113. இங்கே, ஒரே கேள்வியில் மூன்று கேள்விகள் உள்ளன. முதல் கேள்வியானது:
கிறிஸ்து வந்த பிறகு பிறந்த ஒவ்வொரு யூதனும் இரட்சிக்கப்படுவானா?
114. இல்லை, யூதனோ, அல்லது புறஜாதியானோ, உலகத்தோற்றத்திற்கு முன் யாருடைய பெயர் ஆட்டுக்குட்டியானவரின் ஜீவபுஸ்தகத்தில் எழுதப் பட்டிருக்கிறதோ, அவர்கள் மாத்திரமே இரட்சிக் கப்படுவார்கள். பாருங்கள்? அவ்வளவுதான். மற்றவர்கள் இரட்சிக்கப்படுவதில்லை. அந்தப் புஸ்தகத்தில்தான் தேவரகசியம் அடங்கியிருக்கிறது. அந்தப் புஸ்தகம் திறக்கப்பட்டு இப்பொழுது, இரகசியம் வெளிப்படுவதினால், ஒவ்வொருவருடைய பெயரும் வெளிப்படுவதில்லை. ஆனால் அவர்களுடைய பெயர்கள் அழைக்கப்படுகிறது. அதை இப்பொழுது புரிந்து கொண்டீர்களா? பாருங்கள்?
115. “லீ வேயில், அல்லது ஓர்மன் நெவில் அல்லது யாராகிலும் ஒருவர் இந்தச் சபையின் காலத்தில் இரட்சிக்கப்பட வேண்டும்” என்று அந்தப் புஸ்தகம் கூறுவதில்லை. அவ்விதம் அது கூறுவதில்லை. என்ன இரகசியம் என்பதை அது வெளிப்படுத்துகிறது. ஆனால் நாமோ, அவைகளை வெளிப்படுத்தலினால் விசுவாசிக் கிறோம். இதைத்தான் நான் அன்றிரவு கூறினேன்.
116. "ஜெபர்சன்வில்லில் ஒருவர்தான் இரட்சிக்கப்படுவார் என்று சகோதரன் பிரன்ஹாம் கூறினார். ஆகவே நான் முயற்சிக்க வேண்டிய அவசியம் இல்லை” என்று ஒருவர் சொன்னார். பாருங்கள்? இப்பொழுது அது ஒரு உவமையைக் காண்பிக்கிறது. அது – அது - அதுவல்ல, அதுஅதுவல்ல. ஆயிரம் பேர் இரட்சிக்கப்படலாம். எனக்குத் தெரியாது. ஒவ்வொருவரும் இரட்சிக்கப்படலாம். ஆனால் அது எனக்குத் தெரியாது.
ஆனால் "அந்த ஒருவன் நான்தான்” என்று இவ்விதமாகத்தான் நான் விசுவாசிக்க விரும்புகிறேன். நீங்களும் அவ்விதமே விசுவாசியுங்கள். நீங்கள் அவ்விதம் விசுவாசிக்கவில்லையென்றால் உங்கள் விசுவாசத்தில் ஏதோ ஒரு தவறு உண்டு. நீங்கள் என்ன செய்கிறீர்களோ அதைக் குறித்து நீங்கள் நிச்சயமற்றவர்களாய் இருக்கிறீர்கள்.
117. நீங்கள் இரட்சிக்கப்பட்டிருக்கிறீர்களோ, அல்லது இல்லையோ என்பதை நிச்சயமாக நீங்கள் அறியாதிருக்கும்போது எப்படி நீங்கள் மரணத்தை சந்திக்கச் செல்லுவீர்கள்? பாருங்கள்? கால்களை மடக்கிக் கொண்டிருக்கும் ஒரு குருடனான முடவனிடம் சென்று அவனைப் பார்த்து, “கர்த்தர் உரைக்கிறதாவது: எழுந்திரு. இதோ இயேசு கிறிஸ்து உன்னை முற்றிலும் சுகமாக்கிவிட்டார்” என்று எவ்விதம் சொல்லுவாய்?
118. மணிக்கணக்காக மரித்து, குளிர்ந்துபோய் விறைத்துக் கிடக்கும் பிணத்திற்கு முன்பாக நின்றுக்கொண்டு, "கர்த்தர் உரைக்கிறதாவது: நீ எழுந்து காலூன்றி நில்” என்று எப்படிச் சொல்லுவாய்?... நீ எதைக் குறித்து பேசுகிறாய் என்பதை அறிந்தவனாக இருக்கவேண்டும். பாருங்கள்?
119. நல்லது, “மரணம் எல்லாவற்றையும் பறித்துக் கொள்ளுகிறது. எல்லாம் நடந்தேறிவிட்டது” என்று நீங்கள் கூறலாம். ஆம். ஆனால் தேவனுடைய வார்த்தை வெளிப்படுத்தப்படும்போது, அது தேவன் என்று நீ அறிவாய். அதுவே காரியங்களை மாற்றியமைக்கின்றது. அது சரி.
120. இப்பொழுது எல்லா யூதர்களும் இரட்சிக்கப்பட மாட்டார்கள். இல்லை, ஐயா! எல்லோரும் இரட்சிக்கப்படுவதில்லை. யூதர்கள் என்பது அவர்கள் எருசலேமை விட்டு வெளியே போனபோது அவர்களுக்கு கொடுக்கப்பட்ட பெயராகும். நேபுகாத்நேச்சார் அவர்களை அவ்விதம் அழைத்தான் என்று நான் நினைக்கிறேன். யூதா கோத்திரத்தார் அப்பொழுது கொண்டு போகப்பட்டதால் முதலில் "யூதர்கள்” என்னும் பெயர் அவர்களுக்கு கொடுக்கப்பட்டது. இப்பொழுது அவர்கள் யூதேயாவிலிருந்து வந்ததினால் அவர்களுக்கு யூதர்கள் என்னும் பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.
121. ஆனால், இஸ்ரவேல் என்பது வித்தியாசமானதாகும். இஸ்ரவேல், யூதர்கள் என்னும் பெயர்கள் முற்றிலும் வித்தியாசமானவைகள். ஒவ்வொரு யூதனும் ஒரு இஸ்ரவேலன் அல்ல என்பதை கவனிக்கவும். இல்லை, அவன் ஒரு வெறும் யூதன்... எல்லா யூதர்களும் இரட்சிக்கப்படுவார்கள் என்று பவுல் கூறவில்லை. “எல்லா இஸ்ரவேலரும் இரட்சிக்கப்படுவார்கள்” என்று அவன் கூறினான். ஏன்? ஆதியிலிருந்து இஸ்ரவேல் என்பது மீட்புக்குரிய பெயராகும். பாருங்கள். எல்லா இஸ்ரவேலர்களும் இரட்சிக்கப்படுவார்கள். ஆனால் எல்லா யூதர்களும் இரட்சிக்கப்படுவதில்லை. பாருங்கள்.
122. ஆயிரமாயிரமான புறஜாதியின் மக்கள் லட்சக்கணக்கான ஸ்தாபன சபைகளில் இருந்து கொண்டே தங்களை கிறிஸ்தவர்கள் என்றும், கிறிஸ்துவின் சபையென்றும் அழைத்துக் கொள்கிறார்கள். இது ஒன்றுமே கிடையாது. இது, அவர்கள் இரட்சிக்கப்படுவார்கள் என்பதல்ல.
"நீங்கள் இந்த ஸ்தாபனத்தையோ அல்லது அந்த ஸ்தாபனத்தையோ அல்லது ஏதாகிலும் ஒரு ஸ்தாபனத்தையோ சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். உங்களுடைய பெயர் எங்களுடைய புத்தகத்தில் இல்லையென்றால் நீங்கள் இழக்கப்பட்டவர்கள்” என்று மக்கள் கூறுகிறார்கள். அதுதான் மார்க்க பேதங்களைக் கொண்டுவந்து ஸ்தாபனங்களை உருவாக்குவதாகும். பாருங்கள்?
123. நீங்கள் இரட்சிக்கப்பட ஒரே ஒரு வழி உண்டு. "அது விரும்புகிறவனாலும் அல்ல, ஓடுகிறவனாலும் அல்ல, இரங்குகிற தேவனாலேயாம்.” தேவன், தம்முடைய முன்னறிவினால் தம்முடைய மகிமைக்கென்று ஒரு சபையை முன் குறித்தார். அவர்கள்தான் இரட்சிக்கப்படுவார்கள். இதுதான் சரியான காரியம். இப்பொழுது உன்னுடைய விசுவாசம் அங்கேதான் நங்கூரமிடப்பட்டிருக்கின்றது.
124. "என்னுடைய விசுவாசம் அங்கே நங்கூரமிடப்பட்டிருக்கிறது” என்று நீ கூறலாம். ஆனால், நீ எவ்வித ஜீவியம் செய்கிறாய் என்று பார். நீ அதற்கு தகுதியற்றவன் என்று காட்டுகிறது. உன்னுடைய நங்கூரம் தவறானதாக இருக்கிறது. அது, கற்பாறையின் மீது நங்கூரமிடப்படாமல் மணலின்மீது போடப்பட்டிருக்கிறது. ஒரு சிறு அலை அதை தூரே எறிந்துவிடும். ஊம்.
125. வார்த்தையானது வெளிப்படுத்தப்படும்போது, "என்னுடைய சபை அதை போதிப்பதில்லை!” என்று கூறுவாயானால், உன்னுடைய நங்கூரம் பாறையின் மீது போடப்படாமல் மணலின் மேல் போடப்பட்டிருக்கிறது என்பதை எடுத்துக்காட்டுகிறது. ஊ..ஊ... அது உண்மையே. ஆகவே, இப்பொழுது நீங்கள் அதைக் காண்கிறீர்கள்.
1,44,000 பேர்கள் முன் குறிக்கப்பட்டவர்களா?
126. ஆம் ஐயா! அவர்கள் இஸ்ரவேலர் - ஆவிக்குரிய இஸ்ரவேலர்.
127. அங்கே லட்சக்கணக்கான மக்கள் இருப்பார்கள் என்பதை நினைவு கூருங்கள். இப்பொழுது எத்தனைப்பேர் அங்கே இருக்கிறார்கள் என்று எனக்கு தெரியாது. ஒரு முழு கூட்டமே என்று நான் யூகிக்கிறேன். ஆனால் அவர்கள் யூதேயாவில் இருப்பதினாலாயே எல்லோரும் இரட்சிக்கப் படுவதில்லை. பாருங்கள்?
இப்பொழுது, எத்தனைப் பேர் அங்கிருக்கிறார்கள் என்பதைக் குறித்து ஒரு எண்ணம் உண்டா ? எனக்கு தெரியாது. ஆனால் அடுத்த உபத்திரம் துவங்குவதற்கு முன்பு... ஒருவேளை பெருகக்கூடும்.
இவைகளைக் குறித்த ஒலி நாடா ஒன்று என்னிடம் உண்டு. என்னுடன் மேற்கிற்கு எடுத்துச் சென்று, இப்பொழுது அது -அதுஅந்த-அந்த-அந்த உடன்படிக்கை சபை...
128. அது சற்று பழமையான... ஓ, இப்பொழுது அது எனக்கு ஞாபகமில்லை. அது ஆரம்பித்தது. ஆப்பிரிக்காவில் டட்சு சீர்திருத்த சபையில் அந்த உடன்படிக்கை இருக்கிறது. அவர்களில் யாராவது இப்பொழுது இங்கே உட்கார்ந்துக் கொண்டிருப்பார்களானால், அது எப்படி என்பதைக் கூறுவேன். நீங்கள் இன்னும் அந்தப் பழைய "ஐடல்பெர்க் மதபோதனைகளை” (Heidelberg catechism) பிடித்துக் கொண்டிருக்கிறீர்கள். அதன் காரணமாகத்தான் நீங்கள் இன்னும்... டச்சு சீர்திருத்தச் சபையை சேர்ந்தவர்களாக இருக்கிறீர்கள். ஆகவே, நீங்கள் வெளிப்புறத்தில் அமெரிக்கப் பெயரை வைத்திருந்தாலும் அந்தப் பழைய ஐடல் பெர்க் மத போதனைகளையே போதிக்கிறீர்கள். இது சரியா இல்லையா என்று உன்னுடைய மேய்ப்பரைக் கேட்டுப்பார்.
ஆகவே, இந்த 1,44,000 பேர் பரிசுத்த ஆவியினால் முத்திரைப் போடப்படுவதற்கென்று முன்குறிக் கப்பட்டவர்களா?
129. ஆம் ஐயா! அது சரியாக அப்படித்தான். அது சரி. இப்பொழுது ஏதாவது.. இப்பொழுது நான்...
இது உங்களுக்கேற்றவாறு பதில் அளிக்கப்படவில்லை என்றால், ஒருவேளை நான் தவறாக இருக்கக்கூடும். இது, சிறந்த முறையில் நான் அறிந்துக்கொண்டவாறு அளிக்கப்பட்டிருக்கிறது.