112. நிச்சயமாக. இந்தப் புஸ்தகத்தில்தான் மீட்புக்குரிய எல்லா காரியங்களும் எழுதப்பட்டிருக்கிறது. பாருங்கள்? அவர்கள் பெயர்கள் யாவும் அதில் உள்ளன. "நல்லது, சகோதரன் பிரன்ஹாமே, நம்முடைய பெயர்கள் ஆட்டுக்குட்டியானவரின் ஜீவபுஸ்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது, அன்றொரு இரவு என்னுடைய பெயர் அதில் எழுதப்பட்டது”. இல்லை, உன்னுடைய பெயர் இப்பொழுது எழுதப்படவில்லை. அந்த இரவுதான் உன்னுடைய பெயர் அதில் எழுதப்பட்டிருப்பதைக் கண்டாய். ஏனென்றால் உலகத்தோற்றத்திற்கு முன்பே பெயர்கள் அதில் எழுதப்பட்டிருக்கிறது. பாருங்கள்? எல்லாம் ஒரே புஸ்தகம் என்பதை அறிந்து கொள்ளவும். பாருங்கள்.