இல்லையென்றால் நீ குளிரில் உறைந்து போய் மரித்துவிடுவாய்” என்று கூக்குரலிட்டன.
123. இந்த காகமோ, “என்னால் அப்படிச் செய்யமுடியவில்லை” என்றது. பாருங்கள், கட்டப்பட்ட நிலையில் இருந்தே அதற்கு பழகிவிட்டது, பாருங்கள், அது தான் இன்னுமாக கட்டப்பட்டுத் தான் இருக்கிறோம் என்று நினைத்துக்கொண்டிருந்தது.
124. இந்த கேள்வியை எழுதின சகோதரனே, சகோதரியே, நீங்கள் கட்டப்பட்டிருக்கிறீர்கள் என்று ஒருக்கால் நீங்களும் கூட நினைக்கலாம். பிசாசு உங்களை அங்கே கட்டிப்போட்டிருக்கிறான் என்று நீங்கள் நினைக்கலாம், ஆனால் அவன் பொய் சொல்கிறான். ஒரு காலத்திலே பூமிக்கு ஒரு மனிதன் வந்தார், தேவ குமாரனாகிய இயேசு கிறிஸ்து, அவர் உங்களை கட்டவிழ்த்து விட்டார். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களல்லவா, நீங்கள் இன்னுமாக அங்கேயே இருக்க வேண்டியதில்லை, தேவையில்லை, இல்லை, ஐயா, நீங்கள் விடுதலையாகிருக்கிறீர்கள். அது சரி. உங்கள் பாவங்களை எடுத்துப் போட உங்களுடைய இடத்தில் அவர் மரித்தார். நீங்கள் அவர் பேரில் விசுவாசத்தை வைத்து, உங்கள் இறக்கைகளை அடித்து அந்த மற்றவர்களோடு பறந்து செல்லுங்கள். அந்த பிசாசினு டைய பள்ளத்தில் தங்கிவிடாதீர்கள். கூடாது ஐயா.
இப்பொழுது, நீர் தாமே என் மீது கைகளை வைத்து அதிலிருந்து என்னை விடுவிப்பீர்களா?
125. அருமை சகோதரியே அல்லது அருமை சகோதரனே, நிச்சயமாக, நான் உங்கள் மீது கைகளை வைப்பேன், ஆனால் அது உங்களை விடுதலையாக்காது. உங்களை விடுவிப்பது எதுவென்றால், நீங்கள்... நீங்கள் ஏற்கெனவே விடுதலையாயிருக்கிறீர்கள் என்பதை புரிந்து கொள்கிறதினாலே. நீங்கள் ஏற்கெனவே கட்டவிழ்க்கப்பட்டிருக்கிறீர்கள். விடுதலையாயிருக்க வேண்டுமே என்பதை குறித்து நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை, நீங்கள் ஏற்கெனவே விடுதலையாகியிருக்கிறீர்கள்! இயேசு உங்களை விடு வித்துவிட்டார். நீங்கள் மறுபடியுமாக அடிமைத்தனத்தின் நுகத்திலே சிக்கிக்கொள்ளாதீர்கள். நீங்கள் சுதந்திரமாக இருக்கிறீர்கள். நீங்கள் சிக்கிக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. என் கைகளை உங்கள் மீது வைப்பது ஒரு வழக்கமேயாகும். நாங்கள் அதைச் செய்யலாம். அது என்னால் அதைச் செய்யக் கூடும், ஆனால் அவர் உனக்காக செய்துள்ளதை நீங்கள் ஏற்றுக் கொள்ளும்வரை கைகளை வைப்பது உங்களை விடுதலையாக்காது; “கர்த்தாவே, நான் அதை விசுவாசிக்கிறேன்” என்று நான் மாத்திரமே கூறிக்கொண்டிருப்பேன்.
126. ஆம், நீங்கள் விசுவாசத்தாலே அவர் மீது உங்கள் கைகளை வைத்து “கர்த்தாவே, நான் அதை விசுவாசிக்கிறேன்” என்று கூறுங்கள், மேலே எழும்புங்கள். அது சரி, உங்கள் பாவங்களை அறிக்கையிடுங்கள். பாருங்கள், “தன் பாவங்களை மறைத்து வைக்கிறவன் வாழ்வடையமாட்டான், தன் பாவங்களை மறைக்கிறவன். தன் பாவங்களை அறிக்கை செய்கிறவன்...” நீங்கள், “நான் பாவம் செய்துவிட்டேன், நான் தவறாயிருக்கிறேன்” என்று கூற விரும்புகிற போது அதில்தான் நீங்கள் விடுதலையும் நீதிமானாக்கப்படுதலையும் பெறுகிறீர்கள். அதைத் தான் நீங்கள் இங்கே கூறியிருக்கிறீர்கள்: நான் விழுந்துபோய் விட்டேன், நான் பாவம் செய்தேன். நான் பயங்கர தவறாயிருக்கிறேன்! நான் மறுபடியுமாக முழுவதுமாக சரியாவதற்கு ஒரு வாய்ப்பு எனக்கு இருக்கிறதா?
127. நிச்சயமாக! நீங்கள் அதை வாஞ்சித்த அந்த நிமிடத்தி லேயே, அது உங்களை மேலே தூக்கியெடுக்க உயிர்காக்கும் மிதவைப் பொருள் கட்டப்பட்டுள்ள கயிறை தேவன் உங்களிடம் கீழே விட்டிருக்கிறார் என்பதை இது காண்பிக்கின்றது. ஜெபம் மற்றும் விசுவாசம் என்னும் அவருடைய கயிற்றைக் கொண்டு மேலே வந்து, நேராக மற்ற கழுகுகளைச் சென்றடையுங்கள், சிறகடித்துச் செல்லுங்கள். அது சரி.
128. ஆம், கைகளை மேலே வைத்தல், அது - அது ஒரு மகத்தான காரியமாகும், அதை நான் விசுவாசிக்கிறேன். கைகளை வைத்தலில் எனக்கு விசுவாசம் உண்டு, நிச்சயமாக நான் விசுவாசிக்கிறேன். ஆனால் அதுதான் காரியங்களைச் செய்கின்றது என்பதல்ல. நான் வாரம் முழுவதும் வாரத்திற்குப் பிறகும் நான் ஜனங்களின் மீது கைகளை வைக்கலாம், ஆனால் கிறிஸ்து உங்களுக்காக செய்ததை நீங்கள் ஏற்றுக்கொள்கின்ற வரையிலும் அது உங்களுக்கு ஒரு நன்மையும் செய்யாது. கைகளை வைத்தல் என்பது நான் செய்யும்படிக்கு எனக்களிகப்பட்ட அதிகாரமாகும். அவர்கள் மூப்பர்கள் மீது கைகளை வைத்தார்கள். அவர்கள் அந்தக் காரியங்களைச் செய்தனர். தேவனுக்கு முன்பாக அவர்களுக்கு அளிக்கப்பட்ட அதிகாரமாகும், அதற்கு தங்கள் விசுவாசத்தை செலுத்தினர், அதற்கு தங்களுடைய நம்பிக்கையை அளித்தனர். பாருங்கள்? சில சமயங்களில், காரியங்கள்...
129. அநேக முறை நான் மிகவுமாக தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளேன். நான் நான்... கடந்த இரவு. நான் கருத்துக்களுக்கு நடுவாக நிறுத்திக்கொள்கிறேன், எந்த வழியாக நான் திரும்ப வேண்டுமென்று என்று எனக்குத் தெரியவில்லை. நானும் கூட, நான் கருத்துக்கு இடையில் இருக்கிறேன், என்ன செய்வதென்று எனக்குத் தெரியவில்லை. இது இங்கே சரீரப்பிர காரமாக சபை அல்லது ஆவிக்குரிய சபை இங்கே இருக்கிறதென்று நான் நம்புகிறேன், இதை அவர்கள் பதிவு செய்யவில்லை யென்று நான் யூகிக்கிறேன். ஆகவே நான் விரும்புவதை கூறுவேனாக. அவர்கள்...
130. நான் உங்களிடம் மனம்விட்டு பேச வேண்டுமென்று விரும்பினேன், எப்படியாயினும் நான் அதை கூறுவேன் என்று விசுவாசிக்கிறேன். வேத வசனத்தோடே ஒரு குறிப்பையும் நான் இங்கே எழுதி வைத்திருந்தேன், அது... அப்படி இல்லையென்றால், முடிவு கால சுவிசேஷகம் என்பதன் பேரில், முடிவு கால சுவிசேஷகம் என்றால் என்ன என்பதைக் குறித்து பேசுவதாக இருந்தேன். இன்னொரு நாளிலே அதை பேச நான் வைத்து விடுகிறேன். என் இருதயத்திலிருந்து, என் இருதயத்தின் ஆழத்திலிருந்து உங்களிடம் பேச நான் விரும்புகிறேன்.