இப்பொழுது அதைக் குறித்து... நான் இதைக்கூற பயப்படுகிறேன். இது எனக்கு தெரியாது பாருங்கள். நான் மறுபடியும் அதை படிக்கட்டும்
யூதர்களுக்கு பிரசங்கிக்க வரும் எலியா (ஓ, ஆமாம்.) உலகத்தில் வாழ்ந்த அந்த உண்மையான மனிதனா, அல்லது எலியாவின் ஆவியை பெற்றிருக்கும் வேறொருவனா?
148. இதற்கு நான் சரியாக பதில் கூறுவேனானால், ஏனோக்கைக் குறித்து கூற முடியும். பாருங்கள், ஆனால் நான்- நான் அதைச் செய்ய முடியாது. பாருங்கள். வேதம் என்ன கூறுகிறதோ அதை மாத்திரம் நான் அறிந்திருக்கிறேன். இப்பொழுது நான் அதை இவ்விதம் கூறட்டும். ஒலி நாடாவை கேட்கும் சகோதரர்கள் இதைப் புரிந்துக் கொள்வார்கள் என்று நம்புகிறேன். அது அந்த ஆவியினால் அபிஷேகம் பண்ணப்பட்ட மனிதன் என்று நான் விசுவாசிக்க முற்படுகிறேன். ஏனென்றால் எலிசாவின்மேல் எலியாவின் ஆவி அமர்ந்ததாக கூறவில்லையா? பாருங்கள், "எலியாவின் ஆவி” எலியா செய்தது போலவே அவனும் செய்தான். பாருங்கள்? ஆனால் இதுதான் உண்மையென்று நான் கூற முடியாது. எனக்கு தெரியாது. பாருங்கள், நான் உங்களோடு உத்தமமாய் இருக்கிறேன். எனக்குத் தெரியாது.