149. நல்லது, இதை எழுதியது சகோதரனோ அல்லது சகோதரியோ, யாராயிருந்தாலும், இதிலே எந்த மாறுதலும் வரவில்லை. இயேசு எதை செய்யச் சொன்னாரோ அதைத்தான் பேதுரு செய்தார். இப்பொழுது யாராகிலும் ஒருவர் வந்து பட்டப்பெயர்களாகிய பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என்பதை உபயோகப்படுத்துங்கள் என்று கூறுவார்களானால்; தேவன் எதைச் செய்யவேண்டாம் என்று கூறினாரோ, பேதுரு எதைச் செய்யக் கூடாது என்று கூறினாரோ அதையே செய்தார்கள். பாருங்கள்? இயேசு கூறினது...
150. நான் உங்களுக்கு ஒரு காரியத்தை காண்பிக்க விரும்புகிறேன். கவனியுங்கள். இப்பொழுது அந்த நபர் இங்கிருப்பாரானால், இப்பொழுது கவனியுங்கள். நான் உங்களுக்கு முன்பாக மூன்று பொருட்களை வைக்கப் போகிறேன். இப்பொழுது கவனியுங்கள் (எடுத்து காட்டாக மூன்று பொருட்களை சகோ. பிரன்ஹாம் அங்கே வைக்கிறார் - ஆசி). திரித்துவ மக்கள் மூன்று தனித்தனியான ஆட்களில் விசுவாசம் கொண்டிருப்பதுபோல இதுதான் பிதா, இதுதான் குமாரன், இதுதான் பரிசுத்த ஆவி என்று வைத்துக் கொள்ளுவோம். அவர்கள் இவ்விதமாகத்தான் மூன்று நபர்களாக விசுவாசிக்கிறார்கள் என்பதை அறிவீர்களா? நல்லது அதன்பின், நான்...
151. அப்படியென்றால்... மத்தேயு 28:19ல் “நீங்கள் உலகமெங்கும் போய் சர்வசிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்” இல்லை, என்னை மன்னியுங்கள்; அப்போஸ்தலர் 2ஐ கூறுகிறேன் என்று நினைக்கிறேன் - இல்லை, லூக்கா 24:49. நான் அதைப் புரிந்துக்கொள்ள மீண்டும் அதைப் படிக்கட்டும்; ஏனென்றால் அன்றொரு நாள் ஒரு காரியத்தை சொல்வதற்குப் பதிலாக நான். இதைச் சரியாக சொல்ல விரும்புகிறேன். நீங்கள் சொல்லுவதன் தலைப்பை நான் அறிவேன். ஆனாலும் அவர் என்ன சொன்னார் என்பதைக் கவனிக்க விரும்புகிறேன், 29-ம் அதிகாரம் 16-ம் வசனத்திலிருந்து வாசிப்போம்.
"பதினொருவரும் அமர்ந்து போஜனம் புசிக்கையில்...” பதினொரு சீஷர்களும்... கலிலேயாவிலே இயேசு தங்களுக்குக் குறித்திருந்த மலைக்குப் போனார்கள். அங்கே அவர்கள் அவரைக் கண்டு, பணிந்து கொண்டார்கள்; சிலரோ சந்தேகப்பட்டார்கள்.
அப்பொழுது இயேசு சமீபத்தில் வந்து, அவர்களை நோக்கி: வானத்திலும் ("வானங்களிலும், பூமியிலும் சகல வல்லமையும் (All Power heavens and earth) என்று சகோதரன் பிரன்ஹாம் வாசிக்கிறார் - தமிழாக்கியோன்). பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.
மத்தேயு 28:16
152. இப்பொழுது தேவனுடைய வல்லமை எங்கிருக்கிறது? தேவன் எங்கிருக்கிறார்? வானத்தில் உள்ள எல்லா அதிகாரமும், பூமியில் உள்ள சகல அதிகாரமும் கொடுக்கப்பட்டிருக்கும்போது, தேவன் எங்கிருக்கிறார்? அவர் அங்கேதான் இருக்கிறார். பாருங்கள். உங்களுடன் பேசிக் கொண்டிருப்பவர்தான் அவர் என்பதை கவனியுங்கள். சரி.
“ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதாவின் நாமத்திலும், குமாரன் நாமத்திலும் பரிசுத்த ஆவியின் நாமத்திலும் அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து...”
153. இப்பொழுது திரித்துவக்காரர்கள் எல்லையாவது, "நான் உங்களுக்கு பிதாவின் நாமத்திலும், குமாரனின் நாமத்திலும், பரிசுத்த ஆவியின் நாமத்திலும் ஞானஸ்நானம் கொடுக்கிறேன்.” இது பரிசுத்த வேதாகமத்தில்கூட இவ்விதமாக இல்லை. கவனித்தீர்களா? ஒவ்வொரு பெயருக்கும் பின்னாக 'நாமத்திலும்' என்று சொல்லாமல், பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தில்' என்றுதான் அவர் கூறினார். ஒரே நாமம். இங்கே கவனியுங்கள். நாமங்களில் அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுங்கள் என்று சொல்லாமல் - நாமம் (N-a-m-e) என்று ஒருமையிலே - பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்திலே, என்றுதான் கூறினார். பாருங்கள்?
154. இப்பொழுது பிதா என்பது ஒரு நாமமா என்று உங்களை கேட்க விரும்புகிறேன். (சபையார் “இல்லை” என்று பதிலுரைக்கிறார்கள்) குமாரன் என்பது ஒரு நாமமா? (சபையார் “இல்லை” என்று பதிலுரைக்கிறார்கள்) எத்தனை பிதாக்கள் இங்கிருக்கிறீர்கள்? உங்களில் எத்தனைப் பேர் பிதா என்று அழைக்கப்படுகிறீர்கள்? எத்தனைக் குமாரர்கள் இங்கிருக்கிறீர்கள்? எத்தனை மனிதர்கள் இங்கிருக்கிறீர்கள்? பாருங்கள்? உங்களில் எத்தனைபேர் "பிதா, குமாரன், அல்லது மனிதன்” என்று அழைக்கப்படுகிறீர்கள்? பாருங்கள்?
155. ஒருமுறை ஒரு ஸ்திரீ என்னைப் பார்த்து, "சகோதரன் பிரன்ஹாமே, பரிசுத்த ஆவி என்பது ஒரு பெயர்; அது ஒரு ஆள்” என்று கூறினதுபோல் இது இருக்கிறது.
156. "ஆமாம் ஐயா. நான் ஒரு ஆள், ஆனால் என்னுடைய பெயர் ஆளல்ல” என்று நான் கூறினேன். நான் ஒரு ஆள் என்பதை அறிவீர்கள். என்னுடைய பெயர் வில்லியம் பிரன்ஹாம், ஆனால் நான் ஒரு ஆள்.
பரிசுத்த ஆவி ஒரு ஆள். அவர் அதுவாகத்தான் இருக்கிறார். அது ஒரு பெயரல்ல; அது. ஒரு ஆளாக இருக்கும் தேவனின் ஒரு பட்டப் பெயர் என்பதைக் கவனிக்கவும். தேவனுடைய ஆள் தத்துவத்தின் ஒரு பட்டப் பெயராகும்-அவர் என்னவாக இருக்கிறார் என்பதை எடுத்துக் காட்டுகிறது. இப்பொழுது - இப்பொழுது...
157. “ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளுக்கும் போதித்து அவர்களுக்கு பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்திலே ஞானஸ்நானம் கொடுங்கள்” என்று அவர் சொன்னது - பிதாவின் நாமத்திலும், குமாரனின் நாமத்திலும், பரிசுத்த ஆவியின் நாமத்திலும் என்று சொல்லாமல்; மற்றும், பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமங்களில் என்றும் சொல்லாமல்; பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தில் என்றுதான் சொன்னார். பிதா என்பதும், குமாரன் என்பதும், பரிசுத்த ஆவி என்பதும் நாமமில்லையென்றால்; நாமத்தில் என்று சொல்லும் போது, அது எதைக் குறிக்கின்றது?
158. இவைகளில் "எதை நாமம் என்று அழைக்கப்போகிறீர்கள்?” - எந்த நாமம் அது? பட்டப்பெயர்தான் நாமம் என்று சொல்லுவீர்களானால் எந்தப் பட்டப்பெயரினால் ஞானஸ்நானம் கொடுக்கப்போகிறீர்கள்? - பிதாவின் நாமத்திலா அல்லது குமாரனின் நாமத்திலா? நாமம் என்று ஒருமையில் சொல்லப்பட்டிருப்பதைக் கவனிக்கவும். நாம் இப்பொழுது பார்த்துக்கொண்டிருப்பது மத்தேயுவின் புத்தகத்தின் கடைசிப் பகுதியாகும்.
159. இதை நான் எப்பொழுதுமே விளக்கியிருக்கிறேன். "ஜானும் மேரியும் அதற்குப் பிறகு சந்தோஷமாக வாழ்ந்தார்கள்” என்று ஒரு காதல் கதையின் கடைசிப் பகுதியை படித்துவிட்டு சொல்லுவீர்களானால்; ஜானும் மேரியும் யார் என்பதை நீங்கள் அறிந்துகொள்ளவேயில்லை. நீங்கள் மறுபடியும் கதையின் முதல் பாகத்திற்குச் சென்று ஜானும் மேரியும் யார் என்பதை அறிந்துகொள்ள வேண்டும். பாருங்கள்?
160. இப்பொழுது நீங்கள் இதைத்தான் மத்தேயுவில் செய்துக் கொண்டிருக்கிறீர்கள். அப்புத்தகத்தின் கடைசிப் பகுதியை மாத்திரம் வாசித்துக் கொண்டிருக்கிறீர்கள். காரியம் என்னவென்பதை அறிந்துகொள்ள மத்தேயுவின் முதல் பகுதிக்கு மறுபடியும் சென்று படியுங்கள். அது மத்தேயு புத்தகத்தின் கடைசி அதிகாரத்தின், கடைசி வசனங்கள் ஆகும்.
161. இது நீங்கள் புத்தகத்தை எடுத்துக்கொண்டு, "ஜானும் மேரியும் அதற்குப் பிறகு சந்தோஷமாக வாழ்ந்தார்கள்” என்று மாத்திரங்கூறுவது போல் இருக்கிறது. அது ஜான் ஜோன்சும், மேரியும் அல்லது அது ஜான் ஹென்றியும் வேறொருத்தியும்; இது ஜானும் மற்றொருவளும் என்று இவ்விதமாக கூறுவீர்களானால், நீங்கள் அதை இன்னும் புரிந்து கொள்ள வில்லை. நீங்கள் அதை தெளிவாக அறிந்துக்கொள்வதற்கு அந்த புத்தகத்திற்கு மறுபடியும் சென்று முதலில் இருந்து படிக்க வேண்டும். இங்கே ஒரு சிறிய பகுதியை மாத்திரம் எடுத்துக் கொள்ளக்கூடாது. அதை சரியாகப் புரிந்து கொள்வதற்கு நீங்கள் எல்லாவற்றையும் ஒன்றாக இணைக்க வேண்டும்.
162. மத்தேயுவின் சுவிசேஷத்தில் முதலாம் அதிகாரத்தை வாசிப்பீர்களென்றால்: 18-ம் வசனத்தில் இருந்து வம்ச வரலாறு கொடுக்கப்பட்டிருப்பதைக் கவனிப்பீர்கள். “இயேசு கிறிஸ்துவினுடைய ஜெநநத்தின் விவரமானது. இது சரியா? (சபையார் "ஆமென்” என்று கூறுகின்றனர் - ஆசி)
163. இப்போது, உங்களை ஒன்று கேட்கப்போகிறேன். இப்பொழுது மறுபடியும் கவனியுங்கள். (சகோதரன் பிரன்ஹாம் எடுத்துக்காட்டாக வைக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு பொருளையும் சுட்டிக்காட்டுகிறார்) இது யார்? தேவனாகிய... ('பிதா” என்று சபையார் பதிலுரைக்கிறார்கள் - ஆசி). தேவனாகிய... ('குமாரன்”) தேவனாகிய... ( 'பரிசுத்த ஆவி” இபபொழுது இது யார்? ('பிதா”) இது யார் ('பரிசுத்த ஆவி”) இது யார்? ('குமாரன்”). குமாரன். சரி. எல்லாம் சரியாய் இருக்கிறது. இப்பொழுது நாம் அதைப் புரிந்து கொண்டோம். இது யார் என்று கூறினீர்கள்? - இது தேவனாகிய யார்? ('பரிசுத்த ஆவி”) பரிசுத்த ஆவி, சரி. இப்பொழுது சரி.
இயேசு கிறிஸ்துவினுடைய ஜெந்தத்தின் விவரமாவது: அவருடைய தாயாகிய மரியாள் யோசேப்புக்கு நியமிக்கப் பட்டிருக்கையில் அவர்கள் கூடி வருமுன்னே, அவள்... கர்ப்பவதியானாள்
164. ('பரிசுத்த ஆவியினாலே” என்று சபையார் பதிலுரைக்கிறார்கள் - ஆசிரியர்). தேவன் தாம் அவருடைய பிதா என்று நீங்கள் கூறினீர்கள் என்று நினைத்தேன். இங்கே ஏதோ தவறு இருக்கிறது. அவருக்கு இரண்டு பிதாக்கள் இருக்கமுடியாது. நீங்கள் இதை அறிவீர்கள். பாருங்கள்? இங்கே ஏதோ தவறு இருக்கிறது. இவர்கள் மூன்று ஆட்கள் என்றால், இவர்களில் யார் அவருடைய பிதா? “அவள் பரிசுத்த ஆவியினாலே கர்ப்பவதியானாள்” என்று வேதம் தெளிவாகக் கூறுகிறது. இதற்கும் தேவனாகிய பிதாவுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. தேவன்தாம் தம்முடைய பிதா என்று இயேசு கூறினார். தேவன் தாம் அவருடைய பிதா என்பதை நாம் அறிவோம். அப்படியென்றால் அவருக்கு இரண்டு பிதாக்கள் இருக்க வேண்டும். அப்படியென்றால் அவர் முறை தவறிப் பிறந்தவராக காணப்படுகிறார், இப்பொழுது நீங்களே உங்களை எங்கு கொண்டு வந்து விட்டீர்கள் என்பதை உணரமுடிகிறதா? இப்பொழுது...
“அவள் புருஷனாகிய யோசேப்பு நீதிமானாயிருந்து, அவளை அவமானப்படுத்த மனதில்லாமல், இரகசியமாய் அவளைத் தள்ளிவிட யோசனையாயிருந்தான்.
அவன் இப்படிச் சிந்தித்துக் கொண்டிருக்கையில்...”
165. அவன் ஒரு நல்ல மனிதனாக இருந்தான் என்பதை நினைவு கூருங்கள். இப்பொழுதே கர்த்தருடைய கரம் சமீபமாயிருக்கிறது. முன் குறிக்கப்பட்ட மக்கள் இதை பிடித்துக்கொள்வார்கள். பாருங்கள்?
“அவன் இப்படிச் சிந்தித்துக் கொண்டிருக்கையில், கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் அவனுக்குக் காணப்பட்டு ;
உங்கள் வேதாகமத்தில் தொடர்ந்து கவனிக்கிறீர்களா? (சபையார் “ஆமென்” என்கின்றனர் - ஆசி) சரி.
தாவீதின் குமாரனாகிய யோசேப்பே, உன் மனைவியாகிய மரியாளைச் சேர்த்துக்கொள்ள ஐயப்படாதே; அவளிடத்தில் உற்பத்தியாயிருக்கிறது தேவனால் உண்டானது.”
166. 'தேவனாகிய பிதா'? நான் இதைத் தவறாகப் படித்தேனா? (சபையார் “ஆமாம்” என்று கூறுகின்றனர் - ஆசி). நான் இதைத் தவறாகப் படித்தேன். இவளுக்குள் கர்ப்பம் தரித்திருப்பதற்கும், தேவனாகிய பிதாவுக்கும் எந்த விதமான சம்பந்தமும் கிடையாது-அது பரிசுத்த ஆவியானவர். அது சரியா? ("ஆமென்”) அப்படியானால் அது என்ன? - பரிசுத்த ஆவியானவர் தேவனுடைய ஆவியே. இப்பொழுது நீங்கள் இதைப் புரிந்து கொண்டீர்கள். பாருங்கள்?
167. தேவனாகிய பிதாவும், பரிசுத்த ஆவியானவரும் ஒரே ஒரு ஆளாக இருக்கவேண்டும். இல்லையென்றால் அவருக்கு இரண்டு பிதாக்கள் இருக்கவேண்டும்; அப்படியென்றால் எந்தவிதமான ஆளை நீங்கள் ஆராதிக்கிறீர்கள்? இப்பொழுது எந்தவிதமான தேவனை பெற்றிருக்கிறீர்கள்? கவனியுங்கள். கவனியுங்கள். பரிசுத்த ஆவியாகிய தேவனும் பிதாவாகிய தேவனும் ஒரே ஒரு ஆள்தான்.
"அவள் ஒரு குமாரனைப் பெறுவாள்... (இந்த ஆள் இங்கே இருக்கிறார்)... அவருக்கு... என்று பேரிடுவாயாக...”
என்ன? (சபையார் இயேசு என்று கூறுகின்றனர் - ஆசி) அவருடைய பெயர். இயேசு: இப்பொழுது, நினைவில் கொள்ளுங்கள்.
ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார்.
தீர்க்கதரிசியின் மூலமாய்க் கர்த்தராலே உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இதெல்லாம் நடந்தது... (யாருக்கு வார்த்தை வருகிறது)... அவன்: இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்; அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள் என்று சொன்னான். இம்மானுவேல் என்பதற்கு தேவன் நம்மோடிருக்கிறார் என்று அர்த்தமாம்.”
168. தேவனுடைய நாமம் என்ன? பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமம் என்ன? (சபையார் “இயேசு” என்று கூறுகின்றனர் - ஆசி) அவருடைய பெயர் இயேசு என்று வேதம் கூறுகிறது.
இதைக் குறித்து விவாதம் செய்வதற்கு இக்கூடாரத்திற்கு வந்திருந்த ஒருவர் இவ்விதம் கூறினார். “சகோதரன் பிரன்ஹாம் மற்றெல்லாவற்றையும் தெளிவாக்கி விட்டார். ஆனால் இதை அவரால் செய்ய முடியாது. இங்கே இவர்கள் மூன்று ஆட்கள் என்று தெளிவாக கூறுகிறது. மத்தேயு 3-ம் அதிகாரத்தில் யோவான் இங்கே நின்றுக்கொண்டிருக்கிறார். பிரசங்கித்துக் கொண்டிருக்கிறார். குமாரன் ஞானஸ்நானம் பெறுவதற்கு இங்கே வருகிறார். அவர் தண்ணீருக்குள் சென்றார், யோவானால் ஞானஸ்நானம் பெற்றார்; தண்ணீரிலிருந்து கரையேறினபோது வானம் அவருக்கு திறக்கப்பட்டது. வானத்திலிருந்து பரிசுத்த ஆவியானவர் புறாவைப் போல இறங்கி வந்தார். வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி, 'இவர் என்னுடைய நேசக்குமாரன் இவரில்'... என்று கூறிற்று”. ஒரே நேரத்தில் மூன்று வித்தியாசமான ஆட்கள். ஓ, என்னே!
169. ஆம், பரிசுத்த ஆவியை பெறாதவர்களும், தேவனால் அழைக்கப்படாதவர்களும் பிரசங்க பீடத்தண்டைக்கு போகக்கூடாது என்பதை இது மக்களுக்கு எடுத்துக்காட்டுகிறது. அது சரி.
தேவனுடைய ஒத்தாசையினால் இப்பொழுது அந்த மனிதனை எடுத்து அவருடைய தலையே சுற்றும்படியாக எல்லாவற்றையும் சேர்த்து ஒரு முடிபோட்டுவிட முடியும். கவனியுங்கள், எனக்கு எதைப் பற்றியும்… நான் அவ்விதம் நினைக்கவில்லை. இவ்விதம் கூறினது சரியில்லை. என்னை மன்னிக்கவும். நான் அவ்விதம் நினைக்கவில்லை. கர்த்தாவே, நான் அவ்விதம் நினைக்கவில்லை. அவர் இதைக் குறித்து என்னை எச்சரிப்பதை உணர்ந்தேன். நான் அவ்விதம் கூற நினைக்கவில்லை. நான் வருந்துகிறேன். பரிசுத்த ஆவியானவர் அவருக்கு சில இரகசியங்களை வெளிப்படுத்தக் கூடும் என்று விசுவாசிக்கிறேன். -அதுதான் சரியென்று தோன்றுகிறது.
170. ஒரு இசைக்கருவியை சுருதி கூட்டும்போது, ஏதாகிலும் தவறு செய்யும்போது நீங்கள் அதை உணரமுடியும். அதுதான் கிறிஸ்தவனுக்குரிய பண்பாகும். நீங்கள் சில தவறானதை சொல்லும்போது அதை அவர் விரும்புவது இல்லை. நான் அவ்விதம் கூறினபோது என்னை அங்கு நுழைக்கப்பார்த்தேன். பாருங்கள்? நான் அந்தக் காட்சியில் இருக்கவில்லை. நான் அந்தக் காட்சியில் இருக்க விரும்பவில்லை; அதைச் செய்கிறவர் அவர். அவரே அந்த வேலையைச் செய்யட்டும். எக்காளத்தை தொனிக்கச் செய்கிறவர் அவர். எக்காளங்கள் தானாகவே தொனிக்கமுடியாத ஊமையான கருவிகள், அதற்குப் பின்னாக இருக்கிறவரின் சத்தம் தான் அதை தொனிக்கச் செய்கிறது.
171. இப்பொழுது இங்கே கவனியுங்கள். மனிதன் தவறான முறையில் வார்த்தையை வியாக்கியானம் செய்கிறான். வார்த்தையானது “கல்வி மான்களுக்கும், ஞானிகளுக்கும் மறைக்கப்பட்டு பாலகர்களுக்கு வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.
இங்கே பூமியின் மீது இயேசு கிறிஸ்து ஒரு ஆளாக நின்றுக் கொண்டிருக்கிறார். வானம் நமக்கு மேலிருக்கும் ஆகாயமாகும். இப்பொழுது கவனியுங்கள். யோவான் இதற்கு சாட்சியாக இருக்கிறான்...
172. "பிதாவாகிய தேவன் இங்கிருக்கிறார். தேவனாகிய பரிசுத்த ஆவி புறாவைப்போல இங்கே இருக்கிறார். தேவனாகிய குமாரன் இங்கே இருக்கிறார்' என்று அந்த மனிதன் மூன்று ஆட்களாக சொல்லி இருக்க வேண்டும்.” அது தவறாகும்.
173. அங்கே நின்றுக் கொண்டிருந்த யோவானுக்கு இது அந்த ஆட்டுக் குட்டியானவர் என்பது தெரியும். "தேவனுடைய ஆவியானவர் ஒரு ஆட்டுக்குட்டியாக இருப்பதைக் காண்பதாக யோவான் சாட்சி கூறினான். தேவனாகிய ஆவியானவர். ஒரு புறாவைப்போல, என்று நான் நினைக்கிறேன். அன்றிரவு இதேப்போல கூறினேன், எழுநூறு என்பதற்கு பதிலாக. பாருங்கள்? தேவனுடைய ஆவியானவர்-இங்கே இந்த ஆட்டுக்குட்டி. தேவனுடைய ஆவியானவர்-தேவன் புறாவாக வந்தார். தேவனுடைய ஆவியானவர் வானத்திலிருந்து இறங்கி வரும்போது, "இவர் என்னுடைய நேசக்குமாரன், நான் இவரில் வாசம் பண்ண விரும்புகிறேன்” என்னும் சத்தம் வானத்திலிருந்து வந்தது.
வானத்திலும், பூமியிலும் சகல வல்லமைகளும் என் கரத்தில் எனக்குக் கொடுக்கப்பட்டிருகிறது. பாருங்கள்? பாருங்கள்? பாருங்கள்? அதுதான் அவர். இப்பொழுது அவருடைய நாமம் என்ன? (“இயேசு” என்று சபையார் பதிலுரைக்கிறார்கள் - ஆசிரியர்). உண்மையாகவே. பாருங்கள்?
174. திரித்துவக்காரரின் மூன்று வெவ்வேறான தெய்வங்கள் என்னும் தத்துவமானது அஞ்ஞானிகளுடைய உபதேசமாகும். வேதாகமத்தில் அவ்விதம் கூறப்படவில்லை. சிங்கத்தினுடைய செய்தியில் இது கூறப்படவில்லை. இது அந்திக்கிறிஸ்துவிலிருந்து உண்டான ஒரு காரியமாகும். எந்த ஒரு வேத சாஸ்திரியையும் கேட்டுப்பார். நிக்கொலாய் மதஸ்தரின் கொள்கையினால்தான் இது பிரவேசித்திருக்கிறது. ஆகவே தான் அது மார்டின் லூத்தருடனும் வந்தது. ஆகவேதான் அது ஜான் வெஸ்லியுடனும் வந்து, பெந்தெகொஸ்தே மக்களிடத்திலும் ஊற்றப்பட்டிருக்கிறது.
175. பெந்தெகொஸ்தே மக்கள் வந்தபோது “இயேசு மாத்திரமே” என்னும் கூட்டத்தினரும் வந்தனர். இது மறுபடியும் தவறானதொன்றாகும். இயேசுவே எப்படி தம்முடைய பிதாவாக இருக்கமுடியும்? பாருங்கள்? ஆகவே இது அதையும் வீழ்த்திவிடுகிறது.
176. ஆனால், கழுகின் காலமொன்று வரவேண்டியதாயிருக்கிறது. பாருங்கள்? அந்த காலத்தில்தான் எல்லா இரகசியங்களும் தெளிவாக்கப்பட வேண்டியதாயிருக்கிறது. பாருங்கள்?
177. “பிதா, குமாரன், பரிசுத்த ஆவி” இவைகள் எல்லாம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பட்டப் பெயர்களாய் இருக்கின்றன. அந்த மூன்று பேரையும் கவனித்துப் பாருங்கள். "பிதா, குமாரன், பரிசுத்த ஆவியென்று" மத்தேயு கூறுகிறார். “கர்த்தராகிய இயேசு கிறிஸ்து” என்று பேதுரு கூறுகிறார், பிதா யார்? கர்த்தர் என் ஆண்டவரை நோக்கி, “என்னுடைய வலது பாரிசத்தில் உட்காரும்" என்று கூறினார். அது சரியா? பிதா, குமாரன் - இயேசு, பரிசுத்த ஆவி-தேவனிடத்திலிருந்து புறப்பட்ட 'லோகாஸ்' என்னும் வார்த்தை. "பிதா, குமாரன், பரிசுத்த ஆவி” என்பது தேவனுடைய ஆள் தத்துவத்தை மூன்று வித்தியாசமான வழிகளில் வெளிப்படுத்தும் மூன்று பட்டப் பெயர்களாகும்; அல்லது ஒரே ஒரு ஆளுக்குரிய மூன்று லட்சணங்களாகும்.
178. இதைச் சரியாகப் புரிந்துக்கொள்ள முடியாதவர்களுக்குஇவைகள் ஒரே தேவனின் மூன்று அலுவல்களாக இருக்கிறது. ஒரே தேவனின் மூன்று பண்புகள். மூன்று வித்தியாசமான யுகங்களில் தம்முடைய பிதாவின் தன்மையையும், குமாரனுக்குரிய தன்மையையும், பரிசுத்த ஆவிக்குரிய தன்மையையும் வெளிப்படுத்திக் கொண்டு வந்திருக்கிறார். தேவன் மூன்றில் பரிபூரணப்படுகிறார். அந்திக்கிறிஸ்துவின் இலக்கம் நான்கு என்பதை நினைவுகூறுங்கள். பாருங்கள்? "பிதா, குமாரன், பரிசுத்த ஆவி” என்பது முற்றிலுமாக “கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைக் குறிப்பதாகும்.
179. "இயேசுவின் நாமத்தில் மாத்திரம் ஞானஸ்நானம் கொடுப்பதும் தவறானதாகும். "வெறும் இயேசுவின் நாமத்தில் ஞானஸ்நானம் கொடுப்பது” முற்றிலும் தவறாகும். அநேக இயேசுக்களை நான் அறிந்திருக்கிறேன். 'லத்தீன்' (Latin) நாடுகளில் அநேக இயேசுக்கள் இருக்கிறார்கள்.
180. ஆனால் இது 'கர்த்தராகிய இயேசுகிறிஸ்து!” இது யார் என்பதை தெளிவாகக் கூறுகிறது.
181. அநேக பிரன்ஹாம்கள் இருக்கிறார்கள். நீங்கள் என்னுடன் நேரடியாக பேசவேண்டுமானால், நான் ஒருவனே வில்லியம் மரியன் பிரன்ஹாம். அதுதான் நான். ஆனால் வேறு அநேக வில்லியம் பிரன்ஹாம்கள் இருக்கிறார்கள்.
182. ஆனால் அபிஷேகம் பண்ணப்பட்டவராகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து என்பவர் ஒருவர்தான் என்பது தெளிவாக உள்ளது. அவர் ஒருவரே. அதுதான் சரி. இதற்கும் மேலாக ஏதாகிலும் இருக்குமாயின், கடிதம் எழுதி நான் மற்ற கேள்விகளுக்கு விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்கும்போது அனுப்பலாம். வியாதியினால் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் வியாதியஸ்தருக்கு ஜெபிக்கவேண்டியவனாகவும் இருக்கிறேன்.