100. இது "முக்கியமானதென்று அறிவிக்கப்பட்டுள்ளது. நல்லது... ஆகவேதான் இது முத்திரைகளோடு சம்பந்தப்பட்டதல்ல. என்னுடைய சகோதரனோ, சகோதரியோ, இதை எழுதியவர் யாராயிருந்தாலும், எனக்கு தெரிந்தவரை உன்னுடைய கணவனோ அல்லது மனைவியோ மரிக்கும்வரை நீங்கள் மறுபடியும் திருமணம் செய்துக்கொள்ள அனுமதிக்கும் வசனம் எதுவும் இல்லை. ஏனென்றால், அவர்கள் உயிருடன் இருக்கும் வரை அவர்கள் கட்டப்பட்டு இருக்கிறார்கள் என்று வேதம் கூறுகிறது. பாருங்கள்?
101. ஏதாகிலும் வேதவாக்கியம் உண்டா என்றுதான் கேட்கப்பட்டுள்ளது. பாருங்கள்? நான் அறிந்தவரை எதுவும் இல்லை. திருமணமானவர்களில், ஒருவர் மரிக்கும்போதுதான் மற்றவர் கர்த்தருக்குள் இருக்கும் வேறு யாரையாகிலும் மணந்துக்கொள்ளலாம் என்று பவுல் கூறியுள்ளார். “மரணம் நம்மை பிரிக்கும் வரை” என்றுள்ளது. அதுவேதான். இவ்வண்ணமாகத்தான் நீங்கள் வாக்கு கொடுத்திருக்கிறீர்கள். நீங்கள் பாருங்கள்?
102. ஆகவே இதை அனுமதிக்க எந்த வசனமும் இல்லை. இதற்கேற்ற வார்த்தையை நீங்கள் கண்டிருந்தால் நல்லதுதான். ஆனால் என்னை பொறுத்தவரை எனக்கு ஒன்றும் தெரியாது.