82. “இந்த வேளையில்” என்று சொல்ல கருதுகிறார்கள். நிச்சயமாக எந்த விதத்திலும் அவர்கள் தொடர்ந்து ஊழியம் செய்யவேண்டும். ஒரு காரியத்தையும் மாற்றவேண்டாம். இக்காலையில் இயேசு வருவதாக இருந்தாலும், இன்றையிலிருந்து பத்து வருடங்களுக்குப் பிறகு அது இருப்பது போல பிரசங்கம் பண்ணு. ஆனால் இந்த மணிவேளையில் இருப்பது போல ஜீவி.
83. இப்பொழுது குழப்பமாக்கிக்கொள்ள வேண்டாம். அதைக் குறித்துதான் உங்களை எச்சரிக்க முயற்சிக்கிறேன். விசித்திரமாக இருக்க வேண்டாம். எதையும் மாற்ற வேண்டாம். ஆனால் நீங்கள் ஏதாகிலும் தவறோ அல்லது தீமையோ செய்துக் கொண்டிருப்பீர்களானால், மனந்திரும்புங்கள். தேவனிடம் திரும்புங்கள். நீங்கள் எப்பொழுதும் செய்தது போல சுவிசேஷ ஊழியத்தை தொடர்ந்து செய்யுங்கள்.
84. நீங்கள் ஒரு வீட்டைக் கட்டிக் கொண்டிருந்தால், தொடர்ந்து செய்யுங்கள். இயேசு நாளை வருவாரென்றால் உங்கள் கடமையில் உண்மையுள்ளவர்களாகச் காணப்படத்தக்கதாக இருங்கள். நீங்கள் உங்கள் சபையைக் கட்டிக் கொண்டிருந்தால் அதைத் தொடர்ந்து செய்யுங்கள். என்னுடைய பாக்கெட்டில் பணம் வைத்திருப்பதைப் பார்க்கிலும் அவ்விதமான வேலைக்கு செலவழிப்பதையே நான் தெரிந்துக் கொள்ளுவேன். பாருங்கள்?
85. ஆகவே, நீங்கள் இருக்கிறவண்ணமாகவே தொடர்ந்து முன்னேறுங்கள். இப்பொழுது ஒவ்வொருவரும் புரிந்து கொண்டீர்களா? (சபையார் "ஆமென்” என்று கூறுகின்றனர் - ஆசி) சரியானதை தொடர்ந்து செய்யுங்கள். நீங்கள் இருக்கிறவண்ணமாகவே செல்லுங்கள். இப்பொழுது எதையும் நிறுத்தவேண்டாம். கர்த்தருக்கு ஊழியம் செய்துக் கொண்டிருப்பது போலவே தொடர்ந்து செய்யுங்கள்.
86. இப்பொழுது உதாரணமாக, நீங்கள் ஒரு மனிதனிடத்தில் வேலை செய்வீர்களானால், எல்லாம் முடிந்து போவதற்கு இன்னும் பதினைந்து நிமிடங்கள் இருக்கும்போது, “நல்லது இன்னும் பதினைந்து நிமிடங்கள் தான் இருக்கிறது. ஆகவே நான் அங்குச் சென்று உட்கார்ந்துகொள்ளுவேன்” என்று கூறுவாயானால், அந்த பதினைந்து நிமிஷத்திற்கு உன்னுடைய கூலி குறைக்கப்படும்.
87. நீங்கள் கோதுமையைப் பயிரிட்டுக் கொண்டிருந்தால் கோதுமையைப் பயிரிடுங்கள். நீங்கள் உருளைக்கிழங்குகளை தோண்டிக் கொண்டிருந்தால், அவைகளைத் தோண்டிக் கொண்டிருங்கள். “அவைகளை தின்பதற்கு யாரும் இருக்கமாட்டார்கள்” என்று கூறி எந்தவித வித்தியாசத்தையும் உண்டாக்கவேண்டாம். எப்படியாகிலும் தோண்டிக்கொண்டே இருங்கள். பாருங்கள்? ஆம். நீங்கள் இருக்கிறவண்ணமாகவே தொடர்ந்து இருங்கள்.
88. அன்றொரு நாள் யாரோ ஒருவரிடமிருந்து எனக்கு ஒரு கடிதம் வந்தது. அவர்களுக்கு யாரோ ஒருவர் இவ்விதம் கூறியிருக்கிறார்: “நல்லது காலம் சமீபமாக இருக்கிறது, பண்ணையை விற்றுவிடுங்கள். ஆயிரவருட அரசாட்சி ஆரம்பிக்கப்போவதால் உங்களுக்கு பண்ணையிலிருந்து வரும் உணவு தேவைப்படாது; ஆகவே அதை விற்றுவிடுங்கள். உம்முடைய பிள்ளைகள் இரட்சிக்கப்படாதவர்களாய் இருப்பதால் உபத்திரவ காலத்தில் அவர்கள் இருக்கும் பண்ணையின் பலனை புசிக்கட்டும். நீங்களோ, உங்கள் பண்ணையை விற்றுவிடுங்கள்.” இவ்விதமாக ஏதோ ஒன்றைக் கூறினர். ஓ, அவர்கள்...
89. நான் "ஓ, என்னே!” என்றேன் 'அவர் நாளை வருவார் என்று எனக்கு தெரிந்திருக்கிறதென்றாலும் நான் ஒரு விவசாயியாக இருந்தால், இன்றைக்கு என்னுடைய பயிரை நான் நடுவேன். நிச்சயமாக. அவர் என்னை ஒரு விவசாயியாக உண்டாக்கி இருந்தால், என்னுடைய வேலையிலேயே நான் இருப்பேன். அது உண்மை. நான் ஒரு 'மெக்கானிக்காக இருந்தால் அவ்வண்ணமே இருப்பேன்'
90. அன்றொரு நாள் யாரோ ஒருவர் வந்து இவ்விதம் கூறியதாக என்னிடம் கூறினார். “நான் ஒரு புதிய காரை வாங்கி இருக்கிறேன். அதற்குரிய இன்னொரு சாவிக்கொத்தை உங்களிடம் கொடுக்கப் போகிறேன். ஏனென்றால் எடுத்துக் கொள்ளப்படுதல் வரப்போகிறது. ஆகவே அது எனக்கு தேவைப்படாது” என்று தன்னுடைய மேய்ப் பரிடம் கூறினாராம். "இன்னொரு சாவிக் கொத்தை உங்களிடம் கொடுத்து விடுகிறேன், ஏனெனில் எடுத்துக் கொள்ளப்படுதல் வருகின்றது, இனிமேல் எனக்கு அது தேவைப்படாது” என்றார். அவருடைய மேய்ப்பர் எடுத்துக்கொள்ளப்படுதலை இழந்துவிடப் போகிறார். ஓ, அதுதான் ஆயத்தமாவதாகும். இல்லையா? சரி. அது அவ்விதமாகத்தான் இருக்கும். நாம் அவ்விதம் இருக்க வேண்டியதில்லை.
91. நாம் விசுவாசத்தில் உறுதியாயிருந்து, தெளிந்த சிந்தையுள்ள கிறிஸ்தவனாக இருக்கவேண்டும். பாருங்கள்? கடைசி நிமிடம் வரை ஊழியம் செய்வதற்காக நான் இங்கே நியமிக்கப்பட்டிருக்கிறேன். நான் செய்யவேண்டிய ஒரு வேலை உண்டு, நான் என்னுடைய கடமையில் உண்மையுள்ளவனாக காணப்படுவதையே விரும்புகிறேன். அவர் இந்தக் காலை வருவாரென்றால், நான் இந்த பிரசங்க பீடத்தருகினில் நின்றுக்கொண்டிருக்க விரும்புகிறேன்.
92. நீங்கள் இவ்விதம் கூறலாம்; “சகோதரன் பிரன்ஹாமே, அவர் இக்காலை வருவாரென்றால் நீங்கள் அங்கே வெளிய இருக்கவேண்டுமல்லவா?” இல்லை, ஐயா.
93. இதுதான் என்னுடைய கடமையை நிறை வேற்றக்கூடிய இடம். அவர் வரும்போது, இங்கே நின்றுக்கொண்டு, நான் பிரசங்கித்துக் கொண்டிருப்பவைகளையே பிரசங்கித்துக் கொண்டிருப்பேன். அப்பொழுது அவர் வரும்போது அவருடனே சென்று விடுவேன். பாருங்கள்?
94. உருளைக்கிழங்கு தோட்டத்தில் களையை பிடுங்கிக் கொண்டிருந்தால், என்னால் எவ்வளவாய் பிரயாசப்பட முடியுமோ அவ்வளவாய் பிரயாசத்தோடே களை பிடுங்கிக்கொண்டிருப்பேன். அவர் வரும்போது, களை பிடுங்க உபயோகிக்கும் மண்வெட்டியை போட்டுவிட்டு எடுத்துக் கொள்ளப்படுவேன்.
யூபிலி வருஷத்திலேயே களை பிடுங்குகிறவர்கள் களைகளை பிடுங்கிக்கொண்டே இருக்கவேண்டும். யூபிலி வருஷத்திற்கு இன்னும் பத்து நிமிஷம் இருந்தாலும், யூபிலி வருஷத்தில் எக்காளம் தொனிக்கும் என்பதை அறிந்திருந்தார்கள். அவர்கள் தொடர்ந்து வைக்கோலை பொறுக்கியெடுத்துக் கொண்டோ அல்லது வேறெந்த வேலையையோ செய்துக்கொண்டேயிருந்தார்கள். எக்காளம் தொனிக்கும்போது வேலை செய்துக்கொண்டிருக்கிறவர்கள் தங்கள் கவைக் கொம்புகளை எறிந்து விட்டு விடுதலையாகி சென்று விடுவார்கள். பாருங்கள். எக்காளம் தொனிக்கும் வரை உங்கள் வேலைகளை செய்துக் கொண்டிருங்கள். சரி.
(அருகிலிருந்து ஒரு சத்தம் கேட்கப்படுன்றது - ஆசி) கேள்வி, "அது திறந்ததின்படி...” ஏதாவது சம்பவித்ததா? ஊம்? அது இங்கே சத்தத்தை உண்டாக்கியது. கேள்வி.