111. அது சரி, அது அருமையான ஒன்றாகும். ஒவ்வொரு சபைக்கும் அது தேவையான ஒன்றாகும். சபைக்கு நீங்கள் வர வேண்டுமென்று தேவன் எதிர்பார்க்கின்றார். இப்பொழுது, இது ஒரு கேள்வியாகும், வெளிப்படையான ஒரு கேள்வியாகும், இது வேதப்பூர்வமான ஒன்றா; அது - ஆம் அது தான். பொறுங்கள், அவர் என்ன கூறினார் என்று நான் உங்களிடம் கூறுகிறேன். முதலாவதாக, வேதவசனம் நீங்கள் விரும்புவீர்களானால், ஜனங்கள் தேவனுடைய வீட்டிற்கு ஒரு நோக்கத்திற்காகத்தான் வரவேண்டியவர்களாயிருக்கின்றனர், அது ஆராதிக்கத்தக்கதாக, பாடல்கள் பாடுவதற்காக, மற்றும் தேவனை தொழுது கொள்ளத்தக்கதாக, அந்த விதமாகத்தான் தேவன் அதை எதிர்ப்பார்க்கின்றார். நாம் தேவனுடைய வீட்டிற்கு வந்து நம்முடைய - அல்லது வேறெதைக் குறித்தோ, அல்லது ஒருவரைக்குறித்து ஒருவர் பேசிக்கொள்வதோ, அல்லது வாரம் முழுவதும் நாம் என்ன செய்ய வேண்டும் என்பவைகளைக் குறித்தோ பேச தேவன் எதிர்ப்பார்ப்பதில்லை, நாம் வந்து அவரை ஆராதிப்பதையே அவர் எதிர்ப்பார்க்கிறார். அது ஆராதனையின் வீடாக இருக்கிறது, “சகலமும் ஒழுங்கும் கிரமுமாக நடைபெறவேண்டும்” என்று பவுல் வேதாகமத்தில் கூறியுள்ளான். எல்லா காரியமும் சரியாக இருக்க வேண்டியதாயுள்ளது, செய்தியும் இருக்க வேண்டும்.
112. நான் கூறப்போகின்ற முதல் காரியம், பழைய ஏற்பாடு – அல்லது கூறப்போனால் புதிய ஏற்பாட்டின் சபையின் முறைமைகளின்படி, முதலாவதாக, ஜனங்கள் தேவனுடைய சபையில் தொழுது கொள்ளுதலின் ஆவியுடன் பிரவேசித்தனர். அவர்கள் உள்ளே நடந்து வந்தனர், பாடல்கள் பாடப்பட்டன, பிறகு ஒருக்கால் பிரசங்கி பேசுவார், ஏனெனில் அவர் சபையின் தீர்க்கதரிசியாக இருந்தார். (புதிய ஏற்பாட்டின் தீர்க்கதரிசி ஒரு பிரசங்கி ஆவார்; அது நமக்கு தெரியும்: “இயேசுவைப்பற்றின சாட்சி தீர்க்கதரிசனத்தின் ஆவியாயிருக்கிறது” என்று வெளிப் படுத்தின விசேஷம் கூறுகின்றது.) 113. இப்பொழுது, பிரசங்கி பிரசங்கம் செய்ய ஆரம்பிக்கின்றார். அவர் பிரசங்கிக்கையில் ஒருக்கால் ஒரு பெரிய பிரசங்கத்தின் முடிவில், ஆசீர்வாதங்கள் விழ ஆரம்பிக்கின்றன; ஜனங்கள் “ஆமென்” என்று கூறி தேவனை ஸ்தோத்தரிக்க செல்கின்றனர். அவர் பிரசங்கத்தை முடித்தவுடன், ஒரு செய்தியானது வரும், ஒருக்கால் அந்நிய பாஷையில் அது பேசப்படலாம் (1கொரிந்தியர் 14:13, 14) பிறகு பிறகு சபையில் வியாக்கியானம் செய்பவர் இல்லையென்றால், இந்த நபர் அமைதியாயிருக்க வேண்டியவராகவுள்ளார், ஏனெனில் அவர்கள் அந்நிய பாஷைகளில் சரியாகப் பேசுகின்றார்கள், ஆனால் அவர்கள் அதை தேவனுக்கு முன்பாகச் செய்கின்றனர். பாருங்கள்? ஆனால் அவர்கள் அந்நியபாஷைகளில் பேசி அங்கே வியாக்கியானம் பண்ணுகிறவர் இருப்பாரெனில், வியாக்கியானம் பண்ணுகிறவர் செய்தியைக் கொடுக்க வேண்டியவராக இருக்கின்றார். எல்லா சபைகளும் அதற்கு வருகின்றன.
114. சார்லஸ் ஃபுல்லர், நான் அங்கேயிருந்த போது அதைக் குறித்து என்னிடம் குழம்பித் தொல்லைப்படுத்தினார், இப்பொழுதோ அதை அவர் ஏற்றுக் கொள்கிறார். அவர்கள் எல்லாரும் அதை லாங்பீச் முழுவதும் செய்து கொண்டிருக்கின்றனர். ஆம், ஐயா! சரியாக - சரியாக அமர்ந்திருக்கும் இடத்தில், தேவனுடைய ஆசீர்வாதங்களை கொண்டிருந்து, அந்நிய பாஷைகளில் பேசி, வியாதியஸ்தருக்காக ஜெபிக்கின்றனர். ஆகவே அவர் என்னுடைய முகத்திற்கு நேராக நின்று, “சகோதரன் பிரன்ஹாம், அந்த அர்த்தமற்ற காரியத்தில் எனக்கு நம்பிக்கை கிடையாது,” என்றார்.
நான், “நல்லது, அது உங்களைப் பொறுத்தது. அது அவிசுவாசிகளுக்கல்ல, சகோதரன் ஃபுல்லர், அது விசுவாசிக்கிறவர்களுக்காகத்தான்” என்றேன். இப்பொழுது அதே காரியத்தை தான் அவர் பிரசங்கிக்கின்றார். ஒரு நேரத்திற்கு அது வருகின்றது, ஒரு பலப்பரீட்சை இருக்கின்றது.
115. இப்பொழுது அப்படியானால், அது ஒழுங்கில் இருக்குமானால், இதைத்தான் நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்... பிரசங்கம் செய்பவர் பேசிக் கொண்டிருக்கையில் ஒவ்வொரு காரியமும் பிரசங்கியை கவனிக்க அமைதியாக இருக்க வேண்டும், ஏனெனில் அவர் அபிஷேகத்தின் கீழ் பிரசங்கிக்கின்றாரென்றால் தேவனுடைய வார்த்தையானது சென்று கொண்டிருக்கின்றது, அப்படியானால், ஒவ்வொரு தீர்க்கதரிசிகளின் ஆவி தீர்க்கதரிசிகளுக்கு அடங்கியிருக்கின்றது. ஒரு மேய்ப்பர் பிரசங்க மேடையை நோக்கி நடந்து, வேதாகமத்தை புரட்டுகையில், சபையானது அமைதியாக இருந்து, வேதாகமத்தை அது வெளிப்படுத்துகையில் கவனித்துக் கொண்டிருக்கவேண்டும், அவர் என்ன கூறப்போகின்றார் என்பதை கவனிக்க வேண்டும், உங்களுக்கு அருமையாக காணப்படுகின்ற ஒன்றை அவர் கூறுவாரானால், நீங்கள், “ஆமென், கர்த்தருக்கு ஸ்தோத்திரம்!” என்று கூறலாம் அல்லது நீங்கள் விரும்புகின்ற எதுவாயிருந்தாலும் சரி. ஆமென் என்றால் “அப்படியே இருக்கக்கடவது” என்று அர்த்தமாகும். அதைச் செய்ய வேதாகமம் கூறுகின்றது.
116. பிறகு, செய்தி முடிவுற்ற பிறகு... ஆவியானவர் ஜனங்கள் மத்தியில் இருத்தல், ஜனங்கள் களிகூர்ந்து கொண்டிருப்பார்களானால், பிரசங்கி அதைச் செய்ய இடங்கொடுக்கையில், ஒருக்கால் அவர் வேறொரு செய்தியை அனுப்பலாம். அவர் ஒரு செய்தியை அனுப்புவாரானால், அது யாராவது ஒருவருக்கு வரும், அப்படியானால் வியாக்கியானங்கள் வேதவசனத்தை மேற்கோள் காட்டுவதாகவோ அல்லது வேறெதையோ செய்வதாக இராது. தேவன் வீண் உச்சரிப்புகளை செய்வதில்லை, ஆனால் அது ஒரு குறிப்பிட்ட காரியத்தை செய்ய வேண்டும் என்று யாரோ ஒருவருக்கு ஒரு நேரடியான செய்தியாக இருக்கும் அல்லது சபைக்கு பக்தி விருத்தி உண்டாக்கும் ஏதோ ஒன்றாக அது இருக்கும். அப்பொழுது அந்த சபைக்குரிய பக்தி விருத்தியை அவர்கள் பெற்றுக்கொள்கையில் அவர்கள்...
117. உதாரணத்திற்கு இதைப் போன்று: யாராவது ஒருவர் இங்கே எழுந்து நின்று அந்நிய பாஷைகளில் பேசி; இந்த நபர் வியாக்கியானம் அளித்து, “பரிசுத்த ஆவி உரைக்கிறதாவது: இன்னார் - இன்னார் சென்று இங்கேயிருக்கின்ற இந்த நபரின் மீது கரங்களை வையுங்கள், ஏனெனில் பரிசுத்த ஆவி உரைக்கிறதாவது, இன்றிரவு அவர்களுடைய சுகமடையும் நேரமாகும்” என்று கூறுவார். அது என்னவாயிருக்கிறது?
பிறகு இந்த அதே நபர் “நான் அங்கே உட்கார்ந்து கொண்டிருக்கையில் என்னுடைய இருதயம் அந்த குழந்தைக்காக எரிந்துகொண்டிருந்தது” என்றார். இப்பொழுது - இப்பொழுது அவர்கள் ஆவியானவருக்கு கீழ்ப்படிந்து எழும்புகின்றனர், சென்று அந்த குழந்தையின் மீது உங்கள் கைகளை வையுங்கள், அது சுகமாகின்றது. அப்படியில்லையெனில், ஏதோ தவறுயிருக்கின்றது. பாருங்கள், பாருங்கள், பாருங்கள்? அது ஒரு நேரடியான செய்தியாகும்.
118. அங்கே அவிசுவாசி உட்கார்ந்து கொண்டு “ஒரு நிமிடம் பொறுங்கள். ஓ, தேவன் அந்த ஜனங்களோடு இருக்கின்றார்!” என்பான். நான் என்ன கூற வருகின்றேன் என்று பாருங்கள்?
119. பிறகு அவர்கள் கூறுவர் - அல்லது, “பரிசுத்த ஆவியானவர் உரைக்கிறதாவது: பட்டணத்தின் தெற்கு புறத்தில் இருக்கின்ற ஒவ்வொருவரும், ஸ்பிரிங் தெருவின் பக்கத்தில் இருக்கின்றவர்கள், இன்னும் இரண்டு நாட்களுக்குள் வெளியே சென்று விடுங்கள், ஏனெனில் பட்டணத்தில் இருக்கின்ற எல்லாரையும் அடித்து கொண்டு செல்லப் போகின்ற ஒரு புயல் வரப்போகின்றது”. அப்படியானால், முதலாவதாக உங்களுக்குத் தெரியுமா, அது முழு சபைக்கும் ஒரு தீர்க்கதரிசனம் ஆகும்.
120. பிறகு யாராவது ஒருவர் - ஆவிக்குரிய நியாயத்தீர்ப்பு - எழுந்து நின்று “அது கர்த்தரால் உண்டானதா? ஒவ்வொருவரும் கூறுவர். மூன்று நல்ல மனிதர் எழுந்து ஆவிக்குரிய நியாயத்தீர்ப்பு - அது கர்த்தரால் உண்டாயிற்று” என்று கூறுவார்களானால் அப்படியானால் சபை அதை பெற்றுக்கொள்கிறது; அந்த பட்டணத்தின் கோடியில் இருக்கின்ற ஒவ்வொருவரும் வெளியே சென்று விடுவார்கள், அந்த நேரத்திற்கு அவர்கள் அதிலிருந்து புறம்பே சென்றுவிடுவார்கள், பிறகு அது நடந்தேற வில்லையெனில் நீங்கள் அந்த நபரை பிடியுங்கள். பாருங்கள்? உங்கள் மத்தியில் வேறொரு ஆவி இருக்கின்றது. ஆனால் அது நடந்தேறினால், அப்பொழுது வரவிருந்த கோபாக்கினையிலிருந்து உங்களை தப்புவித்ததற்காக தேவனை ஸ்தோத்தரியுங்கள், தேவனுக்கு நன்றி செலுத்துங்கள். பாருங்கள்? அந்த காரியங்களை கவனியுங்கள். அது சபையானது ஒழுங்கில் உள்ளது என்பதாகும்.
121. இரண்டு அல்லது மூன்று செய்திகள் - மூன்றுக்கு மேல் அல்ல - அதே நேரத்தில் புறப்பட்டு செல்லும். எதுவெல்லாம் புறப்பட்டு வருகின்றதோ, அது ஒழுங்கில் அமைந்திருக்க வேண்டும். முதலாவதாக... பிறகு, வேறொரு சபை, ஒழுங்கில் வேறொரு காரியம்.
122. எனக்குத் தெரியவில்லை, இதை ஒரு ஸ்திரீ கேட்டிருக்கலாம். நான் வேறே, ஒன்று என் சிந்தைக்குள் வந்தது, ஆகவே அதையும் நான் கூறுவேன். அந்த ஸ்திரீ, அவர்கள் சபைக்குள் வரும் போது, புதிய ஏற்பாட்டின்படி அவர்கள் முகத்தை மூடிக்கொண்டு முகவாட்டத்துடன் உள்ளே நடந்து வந்து ஆராதனை முழுவதும் இருக்க வேண்டும். அது வேதாகமத்தின் படியுள்ளது. இப்பொழுது, நான் எண்ணுகிறேன் ஒரு ஸ்திரீ நிச்சயமாக. இப்பொழுது, பெண்களே நான் உங்களைக் கடிந்து கொள்ளவில்லை. பாருங்கள்?
123. சிறிது காலத்திற்கு முன்னர் ஒரு வாலிபப்பெண் என்னிடம் வந்தாள். அல்ல அந்த பெண், அவளுக்கு ஒரு பிரச்சனை இருந்தது என்று என்னிடம் வந்த போது சகோதரர் ஜூனியர் அங்கே இருந்தார். இங்கே சமீபத்தில் அவளுடைய அயலகத்தினர் அவளைப் பார்த்து நகைத்தனர், ஏனெனில் அவள் தன்னுடைய முடியை கத்தரித்துக் கொள்வதில்லை என்பதற்காக, அவ்விதம்நகைத்தனர். ஆகவே அவள் சென்று தன்னுடைய முடியை கத்தரித்துக் கொண்டாள். பிறகு, அங்கே நதியண்டையில் யாரோ ஒரு பெண் அவளைக் குழப்பி, அவளுடைய ஆவிகளை எடுத்துப் போடப் போவதாக அவளிடம் கூறியிருந்தாள், தன்னுடைய முடியினால் அவளுடைய பாதத்தைக்கட்டி, இந்த பெண் வெறுப்புக் கோளாறு (Phobia) ஏற்படச் செய்துவிட்டாள். அந்த பெண் தன்னுடைய சிந்தை இழந்து போக வேண்டுமென்று விரும்பினாள் - இரண்டு பிள்ளைகள். அவளுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அவள் அப்படியே அதைப் போன்று உட்கார்ந்து கொண்டிருந்தாள்.
124. ஒரு நாள் வீட்டிற்கு முன்பாக அவள் காரோட்டி வந்து நின்றாள். பரிசுத்த ஆவியானவர் அசைந்து, அவளிடம் பேசி, அவள் சுகமடையப் போகிறாள் என்று அவளிடம் கூறினார், “ஆவியானவர் உரைக்கிறதாவது.” பிறகு அவள் - அவள் சிறிது நாட்கள் அப்படியே இருந்தாள், பிறகு அவள் நேற்று நான் சகோதரன் ஜூனியர் மற்றும் சகோதரன். ஃபங்க் உடன் அந்த பெண்ணைப் பார்க்க நான் சென்றேன். நான் அரைமைல் தூரத்தில் இருந்தேன், அவள் நின்று கொண்டு வளரவிடப்போகின்ற தன்னுடைய மயிரை சீவிக் கொண்டே, “அயலகத்தினர் சிரிக்கட்டும், அவர்கள் விரும்பும் எதை வேண்டுமானாலும் செய்யட்டும்” என்றாள்.
125. அப்பொழுது, பரிசுத்த ஆவியானவர் என்னை அங்கே போகவிடவில்லை. அது அவளிடம் பேசி நான் அந்த இடத்தில் இருக்கிறேன் என்றும், வர நான் விரும்புகிறேன் என்றும், அவளிடம் கூறினது. கடந்த இரவு தரிசனத்தில் அந்த பெண் வருவதை நான் கண்டேன். அவளிடம் என்ன கோளாறு இருக்கிறது என்று கூறினேன்; அவள் சற்று முன்னர் என்னுடைய அறையில் சுகமானாள். பாருங்கள்? அது சரியா சகோதரன் ஜூனியர்? அது சரி. சற்று முன்னர். பாருங்கள்? அங்கே நான் செல்ல தேவன் அனுமதிக்கவில்லை, ஏனெனில் காரியமானது இன்னும் தயாராக இருக்கவில்லை. பாருங்கள்? அவர் என்னை சரியாக ஒரு இடத்திற்கு கொண்டு வந்து, அது மனிதன் அல்ல அது தேவன் தான் என்று காண்பிக்க அதைச் சரியாக அங்கே உறுதிபடுத்தினார். பாருங்கள்?
இப்பொழுது. அவள் “சகோதரன் பிரன்ஹாம், என் கணவர் தான் நீண்ட முடிவைத்திருக்க வேண்டு மென்று விரும்புகிறார்” என்று கூறினாள்.
126. நானும் “தேவனும் அதே காரியத்தைத் தான் விரும்புகிறார்” என்றேன். அது சரி, ஏனெனில் ஸ்திரீகள் நீண்ட மயிரை வைத்திருக்க வேண்டியவர்களாக உள்ளனர். அதுதான் அவர்களுடைய முக்காடு ஆகும்.
127. இந்த ஸ்திரீகள் இன்றைக்கு - அல்லது ஸ்திரீகளாகிய நீங்கள், கூறப்போனால், தொப்பிகளை அணிகிறீர்கள் என்று எனக்குத் தெரியும். அது உங்களுடைய முக்காடு என்று கூறுகிறீர்கள். அது தவறு. வேதாகமம் ஒரு ஸ்திரீயினுடைய முக்காடு அவளுடைய தலைமயிரே என்று கூறுகிறது. ஆகவே அவள் தன்னுடைய மயிரைக் கத்தரித்துக் கொள்வாளானால் அது அவள் ஜெபிப்பதற்கு ஒரு சாதாரண காரியமாகும். அது சரியா, அது வேதவசனம், பாருங்கள்? ஆகவே இப்பொழுது, ஸ்திரீகள் நீண்ட மயிரை கொண்டிருக்க வேண்டியவர்களாக இருக்கின்றனர், அதைக் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அது ஒரு பொருட்டல்ல; அது கர்த்தர் உரைக்கிறதாவது என்பதே. நீங்கள் எந்த இடத்திலேயாவது எனக்கு காண்பியுங்கள்.
128. நீங்கள், “நல்லது, என்னுடைய முடி நீளமாக உள்ளது. பாருங்கள் அது என்னுடைய தோள்கள் வரை உள்ளது” என்று கூறலாம். அது குட்டை மயிர் ஆகும், “கிறிஸ்து” நீங்கள் “கிறிஸ்து நீண்ட முடி வைத்திருந்தாரே” என்று கூறலாம். இல்லை. இல்லை. அவர் அப்படி வைத்திருக்கவேயில்லை. அவர் தோள்வரை நீளமுள்ள முடியை வைத்திருந்தார் என்று அவர்கள் அவ்வாறு கூறுகின்றனர். அவர்கள் - அவர்கள் இந்த விதமாக அதை இழுத்து தோள்வரை நீளமாக இருக்கும்படி அதை வெட்டி விடுகின்றனர். அதைக் குறித்துள்ள கிரேக்க வார்த்தையை பாருங்கள், நீங்கள் அதைக் கண்டு கொள்ளலாம்.
129. பெண் தன்மையான மயிர்... மனிதன் இந்த விதமாக நீளமான நீண்ட முடி வைத்திருக்கக்கூடாது, ஏனெனில் அது பெண் தன்மையாகும். ஆனால் அவர் அதை தம்முடைய தோள்களண்டை இங்கே கத்தரித்தார், அந்த இடத்தில் அவர்கள் வெட்டினர். எங்கே அதைக் கத்தரித்தார்கள், அவருடைய தலையை சுற்றி, அதைப் போன்று பாப் செய்து விட்டார்கள். அது சிறிய முடியாகும்.
130. ஆகவே, பெண்கள், தங்கள் தோள் வரை முடி வைத்திருப்பது, அது இன்னுமாக குட்டை முடியாகும். இப்பொழுது, அது உங்களை நரகத்திற்கு கொண்டு செல்லுமா அல்லது உங்களை பரலோகத்திற்கு கொண்டு செல்லுமா என்று நான் கூறவில்லை. அதனுடன் எந்தவித சம்பந்தமும் கிடையாது. ஆனால் பெண்களுக்கான சபையின் கட்டளை என்னவெனில் அவர்கள் நீண்ட தலைமயிரைக் கொண்டிருக்கவேண்டும் என்பதே. அது சரி; அது சரி; ஆகவே சபைக்குள் நுழையும்... அது-அது காரியங்களில், பொது காரியங்களில் - அல்லது அது - சபையின் நடத்தைக் குறித்த விவகாரங்களில் அவர்களுக்கு எந்தவித பங்கும் கிடையாது. அவள் கீழ்ப்படிதலுள்ளவளும், பயபக்தியுள்ளவளுமாகவும், இன்னும் மற்ற போன்றவை, ஏனெனில் அவள்தான், முதல் விழுந்து போதலைக் கொண்டு வந்தாள் என்று வேதாகமம் கூறுகிறது. அது சரி; அது சரி. இப்பொழுது விரைவாக முடிப்போம். அது புண்படுத்தவில்லை என்று நான் நம்புகிறேன்.