103. அது பரிசுத்த ஆவியைக் குறிக்கிறது. பாருங்கள்? ஏற்கெனவே அதைக் குறித்து பார்த்திருக்கிறோம். சிலசமயங்களில் யாராவது செய்திக்குச் சற்று தாமதமாக வரும்போது இங்கு சொல்லப்படும் காரியத்தை இழந்துவிடுகிறார்கள்...
“எண்ணெயையும் திராட்சரசத்தையும் சேதப்படுத்தாதே” எண்ணெயும் திராட்சரசமும் எதைக் குறிக்கிறது?
104. எண்ணெய், பரிசுத்த ஆவிக்கு அறிகுறியாக உள்ளது என்பதை நாம் அறிவோம். பாருங்கள்? வேதாகமத்தில் ஆராதனைக்குரிய காரியங்களில், திராட்சரசமும் எண்ணெயும் ஒன்றாக இணைக்கப் பட்டுள்ளன. பாருங்கள்? திராட்சரசம் எழுப்புதலை உண்டாக்குகிறது என்னும் எண்ணம் எனக்கு உண்டாயிற்று. திராட்சரசம் எழுப்புதலை உண்டாக்குகிறது. வெளிப்படுத்தலினால் வரும் எழுப்புதலுக்கு இயற்கையான திராட்சரசம் மாதிரியாக வைக்கப்பட்டிருக்கிறது.
105. சபையை எது எழுப்புதலடையச் செய்கிறது என்பதை சற்று நினைத்துப் பாருங்கள்? - எழுப்புதல். பாருங்கள்? ஆகவே, திராட்சரசம், புதிய திராட்சரசம்... இப்பொழுது கவனியுங்கள். பலியிடுவதிலும், சபையின் ஆராதனையிலும் எண்ணெயும், திராட்சரசமும் ஒன்றாக இணைந்திருப்பதை கவனிக்கவும். இப்பொழுது கவனியுங்கள். அவைகள் இரண்டும் இணைந்துள்ளன, தொடர்பு கொண்டுள்ளன.
106. க்ருடன்ஸ் ஒத்துவாக்கிய புத்தகத்திலோ (Cruden's Concordance) அல்லது வேறெந்த ஒத்துவாக்கிய புத்தகத்திலோ பார்ப்பீர்களானால், திராட்சரசமும் எண்ணெயும் ஆராதனை முறைமைகளில் ஒன்றாக இணைக்கப்பட்டிருப்பதைக் காண்பீர்கள்.
107. இப்பொழுது இதைக்குறித்து கவனியுங்கள். எண்ணெய் எப்பொழுதும் பரிசுத்த ஆவியைக் குறிக்கிறது. எசேக்கியலிலும் மற்றும் பழைய ஏற்பாட்டிலும், புதிய ஏற்பாட்டின் முழுமையிலும் இதைக் காண்கிறோம்.
108. வியாதியஸ்தரை ஏன் எண்ணெயினால் அபிஷேகம் பண்ணுகிறோம்? அவர்கள் மீது ஊற்றப்படும் பரிசுத்த ஆவியை அறிகுறியாக எடுத்துக்காட்டுவதற்காகத்தான் வியாதியஸ்தரை எண்ணெயினால் அபிஷேகம் பண்ணுகிறோம் என்பதைக் கவனியுங்கள். பாருங்கள்? புத்தியுள்ள கன்னிகைகள் எண்ணெயை பெற்றிருந்தார்கள், புத்தியில்லாதவர்கள் எண்ணெயை பெறவில்லை. ஆவி, அதுதான் எண்ணெய். எண்ணெய் தேவனைக் குறிக்கிறதென்றால், தேவன் ஆவியாய் இருக்கிறார். தெரியுமா?
109. தேவன் வார்த்தையாய் இருக்கிறார். “ஆதியிலே வார்த்தை இருந்தது. அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது. அந்த வார்த்தை மாம்சமானார். அதுதான் தேவன்”. இப்பொழுது, வார்த்தை இயற்கையான உருவத்தில் அமர்ந்திருக்கிறதென்றால்... விசுவாசியை எழுப்புதலடைய செய்யும் வார்த்தையின் வியாக்கியானத்தை வெளிப்படுத்தும் வெளிப்படுத்தல் போல, திராட்சரசம் தண்ணீரைக் குறிக்கிறது. என்னே! “இதற்கு முன்பு நான் இவ்விதம் காணவே இல்லை! என்னே! மகிமை!” அது என்ன? - பாருங்கள்? வெளிப்படுத்தலினால் வரும் எழுப்புதல்.
110. அன்று நான் உட்கார்ந்துக் கொண்டிருக்கும்போது பெற்ற வெளிப்படுத்தலுக்கு முன்பு நான் அதை அறியவில்லை. பாருங்கள்? இப்பொழுது, "எண்ணெயும் திராட்சரசமும் எதைக் குறிக்கிறது... "அது தான், நீ அதை சேதப்படுத்தாதே,” மூன்றாம் சபையின் காலமாகிய இருண்ட யுகத்தில் கறுப்புக் குதிரையின் மீது அவன் சவாரி செய்தான். கவனிக்கவும். அதில் சிறிதுதான் விடப்பட்டிருக்கிறது. சிறிது மட்டுமே விடப் பட்டுள்ளது. அதைச் சேதப்படுத்தாதே.
111. அதைச் சேதப்படுத்தாதே என்று சொல்லப்பட்டதைக் குறித்த சரியான விளக்கம் விடப்பட்டிருக்கிறது. மூன்றாம் முத்திரையின் ஒலி நாடாவை வாங்கி கேட்பீர்களானால் நாம் அதில் தெளிவாக விளக்கியிருப்பதைக் காண்பீர்கள்.