130. இது இப்பொழுது பேசப்பட்டுக்கொண்டிருக்கும் விஷயத்திற்கு புறம்பாக இருக்கிறது. ஆனாலும் தேவனுடைய ஒத்தாசையினால் என்னால் என்னால் என்னால் முடிந்தவரை முயற்சிக்கிறேன். இப்பொழுது கவனிப்போம். அதைக் குறித்து நான் சற்று சரிசெய்துக் கொள்ளட்டும். “நான் கர்த்தரிடமிருந்து ஒரு குமாரனைப் பெற்றேன்” என்று அவள் அங்கு கூறினாள் என்று நினைக்கிறேன்... ஏவாள் அதைக் கூறினாள் என்று நினைக்கிறேன்.
131. அன்றொரு இரவு ஏழாயிரத்திற்கு பதிலாக ஏழு... அதற்கு... ஏழு நூறு என்று சொல்லி விட்டேன். ஆகவே இது சரியா என்று சோதித்துப் பார்த்துக்கொள்ள விரும்புகிறேன். இது என்னை பயமுள்ளவனாக்குகிறது. (nervous) சத்துரு எப்பக்கமும் சூழ்ந்திருப்பதால் அதை உணர்ந்து நீங்கள் விழிப்புடன் ஜாக்கிரதையாய் இருக்கவேண்டும். ஆமாம், அப்படித்தான்.
“ஆதாம் தன் மனைவியாகிய ஏவாளை அறிந்தான்; அவள் கர்ப்பவதியாகி; காயீனைப்பெற்று, கர்த்தரால் ஒரு மனுஷனைப் பெற்றேன் என்றாள்”
132. இப்பொழுது என்னுடைய சகோதரனோ, அல்லது சகோதரியோ, நான் இப்பொழுது உங்களுடைய கேள்விக்கு பதில் அளிக்கப் போகிறேன். இதை உங்கள் மீது வீசி எறிவதல்ல. நான் உங்களுக்கு உதவி செய்ய முயற்சிக்கிறேன். நான் உங்களை நேசிக்கிறேன். இதில் குற்றம் கண்டு பிடிப்பவராக இருப்பவரை நான் நேசிக்கிறேன்; ஆனால் இவர் குற்றம் கண்டு பிடிப்பவர் என்று நான் நினைக்கவில்லை. “எனக்கு உதவி செய்யும்” என்று கேட்டிருக்கிறார். மக்கள் இதை விசுவாசித்த போதிலும் கேள்வி கேட்பவர்களுக்குச் சரியான முறையில் பதில் உரைக்க ஆவியானவர் அவர்களை நிலை நிறுத்தாததினால் இவ்விதம் கேட்டிருக்கிறார்கள். பாருங்கள்.
133. கேள்வி என்ன? "கர்த்தரால் ஒரு மனுஷனைப் பெற்றேன் என்று ஏவாள் கூறினாள்” என்பதை அவர்கள் கூறுகிறார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.
134. காரியம் சரியோ அல்லது தவறோ, ஜீவன் தேவனிடத்திலிருந்து வரவில்லையென்றால் அது எங்கிருந்து வரும் என்று நினைக்கிறீர்கள்? யூதாஸ்காரியோத்தை உலகத்திற்கு அனுப்பினது யார்? அதை எனக்கு சொல்லுங்கள். அவன், “கேட்டின் மகனாக பிறந்தான் என்று வேதம் கூறுகிறது. எலுமிச்சம் பழத்தில் புழு இருப்பது போல - இவ்விதமாக அவர்களைக் கேட்கும்பொழுது. பாருங்கள்? பாருங்கள்? இப்பொழுது, நீங்கள் பாருங்கள், அவர்களால் முடியாது - முடியாது. அது இருக்கின்றது.
135. கவனியுங்கள். இதை இன்னும் தெளிவாக அறிந்துக்கொள்ள வேண்டுமென்றால், இங்கே எழுதியிருக்கிறவண்ணமாகப் பார்க்கும் போது, இது ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைக்கப்பட் டிருக்கிறது. இங்கே போதிக்கப்பட்டிருக்கிறபடி ஏவாள் தேவனிடத்திலிருந்து தான் இந்த குமாரனை பெற்றாள் என்று தோன்றுகிறது. அவர் ஒரு ஆவியாக இருக்கிறார், அவர் அதைச் செய்யமுடியாது, கவனித்தீர்களா? இப்பொழுது கவனியுங்கள், "கர்த்தரால் ஒரு மனுஷனைப் பெற்றேன்” என்பதைக் கவனிக்கவேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள். இதற்கு சரியான ஒரு வியாக்கியானம் இருக்கவேண்டும். ஆமாம், ஐயா. இல்லையெனில், அப்பொழுது ஆவி...
136. நாம் எப்பொழுதும் நம்முடைய பெற்றோரின் தன்மையைப் பெற்றுக்கொள்கிறோம். நீங்கள் அதை அறிவீர்கள். குழந்தையின் சுபாவத்தைக் கவனியுங்கள். ஆதாம் தேவனுடைய குமாரன், ஏவாள் தேவனுடைய குமாரத்தி, இவர்கள் தேவனுடைய சிருஷ்டிப்பின் முதன்மையானவர்களாக இருந்ததால், அவர்களில் சிறிதேனும் தீமை இருக்க வில்லை. தீமை அப்பொழுது காணப்படவும் இல்லை.
137. அப்படி இருக்கும்போது, காயீன் எப்படி ஒரு பொய்யனும், கொலைக்காரனுமாய் இருந்தான்? இவைகள் எங்கிருந்து வந்தன? அதைக் குறித்து உங்களையே நீங்கள் கேட்டுப் பாருங்கள். அதுதான் சர்ப்பத்தின் வித்து. பாருங்கள்? அவ்விதம் வேதாகமம் கூறவில்லையா? அவனுக்கு பிறகு வந்த அவனுடைய சந்ததியைக் கவனித்துப் பாருங்கள்.
138. இந்த உலகம் யாரை சேர்ந்ததாக இருக்கிறது? பிசாசை. இப்பொழுது இதை ஆட்கொண்டிருப்பது யார்? - பிசாசு. முற்றிலும் சரி. பிசாசு உலகத்தை அடக்கி ஆண்டுக்கொண்டிருக்கிறான். அவன், இயேசுவுக்கு இதின் எல்லா மகிமையையும், அழகையும் காண்பித்து, 'நீர் என்னை பணிந்துக் கொண்டால், இதை உமக்கு கொடுப்பேன்” என்று கூறினான். அவன் அதை அடக்கி ஆண்டுக்கொண்டிருக்கிறான். இப்பொழுது அவன் அதைச் சொந்தமாக்கிக் கொண்டிருக்கிறான்.
139. இப்பொழுது கவனியுங்கள். பிசாசின் பிள்ளைகள் உலக ஞானமுள்ளவர்களாய் இருக்கிறார்கள். காயீனுடைய பிள்ளைகளின் வம்ச வரலாறுகளை கவனிப்பீர்களானால் அவர்களில் ஒவ்வொருவனும் சாதுரியமுள்ளவன் என்பதை அறிந்து கொள்வீர்கள்.
140. அவன் ஆபேலை கொலை செய்தபோது, தேவன் அவனுக்குப் பதிலாக சேத்தைத் தந்தார். மரித்துப்போன நீதிமான்கள் மீட்கப்படும்போது அவர்கள் உயிர்த்தெழுவதற்கு சேத் ஒரு மாதிரியாக வைக்கப்பட்டிருக்கிறான். இப்பொழுது கவனியுங்கள், இயற்கையான வித்துக்களின் முதல் வித்து மரிக்கவேண்டும். இப்பொழுது உங்களுடைய சிந்தை திறக்கப்பட்டிருக்கிறதா? பாருங்கள்? (சபையார் "ஆமென்” என்று கூறுகின்றனர் - ஆசி) இயற்கையான வித்துக்களின் முதல் வித்தாகிய ஆபேல், இப்பொழுதிருக்கும் சபைக்கு மாதிரியாக இருக்கிறான். அந்த சந்ததி காக்கப்படுவதற்கு மற்றொருவன் எழும்பத்தக்கதாக ஒருவன் மரிக்க வேண்டியதாய் இருந்தது. இது மீண்டும் மறு பிறப்பாக இருக்க வேண்டியதாய் உள்ளது. நீங்கள் இதைப் பிடித்துக் கொண்டீர்களா? ("ஆமென்”) இது அவ்வண்ணமாகத்தான் இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள். பாருங்கள். பாருங்கள்?
141. இது ஒரு பூரணமான 'மாதிரியாக உள்ளது. ஆகவே, ஆதாமுக்கு பிறந்த இயற்கையான மனிதன்கூட அந்த இயற்கையான போக்கை காண்பிக்கிறான். இது கிரியைச் செய்யாது. இயற்கையான மனிதன் தேவனுடைய காரியங்களைப் புரிந்துக்கொள்ளுவதில்லை. ஆகவேதான் இது மீண்டும் திருப்பப்படுவதற்காக (to restore) ஒரு மனிதன் (A Man) இயற்கையாக வந்து மரிக்க வேண்டியதாய் இருக்கிறது என்பதை எடுத்துக்காட்டுவதற்காக, ஆபேல் மரித்தபோது அவன் ஸ்தானத்தில் சேத் வரவேண்டியதாய் இருந்தது.
142. அவனில் இருந்த ஆவி எவ்விதமான மக்களை கொண்டு வந்தது என்பதைக் கவனியுங்கள். பயிர் செய்கிறவர்களும், ஆடு மேய்ப்பவர்களுமாகிய எளிமையான மக்கள்தான் அவனில் இருந்து தோன்றினார்கள். இந்த உலக ஞானத்தில் இருந்து கொண்டுவரப்படுகிறது எதுவென்பதை கவனித்துப்பாருங்கள். சாதுரியமானவர்களையும், கட்டடம் கட்டுகிறவர்களையும், உலோகங்களினால் சிறந்த வேலை செய்கிறவர்களையுமே உலக ஞானம் பிறப்பித்திருக்கிறது. அவர்கள் எங்கே முடிகிறார்கள் என்பதை கவனியுங்கள். தேவன் தாழ்மையுள்ளவர்களை இரட்சித்து மற்றெல்லோரையும் அழித்துப்போட்டார். “சாந்தகுணமுள்ளவர்கள் பூமியை சுதந்தரித்துக் கொள்ளுவார்கள்” என்று இயேசு மத்தேயு 5ல் கூறவில்லையா?
143. ஆகவே, கவலைப்படவேண்டாம்; அவர்கள் நிற்பதற்கு ஒரு அடி இடம்கூட இருக்காது. பாருங்கள்? அது காயீனுடைய குமாரனாக இருக்கும் என்று அவர்கள் விசுவாசிப்பதில்லை. இதைக்குறித்து தெளிவாக விளக்கப்பட்டிருக்கும் ஒலிநாடா நம்மிடம் இருக்கிறது. பாருங்கள்? இல்லை, ஐயா.
144. ஏவாள் புசித்தது ஒரு ஆப்பிள்பழம் அல்ல அது ஒரு "ஏப்ரிகாட்” என்னும் பழம் என்று விஞ்ஞானம் நிரூபிக்கப் போவதைக் குறித்த ஒரு துண்டு செய்தித்தாளை அவர்கள் வைத்திருந்ததை நான் கண்டேன். பாருங்கள்? அந்த செய்தித்தாள் இப்பொழுது என்னுடைய வீட்டில் இருக்கிறது. "அது ஒரு ஏப்ரிகாட்” என்னும் பழம் என்றெல்லாம் சொல்லுவது மாம்சீக சிந்தையே.
மற்றும் மோசே தண்ணீரை கடக்கவில்லையென்றும், சவக்கடலுக்கு மேற்கு கரையில் நாணல் நிறைந்திருக்கும் தரை வழியாகவே இஸ்ரவேலரைக் கொண்டு வந்தார். ஒரு சமயம் தண்ணீரால் நிறைந்திருந்த இடம் இப்பொழுது நாணல்களால் நிறைந்திருக்கிறது. மோசே குறுக்கு வழியாகச் செல்ல அந்த வழியாகச் சென்றார் என்றெல்லாம் சொல்லுவது மாம்சீக சிந்தையே. இதுதான் உண்மையென்று வைதீகமான சபைகள் இதை ஏற்றுக்கொண்டிருக்கின்றன. இதை நீங்கள் கவனித்திருக்கிறீர்கள்.
145. ஓ, மனிதனே, சர்ப்பத்தின் வித்து -அந்திகிறிஸ்து மற்றும் எல்லாக் காரியங்களும் அங்கிருப்பதை உன்னால் காணமுடியவில்லையா? நிச்சயமாக ஆமாம், ஐயா.
சகோதரன் பிரன்ஹாமே, ப்ளூ (Flu) ஜுரத்தினால் அதிக சுகவீனமாக இருக்கும் என்னுடைய பேரனுக்காக தயவு செய்து ஜெபிக்கவும். (இது ஒரு ஜெப விண்ணப்பமாக இருக்கிறது) அவன் இப்பொழுது ரிவர்வியூ ஓட்டலில் இருக்கிறான்.
146. கர்த்தராகிய இயேசுவே, இந்த எளிமையான நபர் இதை வீணாக எழுதவில்லை. அன்றொரு இரவு ஒரு சிறு பையனுக்கு இருந்த வாத ஜூரத்தை நீர் நீக்கினதை அவள் கண்டிருக்கிறாள். நீர் மகத்தான தேவன் என்பதை அவள் அறிந்திருக்கிறாள். அந்தச் சிறு பையனுக்காக நாங்கள் எங்கள் ஜெபத்தை ஏறெடுக்கிறோம். இயேசுகிறிஸ்துவின் நாமத்தினால் அவன் சுகமடைவானாக. ஆமென்.
147. யாராகிலும் ஒன்றை எழுதும்போது அது வீணாகப் போவதில்லை. அது எவ்வளவு எளிமையானதாக இருந்தாலும் பரவாயில்லை. ஆனால் அதன் மறைவில் ஏதோ ஒன்று இருக்கிறது என்பதை நீங்கள் கவனிக்கவும். அந்த சகோதரி... அந்தச் சிறுபையன்... ஏதோ ஒன்று.