42. பாருங்கள், இப்பொழுது, நான் சிறந்த முறையில் புரிந்து கொண்டபடி இந்த ஐந்து கன்னிகைகள்... பத்து கன்னிகைகள் புறப்பட்டு சென்றார்கள் என்று நீங்கள் அறிவீர்கள். பாருங்கள். இது ஒரு அடையாளமாகவோ அல்லது உவமையாகவோ கூறப்பட்டுள்ளது என்று கூறிடவே நான் விரும்புகிறேன். பாருங்கள், அவர்கள் பத்துபேர் இருந்தனர். பத்து பேருக்கும் அதிகமாக இருந்திருப்பார்கள். ஆனால் இங்கே ஒரு எண்ணிக்கையாக அது கூறப்பட்டுள்ளது. புத்தியுள்ள கன்னிகைகள் தங்கள் தீவட்டியிலே எண்ணெய் வைத்திருந்தார்கள். புத்தியில்லாதவர்கள் தங்கள் தீவட்டியிலே எண்ணெய் இல்லாதவர்களாக இருந்தார்கள்.
43. மத்தேயுவில் பத்து பேரில் ஐந்து பேர் மாத்திரமே உள்ளே சென்றதுபோல், ஐந்துபேர் மாத்திரமே எடுத்துக் கொள்ளப்படுதலில் செல்லுவார்களா என்பதுதான் அந்த நபர் கேட்ட கேள்வியாகும். இல்லை, அது அவ்வண்ணமல்ல.
44. தங்கள் தீவட்டியில் எண்ணையுடன் சென்றவர்கள் மணவாட்டியின் அங்கத்தினர்களுக்கு இவர்கள் எடுத்துக்காட்டாக வைக்கப்பட்டிருக்கிறார்கள். நீங்கள் பாருங்கள்? அவர்கள் மணவாட்டியின் ஒரு பாகமாக இருக்கிறார்கள். என்னுடைய புரிந்து கொள்ளு தலின்படி...
45. இப்பொழுது நீங்கள் கவனிப்பீர்களானால், இவர்கள்தான் கடைசி ஜாமத்தின் கன்னிகைகள். ஏழு ஜாமங்கள் இருக்கின்றன. நாம் இப்பொழுது பேசிக் கொண்டிருக்கும் ஏழாம் ஜாமமாகிய நடு இரவிலே இந்தக் கன்னிகைகள் எழுந்து தங்கள் தீவட்டிகளை ஆயத்தம் செய்துக் கொண்டு உள்ளே பிரவேசித்தார்கள். ஆனால் உறங்கிக் கொண்டிருக்கும் கன்னிகைகளோ...
46. இப்பொழுது இங்கே ஐந்து கன்னிகைகளைக் குறித்து பொருள் என்ன? என்ற கேள்வி கேட்கப்பட்டுள்ளது. ஏழாயிரம் பேரைக் குறித்தும் அநேகக் கேள்விகள் இங்கே கேட்கப்பட்டுள்ளன. அது உண்மையானவைகளின் ஒரு அடையாளமாக மாத்திரம் உள்ளன. இந்தக் கடைசிக் காலமாகிய ஏழாம் ஜாமத்திலே ஐந்து பேர்தான் உறக்கத்தினின்று விழித்துக்கொண்டு மறுரூபமாக்கப்பட்டு மணவாளனுடன் சென்றார்கள்? இப்பொழுது அவர்கள்...
47. எடுத்துக் கொள்ளப்படப் போகிறவர்கள் ஐந்து பேர் மாத்திரம் என்பது அதன் அர்த்தமல்ல. ஏனென்றால், இந்த வாரம் நாம் பார்த்த வண்ணம் அவர்கள், சபையின் காலங்களிலெல்லாம் நித்திரை செய்துக் கொண்டிருக் கிறார்கள்.
48. எபேசு சபையின் தூதனாகிய பவுலின் நாட்களில், பவுல் அந்த சபையின் செய்தியாளனாக இருந்ததினால், அந்தச் சபையை ஏற்படுத்தினான். பவுல் எபேசு சபையை ஏற்படுத்தினதினால், அந்தச் சபைக்குச் செய்தியாளன் ஆனான் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அக்காலத்தில் இருந்த ஆவி சிங்கத்தின் ஆவியாக இருந்தது. சிங்கமென்று சொல்லும்போது அது யூதா கோத்திரத்து சிங்கமாகிய கிறிஸ்துவையே குறிக்கிறது. கிறிஸ்துவே அந்த வார்த்தை. பவுல் அக்காலத்திற்குரிய வார்த்தையுடன் வந்தான். அந்த யுகத்திலே ஆயிரமாயிரமானவர்கள் நித்திரை யடைந்தார்கள். அது சரிதானே? (சபையார் "ஆமென்” என்கின்றனர் - ஆசி).
49. அதற்குப் பிறகு அடுத்த யுகம் வந்தது. இருண்ட யுகத்திற்குள் சபை சென்றபோது காளையின் ஆவி புறப்பட்டுச் சென்றது. காளையானது உழைப்புக்கும், பலிக்கும் உரிய மிருகமாக இருப்பதுபோல, ஆயிரமாயிரமான பேர்கள் இரத்த சாட்சிகளாக மரித்தார்கள், நித்திரையடைந்தார்கள். அவர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அறிவீர்கள்.
50. அடுத்தபடியாக சீர்திருத்த யுகமாகிய லூத்தரின் யுகம் வந்தது. அப்பொழுது சாமர்த்தியமுள்ள, மனித ஞானமுள்ள ஆவி சென்றது. நீங்கள் கவனிப்பீர்களானால், அவன் அதனுடன், தன்னுடைய ஞானத்தையும் சேர்த்து, மற்றொரு பங்கினுடன் (ஸ்தாபனத்துடன் - தமிழாக்கியோன்) விவாகம் செய்துக் கொண்டான், பாருங்கள். பாருங்கள்? இந்த யுகத்திலே மனிதன் தன் ஞானத்துடன் சென்றான். சீர்திருத்தம், தேவஞானத்தோடே மக்களை பிரித்துக் கொண்டு வருவதுடன் இருந்து விட்டிருந்தால் நலமாயிருந்திருக்கக்கூடும். ஆனால் அவன் என்ன செய்தான்? செய்தியைக் கொண்டு வந்த மனிதனாகிய லூத்தரின் மரணத்திற்குப் பிறகு, அவர்கள் லூத்தரன் ஸ்தாபனத்தை உண்டாக்கிக் கொண்டார்கள்.
51. வெஸ்லியின் மரணத்திற்குப் பிறகு மெத்தோடிஸ்ட் ஸ்தாபனத்தை உருவாக்கிக் கொண்டார்கள் என்பதை அறிவீர்கள். பாருங்கள்? இவ்விதமாக சென்று கொண்டேயிருந்தனர். அது... அதுதான் அதைச் செய்கின்றது. இப்பொழுது, நீங்கள் இதைக் கவனிக்கவேண்டும் என விரும்புகிறேன். மூன்றாவது யுகமாகிய பெந்தெகொஸ்தே யுகத்தைக் குறித்து சிலர் கேட்கலாம்.
52. நீங்கள் பாருங்கள், ஒவ்வொரு யுகத்திலும் பரிசுத்த ஆவிக்குள் ஒரு மூழ்குதலை பெற்றார்கள். நீதிமானாக்கப்படுதல் பரிசுத்த ஆவியின் ஒரு கிரியையாகும். பரிசுத்தமாக்கப்படுதல் பரிசுத்த ஆவியின் ஒரு கிரியையாகும். ஆனால் ஞானஸ்நானம் என்பது பரிசுத்த ஆவியியாய் இருக்கிறது. ஆகவேதான் ஒரு முன்னுணர்ந்துரைக்கிற (prophetic) ஒரு தீர்க்கதரிசி (Prophet) வரவேண்டியதாக இருந்தது. செய்தியாளன் அல்ல. பரிசுத்த ஆவியானவரே, பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம் மூலமாக தாமே தம் முழுமையில் வந்தார்.
53. ஒவ்வொரு யுகத்தின் முடிவிலும் செய்தியாளன் அனுப்பப்பட்டு குழப்பங்களை அகற்றி ஒழுங்குபடுத்தி சபையை அதன் நிலையில் நிறுத்தினான். கடைசியாக சபைக்கு எடுத்துக் கொள்ளப்படுதல் வருகிறது.
54. சூரியன் அந்தகாரப்பட்டு, சந்திரன் இரத்தம் போலாவது... போன்ற காரியங்களை மக்கள் புரிந்துக் கொள்ளாமல் சபையின் காலங்களில் இவைகளை இணைத்திருக்கிறார்கள். நம்முடைய கர்த்தரை, அவருடைய சீஷர்கள் மூன்று கேள்விகளை கேட்டபோது, அவர் தந்த பதில்களை மக்கள் புரிந்துகொள்ளத் தவறிவிட்டனர்.
55. இப்பொழுது கடந்த இரவு எந்த கேள்வியும் கேட்கவில்லையென்று நினைக்கிறேன். எல்லாக் கேள்விகளையும் எடுத்து முத்திரைகளின் கீழ் வைத்திருக்கிறோம். முத்திரைகள் ஒரு முழு புஸ்தகமாக இருக்கிறது.
டாக்டர், நீர் அதை விசுவாசிக்கிறீரா? (ஒரு சகோதரன் "ஆம்" என்கிறார் - ஆசி)
56. பாருங்கள், எல்லாம் ஒன்றாக இணைக் கப்பட்டிருக்கிறது. இயேசு இங்கே என்ன கூறினாரோ, அதை நாம் பார்த்தோம். இயேசுவினிடத்தில் மூன்று கேள்விகளை அவர்கள் கேட்டார்கள்! “இது எப்போது சம்பவிக்கும்? உம்முடைய வருகைக்கு அடையாளம் என்ன? உலகத்தின் முடிவிற்கு அடையாளம் என்ன?” அவர் கொடுத்த விடைகளில்... நாம் அதன் கீழாக எல்லாவற்றையும் ஒவ்வொன்றையும் ஆராய்ந்து பார்த்தோம், ஆனால் ஒன்றைத் தவிர, அது என்ன? ஏழாம் முத்திரை. அது என்னவென்று இன்னும் தெரியவில்லை. அதுவேதான். எல்லாம் சரியாக பொருந்தினது. அவைகளை முன்னும், பின்னுமாக ஜோடியாக இணைத்துக் காட்டினேன்.
57. ஆகவே, நான் திரும்பவும் சென்று என்னுடைய பழைய குறிப்புகளை எடுத்து பார்த்தபோது அவைகளை அதனதன் இடத்தில் சரியாகப் பொருத்தாமல், ஒரு காரியத்தை மற்றொரு இடத்திலும், மற்றொன்றை வேறோரு இடத்திலும் தவறாகப் பொருத்தியிருந்தேன். இவ்விதமாகத்தான் செய்திருந்தேன். நீங்கள் இதை கிரகித்துக் கொண்டீர்கள் என்று நம்புகிறேன். நீங்கள் அதைக் கிரகித்துக் கொண்டீர்களா? பாருங்கள்?
58. நான் எங்கே குறிப்பை எழுத வேண்டுமென்றிருந்தேனோ, அதை இந்தப் பக்கத்தில் எழுதி வைத்துவிட்டேன். அவைகள் இரண்டையும் 9, 11 அல்லது 9,6 அல்லது 6-ம் 11-ம், 9-ம் 11-ம் என்று எழுதி வைத்து விட்டேன். அது அவ்விதம் அல்ல. அந்தக் குறிப்பு மாற்றி எழுதி வைக்கப்பட்டிருந்தது. ஆனால் அது அடுத்து வசனத்தில் இருந்தது. பாருங்கள்? அதனுடைய பதில் பஞ்சங்களுக்கும் யுத்தத்திற்கும் இடையில் இருந்தது. (சகோதரன் பிரன்ஹாம் தான் அங்கே மத்தேயு 24, வெளி. 6ல் நான்காவது முத்திரையை ஒப்பிட்டுக் காட்டியதைக் குறிப்பிடுகிறார். ஆறாவது முத்திரை, 166 முதல் 174 பத்திகளைக் கவனிக்கவும் - தமிழாக்கியோன்.)
59. ஆகவே, நான் மிகவும் மகிழ்ச்சியாயிருந்தேன். வெளிப்படுத்தலினால் வரும் புத்துணர்வை ரசித்துக் கொண்டேயிருந்தேன். அங்கே உட்கார்ந்து கொண்டு பென்சிலையோ அல்லது பேனாவையோ வைத்துக் கொண்டு இரண்டு பக்கங்களிலும் 11 என்று குறிப்பெழுதினேன். அது அவ்விதம் அல்ல. அது 11க்குப் பதிலாக 9 என்று இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். கொள்ளைநோய், யுத்தங்கள் போன்ற காரியங்களை எடுத்து அவைகளை எப்படிப் பொருத்துவது என்று எண்ணிக் கொண்டிருந்தேன்.
60. ஆனால் இப்பொழுதோ, எல்லாம் ஒழுங்காக ஜோடியாக அமைந்திருப்பதை நீங்கள் கண்டீர்களா? இப்பொழுது ஆறாம் முத்திரைவரை ஒழுங்காக பொருத்தப்பட்டு நின்றுவிட்டதை நீங்கள் மறந்து விட வேண்டாம். ஆறாவது முத்திரைவரை முத்திரைகள் திறக்கப்பட்டு, இப்பொழுது "பரலோகத்தில் அரைமணி நேரம் அமைதலில் நின்றிருக்கிறது.” "அரைமணி நேரம் அமைதல்” என்று மாத்திரம் சொல்லப்பட்டு இருக்கிறது.
61. இப்பொழுது பாருங்கள், நான்... இக்கேள்விகளுக்கு நான் துரிதமாக பதில் அளிக்க வேண்டியவனாக இருக்கிறேன். ஏனென்றால் ஒவ்வொரு பதிலும் நான்கு வாரத்தில் கொடுக்கும் செய்தியின் நீளத்திற்கு உள்ளது. நான் அவ்விதம் செய்யாமல் ஒவ்வொருவரின் கேள்விக்கும் என்னால் முடிந்தவரை பதில் அளிக்க விரும்புகிறேன்.
62. இந்த கன்னிகைகள், பாருங்கள், அவர்கள். அந்த காலத்தில் அவர்கள் ஒரு பாகமாயிருந்தனர். பாருங்கள்? ஒவ்வொரு காலமும் கன்னிகைகளைக் கொண்டிருந்தன. பாருங்கள்? ஒரு - ஒரு முத்திரை... தூதன் சபைக்கு வருகிறான்: "எபேசு சபையின் தூதனுக்கு எழுத வேண்டியது என்னவெனில்” என்று கூறுவதை கவனிக்கவும்.
63. எபேசு சபைக்கு எழுதப்பட்டிருப்பதை வாசித்த பிறகு (மீண்டும் அதை ஒப்பிட்டுப் பார்க்கவும்) ஒரு முத்திரை திறக்கப்படுகிறது. கர்த்தருக்குச் சித்தமாயிருப்பின், இவ்விதமாகத்தான் எல்லாம் உங்களுக்கு அளிக்க நாங்கள் முயற்சிக்கிறோம். நான் என்ன கருதுகிறேன் என்பதை அறிந்து கொண்டீர்களா?
64. முதலில் நாம் எதைப் பெற்றோம்? சபையின் காலங்கள். அது சரி தானே? அதற்குப் பிறகு, சபையின் காலங்களுக்குரிய செய்திகள். இப்பொழுது இது எல்லோருக்கும் தெளிவாக இருக்கிறதா? பாருங்கள்?
65. முதலில் சபையின் காலங்களும், சரித்திரமும் நமக்கு கொடுக்கப்பட்டது. நிசாயா ஆலோசனை சங்கம், நிசாயா ஆலோசனை சங்கத்துக்கு முந்தின காலங்கள், மற்றும் இவை போன்ற காரியங்களை சரித்திரத்தில் நாம் கண்டுபிடிக்க முடிந்தவைகள். அதன் பிறகு, வார்த்தையின் உண்மையான வியாக்கியானம் சரித்திரத்தோடு இணைந்து செல்லுகிறதைக் கண்டோம். இவ்விதமாக லவோதிக்கேயா காலமாகிய இக்கால மட்டும் கொண்டு வரப்பட்டோம். இக்காலத்திற்குரிய சரித்திரம் நமக்கு கொடுக்கப்படவில்லை. இதுதான் சரித்திரம் எழுதப்படுவதாகும் என்பதை கவனிக்கவும். பாருங்கள், இதோ இருக்கின்றது. இக்காலத்தில், காரியங்கள் எப்படியிருக்கும் என்பதுதான் காட்டப்பட்டுள்ளது.
66. நாம் இப்பொழுது முத்திரைகளுக்கு வந்து அந்த முத்திரையைத் திறக்கின்றோம். தேவன் நமக்கு அந்த முத்திரையைத் திறக்கிறார். அது என்ன? முதலில் ஒரு சபையின் செய்தியாளன். சபையின் காலம், அதற்குப் பிறகு ஏழு முத்திரைகள்.
67. இப்பொழுது, ஏழாம் சபையின் காலத்தில் வரும் சீர்கேட்டை கவனிப்போம்... ஆனால் ஏழாம் முத்திரையில் என்ன நடக்கப்போகிறது என்பதை அறிவிக்கவில்லை என்பதை அறியவும். பாருங்கள், ஏனென்றால், இந்தச் சபையின் காலத்தின் முடிவில் இவைகளை வெளிப்படுத்த ஒரு தீர்க்கதரிசன வரம் வரவேண்டும். பாருங்கள்? நீங்கள் இதை புரிந்து கொண்டீர்களா? (சபையார் “ஆமென்” என்கின்றனர் - ஆசி) அது சரி. முத்திரைகள் ஒவ்வொன்றும். எவ்வாறு...
68. அதன்பின் நான் இவ்விடம் வந்து... முத்திரைகள் ஒவ்வொன்றும், இயேசு கிறிஸ்துவிடம் கேட்ட மூன்று கேள்விகளின் விடைகளோடு பொருந்துவதை கண்டோம். “இவைகள் எப்பொழுது சம்பவிக்கும்? ஒரு கல்லின்மேல் ஒரு கல்லிராதபடி எப்பொழுது இடிக்கப்படும்? உலகத்தின் மதத்திற்கு மையமான இடமாக வேறொரு இடம் எப்பொழுது ஸ்தாபிக்கப்படும்? பாருங்கள்? அந்திக்கிறிஸ்து எப்பொழுது வருவான்? பாருங்கள்? அவனை எதிர்க்க என்ன சென்றது? - வார்த்தை. வார்த்தைக்கு எதிராக வார்த்தை.
69. அதன் பிறகு அது அரசியலுக்குள்ளும் மற்ற எல்லாக் காரியங்களிலும் விழுந்தது. அப்பொழுது காளை புறப்பட்டு சென்றது. பாருங்கள்? அதுதான் இரண்டாவது முத்திரை. இயேசு, மத்தேயு 24ல் அவ்விதமே கூறியுள்ளார், பாருங்கள். அதன் பிறகு அதிலிருந்து சீர்திருத்தக்காரரின் ஞானத்திற்கு வருகிறோம். அப்பொழுது மனித முகம் கொண்ட ஜீவன் புறப்பட்டுச் சென்றது. அதுதான் நடந்தேறியது. அதற்குப் பிறகு நான்காவது முத்திரைக்கு வரும்போது, மற்ற மூன்று முத்திரைகளின் காலத்தில் கிரியை செய்த அந்திக்கிறிஸ்துவின் வல்லமைகள் எல்லாம் ஒன்றாக சேர்ந்து வரும்போது, அவனுக்கு "மரணம்” என்னும் பெயர் கொடுக்கப்படுகிறது.
70. இப்பொழுது இயேசு என்ன சொன்னார் என்பதைக் கவனியுங்கள்: "அவளை அக்கினியில் எரித்து அவளுடைய பிள்ளைகளையும் கொல்லுவேன்.” இது தான் மரணம் சவாரி செய்வதாகும். பிராடெஸ்டண்டாரும், கத்தோலிக்கரும் - அவர்கள் ஒவ்வொருவரின் மீதும் மரணத்தின் அடையாளம் காணப்படுகிறது - பாருங்கள்? “அவளும் அவளுடைய பிள்ளைகளும் அழிக்கப்படுவார்கள்.” ஆகவே, நீங்கள் உங்கள் ஸ்தாபனத்தின் மீது சார்ந்திருப்பீர்களானால், இப்பொழுதே அதை விட்டு வெளியே வாருங்கள்.
71. ஆகவே பிறகு ஏழாம் முத்திரைக்கு வரும்போது இயேசு அங்கே நிறுத்திவிட்டார். “சந்திரன் இரத்தமாகும், அந்தகாரம், மற்றும் நடக்கப் போகும் காரியங்களை” அறிவிப்பதினால் அவர் ஆறாம் முத்திரையைத் திறந்தார். நாம் இங்கே வந்து ஆறாம் முத்திரையைத் திறந்தோம். ஆறாம் முத்திரையைத் திறந்தபோது, அதே காரியத்தைக் காண்பிக்கிறது.
72. வேதத்தில் மூன்று வெவ்வேறான இடங்களில் கூறப்பட்டுள்ள வார்த்தைகள், வெளிப்படுத்தலுடன் ஒன்றாக இணைக்கப்பட்டிருக்கிறது என்பதைக் கவனித்தீர்களா? கவனியுங்கள். வேதத்தில் இயேசு அவ்விதம் கூறின இடம், உலகத் தோற்றமுதல் மறைக்கப்பட்டிருந்ததை அவர் புஸ்தகத்தை திறந்து காட்டிய இடம், மற்றும் இந்த நாளுக்குரிய வெளிப்படுத்தல் ஆகிய இம்மூன்றும் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளது. மூன்று சாட்சிகள் ஒருமித்துக் கூறும்போது அது உண்மையாக இருக்கிறது. அது முற்றிலும் உண்மையாக இருக்கிறது.
73. இப்பொழுது, இந்த நித்திரை அடைந்த கன்னிகைகள்தான் எல்லாம் ஒன்றாக சேர்ந்து முழுசரீரமாக்கப்படுகிறார்கள். இவர்கள்தான் புத்தியுள்ள கன்னிகைகள். புத்தியில்லாத கன்னிகைகள், அந்திக்கிறிஸ்து, புத்தியுள்ள கன்னிகைகள் தொடங்கினபோதே தொடங்கினார்கள். எண்ணெய் வாங்க முயற்சித்தவர்கள் இவர்களே.
74. இப்பொழுது இங்கே கவனியுங்கள். எல்லாம் ஒழுங்காக பொருந்துவதைக் கவனியுங்கள். அந்த அறையில் வெளிப்படுத்தப் பட்டவைகளை இங்கே நின்று கூறுவேனானால் உங்களுக்கு தலையே சுற்றிவிடும். அப்படியானால் எல்லாவற்றையும் கூறும்போது என்ன செய்யப்போகிறீர்கள்?
75. ஆகவே, அதன் பிறகு, மக்களை விட்டு பிரிந்து போகும்போது தேவ இரகசியங்கள் திறக்கப்படுகிறது. மக்களுக்குக்கூட அறிவிக்கப்பட முடியாத காரியங்கள் வெளிப்படுகிறது. ஏனென்றால் நீங்கள் பாருங்கள், அவர்கள் சிறு உபதேசங்களை உருவாக்கிக் கொள்ளுவார்கள்.
76. சுகமளிக்கக்கூடிய இச்சிறு வரத்தை கவனியுங்கள். அது எவ்வளவாக சபையைக் குழப்பத்துக்குள்ளாக்கிவிட்டது. மக்கள் இதைக் கண்ட போது, ஒவ்வொருவரும் ஒருவித உணர்வு பெற்று ஒவ்வொருவரும் இதைச் செய்ய ஆரம்பித் துவிட்டார்கள். அது தவறு என்று என்னுடைய இருதயத்தில் அறிவேன். இது உண்மையென்று தேவன் அறிவார். ஏனென்றால் தேவன் என்னிடம் அவ்விதம் கூறினார். பாருங்கள்? இது வெறும் போலியான காரியங்கள். இது மக்களை சிதறடிப்பதாகும். இப்பொழுது அது சரிதான். இப்பொழுது அக்காரியங்களை கூற முடியாது. அதை அப்படியே விட்டுவிடுவது நல்லது.
77. மூன்றாவது இழுப்பைக் குறித்து யாருக்கும் சொல்லவேண்டாம்” என்று அறிவிக்கப்பட்டது உங்களுக்கு நினைவிருக்கும். அது என்னவென்று கூறினேன்? அது எத்தனை பேருக்கு ஞாபகம் உள்ளது? நிச்சயமாக. அந்த தரிசனத்திலே நின்று கொண்டு அந்த சிறிய பாதரட்சை (Shoe)க்கு லேஸ் போட முயற்சித்துக் கொண்டிருந்தது உங்களுக்கு நினைவிருக்கிறதா? “நீ பெந்தெகொஸ்தே பிள்ளைகளுக்கு இயற்கைக்கு மேலான காரியங்களைக் கற்றுக்கொடுக்க முடியாது” என்று அவர் கூறினார்.
78. இது மூன்றாவது இழுப்பாக இருக்கும். இதை அறியமுடியாது. ஆகவே தேவனுடைய கிருபையால் எனக்கு உதவி செய்யும் என்று கேட்டேன்.
நாம் இப்பொழுதே கடைசி நேரத்தில் இருக்கிறோம். கிருபாசனம் நியாயாசனமாக மாறுவதற்கு அதிக நேரமாகாது. இப்பொழுது ஏற்கெனவே நீங்கள் உன்னதங்களில் கூட்டி சேர்க்கப்படாதிருந்தால், இக்காரியங்கள் நிகழ்வதையும், இந்த மக்கள் உள்ளே வருவதையும் காணும்போதே, நீங்களும் உள்ளே வருவது மேலானதாக இருக்கும். பாருங்கள்?
79. இப்பொழுது, 'உன்னதங்களில் கூட்டிச் சேர்க்கப்படுதல்' என்பது, இது வெறும் மகிழ்வதைக் காட்டிலும் மேலானதாக இருக்கிறது. நீங்கள் கிறிஸ்துவுக்குள்ளே உன்னதங்களிலே உண்மையாக கூட்டப்பட்டிருப்பீர்களானால் இது ஒரு பயத்திற்குரிய காரியமாகும்.
80. கர்த்தருடைய தூதனானவருக்கு பக்கத்தில் நின்று கொண்டு ஆனந்த சத்தமிட்டு துதித்துக் கொண்டிருக்கலாம் என்று நீங்கள் நினைக்கலாம். அது அவ்வண்ணமல்ல. அது அநேகமாக மரணத்துக்குள்ளாக்கும் பயமான ஒரு காரியமாகும். பாருங்கள்? ஆகவே, உள்ளம் பொங்க மனமகிழ்ச்சியினால் நடனம் ஆடுவது சரிதான். ஆனால் இதற்கும் உண்மையான காரியத்திற்குள் வருவதற்கும் ஒரு வித்தியாசம் உண்டு என்பதை நீங்கள் அறிய வேண்டும். பாருங்கள்? பாருங்கள்? பயம் என்பதே அங்குதான் உள்ளது. இது ஒரு பயத்திற்குரிய காரியமாகும். நீங்கள் இழந்து போனதாக கருதும் பயம் அல்ல. ஆனால் அங்கே நின்று கொண்டிருக்கும் தேவதூதனுக்கும், பரிசுத்த ஆவியானவருக்கும் முன்பாக உண்மையிலேயே நின்றுகொண்டிருப்பதுதான் பயத்துக்குரியதாக இருக்கிறது.
81. இப்பொழுது, அது (கன்னிகைகள்- தமிழாக்கியோன்) மணவாட்டியின் ஒரு பாகமாக இருக்கும். நித்திரை செய்துக் கொண்டிருப்பவர்களுடன் இவர்களும் சேர்க்கப்படுவார்கள். நம்மால் அதை முற்றிலுமாக...
(ஒலிநாடாக்கள் பதிவு செய்யும் முறையில் கோளாறு ஏற்படுகிறது. ஒலிநாடாவில் காலி இடம் - ஆசி)... இங்கே உள்ளே கைகுட்டைகளின் மூலம் இந்த ஜனங்களுக்கு சுகமளிக்கும்படி இப்பொழுது ஜெபிக்கிறேன். இயேசுவின் நாமத்தில். ஆமென்.
இப்பொழுது, அது சரியாகிவிட்டதா? (ஒரு சகோதரர் 'ஆமென்' என்று கூறுகின்றார் - ஆசி) உங்களுக்கு நன்றி. யாராவது ஒருவர் எதின் மீதாகிலும் மிதித்தார்களா? (ஒரு சகோதரன், 'இங்கு அநேக ஒலிப்பதிவு செய்யும் கருவிகள் உள்ளன,' என்று கூறுகிறார்) அநேக ஒலிப்பதிவு கருவிகள் இருப்பதால், அதிகமான அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. பாருங்கள்? சரி, அது அதைத் தாக்குகிறது. இப்பொழுது அடுத்த கேள்வியைக் கவனிப்போம்.