95. எனக்கு தெரியாது. பாருங்கள்? நான்- நான்... எனக்கு தெரியவில்லையென்றால் எனக்கு தெரியாது என்று சொல்லப்போகிறேன். பாருங்கள்? எனக்கு எல்லா விடைகளும் தெரியாது. மக்களே, எனக்கு தெரியவில்லையென்றால் எனக்குத் தெரியாது என்று சொல்லுவேன். எனக்குத் தெரியும்வரை அதைச் சொல்லமாட்டேன். பாருங்கள். ஆனால் எனக்குத் தெரியாது.
96. அடிக்கடி நானே அதைக்குறித்து ஆச்சரியப்பட்டிருக்கிறேன். அங்கே ஏனோக்கு இருந்தான்... மோசேயும், எலியாவும் திரும்பவும் வந்து கொலை செய்யப்படுவார்கள் என்பதை நான் கண்டேன். பாருங்கள் ஆனால் ஏனோக்கு காலத்திற்கு முன்னமே எடுத்துக்கொள்ளப்பட்டான். "நல்லது” அடிக்கடி நான் அதைக் குறித்து நினைத்து ஆச்சரியப்பட்டிருக்கிறேன். “அதைக் குறித்து என்ன?” என்றார்.
97. ஆனால் இங்கே ஆறுதலாக ஒரே ஒரு காரியத்தை சொல்லுவேன். இப்பொழுது கவனியுங்கள் மோசே தேவனுக்கு நாற்பது வருஷம் மாத்திரம் சேவை செய்தான். பாருங்கள்? அவன் நூற்றிருபது வருஷம் இருந்தான். ஆனால் இருபது வருடங்கள்... முதல் நாற்பது வருஷம் அவன் கல்வியைக் கற்றான். அது சரியா? இரண்டாம் நாற்பது வருஷம் தேவன் அதை அவனிடத்திலிருந்து எடுத்துப் போட்டார். மூன்றாம் நாற்பது வருஷம் அவன் தேவனுக்குச் சேவை செய்தான். பாருங்கள்? அது சரிதான். ஆனால், ஏனோக்கு தேவனோடு ஐந்நூறு வருஷம் சஞ்சரித்து குற்றமில்லாதவனாகக் காணப்பட்டான். பாருங்கள்? பாருங்கள்? ஆகவே மோசேயும், எலியாவும் இன்னும் சிறிதுநேரம் ஊழியம் செய்யத் திரும்ப வருவார்கள்.
98. இப்பொழுது இதுதான் சரி என்று நான் கூறவில்லை. பாருங்கள், இதை தியானிப்பதற்காக உங்களுக்குத் தருகிறேன். பாருங்கள், அங்கே என்ன நடந்தது என்றோ, அல்லது தேவன் என்ன செய்யப்போகிறார் என்றோ நான் சொல்ல முடியாது.